மக்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தில் நாயகனாக நடித்தவர் ராம் அருண் கேஸ்ட்ரோ. இவர் தற்போது ‘ஹர்காரா’ என்ற படத்தை இயக்கியிருப்பதோடு, அதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். போஸ்ட்மேனைப் பற்றிய வித்தியாசமான கதையுடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீஸரும், வீடியோ பாடலும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் பற்றித் தெரிந்து கொள்வதற்காக அவரிடம் பேசினோம்....‘ஹர்காரா’ - படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்கே..? “இன்னிக்கு தகவல் தொடர்புக்குனு ஏகப்பட்ட டெக்னாலஜி இருக்கு. ஆனா, டெக்னாலஜி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நிறைய வழிகள்ல தகவலைக் கொண்டு போவாங்க. அப்படி, இந்தியாவுல முகலாயர்கள் ஆட்சி செஞ்சப்போ, ஒருத்தர் மூலமா போஸ்ட் மாதிரி கொடுத்து அனுப்ப ஆரம்பிச்சாங்க. இந்த நடைமுறை, இந்தியாவுலயே முதன்முதலா பெங்கால்லதான் வந்துச்சு. அப்படி போஸ்ட் கொண்டு போறவங்களை, பெங்காலி மொழில ‘ஹர்காரா’னு சொல்வாங்க. அதுக்குப் பிறகு வந்த பிரிட்டிஷ் அரசும் இதையே ஃபாலோ பண்ணாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அதுல பல மாற்றங்களை செஞ்சு, போஸ்டல் டிபார்ட்மெண்ட் உருவாச்சு. இப்ப இருக்குற அஞ்சல் துறை முதன்முதலா எப்படி உருவாச்சுனு சொல்ற கதைதான் இது. அதுல சமகாலக் கதையும் இருக்கும்.இப்ப இருக்குற போஸ்ட்மேன் மாதிரி, ஹர்காரா கிடையாது. மலை, காடுனு எல்லா இடங்களையும் தாண்டி போஸ்ட்டைக் கொண்டுபோய் சேர்க்கணுகிறதுனால, அவங்களுக்கு சிலம்பம், நீச்சல் தெரிஞ்சிருக்கணும். விலங்குகள்கிட்ட இருந்து தன்னைத் தற்காத்துக்கத் தெரியணும்னு பல விதிமுறைகள் இருந்துச்சு. இது எல்லாத்தையுமே இந்தப் படத்துல சுவாரசியமா சொல்லிருக்கோம். மேம்போக்கா எதையும் சொல்லாம, வரலாற்று ஆய்வாளர் உதவியோட திரைக்கதையை உருவாக்கி இருக்கோம்..யார் எல்லாம் நடிச்சிருக்காங்க? “ரெண்டு காலகட்டத்துல நடக்குற கதை இது. முகலாயர்கள் ஆட்சி செஞ்ச காலத்துல ஒரு பகுதியும், சமகாலத்துல மீதிக்கதையும் நடக்கும். பீரியட் காலகட்டத்துல நான் ஹீரோவாகவும், சமகாலத்துல காளி வெங்கட் ஹீரோவாகவும் நடிச்சிருக்கோம். என் கேரக்டர் பெயர் ஹர்காரா. அதைத்தான் தலைப்பாகவும் வெச்சிருக்கோம். காளி வெங்கட் கேரக்டருக்கு, காளினு அவர் பெயரையே வெச்சிட்டோம். நான் நடிச்சிருக்குற கதை சீரியஸாகவும், காளி வெங்கட் போர்ஷன், கிராம மக்களுக்கும் அவருக்கும் இடையில நடக்குற ஜாலியான விஷயங்களாகவும் இருக்கும்.‘லென்ஸ்’, ‘தலைக்கூத்தல்’ படங்களோட இயக்குநர் ஜெயப்பிரகாஷ், இந்தப் படத்துல வில்லனா நடிச்சிருக்கார். கெளதமி செளத்ரி, இந்தப் படம் மூலமா ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, முக்கியக் கதாபாத்திரத்துல நடிச்சிருக்கார். அங்க உள்ள கிராம மக்கள் பல பேரை நடிக்க வெச்சிருக்கோம். அப்பதான் ரியாலிட்டியா இருக்குறதுனால, அவங்களை ஆடிஷன் பண்ணி, ட்ரெயினிங் குடுத்து நடிக்க வெச்சிருக்கோம்.”.போஸ்ட்மேன்களைப் பற்றி படம் எடுக்கணும்னு ஏன் தோணுச்சு? “நான் தேனிக்காரன். அங்க குரங்கணி மலைக்குப் போகும்போது ஒரு போஸ்ட்மேனைப் பார்த்துருக்கேன். மலைல இருக்குற நாலைஞ்சு வீடுகளுக்கு லெட்டர் கொண்டு போவார். இந்த நாலைஞ்சு வீடுகளுக்காக இவர் மலை ஏறி, இறங்கணுமானு யோசிச்சிருக்கேன். ஆனா, பேங்க், கடைகள்னு எந்த வசதியுமே இல்லாத அந்த வீடுகளுக்கு, அவர் கொண்டுபோற லெட்டர்தான் ஒரே நம்பிக்கை, ஆறுதல் எல்லாமே. அவர் லெட்டர் மட்டும் கொண்டுபோக மாட்டார். சில சமயங்கள்ல அந்த வீடுகளுக்குத் தேவையான பொருட்கள் கூட வாங்கிக்கிட்டு போவார். அங்க உள்ள மக்கள் அவர்கிட்ட கைமாத்தா பணம் வாங்கி, அப்புறம் திருப்பிக் குடுக்குறது கூட உண்டு. இப்படி எல்லாமுமா இருந்த/இருக்குற போஸ்ட்மேன்களோட முக்கியத்துவம் பற்றி, இப்போ உள்ள தலைமுறைக்குத் தெரியவே இல்ல. நகரங்கள்ல இப்போ பெரியளவுல போஸ்ட்மேன்களை மக்கள் பயன்படுத்துறது இல்லேன்னாலும், அவங்க இல்லேன்னா இந்தியாவே சிக்கலாயிடும்னு டாகுமெண்ட்ரிலாம் இருக்கு. அதனால, இப்ப உள்ள தலைமுறைக்கு இதை உணர்த்தணும்னு இந்தப் படத்தை எடுத்தேன். இந்திய அஞ்சல்துறைக்கு இந்தப்படத்தை சமர்ப்பணம் பண்றேன். “.நடிகர், இயக்குநர். எது உங்களுக்கு ரொம்ப பிடிச்சது? “நடிக்கத்தான் சினிமாவுக்குள்ள வந்தேன். சின்ன வயசுல இருந்தே அதுதான் ஆசையா இருந்துச்சு. ஆனா, எல்லா நடிகனுக்கு உள்ளயும் ஒரு இயக்குநர் இருப்பான். எனக்குள்ளயும் அது இருந்துருக்கு. நண்பர்கள் எல்லாரும் சேர்ந்துதான் இந்தக் கதையை ஒர்க் பண்ணோம். லொகேஷன், அங்க உள்ள மக்கள்னு எல்லாமே எனக்குப் பரிச்சயமா இருந்ததுனால, என்னை இயக்குநரா ஆக்கிட்டாங்க. அடுத்து, ஒரு படத்துல நடிக்கப் போறேன். இயக்குறதுக்கும் சில கதைகள் எழுதி வெச்சிருக்கேன். ஆனா, இந்தப் படத்தோட ரிசல்ட்தான் அதைத் தீர்மானிக்கும்.”- சி.காவேரி மாணிக்கம்