-விஜி முருகநாதன்அன்றுகாலைஎழுந்திருக்கும்போதேஅடிவயிறுசுருக் எனவலித்ததுராஜிக்கு.ஒருவேளை ‘அதுதான்’ வந்துவிட்டதோஎன்று தோன்ற, வேகமாககுளியலறைக்குள்சென்றாள். அதற்குண்டானஎந்தஅறிகுறியும்இல்லாதுபோகமீண்டும் வந்து படுக்கையில்உட்கார்ந்தாள். பக்கத்தில்படுத்திருந்தபாட்டியைக்காணோம்.அதிகாலையிலேயேஎழுந்துபோய்விட்டார்போலும்என்றுஎண்ணியபடியே எழுந்தவளின் மனதில்முதல்நாள்நடந்ததுநினைவில்வந்தது. தமிழாசிரியைவகுப்பைமுடித்துவிட்டுவெளியே போகும்போது,‘‘ராஜேஸ்வரி...இங்கவா…’’ என்றுஅழைத்தார்.அருகில்சென்றவளிடம் ,‘‘ஏண்டி.. .உங்க வீட்டுலசொல்லிமொதல்ல தாவணி போட்டுட்டுவாபுள்ள. ஒருத்தருகண்ணாட்டம்இன்னொருத்தர் கண்ணு இருக்காது… நான் சொன்னேன்னுபாட்டிட்டச்சொல்லு…’’ என்றபடியேஅவளின்மறுமொழிக்குக்காத்திராமல்நடந்துவிட்டார்..சண்முகவடிவுஆசிரியைக்குஅவளைமிகவும்பிடிக்கும்.அவருக்குமட்டும்அல்ல.நன்றாகப்படிப்பாள்என்பதால்அந்தப்பெண்கள் பள்ளியில்இருந்தஅத்தனைஆசிரியைகளுக்கும்அவளைப் பிடிக்கும்.கணக்குஎடுக்கும்சொரணாம்பிகைடீச்சரைத் தவிர. அதற்குஇரண்டுகாரணங்கள்இருந்தன.ஒன்று,மற்றபாடங்களில் முதல்மதிப்பெண்எடுப்பவளுக்குகணக்குவராது என்பது.இரண்டாவது,அப்படிகணக்கு வராதவர்கள்சொர்ணாம்பிகை தனியேதன்வீட்டில்எடுக்கும்டியூஷனுக்குப்போகவேண்டும். அவர்வீடு தூரத்தில்இருந்ததால்மாலையில் டியூஷனுக்குச்செல்லபாட்டி அனுமதிக்கவில்லை.தமிழாசிரியைமெதுவானகுரலில்வெளியே அழைத்துச்சொன்னதை , கணக்குஆசிரியைவகுப்பின் நடுவே வைத்து, ‘‘ஏண்டி… வெக்கமாயில்லஇப்படிநிமித்திட்டுவர்ற. காசில்லாமயாகெடக்கு.ஒழுங்கா தாவணி மாட்டிட்டுஸ் கூலுக்குவா...’.ஆண்கள்படிக்காதபள்ளிதான். ஆனாலும்,கூடப்படித்தபெண்கள்பரிதாபமாகப்பார்க்க ,சிலர்நமுட்டுச்சிரிப்புசிரிக்காமல்இல்லை.மூஞ்சிவாடிகண்ணீர்கரைகட்டவந்தவளை, ‘‘இந்தக்கணக்கிசொரணச்சிக்குவேறவேலயேஇல்ல… கிறுக்குப் புடிச்சுக்கெடக்கு…" என்றுதிட்டிவிட்டு ‘‘ஏம்புள்ள.. வூட்ல சொல்லி தாவணிதான்வாங்கிக்கொடுக்கக்சொல்லேன்...’’ என்றார்கள்கோகிலாவும்,தனாவும்.. கோகிலாவையும் தனாவையும் பார்த்தாள் ராஜி.அவர்களுக்கு தட்டையான ஒல்லிஉடம்புதான்.இருந்தாலும்ரெண்டுபேருமே தாவணி போட்டிருந்தனர்.அந்தஎட்டாவது ‘ஏ’ செக்ஷனில் அவளையும்சேர்த்துமூன்றுபெண்கள்மட்டுமே தாவணி அணியவில்லை.இவள்மட்டுமேவளப்பமாகஇருந்தாள்.மற்ற இருவருமே ஊட்டமில்லாமல்இருந்தார்கள்.அவர்களை யாரும் இப்படி விரட்டவில்லை. ராஜிவீட்டில்எல்லோருக்குமேவளப்பவாகு.பாட்டிநெய்யும் ,பருப்பும்பாலும்கொடுத்துவளர்த்ததில் எட்டாவதிலேயேராஜி பத்தாவதுபடிக்கும்பெண்போலிருந்தாள்.பாதிப்பெண்கள்வயசுக்குவந்து,சிறப்பாகபூப்புனிதநீராட்டும்செய்துவிட்டார்கள்..‘‘பப்பாளி , எள்ளுருண்டைய தின்னு… சட்டுனு உட்காந்துருவ..’’என்றுதோழிகள்சொன்னதைக்கேட்டு, அதையும் முயன்றுபார்த்தாள். எதுவும் நடக்கவில்லை. ‘‘நான்என்னடீபண்றது? பாட்டிகிட்டசொன்னா, வயசுக்குவராமநம்மதுலமேலாக்குபோடறபழக்கமில்லைன்னுசொல்லுது. சொரணாம்பிகைஎங்கசொந்தக்காரங்கதான். அதுக்குஎங்கூட்டுபழக்க வழக்கம்லாம்நல்லாவேதெரியும்...வேணும்னேதிட்டுது’’என்றாள், தான்போட்டிருந்ததொளதொளாசட்டையைஇழுத்துவிட்டுக்கொண்டே. என்னஇழுத்துவிட்டாலும்உடம்பில் வயதின் மீறல் தெரிந்தது. ‘‘ஏம்பா… உங்கம்மாகிட்டச்சொல்லேன்...’’ ‘அம்மாகிட்டயா..?!’’.அம்மா, அப்பாஇருவருமேடெல்லியில்இருந்தார்கள். வருஷம்தவறாமல்தைப்பூசத்தேரோட்டத்திற்குவந்துவிட்டுப்போவார்கள்.அப்பாவுக்குடெல்லிக்குமாற்றலாகும்போது,‘‘அதெல்லாம்ரொம்ப குளிர்றஊரு.ஜனங்களேவேறமாரிஇருப்பாங்க.பொம்பளப்புள்ளயஅங்கெல்லாம்அலையவக்கவேண்டாம்.லீவுக்குவந்து பாத்துட்டுப்போங்க.சீக்கிரமாமாத்தல்வாங்கிட்டுஇந்தப்பக்கமாவாரவழியைப்பாருங்க…’’என்றுகறாராகத்தாத்தாசொல்லியதை, மீறமுடியாமல்ஐந்தாவதுபடித்தஅவளைஇங்கே விட்டுவிட்டுப்போய்விட்டார்கள். வாரத்தில்ஒருநாள்பக்கத்துமளிகைக்கடைக்குடிரங்கால் பேசுவார்கள். எப்போதும்கூட்டமாகஇருக்கும்மளிகைக்கடையில்எப்படிஎதை என்றுசொல்வது..?.தபால்போடலாம்என்றால் , அதுவும்தயக்கமாகஇருந்தது .சரி, வரும்போதுசொல்லிபாட்டியிடம்பேசப்சொல்லலாம்என்றால், அதற்குள் ராஜிக்குஅவமானத்திலேயேஉயிர்போய்விடும்போலஇருந்தது. படுக்கையில்உட்கார்ந்தவாறேஎல்லாவற்றையும் நினைத்தவளுக்கு … பாட்டியிடம்சொல்லியேஆகவேண்டும்என்றுதீர்மானம்வர, எழுந்தாள்.சுருண்டுகிடந்தசட்டையையும் ,உள்சட்டையையும்இழுத்துவிட்டுக்கொண்டவள்,‘‘ச்சே… சொராணாம்பாசொல்வதிலும்தப்புஇல்லை.பட்டினிகிடந்தாவது இந்தப்பாழாப்போனஉடம்பைஇளைக்கவைத்தாலும்இதுஇளைக்குமான்னுதெரியலயே..’’என புலம்பிக்கொண்டே போனாள்.பாட்டிபின்பக்கத்தில்வெந்நீர்அண்டாவை இரும்புக்குழாயைவைத்துஊதிக்கொண்டிருந்தாள். பக்கத்திலேயேசுள்ளிகள்கொட்டிக்கிடக்க,‘ஊப்..ஊப் ..’ என்றசத்தத்துடன்அடுப்புடன்போராடிக்கொண்டிருந்தாள்..இவளைப்பார்த்ததும்.. . ‘‘ஏடி...சுள்ளிகிட்டப்போகாத. தேளுகீளு கெடக்கும். வண்டிக்காரம்பாரு, .ஈறவெறகக்குடுத்துஏமாத்திட்டான்.புடிப்பனாங்குது…’’ என்றபடியேபக்கத்தில்இருந்தமண்ணெண்ணெய்யைஎடுத்துஅடுப்பில் ஊற்ற, தீபக்கென்றுபற்றிக்கொண்டது. இவள்மீண்டும் ‘‘பாட்டி…’’ என்றாள். ‘‘என்னடி...’’ என்றாள்பாட்டி, சிவந்துகிடந்தகண்ணில்வழிந்தநீரைஎட்டுகஜமுந்தானையில் துடைத்துக்கொண்டே... ‘‘சொராணாம்பா…’’என்றுவாயெடுத்தவள்,அப்படியேவிழுங்கிக்கொண்டாள்.இப்படித்தான்பள்ளித்தோழிஒருத்திஇவளுடன் சண்டைபிடித்ததைச்சொல்லப்போக ,கைப்பிடியாகஇவளையும்இழுத்துக்கொண்டு,அவள் வீட்டுக்கேபோய்ஏகசத்தம்போட்டதுஞாபகத்திற்குவந்தது. பெயரைக்குறிப்பிடாமல் ,‘‘டீச்சர்சொல்லிவிட்டாங்கபாட்டி.தாவணி போட்டுட்டுவரச்சொல்லி...’’என்றாள்கண்ணீர்க்குரலில்..சொன்னபேத்தியையேஒருநிமிடம்பார்த்தவள், ‘‘இப்பவோ..பொறவோன்னுதான்இருக்கு...’’ என்றுவாய்க்குள்முணுமுணுத்துக்கொண்டவள், ‘‘பாக்கலாங்கண்ணு.உங்கம்மாதேருக்குவருவாள்லா. வரட்டும் . அதுக்குள்ளபெரியதாத்தனூட்டுலயும்கேட்டுப்புட்டுஎதாவது செய்யலாம்.எதாஇருந்தாலும்நாங்கதான்செய்யணும். உங்கமாமன்தான்மொதமாராப்புவாங்கிக்கொடுக்கணும்…’’ என்று சொன்ன பாட்டி, ‘‘எதுக்கும்பழனிச்சாமிடெய்லருகிட்டஇன்னும்கொஞ்சம்பெரிசாரெண்டுசட்டதைச்சுக்கலாமா..?!’’ என்றாள் ‘‘என்னதுஇன்னும்பெரிசாவா..?இப்பம்போட்டுருக்கறதேதாத்தாசட்டமாரிகொடகொடன்னுதான் இருக்கு.இதுக்கும்மேலபெரிசாப்போட்டாக்கா, தானாகழண்டு வுழுந்துரும்…’’ சொல்லிக்கொண்டேநடந்தவளுக்குமுதல்நாள்மாலைநினைவுக்குவந்தது. ‘இந்தசொரணாம்பாதான்சொல்லிட்டேகெடக்கே… அப்படியாபெரிசாஇருக்கோம்...’’என்று மனசுக்குள்நினைத்துக்கொண்டே, பள்ளிவிட்டுவரும்போதுலேசாக நிமிர்ந்துபார்த்தாள்.எத்தனைகண்கள்அவள்மேல்பாய்ந்து திரும்புகிறதுஎன்று அப்போதுதான்தெரிந்தது.இத்தனைக்கும்அங்கேகடை வைத்திருந்தவர்களில்பாதிப்பேர்சொந்தக்காரர்கள். வெட்கம்வழிந்தோடஎதிரேதெரிந்தமலையில்நிமிர்ந்திருந்த கோபுரத்தைப்பார்த்து , ‘‘முருகா..சண்முகாசரவணா… ஒண்ணு, எனக்கு தாவணி போடவழிசெய். இல்லன்னாசீக்கிரமாவயசுக்குவரவை’’ என்றுமனதாரவேண்டிக்கொண்டேவந்தாள்..பாட்டியின்பதில்இனம்புரியாதநிம்மதியைத்தர,அவளாகவே போய்கணக்குவகுப்புக்கு வந்த சொரணாம்பாவிடம், ‘‘டீச்சர்.. .எங்க பாட்டிதேரோட்டத்தப்ப எனக்குமாராப்புபோட்டுடறேன்னுசொன்னாங்க… அம்மாட்டகேட்டுட்டுஉங்கள்ட்ட டியூசனுக்கும்அனுப்பி வைக்கிறேன்னுசொல்லச்சொன்னாங்க...’’என்றுகூடச்சேர்த்து ஒரு பிட்டையும் போட்டுவிட்டாள். ‘‘அப்போ… சீக்கிரத்துல விருந்துச்சாப்பாடுஇருக்குன்னுசொல்லு…’’ என்றார் சொரணாம்பா, வாயெல்லாம்பல்லாக. ‘‘வாத்திச்சிநல்லாச்சப்புக்கொட்டுது பாரு. யாரக்கூப்பிட்டாலும்இந்த வாத்திச்சியகூப்பிடவேவேணாம்னு உன்பாட்டிகிட்ட சொல்லுடி…’’ என்றாள்கோகிலா கிசுகிசுப்பான குரலில். ஊரேஜெகஜோதியாகஇருக்க,அவள் எதிர்பார்த்ததைப்பூசமும்வந்தேவிட்டது.அன்றுபள்ளிவிட்டு வந்தவள், டெல்லியிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பாவை ஓடிப்போய்க்கட்டிக்கொண்டாள்..‘‘ஏடி..உம்பொண்ணுக்குபெரியமனுஷியாகணுமாம்மா… மாராப்புபோட்டுட்டச்சொல்றா...’’ ‘‘இப்பவேவா... என்னஅவசரம்..?’’ ‘‘அம்மா… டீச்சரெல்லாம்திட்டறாங்கம்மா…’’ ‘‘சரி… பெரிப்பாவூட்லபோயிக்கேட்டுட்டுவந்து, போட்டுறவேண்டியதுதான்.. .பொலம்பிட்டேகெடக்கா…. ’’ என்றாள்பாட்டிமறுமொழியாக. ‘அப்பாடா… தப்பிச்சேண்டா..முருகா! ’ என்றபடி, சந்தோஷத்துடன்படுத்தவளை, ‘‘ஏடி..வேட்டுப்போட்டுட்டாய்ங்க.எந்திரு... இன்னும்சித்தநேரத்துலதேருஇழுத்துருவாய்ங்க…’’ அவசரப்படுத்தினாள் பாட்டி. ‘‘போபாட்டி. இப்பத்தானமொதவேட்டேபோட்டுருக்காங்க’’ என்று கண்ணைத்தேய்த்துக்கொண்டே, குளியலறைக்குள்நுழைந்தவளிடமிருந்துஅடுத்தஐந்தாவது நிமிடத்தில் ‘‘பாட்டி… ’’ என்றபெரும்சத்தம்வந்தது..‘’அம்மா...மாம்… இதென்னகையிலதேர் திருவிழாப் பத்திரிகைய வெச்சிக்கிட்டேதூங்குறே… ’’ என்றமகள்வினயாவின்குரலில்,ஆயிரத்திதொள்ளாயிரத்துஎண்பத்திஎட்டாம்வருடத்திலிருந்துகலைந்துநிமிர்ந்தாள் ராஜி. அப்படியேராஜியின் மறுபதிப்பாக,தொளதொளகுர்தாவும்அதைவிடதொள தொளப்பான பேன்ட்டும் போட்டுக்கொண்டுபுறப்படப்தயாராகநின்றாள் வினயா. ‘‘எங்கடா… இவ்வளவுசீக்கிரம்..?’’ ‘‘மறந்திட்டியாம்மா? என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம்சேர்ந்துமாலுக்குப்போறேன்னுசொன்னேன்ல…’’ ‘‘அட... ஆமாம்ல . பாத்துப்போயிட்டுவா...’’ ‘‘சரிம்மாபை...’’ என்றபடிஷூவுக்குள் காலைநுழைத்தவளிடம் ,‘‘ஏம்மா... துப்பட்டாபோட்டுக்கல...’’ என்றாள் ராஜி. எட்டாவதுஅதிசயத்தைப்பார்ப்பதுபோல்பார்த்த வினயா, ‘‘ப்ச்...போர்மா’’ என்றுஅலட்சியமாகஉதட்டைச்சுழித்தபடிநடந்தாள்.வேகமாகச் சென்றமகளையே பார்த்தபடியிருந்தாள்..சாயந்தரம் திரும்பிவந்தவினயா, தான் வாங்கிவந்த பார்சலைஷோபாவில்வைத்துவிட்டுசோர்வாகஉட்கார்ந்தாள். ‘‘பார்சல்பெரிசாஇருக்கு… என்னம்மா கண்ணூ…’’ என்றபடிபார்சலை பிரித்துப் பார்த்தாள். அந்தப் பார்சலில் வண்ணமயமானஅழகானபாவாடைகளுடன்கூடிய தாவணிகள் இருந்தன! ஆச்சரியத்தில் ராஜியின் கண்கள் விரிந்தன. ‘‘இதாம்இப்ப டிரெண்ட்மம்மி...’’ என்றாள் வினயா!