‘கொலை படத்தில் ஒவ்வொரு ஃபிரேமும் பெயிண்டிங் மாதிரி இருக்கிறது, ஒவ்வொரு காட்சியும் லாஜிக்கலாகவும், டெக்னிகலாகவும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது...’ என்று பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்த படத்தின் இயக்குநர் பாலாஜி கே. குமாரின் படைப்புலக ரகசியங்களை தெரிந்து கொள்ளலாமே என்று அவரை தேடிக் கண்டுபிடித்தோம்... அமெரிக்கா வாழ் தமிழரான அவரை தொடர்பு கொள்வதில் சிரமம் இருந்தாலும், சந்திப்பில் எந்த சங்கடமும் இல்லை. சாதாரணமாக இருந்தார், சகஜமாகப் பேசினார். அமெரிக்கன் ஸ்லாங் இங்லீஷில் ஆரம்பித்தவர், நாம் தமிழில் பேசியதும் அமெரிக்க வாசமே தெரியாத அளவுக்கு பிசிறின்றி சென்னை தமிழில் பேசினார்… ‘கொலை‘ படத்தின் கதை எப்படி உருவாச்சு? “1923-ல் நியூயார்க்ல ஒரு மர்டர் நடந்தது. அதுல குற்றவாளி யார்னு கடைசிவரைக்கும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்தக் காலத்துல அது ஒரு பெரிய மர்டர் கேஸ்.அதை மையமாக வைத்து நிறைய எழுத்தாளர்கள் தங்களோட கற்பனையில அந்தக் கொலைக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபுடிக்கிற மாதிரி எழுதினாங்க. அந்தக் கொலையை இன்வெஸ்டிகட் பண்ணவரும், அந்தக் கொலைக் கேஸில் இருந்த மெடிக்கல் எக்ஸாமினரும்கூட ஆளுக்கொரு புத்தகம் எழுதியிருக்காங்க. அந்தப் புத்தகத்தையெல்லாம் ரிசர்ச் பண்ணப் பண்ணநம்பளும் ஒரு வெர்ஷன் கொடுத்தா எப்படியிருக்கும்னு தோணியது. அப்படிக் கொடுத்தா அதை சென்னையில நடக்கற மாதிரி காட்டணும்னு முடிவு பண்ணேன். மத்தபடி சம்பவத்தின் பின்னணி எமோஷன் எல்லாமே ஒண்ணுதான். ”.விஜய் ஆண்டனியை இதுவரை பார்க்காத ஒரு புது கெட் அப்-ல, சால்ட் அண்டு பெப்பர் லுக்ல காட்டியிருக்கீங்களே ஏன்? இந்தக் கதைக்குள்ள அவர் எப்படி வந்தார்? “அது ஏன்னா, அவர் ஒரு வைஸ் மேன்னு காட்றதுக்காக. ஒரு பெரிய டிடெக்டிவான அவர் 200 கேஸுக்கும் மேல சால்வ் பண்ணவர். அதனால ஒரு 40 வயசு மாதிரி காட்டணும். அந்த சால்ட் அண்டு பெப்பர் லுக் ஒரு ஹாலிவுட் ஃபீல் கொடுக்கும். அதை அவர் அழகா கேரி பண்ணியிருக்கார். கொஞ்சம் வயசானாலும் முகம் யங்கா தெரியிற அழகான லுக் கொண்டு வர்றதுக்காக அப்படி செஞ்சோம். பாதி கதையை கேட்டவுடனே விஜய் ஆண்டனி சாருக்கு ரொம்பப் புடிச்சுப் போசசு. நான் நடிக்கிறேன்னு சொல்லிட்டார். ஆனாலும் அடுத்த பாதியில என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்கிறதுக்காக மீதிக் கதையையும் கேட்டார். அதை தன்னால கெஸ் பண்ண முடியலைன்னும் சொன்னார்.”‘கொலை’ ட்ரெய்லர் பல மாசத்துக்கு முன்னாடியே வந்தும், படம் வெயியாக ஏன் இவ்ளோ தாமதம்?நிறைய விஷுவல் கிராஃபிக்ஸ் பண்ண வேண்டியிருந்தது. அதை க்ராஃபிக்ஸ்னு தெரியாத அளவுக்கு தத்ரூபமா பண்றதுக்கு நிறைய டைம் தேவைப்பட்டது. ஜெர்மனி போல வெளிநாடுகள்ல கொடுத்து அதையெல்லாம் பண்ணி வாங்கறதுக்கு இவ்ளோ லேட் ஆகிடுச்சு. ஏன்னா இந்தப் படத்தை பிரம்மாண்டமா பண்ணணும்னு ஆசைப்பட்டோம். ரிலீசுக்கு முன் படம் பார்த்த எல்லாரும் மேக்கிங் எக்ஸ்ட்ராடினரியா இருக்குன்னு பாராட்டினாங்க. இப்போ தியேட்டர்ல படத்தைப் பார்த்த நிறைய பேர் அதைத்தான் சொல்றாங்க. இந்த ரிசல்டுக்காகதான் அவ்ளோ டைம் எடுத்தது.”.‘விடியும் முன்‘ படம் ரொம்பவே நல்லா எடுத்திருந்தீங்க, ஆனாலும் அடுத்தப் படத்தை எடுக்கறதுக்கு ஏன் இவ்ளோ இடைவெளி? “‘விடியும் முன்’ படத்தை எடுத்தப்போ நான் அமெரிக்காவுல இருந்தேன். அந்தப் படத்தை சும்மா டெஸ்டுக்குதான் பண்ணிப் பார்த்தேன். அந்தப் படத்துக்கும் இதுக்கும் அஞ்சாறு வருஷம் இடைவெளி... காரணம். ப்ரி ப்ரொடக்ஷன் சமயத்துலயே லாக்டவுன்ல மாட்டினது, அப்புறம் கிராஃபிக்ஸ் தத்ரூபமா வர்றதுக்கு நிறைய டைம் எடுத்தது... இதனால தான் இத்தனை வருஷம் ஆகிடுச்சு.” நீங்களாவே எப்படி டைரக்ஷ்னை கத்துக்கிட்டீங்க? “ நிறைய நடிகர்கள், இயக்குநர்கள், ஸ்டோரி போர்டு ஆர்ட்டிஸ்டுகளோட எல்லாம் வொர்க் பண்ணியிருக்கேன். அதனால இயக்கத்தை என்னால ஈஸியா கத்துக்க முடிஞ்சது.”உங்க முதல் படத்தையே ஆங்கிலத்துல எடுத்த நீங்க அப்புறம் ஏன் தமிழுக்கு வந்தீங்க? “ ‘9 Lives of Mara’ அப்படீங்கிற என்னோட முதல் படத்தை இங்லீஷ்லதான் எடுத்தேன். அது அங்க ஏழெட்டு அவார்ட்ஸ் வின் பண்ணுச்சு. அந்த லேங்வேஜ்ல நிறைய ஆஃபர் ஸ் வந்துகிட்டிருக்கு. எனக்குப் புடிச்சா மாதிரி அமையணும்னு பார்த்தேன். அய்துபோக எனக்கு இந்தக் கார்ப்பரேட், ஸ்டூடியோ சிஸ்டமெல்லாம் இல்லாம, தனியா நம்ம படமாபண்ணணும்னு ஆசை. அதனால தான் தமிழுக்கு வந்தேன்.”.உங்களோட அடுத்த படத்தை சீக்கிரமா எதிர்பார்க்கலாமா? அது என்னவா இருக்கும்? “தாராளமா எதிர்பார்க்கலாம். அது இண்டியன் படமாவும் இருக்கலாம், ஹாலிவுட் படமாவும் இருக்கலாம், இட்டாலியன் மூவியாவும் இருக்கலாம். நிறைய பேர் எங்கிட்ட பேசிகிட்டுதான் இருக்காங்க. சப்ஜக்ட் எனக்குப் புடிக்கற மாதிரி இருக்கணும். ஏன்னா ஒரு படத்தை முடிக்க ஒன்றை வருஷம் ஆகிடும். அந்த ஒன்றரை வருஷமும் டே அண்டு நைட் அதைப் பத்தியே யோசிக்கணும்னும்போது அந்தக் கதை இண்ட்ரஸ்டிங்கானதா இருக்கணும். அந்த ஒரு ஃபீலை நாம விட்டுடவே கூடாது இல்லையா, அதுதான் முக்கியம்.” உங்க சொந்த ஊர், குடும்பம், சினிமா மேல ஆர்வம் வந்தது எப்படி என்பதையெல்லாம் சொல்ல முடியுமா? “நான் மெட்ராஸ்ல தான் பிறந்தேன். அதுக்கப்புறம்பெங்களூருக்குப் போயிட்டோம். அங்கேயிருந்து மறுபடியும் சென்னைக்கு வந்த நான் அப்புறம் அமெரிக்காவுக்குப் போயிட்டேன். நிறைய வருஷம் அங்கதான் இருந்தேன். ஃபேமலி எல்லாம் இல்லை, நான் சிங்கிள் தான்.சினிமா மேல ஆர்வம் எப்படி வந்துச்சின்னா, சின்ன வயசுலேர்ந்தே நான் நிறையா ஆர்ட் வொர்க் பெயிண்ட்டிங் எல்லாம் பண்ணுவேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துல நிறைய டாக்குமெண்ட்ரியெல்லாம் எடுத்த, தேசிய விருது வாங்கின கேமரா மேன் யோகேஷ்வர மூர்த்தி இருந்தார். எதேச்சையா அவர் கூட பேசுனப்போ நிறையா ஐடியாஸ் குடுத்தார், என்கரேஜ்மெண்ட் பண்ணினார். அவரே நிறைய விஷயங்களைக் கத்துக்குடுத்தார், அதனால வந்த ஆர்வம்தான் சினிமா... எனக்கிருந்த பெயிண்டிங் ஆர்வத்தால், என் படத்தில் ஒவ்வொரு ஃபிரேமும் பெயிண்டிங் மாதிரி இருக்கணும்னு ஆசைப்படுவேன். அந்த குவாலிட்டியில கொடுக்கணும்னு முயற்சி செய்வேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைச்சிருக்கு...” - வாசுகி லட்சுமணன்