-ஷாஅஜித்தின் ‘மங்காத்தா’ படத்தை அதன் கிளைமாக்ஸ் காட்சியின்றி நினைத்துப் பார்க்க முடியுமா..? அந்தப் படத்தின் வெற்றியையே அந்தக் காட்சி தான் தீர்மானிக்கும். இப்படி எதிர்பாராததை ஏற்றுக் கொள்ளும்படியும், ரசிக்கும்படியும் வைக்கப்படும் டிவிஸ்டுகள் தான் ஒரு இயக்குநரின் புத்திசாலித்தனத்தையும், திரைக்கதை அமைப்பில் அவரது ஆளுமையையும் வெளிப்படுத்தும். பெரிய எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இந்த டிவிஸ்டுகள் கிளர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்துவதால் அப்படிப்பட்ட படங்கள் அபார வெற்றியடைகின்றன..தமிழ் சினிமாவில் இதற்கு உதாரணமாக பல படங்கள் உண்டு. ஆரம்ப காலத்தில் இயக்குநர் எஸ்.பாலச்சந்தரின் ‘அந்த நாள்’, அதற்கு பிறகு சமகாலத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’, இயக்குநர் ‘முண்டாசுப்பட்டி’ ராமின் ‘ராட்சசன்’ என பல படங்கள் கிரைம்- சைக்காலாஜிக்கல் திரில்லர் வகைப் படங்களுக்கே முன் உதாரணமாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் அறிமுக இயக்குநர் ரோஹித் எம்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் ஜோஜி ஜார்ஜ் நடிப்பில் வெளியான ’இரட்டா’ என்கிற திரைப்படம், ஒரு ட்விஸ்ட்டை மிக நேர்த்தியாக கையாண்ட திரைப்படம் எனக் கூறலாம் . முக்கியமாக இந்தப் படத்தின் உச்சகட்டமே இதனின் கிளைமாக்ஸ் காட்சியின் ட்விஸ்ட்டு தான். பொதுவாக இப்படி கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் சினிமாக்கள் ஏராளம் உண்டு..ஆன்மிக படங்களில் இருந்து அடிதடி படங்கள் வரை அதற்கேற்ற ட்விஸ்டுகளுடன் உள்ள கதைகளுக்கு அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை ஏகப்பட்ட கிராக்கி… படத்தின் முக்கியமான கட்டத்தில் ட்விஸ்ட்டு வைப்பது, படத்தின் கிளைமாக்ஸில் ‘ட்விஸ்ட்டு’ வைப்பது என மூளையை கசக்கி ட்விஸ்டுகளை கதைக்குள் சொருகுவதே ஒரு கலைதான். ஒரு காலத்தில் பெரிய பெரிய பட தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கதை இலாகா என்று ஒன்று வைத்திருந்ததே இதற்காகத்தான்..தமிழ் சினிமா திரைக்கதைகளில் இந்த ’ட்விஸ்ட்டு’ பலவகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கே.ஆர்.விஜயா நடித்த ஒரு அம்மன் படத்தில் அவரை கிணற்றில் தள்ளிக் கொல்லுவாத முடியும் காட்சியில் யாரோ கதவை தட்டுவார்கள், கதவை திறந்தால் அங்கேயும் கே.ஆர்.விஜயா வந்து நிற்பார். அந்த இடத்தில் இண்டெர்வெல் கார்டை போட்டிருப்பர்கள். இது ஒரு பக்கம் இருக்க, விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர், சஸ்பென்ஸ் த்ரில்லர், சைக்கோலாஜிக்கல் திரில்லர் ஜானர்களில் நிச்சயம் இந்த ‘ட்விஸ்ட்டு’ என்கிற விஷயத்தைத் தவிர்க்க முடியாது..ஆனால், ஒரு ட்விஸ்ட்டு என்பது வெறும் படத்தின் கதாபாத்திரங்களுக்குள் ஏற்படும் அல்லது கதையில் நிகழும் திருப்பங்கள் மட்டும் தானா..? உலகளாவிய திரைப்படங்களில் இந்த ட்விஸ்ட்டு என்பது பார்வையாளர்களின் உளவியலையே உலுக்கச் செய்வதாக கையாளப்பட்டுள்ளது.மலையாளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘இரட்டா’ திரைப்படத்திலும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டு அப்படியே நிகழ்ந்தேறும். இந்தப் படத்தின் ட்விஸ்ட்டு நம்மை வந்தடையும் போது நமக்கு வரும் அதிர்ச்சியை விட, அதற்குப் பிறகு அந்த மையக் கதாபாத்திரத்தின் மனதிற்குள் சில எண்ணங்கள் ஓடும், அதைக் காட்சி வழியில் மிக அழுத்தமாக அணுகிருப்பார் இயக்குநர். அந்த அதிர்ச்சி நம்முள்ளே நிகழ்வதாக இந்தப் படம் நிறைவடையும்..வழக்கமாக திரில்லிங் ட்விஸ்டைக் கொண்ட கிளைமாக்ஸ் காட்சிகள் பல திரைப்படங்களில் கையாளப்பட்டுள்ளன. கன்னடத்தில் இயக்குநர் அஷோக் இயக்கத்தில் உருவான ‘டியா’ திரைப்படத்தில் எவரும் அதுவரை எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சிகரமான கிளைமாக்ஸ் காட்சி இருக்கும். பலரும் அதை விமர்சித்தும், பாராட்டியும் அப்போது எழுதியிருந்தார்கள். அப்படி ஒரு கிளைமாக்ஸை வைத்தது இயக்குநரின் துணிச்சல் என்றே சொல்லலாம். அந்தத் திரைப்படம் ஒரு பேரதிர்ச்சியோடு மட்டுமே முடிந்திருக்கும். ஆனால் அதையும் தாண்டி பார்வையாளர்களே உளவியல் ரீதியாக சிந்தனைக்குள்ளாக்கும் படங்கள் பல உண்டு.உதாரணத்திற்கு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’பிசாசு’. இந்தப் படத்தை நிச்சயம் மிஷ்கினின் மாஸ்டர் பீஸ் என்றே கூறலாம். இதில் வரும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்டு நிச்சயம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். ஆனால், அதுவரை அந்தப் படம் நமக்கு கடத்தியிருந்த விஷயம், இந்தத் ட்விஸ்ட்டிற்குப் பிறகு நமக்கு இந்தத் திரைப்படம் கடத்தும் விஷயமென அனைத்தும் நம்மை பல கோணத்தில் சிந்தனை செய்யவிட்டு விடும்..நாம் பல பழிவாங்கும் திரைப்படங்களைப் பார்த்திருப்போம். இது மாதிரியான திரைப்படங்களில் அந்த மையக் கதாபாத்திரம் எப்படியாவது அந்த வில்லன் கும்பலை பழிவாங்கி விடாதா என்று தோன்றும். பழிவாங்கியதும் நமக்குள்ளே ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் ‘காதார்சிஸ்(chatarsis)' என்று கூறுவார்கள். இதே பழிவாங்கும் ஜானர் திரைப்படங்களை வேறொரு கோணத்தில் அணுகிய இயக்குநர்களும் உண்டு.அவர்களில் முக்கியமானவர் கொரிய இயக்குநர் கிம் ஜி வூன். இவர் இயக்கிய ‘ஐ சா தி டெவில்(i saw the devil)' பிரமிப்பானது. அதேபோல் பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிய ‘பட்லாபூர்’, இயக்குநர் கீஸ்லோவ்ஸ்க்கி இயக்கிய ‘திரீ கலர்ஸ்; ஒயிட்(Three colours: white)' இந்த மூன்று திரைப்படங்களிலும் பழிவாங்குதல் என்கிற உணர்வு பல்வேறு கோணங்களில் அணுகப்பட்டிருக்கும். பழி வாங்கிய பின் அந்த கதாபாத்திரத்தின் உளவியல் ரீதியான விஷயங்களை இந்தப் படங்கள் பேசியிருக்கும். இப்படியாக சினிமாவில் ட்விஸ்ட்டு என்பது பல விதமாகக் கையாளப்படுகிறது. அது அடுத்தடுத்த அதிர்ச்சிகளையும், ஆச்சரியங்களையும் தரும் ஒரு கண்கட்டி மேஜிக் ஷோவாக முடிகிறதா..? அல்லது அந்தத் திருப்பங்கள் நம்முள் பலவித தர்கங்களாக உருமாறுகிறதா? என்பது அந்தப் படத்தின் எழுத்தாளரின் கையில் தான் உள்ளது.