- பா.ரஞ்சித் கண்ணன் ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்று தான் பலரைக் கேட்டாலும், தன்னைப் பார்த்து எவரும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதவகையில் கவனமாக இருப்பவர், லட்சுமி ராமகிருஷ்ணன்..தனக்கு சரி என்று படுவதை உரக்கப் பேசுவதும், அது தவறெனத் தெரியவந்தால் வீண் தர்க்கம் இல்லாமல் திருத்திக் கொள்வதும்தான் இவரது சிம்பிள் அண்ட் ஹம்பிள் பிலாஸஃபி. எளிய மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக அதேசமயம் அழுத்தமாக பதிவு செய்யும் திரைப்படங்களை எடுத்தவர், சிறிய இடைவெளிக்குப் பின் ‘ஆர் யூ ஓகே பேபி’ என்ற அழகான தலைப்பில் திரைப்படம் ஒன்றைத் தர ரெடியாகிக்கொண்டிருக்கிறார். அதற்கிடையே கிடைத்த இடைவெளியில்,"ஆர் யூ ஓ கே மேடம்?" என அழைத்துப் பேச ஆரம்பித்தோம்....கடந்த மூன்று வருடங்களில் உடல், மன ரீதியாக நிறைய பிரச்னைகளை சந்தித்தீர்களாமே? “உண்மைதான்…இன்னும் அந்தப் பிரச்னைகளில் இருந்து நான் முழுமையாக வெளிவரலை. இன்னும் இருபது பர்சண்ட் சிக்கல் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு. ஆனா, போன வருஷம் இருந்ததுக்கு, இந்த வருஷம் பரவாயில்லை. நிறைய நல்ல உள்ளங்கள் எங்களுக்காக பிரார்த்தனை பண்ணாங்க. அதனால குறைகளெல்லாம் ஓரளவு நீங்கி, இப்போ நல்லாவே இருக்கோம்.” .'ஆர் யூ ஓகே பேபி' - ன்னு டைட்டில் வைக்க காரணம் என்ன? “எனக்கு விஜய் சேதுபதி ரொம்ப பிடிக்கும். அதோட, அவரோட ‘ஆர் யூ ஓகே பேபி’ வசனமும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தை சம்பந்தமான என்னோட இந்தப் படத்துக்கு அந்த டயலாக்கை டைட்டிலா வைச்சா பொருத்தமா இருக்கும்னு தோணிச்சு, வச்சுட்டேன்.!.உங்களுடைய முந்தைய படங்களை விட இந்தப் படம் கொஞ்சம் வணிக ரீதியில் எடுக்கப்பட்ட படம் மாதிரி தெரிகிறதே? “ஒவ்வொரு படம் டைரக்ட் பண்ணும் போதும் அந்தப் படம் கமர்ஷியலா ஜெயிக்கணும்னுதான் நான் நினைக்குறேன். ஆனா, படம் எடுக்கும்போது, என் மனசுல என்ன தோணுதோ அதைதான் படமா பண்ணுவேன். அதுல கமர்ஷியல் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். இந்தப் படம் கமர்ஷியலா தெரிஞ்சதுன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏன்னா,யாரா இருந்தாலும் கமர்ஷியல் சக்ஸஸ் இல்லாம தொடர்ந்து படங்கள் பண்ணுறது ரொம்பக் கஷ்டம். நாம சொல்ற விஷயம் எல்லா தரப்பு மக்களுக்கும் போய்ச் சேரனும்னா அதுக்கு கமர்ஷியல். சக்ஸஸ் மட்டும் தான் ஒரே வழி. அது நடக்கணும்.” . இந்தப் படத்தில் நிறைய இயக்குநர்களை நடிக்க வச்சுருக்கீங்களாமே?“ஆமாம். மிஷ்கின், சமுத்திரக்கனி, உதய் மஹேஷ், பவல் இவங்களோட நானும் நடிச்சிருக்கேன். ஸோ, ஐந்து இயக்குநர்கள் அப்புறம் முல்லை, விருமாண்டி அபிராமி, அசோக் இவங்களும் நடிச்சிருக்காங்க. ”.இந்தப் படத்துக்கு இளையராஜா இசை எப்படி சாத்தியமாச்சு? “பொதுவாவே எனக்குப் பெரிய நடிகர்கள், பெரிய தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட ஒர்க் பண்ணுறதுக்குக்கு கொஞ்சம் பயம். அதேமாதிரி தான் பெரிய இசை அமைப்பளர்கள்கூட ஒர்க் பண்ணுறதுக்கும் பயம் இருந்துச்சு. தபஸ் தான், ராஜா சார் கிட்ட கேட்டுப் பார்க்கலாம், அவர் மத்தவங்க மாதிரி கிடையாதுன்னு சொன்னாரு. தயக்கத்தோடுதான் அவரைப் பார்க்கப் போனேன்... ஆனா, அவரோ எந்த ஆடம்பரமும் இல்லாம கதையைப் பொறுமையாக் கேட்டாரு. குறிப்பிட்ட நேரத்துக்குள்ள பாட்டு, ரீரெக்கார்டிங் எல்லாம் முடிச்சுக் கொடுத்துட்டாரு. பாட்டுல ஒரு சின்ன மாற்றம் தேவைப்பட்டுது. அதை அவர்கிட்ட சொன்னேன். அவரும் எதுவும் சொல்லாம மாத்திக் கொடுத்துட்டாரு.”.சின்னவயசுல சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்திச்சா?“ நிறையவே வந்திச்சு. மனசுக்குள்ள நடிக்கற ஆசையும் இருந்துச்சு. ஆனா, அப்போ தைரியம் வரலை. கல்யாணம், குழந்தைன்னு இருந்துட்டேன். ஆனா, மனசுக்குள்ள அந்த ஏக்கம் இருந்துகிட்டே இருந்ததால, 42 வயசுல அந்த வாய்ப்பு வந்தப்போ நழுவவிடாம கெட்டிய பிடிச்சுகிட்டேன். ஆனா, இப்போவே எனக்கு இவ்ளோ சர்ச்சைகள் வருது. அப்போ நான் நடிக்க வந்துருந்தா அவ்ளோதான். 18 வயசுல வராத தைரியம் 42 வயசுல வந்துருச்சு.” . இயக்குனர் மிஷ்கின், நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டு பேரும் உங்களுக்கு நீண்ட நாள் நண்பர்களா? “ஆமாம்,10 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். மிஷ்கின் அப்பவும் இப்பவும் அப்படியே தான் இருக்கார். சிவகார்த்திகேயன் இப்போ ரொம்பப் பெரிய இடத்துக்கு போய்ட்டாரு. அவரை நினச்சு பெருமைப்படுறேன். நான் உரிமை கொண்டாடுற அளவுக்கு அவர் இப்போ இல்லை. வேற உயரத்துக்கு போய்ட்டாரு!”