- வாசுகி லட்சுமணன்சிறந்த குணசித்திர நடிகர் என்று பெயரெடுத்த சேத்தனை ‘விடுதலை‘ படத்தில் கொடூர வில்லனாக காட்டி நம்மை மிரள வைத்து விட்டார் வெற்றிமாறன். அதன் இரண்டாம் பாகத்தில் சேத்தனின் வில்லத்தனம் இன்னும் எவ்வளவு கூடியிருக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆவலில் அவரை சந்தித்துப் பேசினோம்….‘அயோத்தி‘ படத்துல சின்ன ரோல்ல வந்தாலும், கடவுள் மாதிரி தெரிஞ்சீங்க, விடுதலை படத்துல உங்களைக் கொல்லலாமான்னு கோபம் வர்ற அளவுக்கு நடிச்சிருக்கீங்க, இந்த தேர்ந்த நடிப்பை எப்படி கத்துக்கிட்டீங்க? “முதல்ல நல்ல டைரக்டஸ்கிட்ட வொர்க் பண்ணும் போது நமக்குள்ள என்ன இருக்கோ அதை பெஸ்டா வெளியில எடுத்துடுவாங்க. ஏன்னா ரைட்டிங்லயே அந்தக் கேரக்டருக்கான டெப்த் இருக்கணும். அயோத்தி படத்தை எடுத்துக்கிட்டீங்கன்னா அதுல எனக்குப் பெருசா பண்றதுக்கு ஒண்ணும் இல்லை. ஆனா அந்தக் கதையோட்டம் அந்தக் கட்டத்துக்கு வரும்போது ஏதாவது ஒரு மிராக்கிள் நடந்துடாதா? அப்படீங்கிற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கும் போது, என்னோட கேரக்டர் ஒருசின்ன உதவியைச் செய்யுது. அதனால என்னுடைய ரோல் அதுலபெருசா பார்க்கப்படுது. திரைக்கதையை அந்த அளவுக்கு ரொம்ப அழகா எழுதிக் கொண்டு வந்திருக்காங்க. அந்த கட்டத்துக்கு வரும்போது அதுக்கு அழகா ஒரு ஃபினிஷிங் கொடுத்தாங்க. என்னோட ரோல் டெப்த்தா தெரிஞ்சதுக்குக் காரணம் அந்தக் கதையும், இயக்குநரும்தான். லக்கிலி எனக்கு ஆரம்பத்துலேர்ந்தே நல்ல டைரக்டர்ஸோட வேலை செய்யற வாய்ப்பு கிடைச்சது. அவங்ககிட்டல்லாம் கத்துக்கறதுக்கும் நிறைய இருக்கும் இல்லையா? அப்படித்தான் கத்துக்கிட்டேன்.விடுதலை பார்ட் 2-வில் உங்க வில்லத்தனம் இன்னும் அதிகமாஇருக்குமா? வெற்றிமாறனுடன் பணி செய்த அனுபவம் எப்படி இருந்தது? “ஆமா, நிச்சயமா என்னோட வில்லத்தனம் இன்னும் அதிகமா இருக்கும். வெற்றிமாறனோட வொர்க் பண்ணது ரொம்ப நல்ல அனுபவம். குறிப்பா நடிப்புன்னு இத்தனை வருஷமா ஒண்ணைபண்ணிகிட்டிருந்திருப்போம் இல்லையா..? கோவமா பார்க்கணும்னா இப்படி பார்க்கணும், சிரிக்கணும்ன்னா இப்படி சிரிக்கணும்னு ஒரு ஸ்டைலை ஃபாலோ பண்ணியிருப்போம். அதையெல்லாம் ப்ரேக் பண்ணிட்டு, ‘நீங்க இந்த மாதிரி பண்ணுங்க போதும், நீங்க கோவமால்லாம் பார்க்கத் தேவையில்ல, மனசுக்குள்ள இன்டர்னலா ஃபீல் பண்ணா போதும்’ அப்படீன்னு நிறைய சொன்னார். எந்த எமோஷனை வெளிக் கொண்டுவர்றதுக்கு எந்த ஃபீலை மனசுல வச்சுக்கணும்னு க்ளியரா சொல்லுவார், அது நமக்கு ரொம்ப ஈஸியாயிடும்.”.தொலைக்காட்சித் தொடர்கள்ல நடிக்கறதுக்கும் சினிமாவுலநடிக்கறதுக்கும் என்ன வித்யாசத்தைப் பார்க்கறீங்க? எது உங்களுக்கு ரொம்பப் புடிச்சிருக்கு? “ஆரம்பத்துலேர்ந்தே சினிமாமேல எனக்கு ஈர்ப்பு அதிகம். சீரியலைப் பொருத்தவரைக்கும் ‘மர்ம தேசம்‘ தொடரின் ‘விடாது கருப்பு‘ பகுதியில நான் நடிச்சேன் இல்லையா? அதுவே கிட்டத்தட்ட சினிமா மாதிரிதான் அவ்ளோ பிரம்மாண்டமா எடுத்தாங்க. வீக்லி சீரியல்ஸ் போயி என்னைக்கு டெய்லி சீரியல்ஸ் வந்ததோ, அப்பவே அதோட குவாலிட்டியை நாம நினைக்கிற அளவுக்கு மெயின்டெய்ன் பண்ண முடியாமப் போயிடுச்சி. எடுக்கறவங்களுக்கும் டைம் இருக்காது, நடிகர்களுக்கும் சரியா பெர்ஃபாம் பண்றதுக்கும் டைம் இருக்காது. எல்லாமே ஃபேக்டரி மாதிரி கடகடன்னு பண்ண வேண்டியிருக்கும். அது ஒண்ணு தான் டிஃபரன்ஸ், வேற பெருசா எதுவும் இல்ல. சீரியல்ஸ் பண்ணதுனால எனக்கு ஒரு அட்வான்ட்டேஜ் என்னன்னா மனப்பாடம் பண்ற ஸ்கில் டெவலப் ஆயிடும், ஸோ, வசனங்கள் எவ்ளோ கொடுத்தாலும் சளைக்காம என்னால பேச முடியுது.”.நீங்க நடிச்ச தொடர்கள்லயும், திரைப்படங்கள்லயும் உங்களுக்கு ரொம்பப் புடிச்சது என்னென்ன?தொடர்கள்ல முதல்ல என்னோட அடையாளமே ‘கருப்பு’ தானே? ‘மர்ம தேசம்‘ தொடர்ல ‘விடாது கருப்பு‘ பகுதிதானே எனக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது? அந்தத் தொடர்ல நடிக்கும்போதுதான் 1997-ல என் மனைவி தேவதர்ஷினியை சந்திச்சேன். நான் நடிச்சதுலேயே எனக்கு ரொம்பப் புடிச்ச படம், நிறைய பாராட்டுகளை வாங்கித் தந்த படம்ன்னா அது ‘விடுதலை’ தான். அதுதான் எனக்கு நல்…ல பேரை வாங்கித் தந்திருக்கு. இதுக்கு முன்னாடி தமிழ் படம் 2 அதுலயும் நல்ல பேர் கிடைச்சது. ஆனாவிடுதலை வேற லெவல்.”.உங்க மனைவி தேவதர்ஷினியும் சினிமாவுல தொடர்ந்து நடிக்கறாங்க, இருந்தும், நீங்க எப்படி ஆதர்ச தம்பதிகளா இருக்கறீங்க? “ஆதர்ச தம்பதிகளா இல்லையான்னு தெரியல. ஆனா ரெண்டு பேரும் ஒரே துறையில இருக்கறதால இந்தத் துறையில உள்ள கஷ்ட நஷ்டங்களை எடுத்துச் சொல்லாமலேயே புரிஞ்சுக்க முடியும். அதனால பெரும்பாலும் சண்டை வர்றதுக்கான வாய்ப்புகள் இருக்காது. அதுபோல வேலை விஷயமா ஏதாவது ஆலோசனை தேவைப்பட்டாலும் ஒருத்தரோட ஒருத்தர் டிஸ்கஸ் பண்ணிக்க முடியுது. "’96’ படத்துல உங்க பொண்ணு ரொம்ப அழகா நடிச்சிருந்தாங்க, அவங்க எப்படி நடிகையானாங்க? தொடர்ந்து நடிப்பாங்களா? "ஆமா, 96 படத்துல தேவதர்ஷினியோட சின்ன வயசு கேரக்டருக்கு நடிக்க வாய்ப்புக் கிடைச்சது. நடிக்கணும்கிற ஆர்வம் அவளுக்கு அதிகமா இருந்ததால அழகா நடிச்சிருந்தா. இப்ப காலேஜ் ஃபைனல் இயர் படிக்கறா. இதுக்கு நடுவுல ‘ராணி‘ங்கிற மலையாளப் படத்துல டைட்டில் ரோல் பண்ணியிருக்கா. போன வாரம் தான் அதோடசாங் ரிலீஸ் பண்ணாங்க. அந்தப் படமும் கூடிய சீக்கிறம் ரிலீஸ் ஆகப் போகுது. அதனால என் பொண்ணு தொடர்ந்து நடிப்பா.".நடிப்பைத் தவிர வேற ஏதாவது தொழில் பண்றீங்களா? "நடிப்பை மட்டும் தான் முழு நேரத் தொழிலா பண்றேன், அதைத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது."