- ஜி.எஸ்.எஸ். "ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?" - பேட்டை ரவுடிகள் தரத்துக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றனர் உலகப் பெரும் பணக்காரர்களான இருவர். வியாபாரப் போட்டிதான், வேறு ஒன்றும் இல்லை. இத்தனைக்கும் இருவரிடமும் சந்தையில் விக்கிறதுக்கு பெருசா சரக்கு ஒண்ணும் இல்ல, சமூக வலைத்தள ஆக்கிரமிப்பு தான். சமூக வலைத்தள ஆதிக்கம் என்பது கிட்டத்தட்ட புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொள்வது மாதிரிதான். அதில் தான் இந்த இரண்டு பெரும் பண முதலைகளுக்கு இடையே மாபெரும் உலக யுத்தம்... யார் அந்த ரெண்டு பேர்? .‘ட்விட்டர்’ உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் (முகநூலின் தாய் நிறுவனமான) ‘மெட்டா’வின் முக்கிய செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கும் தான். “எங்களுக்குள் ஒரு குத்துச்சண்டைபோட்டி வைத்துக் கொள்ளத் தயார்!” என்கிறார் ஜூக்கர்பெர்க். “ரோம் நாட்டின் கொலோசியத்தில் இது நடந்தால் மேலும் பொருத்தமாக இருக்கும்” என்று கூடுதலாகக் கிண்டலடிக்கிறார் எலான் மஸ்க்.இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளப் போவதில்லை. ஆனால் ஊடகங்களில் காரசாரமான மோதல் தொடங்கி விட்டது.உச்சகட்டமாக ‘த்ரெட்ஸ்’(Threads) என்ற புதிய பயன்பாட்டை (ஆப்) மெட்டா அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதற்கு அவர் முதலில் ஆலோசித்த பெயர்கள், ‘ப்ராஜெக்ட் 92’,‘பார்சிலொனா’. ஆனால், இறுதியாக த்ரெட்ஸ் என்று முடிவாகியுள்ளது. நூல் விட்டுப் பார்க்கிறாரா மார்க்? சரி, இந்த நூலை வைத்து என்ன செய்யலாம்? “இன்ஸ்டாகிராமின் சிறந்த பகுதிகளை எடுத்து உரைகள், ஆலோசனைகள் மற்றும் உங்கள் மனதில் உள்ளவற்றைப் பற்றி விவாதிப்பதற்கான புதிய அனுபவம்...”என்று இதை வர்ணிக்கிறார் மார்க் ஜுகெர்பெர்க். மேலும், “ இது நம்பகமானது, இதை பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பையும் இயல்பாகவே பெறலாம்” என்றும் சொல்கிறார். ‘ட்விட்டரை’க் கடுப்பேற்றுகிறாராம்!..ஜூலை ஆறாம் தேதி அன்று அறிமுகமான ஏழு மணிநேரத்திலேயே ஒரு கோடி பேர் ‘த்ரெட்ஸை’ப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்களாம். நூறு நாடுகளில் ‘த்ரெட்ஸ்’ பயன் பாட்டைத் தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். இதில் இந்தியாவும் உண்டு. (ஆனால் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இது இன்னும் அறிமுகமாகவில்லை. அங்கே இதை ஒழுங்குமுறைச் சட்டங்கள் வடிகட்டிக் கொண்டிருக்கின்றன!). ‘த்ரெட்ஸ்’ பயன்பாட்டுக்கு எதனால் இந்தப் பெரும் வரவேற்பு? .சென்ற ஆண்டு எலான் மஸ்க் ‘ட்விட்டர்’ நிறுவனத்தைத் தன்வசமாக்கிக் கொண்டார். அதில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தார். அந்த நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களில் பலரை வீட்டுக்கு அனுப்பினார். வாடிக்கையாளர்களை நேரடியாக பாதித்த இன்னொரு விஷயமும் நடந்தேறியது... அதிகபட்சம் இவ்வளவு ‘ட்வீட்’கள் தான் தினசரி படிக்கலாம் என்று, பலதரப்பட்ட பயனர்களுக்குத் தகுந்தாற்போல், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ‘புளூ டிக்’ தொடர்பான புதிய கட்டுப்பாடுகளும் ட்விட்டர் பயனர்களுக்குப் பிடிக்கவில்லை. இவற்றால் கொதிப்படைந்த ‘ட்விட்டர்’ பயனர்களுக்கு ‘த்ரெட்ஸ்’ சரியான மாற்றாகப் பார்க்கப்படுகிறது. .இதில் மார்க்குக்கு சாதகமான மற்றொரு விஷயம், புதிதாக வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள 2.35 பில்லியன்பயனர்கள் ‘த்ரெட்ஸை’ப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் தங்களைக் குறித்த (யூஸர் நேம் உள்ளிட்ட) தகவல்களை மீண்டும் உட்செலுத்த வேண்டிய வேலை கூட அவர்களுக்கு மிச்சமாகி விடுகிறது. இன்ஸ்டாகிராம் ‘லாக் இன்’னை (log in) கொண்டே புதிய பயன்பாட்டையும் பதிவு செய்து பயன்படுத்த முடியும். 87 சதவிகிதம் ‘ட்விட்டர்’ பயனர்கள் ‘இன்ஸ்டாகிராமை’ப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..‘ட்விட்டரி’ல் உள்ள பல நன்மைகள் ‘த்ரெட்ஸில்’ உண்டு. ‘ட்விட்டர்’ போலவே இதிலும் புகைப்படங்கள், வீடியோக்கள், பின்தொடர்பவர்களின் இணைப்புகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் ‘மஸ்டோடன்’ போன்ற பிற சமூக ஆப்ஸ்களுடன் இணைந்து செயல்படும்படியும் ‘த்ரெட்ஸ்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘த்ரெட்ஸில்’ 500 எழுத்துகள் (characters) வரை பதிவிடலாம் என்பது கூடுதல் வசதி. சண்டை ஆரம்பித்து விட்டது, வெற்றி யாருக்கானதாக இருந்தாலும் கொண்டாட்டம் சமூக ஊடக பிரியர்களுக்குத் தான்.