‘விடுதலை’யில் அப்பா ராஜீவ் மேனன் திடீரென திரையில் முகம் காட்டி அதிர்வுகளை ஏற்படுத்த, அடுத்து சில வாரங்களில் ‘அஸ்வின்ஸ்’ படத்தில் மகள் சரஸ்வதி மேனன் மின்னல்போல் திரையில் அறிமுகமாகி, திகிலான நடிப்பால் நம்மை மிரள வைத்து விட்டார்... அப்பாவைப் போல் ஏன் இந்த திடீர் திரை பிரவேசம்? தெரிந்து கொள்ள ராஜீவ் மேனனின் ஃபிலிம் இன்ஸ்ட்டிடியூட்டிற்கேச் சென்றோம். படத்தில் பார்த்ததுக்கு நேர் மாறான தோற்றத்தில் அமர்ந்தபடி நம்மை வரவேற்றார் சரஸ்வதி மேனன். .அப்பா ஒரு பெரிய லெஜெண்ட். நீங்க அவர்கிட்ட ஆக்டிங் சான்ஸ் எதுவும் கேட்கலையா..? “நிஜமா நான் கேட்கல. நீங்க யூடியூப்ல பார்த்தீங்கன்னா, நான் நிறையா ஷார்ட் ஃபிலிம்ஸ் பண்ணிருக்கேன். எல்லாரும் எப்படி வாய்ப்பு தேடுவாங்களோ, அதே மாதிரி தான் நானும் வாய்ப்பு தேடுனேன். இந்த ‘அஸ்வின்ஸ்’ பட வாய்ப்பே ஒரு ஷார்ட் ஃபிலிம் மூலமா தான் வந்துச்சு. அப்பாவால எனக்கு நிச்சயம் ஒரு பிரிவிலேஜ் இருக்கு... ஆனா, அதை நான் என்றைக்கும் பயன்படுத்துனது இல்லை. நான் எங்க அப்பா, அம்மா, ஃப்ரண்ட்ஸ்கிட்டலாம் வாய்ப்பு கேட்கல. நான் அசிஸ்டண்ட் டைரக்டர்ஸ், காஸ்டிங் டைரக்டர்ஸ் கிட்ட தான் வாய்ப்பு கேட்டேன்.” .ஷார்ட் ஃபிலிம்ஸ் அனுபவம் எப்படி இருந்துச்சு..? “ஷார்ட் ஃபிலிம்ஸ்ல நடிக்கிறப்போ பல தடவ கார்லயே ட்ரஸ் சேஞ்ச் பண்ணிருக்கேன். ஏன்னா ஷார்ட் பிலிம்ஸ்ல பட்ஜட் கம்மி, அதுமட்டுமில்லாம எல்லாரும் காசுக்காக படம் பண்ணாம பாஷனுக்காக படம் பண்றாங்க. அது எனக்கு ரொம்ப பிடிச்சது. பல பேர் முகம் கூட தெரியாம அதுக்காக வேலை பார்க்குறது எனக்கு பெரிய மோட்டிவேஷனா இருந்துச்சு.”.ராஜீவ் மேனன் வீட்ல எப்படி இருப்பாரு? “அப்பா, அம்மா ரெண்டு பேருமே வீட்ல நிறையா காமெடி பண்ணிட்டு இருப்பாங்க . வெளிய ரொம்ப சீரியஸான ஆள் தான். ஆனா, வீட்ல என்ன நிறையா கலாய்ப்பாரு. என்ன மாதிரி நடிச்சிலாம் காட்டுவாரு. நான் அவர் ’விடுதலை’ல நடிச்ச சீன்ஸ அவர மாதிரியே நடிச்சிக் காட்டுவேன். வீட்ல எல்லாரும் சேர்ந்து பாட்டு பாடுவோம். அப்போ கூட ஸ்ருதி பாக்ஸ் இல்லாம எங்கள பாட விட மாட்டாரு. அவர் எப்பவுமே ஒரு டீச்சர் தான்...”(சிரிக்கிறார்) ஒரே வீட்ல அப்பா - பொண்ணுன்னு ரெண்டு ஆக்டர்ஸ் இருக்கீங்க. உங்களுக்குள்ள போட்டிலாம் இல்லையா..? “போட்டினுலாம் ஒன்னும் இல்ல. சில நேரங்கள்ல எனக்கு கொஞ்சம் கடுப்பா இருக்கும். எல்லாரும் அப்பாவுக்கே கதை சொல்றாங்கன்னு. ஆனா, அவர் ரொம்ப சில கதைகளத்தான் தேர்ந்தெடுக்குறாரு. சொல்றவங்க அப்பா - பொண்ணு ரெண்டு பேரும் நடிக்கிற மாதிரி கதை சொன்னா டிஸ்கவுண்ட் உண்டு... (கண்கள் சுறுங்க சிரிக்கிறார்..) அடுத்தடுத்து எந்த மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கலாம்ன்னு இருக்கீங்க..? “கண்டிப்பா நிறையா ஜானர்கள்ல படம் பண்ணுவேன். எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும், அப்படி ஒரு படம் பண்ணனும்ன்னு ஆசையும் இருக்கு. அப்புறம் மியூசிக்கலா ஒரு படம் பண்ணனும். நல்ல கதாபாத்திரமா இருந்தா போதும் எல்லா ஜானர்லையும் நடிக்கலாம்.” .ஃபர்ஸ்ட் படம் எல்லாருமே ஒரு ரொமாண்டிக் ஜானர்ல தான் பண்ணுவாங்க. ஆனா நீங்க இந்த மாதிரி ஒரு ஹாரர் ஜானர்ல படம் பண்லாம்ன்னு முடிவெடுக்க காரணம் என்ன..? “நான் நிறைய இடத்துல ட்ரை பண்ணிட்டே இருந்தேன். ஆனா எதுவும் சரியா கிடைக்கல. எனக்கும் ஒரு ரொமாண்டிக் படம் பண்ணனும்ன்னு தான் ஆசையா இருக்கு. எனக்கு எப்படியாவது ஸ்டார்ட் பண்ணனும்ன்னு தோணுச்சு. ஆனால், இது என்ன தேடி வந்த ஒரு வாய்ப்பு. அதை விட தோணல.” உங்கள முதல் தடவை ஸ்கிரீன்ல பார்த்தப்போ உங்களுக்கு என்ன தோணுச்சு..? “நிஜமா அழத் தோணுச்சு. இந்த நாள் இப்ப வரும்னு நான் எதிர்பார்க்கல. ஏன்னா, கோவிட்டுக்கு அப்புறம் தியேட்டர்ல எந்த படம், எப்ப வரும்னு சொல்ல முடியாத குழப்பம் இருந்துச்சு. இந்தப் படம் ஒரு மூணு வருஷ பயணம். நிச்சயமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன், ஆனால் எனக்கு இது மட்டும் போதாது.” உங்க நடிப்ப பார்த்துட்டு அப்பா என்ன சொன்னாரு..? “நான் அவங்க கிட்ட இந்த ஸ்கிரிப்ட் பத்தி எதுவுமே கேட்கல. அவங்க ஒரு ஆடியன்ஸா தான் படம் பார்த்தாங்க. அவங்களுக்கு படம் பிடிச்சிருந்துச்சு. என் ஆக்டிங்கையும் பாராட்டுனாங்க.” ’அஸ்வின்ஸ்’ படத்துல நடிக்கிறப்போ ஏற்பட்ட அனுபவங்கள்..? “நாங்க ஷூட்டிங் பண்ண இடத்துல, ஒரு தடவ ரூம்ல நான் டிரஸ் சேஞ்ச் பண்றப்போ கதவு திறக்க முடியாம, உள்ள மாட்டிக்கிட்டேன். ரொம்ப நேரம் தட்டுனதுக்கு அப்புறம் வசந்த் ரவி திறந்து விட்டாரு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் அப்படி ஒரு சீனை நாங்க படத்துக்கு ஷூட் பண்ணிருந்தோம், அது அப்படியே நிஜத்துல நடந்துச்சு. அங்க இருந்ததேல்லாம் நல்லா குறும்பு பிடிச்ச பேய்களா இருக்கும் போல...”(நன்றாக சிரிக்கிறார்) நிஜ வாழ்க்கையில பேய் இருக்கிறதா நம்புறீங்களா? “இந்தப் பட புரோமோஷன்ஸ்க்கு போயிருந்தப்போ, ஓஜா போர்டு விளையாடினோம். அதுல எனக்கு நிறையா பயம் இருந்துச்சு. அப்போ ஒரு போட்டோ விழுந்துச்சு. அது ஒரு ஹாரர் சம்பவம். அதே புரோமோஷனுக்காக ஒரு ஹாண்டட் இடத்துக்கு போனோம். அங்க ஒரு லைட்ட எடுத்துட்டு போனோம். ஆனா கரெக்டா அந்த இடத்துக் கிட்ட போனதும் லைட் ஆஃப் ஆச்சு. அது எதுனால ஆச்சுன்னுலாம் தெரியல. ஆனா நான் பேய் இருக்குங்கிறத நம்புறேன்.” - ஷா