சினிமாவில் எப்படியும் ஜெயிப்பேன் என 12 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி, அண்மையில் வெளிவந்த ‘ராவண கோட்டம்‘ படத்தின் மூலம் தன் லட்சியத்தில் வென்றிருக்கிறார் சஞ்சய் சரவணன். சாந்தனுபாக்யராஜுடன் இரண்டாவது கதாநாயகனாக நடித்த அவரது திறமையைப் பார்த்து பாராட்டுகள் குவிய, மகிழ்ச்சியாக இருந்தவர் மனம் திறந்து பேசினார்...‘ராவணகோட்டம்‘ படத்துலநீங்கஎப்படிஇணைஞ்சீங்க? “விஜய்டிவியில ‘அவளும்நானும்’னுஒருசீரியல்லசெகண்டுஹீரோவாபண்ணிகிட்டிருந்தேன். அப்போ ‘மதயானைக்கூட்டம்’ படத்தோடடைரக்டர்விக்ரம்சுகுமாறன்தன்னோடஅடுத்தப்படத்துக்குஹைட்டும், வெயிட்டுமானஒருபுதுமுகத்தைதேடிக்கொண்டிருந்தார்... என்னோடபுரொஃபைலைப்பார்த்தும்எனக்குகால்பண்ணதாலநான்போனேன். ஸ்க்ரீன்டெஸ்டில்சிரிப்புஅழுகைன்னுஅவர்கேட்டஎல்லாவிதமானஉணர்வுகளையும் கரெக்ட்டாபண்ணதைப்பார்த்து, என்னைஅவருக்குப்புடிச்சிபோச்சு.”.ராவண கோட்டம் படத்தில் நடிச்ச அனுபவங்கள், கிடைச்ச பாராட்டுகள் பத்தி சொல்லுங்க..? “ இந்தப் படம் ரிலீஸ் ஆகறதுக்கு முன்னாடி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தப்பா பேசியிருக்காங்க என்ற சர்ச்சை வந்தப்போ, திருமாவளவன் சார் அந்தப் படத்தைப் பார்த்தார். படம் ரொம்ப நல்லா இருக்குன்னு என்னை தனியா கூப்ட்டு உட்கார வச்சு பேசினார். படத்துல ‘மதிவாணன்’கிற என் கேரக்டரைப் பார்த்தப்போ ‘நான் என் சமூகத்துக்காக போராடினதுபோல இருந்தது’ன்னு அவர் சொன்னதா கூட இருந்தவங்க சொன்னாங்க. அதேபோல சீமான் சாரும் படத்தை மட்டுமில்லாம ‘மதிவாணன் கேரக்டர் பண்ணியவரும் ரொம்ப நல்லா பண்ணியிருக்கார்’னு பாராட்டினாரு. அதெல்லாம் கேட்டப்போ சந்தோஷமா இருந்தது.”எதனால நடிக்க வந்தீங்க? உங்களோட முதல் படம் எது? “நான் ஒரு அத்லட், யுனிவர்சிட்டி லெவல்லயும் ஸ்டேட் லெவல்லயும் மெடல்கள் வாங்கியிருக்கேன். ஸ்போட்ஸ்ல சாதிச்சு ஏர்ஃபோர்ஸ்ல சேரணும்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா ஒரு ஸ்போர்ட்ஸ் மீட்ல என்னோட ஒரு கால் உடைஞ்சு போச்சு. அதுக்கப்புறமும் நான் மெடல் அடிச்சேன். அதனால இன்னொரு கால்லயும் தசைநார் கிழிஞ்சு போயி நான் ஸ்போர்ட்ஸை கைவிட வேண்டிய நிலை வந்தது. வேற என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். அப்போ எங்க தாத்தா பிச்சைப் பாண்டூரார் தான் நினைவுக்கு வந்தார். அவர் 1935-லயே ஜெமினி பிக்சர்ஸோட ஊமைப் படங்கள்ல ஆஞ்சநேயர், எமதர்மன்னு நிறைய ரோல்ல நடிச்சவர். அதனால நாமளும் ஆக்டிங் பண்ணலாமேன்னு சென்னைக்கு வந்தேன். ரெண்டு வருஷம் போராடி, ‘இரண்டாம் உலகம்’ படத்துல வாய்ப்புக் கிடைச்சது. அந்தப் படத்துக்கு ஹைதராபாத்ல என்னை வச்சுதான் பூசணிக்காயே உடைச்சாங்க. கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் அதுக்காகவே காத்திருந்து அதுல அனுஷ்காவோட ஒன் சைடு லவ்வரா நான் நடிச்சதே அஞ்சாறு நாள்தான். கடைசியில அந்தக் காட்சிகள் படத்துல வரவேயில்ல. “.நீங்க நடிச்ச மத்த படங்களைப் பத்தி சொல்லுங்க... “ ‘இரண்டாம் உலகம்’ படத்துக்கு அப்புறமா, ‘கௌரவம்’ படத்துல மன்வீர்சிங் என்ற சர்தார் ஜி கேரக்டர் பண்ணேன். ‘பூலோகம்’ படத்துல வாய்ப்புக் கேட்கறதுக்காக போனப்போ, அந்தப் படத்துக்கு ஒரு அத்லட் வேணும் அவர்தான் ஜெயம் ரவி கையில உள்ள எதையோ புடுங்கிகிட்டு ஓடணும், அவங்களுக்குள்ள சின்ன சண்டை இருக்கும்னு பேசிகிட்டிருந்தாங்க. நான் அத்லட்தான்னு சொன்னதும் அந்தக் கேரக்டரை எனக்குக் கொடுத்தாங்க. ‘மீகாமன்’ படத்துல அடியாள் வேணும்னு கேட்டாங்க அதுக்காகதான் போனேன். என்னோட நடிப்பு புடிச்சிருந்ததால எனக்கு டயலாக்ஸ் எல்லாம் கொடுத்தாங்க.‘கவண்’ படத்தோட கோ டைரக்டர் முத்து எனக்கு அவர் படத்துலவாய்ப்புக் கொடுத்தார். அதுக்கு அப்புறம் தான் ‘இரும்புத் திரை’ படத்துல வாய்ப்புக் கிடைச்சது. அதுல, என்னை ரவுண்ட் அப் பண்ணப்புறம் முட்டி போட்டுகிட்டு ‘வொயிட் டெவில்’ன்னா யாருன்னு அர்ஜுன் சாரைப் பத்தின எல்லா ரகசியங்களையும் சொல்ற கேரக்டர்ல நடிச்சிருந்தேன். இப்படி தெரிஞ்ச பத்து படங்கள்லயும், தெரியாமப் போன பத்து படங்கள்லயும் நடிச்சிருக்கேன்.”.உங்க படிப்பு குடும்பம் பத்தி தெரிஞ்சுக்கலாமா? “எனக்கு சொந்த ஊர் திருச்சி. நான் பி.எஸ்.சி. எலக்ட்ரானிக் மீடியா படிச்சுகிட்டிருந்தப்போ கால் உடைஞ்சு ஆறு மாசம் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருந்ததால டிஸ்கண்டினியூ பண்ணிட்டேன். அதுக்கப்புறம் கரஸ்பாண்டென்ஸ்ல பி. பி. ஏ.,வும் எம். பி. ஏ.வும் படிச்சுட்டு ஆட்டோமொபைல்ஸ்ல வேலைக்குப் போனேன். அப்பா ஒரு உர நிறுவனத்துல வொர்க் பண்ணி ரிட்டையர்டு ஆனவர், அம்மா ஹவுஸ் வொய்ஃப். தம்பி திருச்சியில ஜிம் வச்சிருக்கார்.”பாடி பில்டிங்ல ஆர்வம் வந்தது எப்படி? “எங்க தாத்தா காலத்துலேர்ந்தே எங்க ஃபேமலிய பயில்வான்குடும்பம்னு தான் சொல்லுவாங்க. எங்க தாத்தா பயில்வானாஇருந்ததுனாலதான் அவருக்கு சினிமாவுல எமதர்ம ராஜா மாதிரியான கேரக்டர்கள்லாம் கொடுத்திருக்காங்க. எங்க அப்பாவும் தம்பியும்கூட பாடி பில்டர், வெயிட் லிஃப்டர்கள் தான். அதனால எனக்கும் ஃபிட்னஸ்ல ஆர்வம் வந்தது, நான் நைன்த் படிக்கும் போதுலேர்ந்து இப்போ வரைக்கும்ஜிம்முக்குப் போயிகிட்டிருக்கேன்.”.‘கலகத் தலைவன்’ படத்துல உதயநிதிகூட நடிச்ச அனுபவங்களை சொல்லுங்க, ஃபைட் சீன் பண்ணும்போது ஏதோ அசம்பாவிதம் நடந்துடுச்சாமே? “உதயநிதி சார்கூட ‘கலகத் தலைவன்’ படம் பாதிபோயிகிட்டிருந்தப்போதான் ஆட்சி மாறி அவர் எம்.எல்.ஏ.வாவும் ஆனார். ஆனா அதுக்கு முன்னாடி எப்படி பழகினாரோ அதேபோலதான் எம்.எல்.ஏ. வா ஆனப்புறமும் ரொம்ப எளிமையாவும் அன்பாவும் பழகினார். அவரை உயரமா எகிறி உதைக்குற மாதிரி ஒரு ஸ்டண்ட் சீன். நான் ஜம்ப் பண்ணி அடிக்கிற மாதிரி பண்ணும்போது எப்படியோ ஸ்லிப் ஆகி உண்மையிலேயே அவரை அடிச்சிட்டதால அவரோட தலையில வீங்கிடுச்சி. அந்த இடத்துல யாரா இருந்தாலும் பயங்கரமா கோபப்பட்டிருப்பாங்க. ஆனா நான் பதறிப்போய் மன்னிப்புக் கேட்டப்போ, கோபமே படமாம பரவாயில்லைப்பான்னு ரொம்ப பெருந்தன்மையா நடந்துகிட்டார். அவர்கூட வொர்க் பண்ணது ஒரு நல்ல மறக்க முடியாத அனுபவம்.”அடுத்து வேற ஏதாவது படத்துல கமிட் ஆகியிருக்கீங்களா? “ ‘ராவண கோட்டம்’ இயக்குநரோட அடுத்த படத்துலயும் நடிக்கப் போறேன். அப்புறம் ‘மீகாமன்’, ‘கலகத்தலைவன்’ படங்கள்ல எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் மகிழ் திருமேனி சார் இயக்கப் போற அஜீத் சாரோட படத்துலயும் வாய்ப்பு கேட்டுகிட்டிருக்கேன். ‘ஜில்லா’ படத்தோட கோ டைரக்டர் தன்னோட படத்துக்கு கூப்ட்டிருக்கார் எல்லாமே பேச்சுவார்த்தை அளவுலதான் இருக்கு.” - வாசுகி ராஜா