- அய்யப்பன்'Spirit Of Cricket’ க்கும் ’Rules Of Cricket’ -க்கும் இடையேயான யுத்தங்கள் ஆஷஸில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்துக்கு இடையிலான மோதலையும் விஞ்சிவிட்டன. சரி… மற்றவர்கள் மீது ஏன் பழி சுமத்தி குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறது இங்கிலாந்து? மேலே படியுங்கள்... காரணம் புரியும்..எல்லைகளும் விதிமுறைகளும்தான் எந்தவொரு விளையாட்டின் ஆத்மாவுடைய மூலப்பொருட்களாகும். உரசல்களின்றி ஆட்டம் தொடர உயவுப்பொருளாக இவைதான் உதவும். ஆனால் இதன் அடிநாதத்தை உணராது, விதிகள் பயணிக்கும் திசைக்கு எதிரில் நகர்வதும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்துவதும் இங்கிலாந்துக்குப் புதிதல்ல. ரவிச்சந்திரன் அஷ்வின் - ஜோஸ் பட்லர் விஷயத்தில் தொடங்கி தீப்தி ஷர்மா - சார்லீ டீன் வரை ஒவ்வொரு முறையும் அவர்களில் ஒருவரால் விதிகள் மீறப்படும் போதெல்லாம் அதையே மறைக்குமளவு ‘Spirit Of Cricket’ கோஷத்தை இங்கிலாந்து முன்மொழியும். அதனை அவர்களது பல முன்னாள் இந்நாள் வீரர்களும் வழிமொழிய ஆட்டத்தின் சட்டாம்பிள்ளையாக மற்றவர்கள் மீது இங்கிலாந்து குற்றப்பத்திரிகை வாசிக்கும். தற்சமயம் அலெக்ஸ் கேரே - பேர்ஸ்டோ விஷயத்தில் நடந்துள்ளதும் அதுதான். இரண்டாவது டெஸ்டின் இறுதி நாளில் க்ரீன் வீசிய ஷார்ட் பாலினை இங்கிலாந்தின் பேர்ஸ்டோ டிஃபெண்ட் செய்ய அது பின்பக்கம் நகர்ந்தது. பந்து எங்கிருக்கிறது என்பதில்கூட கவனம் செலுத்தாமல் `டெட் பால்' ஆகிவிட்டது என தானாகவே பேர்ஸ்டோ முடிவு செய்துவிட்டார். அடுத்த ஓவர் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலஇடைவெளி எனக் கருதி க்ரீஸை விட்டு வெளியேறி ஸ்டோக்ஸை நோக்கி அவர் நகர, கணமும் தாமதிக்காது தனது கைக்கு வந்த பந்தால் ஆஸ்திரேலிய விக்கெட்கீப்பர் அலெக்ஸ் கேரே ஸ்டம்பினைத் தகர்த்து பேர்ஸ்டோவினை ஆட்டமிழக்கச் செய்தார். Pause செய்து நிறுத்தப்பட்ட ஃப்ரேம் போல சர்வ இங்கிலாந்து தரப்பும் ஸ்தம்பித்தது..களத்திலிருந்த பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் தொடங்கி வெளியிலிருந்த மற்ற வீரர்கள் வரை எல்லோரும் அதிர்ச்சியில் உறைய, இங்கிலாந்து ரசிகர்கள் முதல் MCC உறுப்பினர்கள் வரை ஆஸ்திரேலிய வீரர்களை ’Same Old Aussies’ என கேலி செய்ததையும் இழிவாகப் பேசியதையும் பார்க்க முடித்தது. ஏதோ மிகப்பெரிய போர்க்குற்றத்தை அலெக்ஸ் கேரே நிகழ்த்திவிட்டதைப் போலவும் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் போலவுமே இங்கிலாந்து தரப்பும், ரசிகர்களும் ஏன் அந்நாட்டு ஊடகங்கள் வரை வசை பாடினர். போட்டிக்குப் பிறகு பேசிய இங்கிலாந்தின் கேப்டன் ஸ்டோக்ஸ்கூட "இப்படி செய்துதான் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால் நான் அதைச் செய்யவே மாட்டேன்" எனும் ரீதியில் பேசியிருந்தார். இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் கூட இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தார். உண்மை என்னவென்றால் விதிகளுக்கு உட்பட்டே பேர்ஸ்டோவின் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது. பந்து தனது கைக்கு வந்தபிறகு அது Dead Ball ஆக மாறிவிட்டது போன்ற எந்தப் பாசாங்கிலும் கேரே ஈடுபட்டு பேர்ஸ்டோவினை ஏமாற்றவில்லை. மாறாக அனிச்சையாக ஸ்டம்பை நோக்கிப் பந்தை எறிந்திருந்தார். இதில் அவர்மீது எப்படி குற்றம்சுமத்த முடியும்? தவறு அசட்டையாக இருந்த பேர்ஸ்டோவின் மீதுதான். கல்லி கிரிக்கெட்டில் நடைபெறும் அளவிலான ஒரு அடிப்படைத் தவறினை பேர்ஸ்டோ செய்ததற்கு அவரைக் கண்டித்திருக்க வேண்டியதுதான் பயிற்சியாளராக மெக்கல்லமின் கடமை. ஆனால் அவரோ இருநாட்டிற்கும் நடுவில் போர் மேகம் சூழ்ந்து நட்புறவே அற்றுப் போனதைப் போல, "இனி அவர்களோடு அமர்ந்து பீர் அருந்துவது சமீப வருடங்களில் நிகழாது" எனக் கூறியிருந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் இதே மெக்கல்லம் மற்றும் பேர்ஸ்டோ இருவருமே முன்னதாக இப்படியான ஸ்டம்பிங் முயற்சியில் பங்கேற்றிருக்கின்றனர்..ஒருமுறை சங்கக்காராவின் சதத்துக்கான கொண்டாட்டத்தின் போது அவரை வாழ்த்த அவரை நோக்கி நகர்ந்திருந்த முத்தையா முரளிதரனை ஸ்டம்பிங் செய்து மெக்கல்லம் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். இதேபோல் பால் காலிங்உட்டினையும் இதே பாணியில் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். பேர்ஸ்டோவும் 2014 கவுண்டி போட்டியொன்றில் யார்க்ஷயர் அணிக்காக ஆடியபோது சமித் படேலினை இதே விதத்தில்தான் வெளியேற்றினார். இவ்வளவு ஏன் இதே போட்டியிலேயே முன்பாக ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் லபுசேனின் ஸ்டம்பினைக் குறிவைத்து பேர்ஸ்டோவே பந்தினை எறிந்து ஸ்டம்பிங் செய்ய முயன்றிருந்தார். ஆனால் லபுசேன் விழிப்புடன் இருந்ததனால் தப்பினார். நிலைமை இப்படியிருக்க அடுத்தவர்கள் அதைச்செய்து அதனால் தங்களுக்கு பாதிப்பேற்படும் மட்டும் இங்கிலாந்து எதிர்ப்பினைக் கிளப்புவதுதான் விந்தை. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் கருத்துக்களும், "எனக்கும் நடத்திருக்கிறது" என லாரா உள்ளிட்ட பலரும் வெளியிட்ட வீடியோக்களும் அம்பாகக் கிளம்பி வந்தன. இதேபோல் 2011 டிரெண்ட் பிரிட்ஜ் போட்டியில் ஆட்டமிழந்த இயான் பெல்லினை தோனி தொடர்ந்து ஆடவைத்த பழைய சம்பவமெல்லாம் தூசிதட்டி எடுக்கப்பட்டது. எல்லோரும் எதிர்பார்த்தது போல் அஷ்வின் கேரேவுக்கு நேசக்கரம் நீட்ட, யாருமே எதிர்பாராத வகையில் பிராட் ஹாக் ஆஸ்திரேலியாவை விமர்சித்தார். கம்பீர் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியா தலையிலும் ஓங்கிக்கொட்ட, அம்பயர் சைமன் டஃபல் "எனது அனுபவத்தில் விதிகளுக்கு உட்பட்டு தான் ஆட்டமிழந்ததை ஒத்துக்கொள்ள விரும்பாதவர்களால் கையிலெடுக்கப்படுவதே "Spirit Of Cricket" பதம் என இங்கிலாந்தைக் குத்திக் கிழித்திருந்தார். ஹர்சா போக்லேவும் சைமன் சொல்லிய அதே கருத்தை சற்றே நகைச்சுவை கலந்து, "Hypocrisy-ன் சங்கேத வார்த்தைகளை நான் கண்டுபிடித்துள்ளேன். முடிவு நமக்கு சாதகமாக இருந்தால் கிரிக்கெட்டின் விதிமுறைகளையும் பாதகமாக இருந்தால் Spirit Of Cricket-ஐயும் உயிர்ப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். இவையெல்லாவற்றையும் கேட்காமலேகூட அடிப்படை விதிகளில் தெளிவுள்ள எந்தவொரு நடுநிலை ரசிகராலும் ஆஸ்திரேலியாவின் மீது தவறில்லை என்பதை உணரமுடியும். 1980-ல் மும்பை டெஸ்டில் இங்கிலாந்தின் பாப் டெய்லருக்கு அப்பீல் செய்து ஜிஆர் விஸ்வநாத் தலைமையிலான இந்திய அணி அவரை வெளியேற்றியது. ஆனால் அதன்பிறகு தங்களுக்குள் கூடிப்பேசி அது அவுட் அல்ல என்பதை உணர்ந்த விஸ்வநாத் அப்பீலை திரும்பப்பெற்று பாப் டெய்லரை தொடர்ந்து ஆட வைத்தனர். பல ஆண்டுகளாக இது Spirit Of Cricket-க்கு அடையாளமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் பாப் விதிமுறைப்படி ஆட்டமிழக்கவில்லை, எனவே திரும்ப அழைத்தது நியாயமானது. ஆனால் பேர்ஸ்டோ விஷயத்திலோ விதிமுறைப்படி எல்லாம் சரியே. இங்கிலாந்து 2019 உலகக்கோப்பையை நியூசிலாந்துடன் பங்கிடவுமில்லை, நடப்பு டெஸ்டில் லயன் சிரமப்படும் போது பரிதாபப்பட்டு By Runner வைத்துக் கொள்ள அம்பயரிடம் கோரிக்கை வைக்கவுமில்லை. ஏனெனில் அது விதிகளில் இல்லை என இங்கிலாந்து எளிதாகக் கடந்தது. ஆனால் இப்பிரச்சினையிலோ விதிப்படி நடந்ததற்காக விடாப்படியாக ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வசை பாடிக் கொண்டிருப்பதுதான் கொடுமை. மூளையும் இதயமும் பக்கத்திற்கு ஒன்றாக வைக்கப்படும் தராசு எப்போதும் நியாயத்தினையே கைகாட்ட வேண்டும். உண்மையில் ஆட்டத்தின் விதிகளை Spirit Of Cricket அழித்து மாற்றுமெனில் அதுதான் ஆட்டத்தின் ஆத்மாவினைக் குலைக்கும் செயல்.