கூண்டிலிருந்து விடுபட்ட பறவை மாதிரி சுதந்திரமாக, சந்தோஷமாக சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பவர் வனிதா விஜயகுமார். அவரது கடந்த காலத்தையும், கல்யாணங்களையும், கணவர்களையும் ஊரே எண்ணிக் கொண்டிருக்க, அவரோ தன் நிகழ்கால சந்தோஷம், குழந்தைகளின் எதிர்காலம் என சலனமில்லாமல் சென்று கொண்டிருக்கிறார். தலை நிறைய தன்னம்பிக்கை... அவரின் வாயைக்கிளற நினைதால் வச்சு செய்துவிடுவார். மனதைத் தொட்டு விட்டால் தன்னைப் பற்றி மட்டுமல்ல, தனக்கு தெரிந்ததைப் பற்றியும் ஒளிவு மறைவில்ல்லாமல் பேசுவார். அப்படித்தான் நம்முடனும் பல விஷயங்களை மனம் திறந்து பேசினார்...."‘குமுதம்’ல பேசுறது எனக்கு ரொம்ப செண்டிமெண்டா இருக்கு. ஏன்னா, இந்த உலகத்துக்கு முதன்முதலா வனிதா விஜயகுமாரை காமிச்சது ‘குமுதம்’ தான். என்னோட 2 வயசுல அடையார்ல் ஒரு ஹோட்டல்ல என்ன வச்சு ஒரு போட்டோ சூட் எடுத்து போட்டாங்க. அதுக்குப் பிறகு நான் அம்மா,அப்பா, ப்ரீத்தா பாப்பா எல்லாரும் சேர்ந்து இருக்குற ஒரு போட்டோ குமுதத்துல வந்தது. 'சந்திரலேகா' படம் வந்தப்பவும் சென்டர் பேஜ்ல என்னோட போட்டோ வந்தது. அப்பல்லாம் குமுதத்துல சின்னதா ஒரு செய்தியோ, படமோ வர்றது ரொம்ப பெருசு... இப்போ என்னோட 'அநீதி' படம் மூலமா திரும்ப ‘குமுதத்’துக்கு வர்றது ரொம்ப சந்தோசமா இருக்கு!” என எமோஷனலா அவரும் ஒரு இண்ட்ரோ குடுத்துவிட்டே பேட்டிக்குள் வந்தார்... .'அநீதி' தமிழ் சினிமாவில் மீண்டும் உங்களுக்கு ஒரு புது அறிமுகம் குடுத்துருக்குன்னு சொல்லலாமா? “கண்டிப்பா. நான் எது வேணாம்னு விட்டுட்டு விலகி போறேனோ அதுதான் திரும்பத் திரும்ப என்ன தேடி வருது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. கிட்டத்தட்ட 17 படங்கள் நடிச்சிருக்கேன். அதுல எது முதல்ல ரிலீஸ் ஆகப்போகுதுன்னு தெரியாமலே இருந்தேன். அப்போ தான் வசந்தபாலன் இயக்கத்துல நடிச்ச 'அநீதி' முதல்ல ரிலீஸ்க்கு ரெடியாகி, தியேட்டருக்கும் வந்திருச்சு. அதுல எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இந்த வருஷம் அடுத்தடுத்து என்னோட ஆறு படங்கள் வெளியாகும்னு நினைக்குறேன்.” இயக்குநர் வசந்தபாலன் பற்றியும், 'அநீதி'குள்ள நீங்க வந்த கதையையும் சொல்லுங்க..? “வசந்தபாலன் சார்கிட்டருந்து ஒரு நாள் போன் வந்தது... "நான் இயக்குநர் வசந்தபாலன் பேசுறேன். இப்போ நான் ஒரு படம் பண்ணுறேன். அதுல அனிதானு ஒரு கேரக்டர் இருக்கு. கொஞ்சம் வில்லத்தனமா இருக்கும், அதை நீங்க பண்ணுனா நல்லாருக்கும்னு தோணுது”ன்னு சொன்னாரு. நான் கூட யாரோ விளையாடுறாங்களோனு நினைச்சேன். பிறகு, ஓ.கே. சொல்லிட்டு கதை கூட கேக்கல கொஞ்சம் வில்லத்தனமான ரோல் தான். கிளைமாக்ஸ்ல ஹீரோ அர்ஜுன் என்ன அடிக்கிற சீன் வரும், அப்போ தியேட்டர்ல எல்லாரும் சந்தோசமா கிளாப் பண்ணுறாங்க. சரி; நாம வில்லியா ஜெயிச்சுட்டோம்னு சந்தோஷப்பட்டேன். படத்தோட நீளம், நேரம் காரணமா என்னோட நெறய சீன்ஸ் டெலீட் பண்ணிட்டாங்க. பட் நோ கம்ப்ளையிண்ட், வந்த வரைக்கும் நல்லா வாந்திருப்பது சந்தோஷம். ஷூட்டிங்ல நான், அர்ஜுன், துஷாரா, சுரேஷ் எல்லாரும் நண்பர்களாகிட்டோம். எல்லாருக்கும் நானே சமைச்சு எடுத்துட்டுப் போவேன். ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்லேயே எல்லாருக்கும் மந்தி பிரியாணி சமைச்சு கொடுத்தேன்.. தொடர்ந்து நெகடிவ் கேரக்டரா வந்தா நடிப்பீங்களா? “உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும். இந்த மாதிரி கதாபாத்திரங்கள் வந்தால் சந்தோஷம் தான்.” 'சந்திரலேகா' படத்துல விஜய்க்கு ஜோடியா நடிச்சீங்க, இப்போ விஜய்க்கு சகோதரியோ நடிக்க கூப்பிட்டா போவீங்களா? “கண்டிப்பா மாட்டேன். ஒருபோதும் ஒத்துக்க மாட்டேன். அது செட் ஆகவும் ஆகாது. விஜய்க்கு அம்மாவா கூட நடிப்பேன், ஆனா அக்காவா நடிக்கவே மாட்டேன்.” சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ரஜினி, விஜய் ரசிகர்கள் சண்டை போட்டுகிட்டு இருக்காங்க, நீங்க யார் பக்கம்? “ரஜினி அங்கிள் தான் முதல் சூப்பர் ஸ்டார். ஆனா விஜய் கூட நான் சந்திரலேகா பண்ணும் போதே, "நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டார்னு" அவர்கிட்ட சொன்னேன். இப்போ அவரு தளபதி விஜய்யா இருக்கலாம். ஆனா அடுத்து அவர் தான் சூப்பர் ஸ்டார்... அதுல சந்தேகமே இல்ல. சூப்பர் ஸ்டார் பட்டம் ஒருத்தருக்குத் தான் கொடுக்கணும்னா அது ரொம்ப கஷ்டம். ”.விஜய் புகை பிடிக்கிற காட்சிக்கு எதிர்ப்பு வந்தா மாதிரி, நீங்க சிகரெட் பிடிக்கிற காட்சிக்கும் நிறைய ட்ரோல் பார்க்க முடிஞ்சதே..? “விஜயும் நானும் சிகரெட் பிடிச்சா உங்களுக்கு என்ன பிரச்சினை? இது காமன்சென்ஸ் இல்லாத விஷயம். சும்மா பப்ளிசிட்டிக்காக கேஸ் போடாதீங்க. அவ்ளோ தெளிவு இல்லாமலா நாம குழந்தைகளை வளர்க்கப் போறோம். நாங்க நடிகர்கள், கதைக்கு என்ன தேவையோ அதைத் தான் பண்றோம் . அது எங்க வேலை, அவ்வளவுதான். ‘புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு’ன்னு அதுலயே போடுறாங்க. அத மீறி சின்னப்பசங்க கெட்டுப்போறாங்கன்னா, நீங்க ஒழுங்கா சொல்லி கொடுத்து அவங்களை வளர்க்கலைன்னு அர்த்தம். ” . உங்களோட யூடியூப்பில் நிறைய வீடியோ போடுறீங்க. அதுல எவ்வளவு வருமானம் வருது? “அதுல எவ்வளவு வருதுன்னு நாம கரெக்ட்டா சொல்ல முடியாது. அது மாறிக்கிட்டே இருக்கும். ஒரு சமயத்துல நெறய வீடியோ போட்டேன் அப்போ நல்ல வருமானம் வந்தது. ஆனா இப்போ அப்படி இல்லை. நீங்க தொடர்ந்து வீடியோ போட்டீங்கன்னா ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். வீடியோ சரியில்லன்னா சில சமயங்களில் 5000,10000 ரூபாய் கூட வந்துருக்கு. ஒரு மாசம் பணம் வராமகூட இருந்துருக்கு. லாக் டவுன் சமயத்துல வேலை வெட்டி இல்லாம நெறய வீடியோ பண்ணேன், இப்போ வேலை வந்துட்டதால கொஞ்சம் கொறஞ்சுருச்சு. சோ யூடியூப் வருமானம் நம்ம சாமர்த்தியத்தைப் பொறுத்தது.” உங்கள பத்தி யார் என்ன பேசினாலும் கலைப்படாம உங்க ரூட்ல போய்கிட்டே இருக்கீங்களே எப்படி..?"உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்"னு விஜய் சொன்ன மாதிரி, எல்லாத்தையும் இக்னோர் பண்ணிட்டு போக வேண்டியதுதான். 1994ல சந்திரலேகா பண்ணும் போதே விஜய் இத என்கிட்ட சொன்னாரு. நம்மள பத்தி பேசாட்டி நாம செத்துட்டோம்னு அர்த்தம். நூறு பேரு நூறு விதமா சொல்லுவாங்க அதெல்லாம் கேட்டுட்டு இருந்தா நாம வாழ முடியாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இந்த மாதிரி நெறய கமெண்ட்ஸ பாத்து என்ன நான் மாத்திக்கிட்டேன். கொஞ்ச நாள்ல அதுவே பழகிரும்.” - பா.ரஞ்சித் கண்ணன்படங்கள் - ரா.பிரவீன் விரிவான பேட்டிக்குகுமுதம் டிஜிட்டலில்