காலச்சக்கரம் ஆட்டுவிக்க ஜீரோக்கள் ஹீரோக்கள் ஆவதும், ஹீரோக்கள் ஜீரோக்களாவதும் உலக வழக்கம்தான். கிரிக்கெட்டிலும் எத்தகைய வீரர்களின் கரியரும் இதற்கு விதிவிலக்கல்ல.அந்த வழமை மாறாமல் இந்த ஐபிஎல் சீசனிலும் கடந்த ஆண்டுகளில் சாம்பியன்களாக ஜொலித்தவர்கள் இந்த ஆண்டு சாமானியமான ஆட்டத்தை ஆடியுள்ளனர். அத்தகைய வீரர்கள் குறித்த ஒரு பார்வை... உம்ரான் மாலிக் :கடந்த சீசனில் அக்னி ஏவுகணையாக தீ ஜுவாலையை மணிக்கு 150 கி.மீ. அதிவேகத்தோடு உமிழ்ந்த உம்ரானின் பந்துகள், பேட்ஸ்மேன்களின் சப்த நாடியையும் ஒடுக்கின. இந்திய ஸ்டெய்ன் என்றெல்லாம் பாராட்டப்பட்டதோடு 14 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இந்திய ஜெர்ஸியிலும் அறிமுகமானார். ஆனால், தற்சமயம் எல்லாமே தலைகீழ்.இந்த ஆண்டு ஆடிய 7 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்தான் எனினும், வேகம் இருக்கிறதே ஒழிய பந்தினை சரியான லைன் அண்ட் லெந்தில் அவரால் தரையிறக்க முடியாததால் எக்கானமி எகிறுகிறது. டெல்லிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 22 ரன்களை உம்ரான் வாரி வழங்கினார். அதனால் கடந்த ஆண்டில் அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற நிலையிலிருந்து அணியில் தனக்கான இடமே கேள்விக்குறி எனும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கியிருந்தால் ஒருவேளை அவரது ஃபார்ம் மீட்டெடுக்கப்பட்டிருக்கலாம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கேப்டன் மார்க்ராம் குறிப்பிட்டதைப் பார்த்தால் உம்ரானை வெளியே அமர்த்துவதில் அவருக்கு உடன்பாடு இல்லாததும் சன்ரைசர்ஸின் நிர்வாகக் குழறுபடிளும், தலையீடுகளும் உம்ரானின் விஷயத்தில் விளையாடியுள்ளன என்பதுவும் புரிய வரும்..தீபக் ஹூடா :ராஜஸ்தான், பஞ்சாப், சன்ரைசர்ஸ் என பல இடங்களில் சுற்றியிருந்தாலும் ஹூடாவின் ஐபிஎல் நாட்கள் லக்னோவுடன் கடந்த ஆண்டுதான் பூரணத்துவம் பெற்றது. ஒன்டவுனில் இறங்கி மேட்ச் வின்னிங் இன்னிங்க்ஸ்களால் அவர்களது எக்ஸ் ஃபேக்டராகவே வலம் வந்தார். 451 ரன்கள் என்பது மட்டுமல்ல; 136.66 என்ற ஸ்ட்ரைக்ரேட்டும் ஸ்பின்னர்களை ஹூடா பதம் பார்க்கும் விதமும் மத்திய ஓவர்களில் ரன்கள் வருவதை உறுதிசெய்தது. இந்திய அணியில்கூட ஆஃப் ஸ்பின் வீசுவார் என்பதைக் கணக்கில் கொள்ளாமலேகூட வெறும் பேட்ஸ்மேனாக சில போட்டிகளில் பரீட்சிக்கப்பட்டார்.இந்த ஆண்டு பழைய ஹூடா பெயரளவில்கூட காணப்படவில்லை. ஆடிய 11 போட்டிகளில் நம்பவே முடியாத வகையில் 69 ரன்களை மட்டுமே ஹூடா எடுத்துள்ளார். இந்த ஆண்டு அவரது அதிகபட்ச ஸ்கோரே 17 தான். அணி நிர்வாகம் நம்பிக்கையோடு தொடர்ந்து வாய்ப்பு அளித்தும் கேஎல் ராகுலும் இல்லாத நிலையில் அணியைத் தாங்க வேண்டிய பொறுப்பை ஏற்கவும், ஒன்பது ஆண்டுகளாக ஐபிஎல்லில் ஆடிய அனுபவத்தோடு ஜொலிக்கவும் ஹூடா தவறிவிட்டார்..வனிந்து ஹசரங்கா :2021-ல் ஆடம் ஜம்பாவுக்கு மாற்று வீரராக ஆர்சிபியில் அடியெடுத்து வைத்த ஹசரங்காவை 2022-ல் 10.75 கோடியில் அடித்த அதிர்ஷ்டப் பரிசாக ஆர்சிபி பார்த்தது. 16 போட்டிகளில் 26 விக்கெட்டுகள், சன்ரைசர்ஸுக்கு எதிராக ஐந்து விக்கெட் ஹால் என கலங்கடித்தார். நதியின் திசையையே மாற்றுவது போல் ஒருசில தோற்க வேண்டிய போட்டிகளில் இவரது ஸ்பெல் ஆட்டத்தையே திருப்பிவிட்டது. இம்முறை லெக் ஸ்பின்னர்களுக்கே உண்டான நிலைப்புத்தன்மை இல்லாத நிலைக்குள் ஹசரங்காவும் அடைபட்டுள்ளார்.பேட்டிங்கில் அவரை முன்கூட்டியே இறக்காமல் சில போட்டிகளில் ஆர்சிபி தவறிழைத்தது. அதேநேரம் பௌலிங்கிலோ ஹசரங்காவும்கூட பெரிதாக மிளிரவில்லை. 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார் என்பது மட்டுமல்ல; 9-ஐ நெருங்கும் அவரது எக்கானமியும் எந்தளவு அவரது பந்துவீச்சு சோபிக்கவில்லை என்றும் காட்டுகிறது. மும்பைக்கு எதிரான போட்டியில் வீசிய முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பினும், நான்கு ஓவர்களில் 53 ரன்களை அள்ளித்தந்து பௌலராக ஒட்டுமொத்தமாகவே தோற்றிருந்தார் ஹசரங்கா..ராகுல் திரிபாதி :2017-ல் புனேவுக்காக ஆடியபோது கேகேஆருக்கு எதிராக 52 பந்துகளில் 93 ரன்களை விளாசியபோது திரிபாதி பல தலைகளைத் திரும்பவைத்தார். ஹார்ட் ஹிட்டராகவே காலம்காலமாக பார்க்கப்பட்டவருக்கு சன்ரைசர்ஸில் இணைந்த கடந்த ஆண்டு வெற்றிகரமாக இருந்தது. 158 ஸ்ட்ரைக்ரேட்டோடு அணியின் பேட்டிங் யூனிட்டையே தூக்கி நிறுத்தினார். டொமெஸ்டிக் கிரிக்கெட்டிலும் அவரது பேட் ஸ்கோர்போர்ட் கல்லாவினை ரன்களால் நிரப்ப இந்த ஆண்டு தொடக்கத்தில் 31 வயதில் அவரது டி20 அறிமுகம்கூட அரங்கேறியது.நடப்பு ஐபிஎல்லிலும் சன்ரைசர்ஸ் வென்ற முதல் போட்டியில் திரிபாதியின் பங்கு சரிபாதி இருந்தது. பஞ்சாப்புக்கு எதிராக 48 பந்துகளில் 74 ரன்களை அதிவேகமாக சேர்த்து அதகளப்படுத்தினார். ஆனால், அதற்கடுத்து ஆடிய 9 போட்டிகளில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து வேறு எதிலும் அவரால் 21 ரன்களுக்கு மேல் களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மோசமான தோல்விகளை சன்ரைசர்ஸ் சந்திக்க அவரது சிரத்தன்மை இல்லாத பேட்டிங்கும் காரணமே..காகிசோ ரபாடா :பௌலருக்கு சவால் விடுவது டி20 என்றால் ரபாடா இருக்கும் Parallel Universe-ல் மட்டும் பேட்ஸ்மேன்களை அவர் எப்போதுமே திணறடித்துக் கொண்டிருப்பார். போன சீசன் முழுவதும் பஞ்சாபுக்காக அவர் ஆடியபோது இதுதான் நடந்தேறியது. புதுப்பந்தினைக் கொண்டு அவர் ஆர்ப்பரிக்க பேட்ஸ்மேன்கள் சரணடைய 13 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை அநாயசமாக வீழ்த்தினார். இதனாலேயே அவர் இந்த ஆண்டு இணைவதில் தாமதமேற்பட்ட போது எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு பஞ்சாப் ரசிகர்களிடம் பலமாகவே இருந்தது.ஆடிய ஐந்து போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்ல எவ்வித அச்சுறுத்தலையும் அவரது பந்துகள் ஏந்தவில்லை. லக்னோ பஞ்சாப்புக்கு எதிராக 257 ரன்களைக் குவித்த போட்டியில்கூட அர்ஷ்தீப்பும் இவரும் கூட்டாக வீசிய எட்டு ஓவர்களில் முறையே 54, 52 ரன்களை வழங்கி Same Side Goal போட்டிருந்தனர். மொத்தமாகவே இது ரபாடாவுக்கு மோசமான சீசன்தான்..அபிஷேக் ஷர்மா :சன்ரைசர்ஸுக்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய சென்ஷேசனாக அபிஷேக் உருவெடுத்தார். ஓப்பனிங்கில் இறங்கி வேகப்பந்து வீச்சு, சுழல் குறிப்பாக இடக்கை ஆட்டக்காரர் என்ற இலக்கணம் மீறி ஆஃப் ஸ்பின்னர்கள் வரை அத்தனை பௌலரையும் துவம்சம் செய்தார். 426 ரன்களும் 133 ஸ்ட்ரைக்ரேட்டும் அவரது பங்களிப்பை உணர்த்தும்.நடப்பு சீசனிலோ ஆடிய 11 போட்டிகளில் 30 ரன்களை அவர் தாண்டியிருப்பது நான்கே சந்தர்ப்பங்களில் தான். ஓப்பனிங்கில் விழுந்த பள்ளம் போட்டி முழுவதும் ஏன் தொடர் முழுவதும் தொடர்ந்து சன்ரைசர்ஸை புதைந்து போக வைத்தது..ஹர்சல் படேல்:ஆர்சிபி பௌலிங்கின் புதுப்பிரவாகம், பர்ப்பிள் படேல் என்றெல்லாம் பல அடைமொழிகளால் புகழாரம் சூட்டப்பட்ட ஹர்சல் படேலின் ஐபிஎல் அற்புதமாகவே ஆரம்பித்தது. 2021-ல் 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியவரது செயல்பாடுகள் கடந்தாண்டே அத்தனை சிறப்பாக இல்லை.காயத்தில் இருந்து மீண்டு வந்தவரது ஸ்லோ பால்கள் பேட்ஸ்மேன்களால் கணித்தறியப்பட்டு குறிவைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. அவருக்கு மாற்றாக ஒருவர் இல்லை என்ற காரணத்தினால்தான் ஆர்சிபியும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளித்து வந்தது. இந்திய அணியே அவரை மறந்து கடக்க ஆரம்பித்த நிலையில் இந்த ஐபிஎல்தான் அவரது கடைசி நம்பிக்கை. ஆனால், இதிலும் ஹர்சல் படேல் பெரிதாக சோபிக்கவும் இல்லை, விக்கெட் டேக்கிங் பௌலராக எந்த இடத்திலும் அவதாரமும் எடுக்கவில்லை..ஜோஸ் பட்லர் :போன ஆண்டு ராஜஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் பெரும்பங்கு ஆரஞ்சுக் கேப்பினை வென்ற ஜோஸ் பட்லர் மற்றும் பர்ப்பிள் கேப்பினை வென்ற சஹாலுடையதும் தான். 863 ரன்களை மானாவாரியாக அடித்து விளாசிய அவரது பேட் தலா நான்கு அரைசதங்கள் மற்றும் சதங்களுக்கான செலிபிரேஷனையும் பார்த்திருந்தது. இந்த சீசனிலும் அவரது விக்கெட்டை எப்படி வீழ்த்துவது என தொடர் தொடங்குவதற்கு முன்னரே பல அணிகள் திட்டங்களை வகுத்தன. அத்திட்டம் எதுவுமே தேவைப்படாதவாரே சில போட்டிகளில் அவர் ஆட்டமிழந்தார்.13 போட்டிகளில் ஆடியுள்ள அவரது சராசரி கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 57.5-ல் இருந்து 30.2 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. சன்ரைசர் ஸுக்கு எதிராக வந்த 95 ரன்களைக் கழித்துப் பார்த்தால் பெரிய தாக்கத்தினை அவர் உண்டாக்கவே இல்லை. நான்கு போட்டிகளில் டக் அவுட் ஆகியும் வெளியேறியுள்ளார். அணி சற்றே தள்ளாட இதுவும் காரணமானது.சுழலும் பூமியே இரவையும் பகலையும் மாறி மாறிப் பார்க்கையில் இப்படிப்பட்ட மேடுபள்ளங்களும் யதார்த்திற்குள் சிறைபடுபவைதான்.இயற்கை நியதிப்படி ‘Move On’ எனச் சொல்லி நிற்காது பூமி சுழன்றாலே இருள் அகன்று ஒளி உதயமாகும். அச்சமயம் இதே வீரர்கள் மகுடமேற்பதும் நடந்தேறலாம்.