- வாசுகி ராஜா கொஞ்சம் காமெடி, நக்கல் கலந்த குணச்சித்திர கதாபாத்திரம் என்றாலே இவர்தான் நினைவுக்கு வருவார்...அதேசமயம் கொடி, இறுதிச்சுற்று, சூரரைப் போற்று, மாரி என கதாநாயகர்களுக்கு தோள் கொடுக்கும் கதாபாத்திரங்களிலும் அசத்தி இருப்பவர்தான் காளி வெங்கட். பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் பரபரப்பாக நடித்து வரும் அவரை கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் பிடித்தோம். காரணம் நேரமின்மை அல்ல; அவரது நேரம் அவரிடம் இல்லை என்பதுதான். ஆனாலும் நமக்காக சிரமப்பட்டு சில நிமிடங்கள் ஒதுக்கினார்....உங்களின் சொந்த ஊர், குடும்பம், படிப்பு, நடிப்பில் ஆர்வம் வந்தது என்பதையெல்லாம் ஒரு குட்டி ஸ்டோரியாகச் சொல்ல முடியுமா? “எனது சொந்த ஊர் கயத்தாறுக்குப் பக்கத்துல இருக்கற குடையதேவன்பட்டிங்கிற கிராமம். பள்ளிக்கூட காலத்துலயே நாடகங்கள்ல எல்லாம் நடிச்சிகிட்டிருந்தேன். அதனால சினிமாவுல நடிக்கணும்கிற ஆர்வத்துல 1998-ல 15 வயசுலயே சென்னைக்கு வந்துட்டேன். கிடைச்ச சின்னச் சின்ன வேலைகளை செஞ்சுகிட்டு இருந்தேன். அப்புறம் நாடகங்கள்ளயும் நடிச்சுக்கிட்டு இருந்தேன். 2006ல இருந்து தான் குறும்படங்கள்ள நடிக்க ஆரம்பிச்சேன். அதுக்குப் பின்னாடி நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. 2014க்கு அப்புறம், அதாவதுமுண்டாசுப் பட்டி, தெகிடி படங்களுக்கு அப்புறமாதான் கெரியர் டேக் ஆஃப் ஆக ஆரம்பிச்சது.சென்னைக்கு வந்ததும் காய்கறி விக்கறதுலேர்ந்து வீடுகளுக்கு தண்ணி கேன் சப்ளை பண்ற வரைக்கும் நிறைய வேலைகள் செஞ்சேன். எனக்கு சினிமால நடிக்கணும்னு வெறியெல்லாம் கிடையாது. ஒரு நாலஞ்சு படத்துல நடிச்சு அந்த சிடியைக் கொண்டுபோய் நானும் படங்கள்ள நடிச்சிருக்கேன்னு குடும்பத்துலயும், ஊர்ல உள்ள பசங்ககிட்டயும் போட்டுக் காண்பிக்கணும்னு நினைச்சேன், அவ்ளோதான்.” .சில படங்கள்ல நடிச்சா போதும்னு நினைச்ச நீங்க பிற்காலத்துல, தனுஷ், சூர்யா போன்ற பெரிய நட்சத்திரங்களோட நடிச்சப்ப எப்படி ஃபீல் பண்ணினீங்க? “அது ஒவ்வொன்னுமே எனக்கு புது அனுபவம் தான். இதுவரைக்கும் வந்ததே பெரிய சர்ப்பிரைஸ்தான். அதுவும் தனுஷ் சார் கூட நடிக்கும் போது பயங்கர சர்ப்ரைஸா இருக்கும். சில நேரங்கள்ல அவர் நடிப்பதைப் பார்க்கும் போது பிரமிப்பா இருக்கும். இப்ப ‘கேப்டன் மில்லர்‘ அவர்கூட நடிக்கும் போது சில சமயம் என்னையே மறந்துட்டேன். சூர்யா சார் இயல்பான மனிதர். முதல் நாள் சூர்யா சார் கூட நடிக்கும் போது ஒரு மாதிரி பயமா இருந்தது. ஆனா சூர்யா சார், நான் நடிக்க வந்த காலத்துலேர்ந்து பழகியிருந்தா எப்படி இருக்குமோ, அப்படி ஒரு நெருக்கத்தைக் காட்டினார். பெரிய நடிகர்களோட நடிக்கறது சர்ப்பிரைஸ் தான், வாழ்க்கையில இன்னும்கூட சர்ப்ரைஸ் இருக்கும்னு நம்பறேன்.”நீங்க நடிச்சதுலயே உங்களுக்கு ரொம்பப் புடிச்ச, அதிக பாராட்டைப் பெற்றுத் தந்த படங்கள் என்னென்ன? “தனியா ஒரு படம்னு குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. மெர்சல், மாரி, கொடி, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்றுன்னு நிறையா சொல்லலாம்… ஆனால் அதிகம் பேர் பாராட்டினதாலேயே எனக்கு ஃபேவரிட்டா ஆன படம்னா அது ‘ராஜா மந்திரி’ங்கிற படம் தான். அந்தப் படம் தியேட்டர்ல பெருசா ஓடலை. ஆனாலும் டி.வி.யிலயும், ஸீ ஃபைவ்லயும் அந்தப் படத்துக்கு நல்ல வரவேற்புக் கெடைச்சது.”.நீங்கள் நடிப்பதிலேயே உங்களுக்கு பெரும் சவாலாக அமைந்த கதாபாத்திரம் எது? “ ‘அநீதி’ன்னு ஒரு படம் வரப்போகுது, அதுதான். ரொம்ப சவாலான கேரக்டரா இருந்ததால நடிக்க சிரமமா இருந்தது. ஆனாலும் அந்த டைரக்டரோட திறமையால என்னை ரொம்ப இயல்பா பண்ணவச்சிட்டாங்க. அதேமாதிரி டப்பிங் பேசறதும் அதைவிட சிரமமா இருந்தது. படம் பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்.”அண்மையில் கிடைத்த மறக்க முடியாத பாராட்டு? “சமீபத்துல டைரக்டர் ஷங்கர் சார்கிட்டேயிருந்து கிடைச்சதுதான். ஒரு விருது விழாவுல என்னைக் கடந்து போனபோது, நான் வணக்கம் வச்சதும் அப்படியே நின்னுட்டார். ‘அநீதி படம் பார்த்தேன், ரொம்ப நல்லா நடிச்சிருந்தீங்க’ன்னு அவர் சொன்னதும் அவ்ளோ சந்தோஷமா இருந்தது.”.உங்க குரு இயக்குனர் விஜய் பிரபாகரனுடனான உங்க பிணைப்பைப் பத்தி சொல்லுங்க..? “இந்தக் கேள்வியை நீங்க கேட்காம விட்டிருந்தாலும் நானாவே அவரைப் பத்தி பேசியிருப்பேன். சினிமாக்காரங்கன்னாலே இப்படித்தான் இருப்பாங்கன்னு நான் நம்பிகிட்டிருந்த பிம்பத்தை முதல்ல உடைச்சவர் அவர்தான். ‘தசையினை தீ சுடினும்’ங்கிறதுதான் அவரோட முதல் படம். அந்தப் படத்தோட ஆடிஷனுக்கு நான் போயிருந்தப்போ,‘வணக்கம்; என் பேர் விஜய் பிரபாகரன், இந்தப் படத்தோட டைரக்டர்’னு அவர் அறிமுகப்படுத்திக்கிட்டதே எனக்கு ஆச்சர்யமா இருந்தது. அட்டகத்தி தினேஷ் முதன்முதல்ல நடிச்ச அந்தப் படத்துல ‘காளி’ன்னு ஒரு கதாபாத்திரம். பராக்கிரமசாலியான அந்த கேரக்டருக்குன்னு ஆஜானுபாகுவான ஒரு உருவத்தை முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா ‘பராக்கிரமசாலின்னாலே ஹைட்டு வெயிட்டா தான் இருக்கணும்னு ஏன் நினைக்கறீங்க? அந்த ‘காளி’ கதாபாத்திரம் கட்டையா குட்டையா இருந்தா என்ன, யோசிச்சுப் பாருங்க’ன்னு அவரோட அசிஸ்டெண்ட்ஸ்கிட்ட அவர் சொன்னப்போ, நான் மெரண்டு போயிட்டேன். அந்த கேரக்டர்ல தான் நான் நடிச்சேன்.அதுல நடிச்சதனாலதான் நண்பர்கள் என்னை ‘காளி’ வெங்கட்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்புறம் படங்கள்லயும் அதே பேரே நிலைச்சிடுச்சி. ஆனா, 2008ல ரெடியான அந்தப் படம் ரிலீஸ் ஆகவேயில்ல. அதுக்கப்புறம் அவர் பாம்பேவுக்குப் போயிட்டார். அங்க ஆட் ஃபிலிம் பண்ணிகிட்டிருக்குற அவர் இப்போ இங்க வந்து படம் எடுக்கணும்கிறது என்னோட ஆசை. நாலு நாளைக்கு முன்னாடி கூட அவர்கிட்ட பேசினேன். அவர்கிட்ட எப்போ பேசினாலும் சாஃப்ட்வேரை அப்டேட் பண்ண மாதிரி ஆக்கிடுவார்.”தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று படத்துல சுதா கொங்கரா உங்களை ரொம்ப பாராட்டி பேசி இருந்தாங்க. அவங்களோட பணி செய்த அனுபவங்களைச் சொல்லுங்க..? “சுதா மேடம் நல்லா நடிக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. ஓவராவும் நடிச்சுரக் கூடாது. அதேபோல பங்சுவாலிட்டியில ரொம்ப ஸ்ட்ரிக்டா இருப்பாங்க. இறுதிச்சுற்று படத்துல அவங்ககிட்ட வொர்க் பண்ணியிருக்கேன். ஆனாலும், சூரரைப் போற்று படத்துல நடிச்சது கொஞ்சம் சேலஞ்சிங்கா தான் இருந்தது.”.இப்போ என்னென்ன படங்களில் என்ன கதாபாத்திரங்கள் எல்லாம் நடிக்கிறீங்க? “ ’டெஸ்ட்’னு ஒரு படத்துல மாதவன்- நயன்தாரா கூட நடிச்சிருக்கேன். தனுஷ் சார்கூட’கேப்டன் மில்லர்’ படத்துல நடிச்சிருக்கேன். ‘லப்பர் பந்து’னு ஒரு படத்துல தினேஷ், ஹரீஷ் கல்யாண் இவங்களோட நடிச்சிருக்கேன். அப்புறம் காடைப்புறா கலைக்குழு, இன்னும்இரண்டு படம்... இனிமேதான் ஷூட்டிங் போகப் போறேன்.”காடை புறா கலைக்குழு படத்தைப் பத்தி சொல்லுங்க?‘காடைப்புறா கலைக்குழு’ ரொம்ப ஜாலியான ஒரு படம். அதுல மணிகண்டன், நான், முனீஷ்காந்த் எல்லாரும் நடிச்சிருக்கோம். திரைக்குப்பின்னான கலைஞர்களின் வாழ்க்கையைச் சொல்ற நல்ல படம். கரகாட்டக்காரன் மாதிரி ஜனரஞ்சகமான ஒரு படமா அது இருக்கும்.”