உதட்டுக்கு மேலே மச்சம் இருக்கும் பெண்கள் சினிமா மற்றும் சின்னத்திரையில் உச்சத்துக்குச் செல்வார்கள் என்பது கோலிவுட் சென்டிமென்ட். ‘‘என்னதான் மச்சமிருந்தாலும் உழைத்தால்தான் உயரத்துக்குப் போகமுடியும் என்பது என்னோட பாலிஸி!’’ என்று பளிச்சென சொல்கிறார், மச்சமுள்ள உதட்டழகி தீபிகா. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் கடைக்குட்டி மருமகளாக அசத்தும் இந்த திருநெல்வேலி தமிழ்ப் பெண், பலரது மனங்களில் செல்ல மகளாக இடம்பிடித்திருக்கிறார். இந்த வெற்றியை அடைய அவர் பட்ட வலிகள், போராட்டங்களை நம்முடன் மனம் விட்டுப் பேசினார்...திருநெல்வேலி தீபிகா, ஐஸ்வர்யாவாக ஆனது எப்படி? ‘‘என்னோட நேடிவ் திருநெல்வேலிக்குப் பக்கத்துல இருக்கிற திருக்கரங்குடி தளவாய்புரம் கிராமம். விவசாயக் குடும்பம். அப்பா, அம்மா, இரண்டு அக்காக்கள், நான்னு அளவான குடும்பம். சின்ன வயசுல மீடியா பத்தின எந்த ஐடியாவும் இல்ல. சென்னையில கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குறாப்ப, கல்ச்சுரல்ஸ்ல டான்ஸ், நாடகம், மைம், பட்டிமன்றம்னு நிறைய ஸ்டேஜ் புரொகிராம்ல கலந்துக்கிட்டேன். அப்பதான் ஏதாவது ஒரு சேனல்ல ஆங்கராகணும்னு ஆசை வந்தது. நானாக முயற்சி பண்ணி சில சேனல்கள்ல வீ.ஜே.வாக ஒர்க் பண்ணேன். அதிலிருந்து ஆக்டிங் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா கேரக்டர் வந்ததும், லைஃப் ஏறுமுகமா போய்க்--கிட்டிருக்கு.’’.சின்னத்திரையில் தீபிகாவோட என்ட்ரி எப்படி இருந்தது?‘‘இதற்கு முன்னாடி இரண்டு சீரியல்கள்ல நடிச்சேன். ஆனால், அப்ப என்னை யாருக்குமேஅடை யாளம் தெரியாது. நானாக மத்தவங்ககிட்டே வலியப்போய், ‘மதியம் இத்தனை மணிக்கு என் சீரியல் வருது. அதில் இந்த கேரக்டர்ல நான்தான் நடிக்கறேன்’னு சொன்னால்தான், ‘ஓஹோ... அந்தப் பொண்ணு நீதானா?’ன்னு கேட்பாங்க.அதிலும் ஒரு சீரியல்ல நான் திக்குவாய் கேரக்டர் பண்ணேன். அந்த இரண்டு வருஷத்துல ஒருத்தர்கூட ‘நீ திக்குவாய் கேரக்டர்ல நல்லா நடிக்கிறேம்மா’ன்னு சொல்லவே இல்ல. அந்த நேரத்துல, ‘எவ்வளவு ஆர்வமா, கடுமையா உழைக்கிறோம். ஆனால், நம்ம உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் மாதிரி யாருக்குமே தெரியலையே’ன்னு வருத்தமா இருக்கும். என்னைக்காவது ஒருநாள் நம்மள பார்த்த உடனே ஓடிவந்து, ‘அந்த சீரியல்ல நடிக்கற பொண்ணு நீதானேம்மா’ன்னு மக்கள் அன்பா பேசற நாள் வராதான்னு மனசு ஏங்கும். அந்த ஏக்கத்தைப் போக்கி என் லைஃப்ல மிகப்பெரிய ஆனந்தத்தைக் கொடுத்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா கேரக்டர்.’’‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஆரம்பத்திலிருந்து நடித்து, நடுவில் அந்த கேரக்டருக்கு வேறொருவர் மாற்றப்பட்டு, மீண்டும் அதே கேரக்டரில் நடிப்பது என்ன ஃபீல் தருகிறது?”மீடியால பெரிய பின்புலமோ, சிபாரிசோ இல்லாம ஆடிஷன்ல என்னோட ஆக்டிங் பார்த்து என்னோட திறமைக்குக் கிடைச்ச கேரக்டர் ஐஸ்வர்யா கேரக்டர். அது என் லைஃப்பையே மாத்திச்சு. காரணம், எங்-களோடது ஏழ்மை-யான குடும்பம். அப்பா, அம்மா திருநெல்-வேலில கிராமத்துல இருக்காங்க. வீட்ல நிறைய ஃபைனான்ஸியல் பிரச்னைகள் இருந்தது. ஐஸ்வர்யா கேரக்டர் பண்ண ஆரம்பிச்சதும் அந்தப் பிரச்னைகள் எல்லாம் கொஞ்ச கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சது. அப்பாடா இனி லைஃப் ஸ்மூத்தா போகுதுன்னு நினைச்சப்ப திடீர்னு அந்த கேரக்டர் என் கையை விட்டுப் போயிடுச்சி. கைக்குக் கிடைச்ச நல்ல வாழ்க்கை கைவிட்டுப்போகும்போது என்னால தாங்கமுடியல. ஏராளமான நாட்கள் தூங்காம அழுதிருக்கேன்.ஒன்றரை வருஷம் கழிச்சி மறுபடியும் ஐஸ்வர்யா கேரக்டருக்காக ஆடிஷன் வரச்-சொன்னாங்க. ஆனால், என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும், ‘நீ மறுபடியும் அதே கேரக்டருக்கு போகணுமா’ன்னு கேட்டாங்க. ஐஸ்வர்யா என் லைஃப்பை மாத்தின கேரக்டர் அதனால இடையில நடந்ததப் பத்தி எனக்கு எந்த ஈகோவும் இல்ல. நான் அதிலே நடிப்பேன்னு வந்துட்டேன். மறுபடியும் இந்த டிராவல் மிகப்பெரிய சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுக்குது.’’.இந்த வெற்றிக்குப் பின்பாக என்ன வலிகள் இருந்தது?“யோசிச்சிப் பார்க்கும்போது முதல்ல என் குடும்பத்தோட கஷ்டங்கள்தான் கண் முன்னாடி வரும். தளவாய்புரத்துல பிளஸ் டூ படிச்சிட்டு, திரு-நெல்-வேலில யூ.ஜி. முடிச்சிட்டு, பி.ஜி.க்காக சென்னை வந்தேன். இங்கே ஹாஸ்டல்ல தங்கி படிச்-சேன். அதிலிருந்து இன்னை வரைக்கும் இங்கே தனியாத்தான் இருக்-கேன். இதில் காலேஜில் முதல் வருஷம் படிக்கும்போது அப்பா, அம்மாவை மிஸ் பண்ற ஃபீல் வந்திடும். அதனால, லீவு நாட்கள்ல ஊருக்குப் போயிடுவேன். அதிலே தீபாவளி, பொங்கல் நாட்கள்ல ஆம்னி பஸ்ஸோட டிக்கட் விலை எக்கச்சக்கமா ஏத்திடு-வாங்க. அவ்வளவு காசு இல்லாத-தால ஊருக்குப் போகாம இங்கேயே இருந்-திடு-வேன். அந்த நேரத்தில மன-செல்லாம் அப்பா, அம்மா என்ன பண்றாங்களோ, பண்டிகை நாள்ல அவங்களோட இருக்க-முடிய-லியேன்னு மனசு வேதனை-யாகிடும். அதில் ஒருமுறை வீட்டுக்குப் போனப்ப வீட்ல இருந்த மாடுகள் ஒண்ணுகூட காணோம். மாட்டுத்-தொழுவமே காலியா இருந்தது. அம்மாக்கிட்டே கேட்டால் கடன்-காரங்-களுக்கு வட்டிக்கட்ட முடியாததால மாட்டைக் கொடுத்திட்டோம்னு சொன்னாங்க. குழந்தைகளை மாதிரி வளர்த்த மாடுகள்ங்கிறதால அம்மா சத்தம் போட்டு அழ ஆரம்பிச்-சிட்டாங்க. அந்த நேரத்தில அம்மா-வோடு கண் கலங்கி நின்ன நிமிஷத்தோட வலி இன்னும் மனசுல இருக்கு.இப்படித்தான் கடன், வட்டிக்காக இருபது வருஷமா வாழ்ந்த சொந்த வீடு போயிடுச்சி, நிலமும் போயிடுச்சி. அந்த நேரத்துல ஐஸ்வர்யா கேரக்டர்ல இருந்து நான் விலக்கப்பட்டதும், மிகப்பெரிய மனவேதனையாகிடுச்சி.’’.உங்க லைஃப்ல பெருமிதமாக உணர்வது எதற்கு?“எங்க ஊர்ல கடன் பிரச்னையால வீடு, நிலம், மாடுகள் எல்லாத்தையும் இழந்து ரொம்ப கஷ்டமும் அசிங்கமும் பட்டிருக்கோம். மறுபடியும் அந்த ஊர்ல நாங்க தலைநிமிர்ந்து வாழணும், எல்லார் முன்னாடியும் என் அப்பா பாண்டி, கெத்தா நிற்கணும்னு நினைச்சேன். அதுக்காக கஷ்டப்பட்டுப் போராடி, இப்ப எங்க அப்பா, அம்மாக்கு புது வீடு கட்டிக் கொடுத்திட்டேன். மாடுகள் வாங்கியாச்சி. அடுத்து எங்களோட நிலத்தை மீட்டெடுக்கறதுக்கான முயற்சியில இருக்கேன். இதை நினைக்கும்போது என் மேலயே எனக்குப் பெருமிதமா இருக்கு.’’.சரி சினிமாவுக்கு முயற்சி பண்ணலியா?“ம்... முயற்சி பண்ணேன். அதிலே ஒரு கசப்பான அனுபவம் கிடைச்சது. ஒரு பிரபலமான ஹீரோவோட தங்கச்சி கேரக்டருக்கான ஆடிஷனுக்காக போனேன். அந்த ஆள் பேர் நினைவில்ல. அவர் ஒரு தனி அறையில இருந்தாரு. அங்கே போனதும், ‘இந்தப் படத்துல உனக்கு நல்ல கேரக்டர் இருக்கு. அதில் ஒரு லிப்லாக் ஸீன் இருக்கு. அதிலே உன் பர்ஃபார்மென்ஸ் எப்படின்னு தெரியணும் அதனால இப்ப அந்த ஸீனை என்கூட நீ நடிக்கணும், என்னை நீ லிப் கிஸ் பண்ணணும்’னு சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சியில கண்கலங்க ஆரம்பிச்சிடுச்சி. உடனே அந்த ஆள், ‘யோசிக்காதம்மா இங்கே அட்ஜஸ்ட் பண்ணாதான் சான்ஸ்’ன்னு சொன்னான். ‘போய்யா நீயும் உன் சான்ஸும். நீ நினைக்கற பொண்ணு நானில்லே’ன்னு அவன் முகத்துல அறையிற மாதிரி சொல்லிட்டு வந்துட்டேன்.’’ஃப்யூச்சர்?“ஃப்யூச்சர்ல எனக்கு ஒரு ஓட்டல், மெஸ், ரெஸ்டாரென்ட் இதில் ஏதாவது ஒண்ணு வைக்கணும்னு ஆசையா இருக்கு. காரணம், ஓட்டல்ங்கிறது பசிக்கு உணவளிக்கிற ஓர் அருமையான விஷயம். அதிலே ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். மத்தபடி என் அப்பா, அம்மாக்குத் தேவையானத பண்ணிட்டேன். அடுத்து என் கல்யாணத்துக்காக காசு சேர்க்கணும், இதுதான் ப்யூச்சர் கோல்.’’ - பெ.கணேஷ்