- ஜே.வி.நாதன்ஊரைவிட்டு சற்றுத் தள்ளி அந்தப் பெருமாள் இருந்தார். முன்னால், பிரமாண்ட தீர்த்தக் குளம். நாலா புறமும் படிக்கட்டுகள். அவற்றின் வழியாக இறங்கிக் கை கால் முகம் அலம்பிக்கொண்டு கோயிலுக்குப் போனார்கள் பக்தர்கள். புரொஃபசர் ஜெகந்நாதன், குளத்து நீரைக் கையால் எடுத்துத் தன் தலையில் தெளித்துக் கொண்டு, இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு படியேறினார்..கோயில் சுவரில் காவி, வெள்ளையில் திருமண் படம் வரைந்திருந்தார்கள். வரைந்திருந்தார்கள் என்ன, இவர் காலத்தில் இவரே முன் நின்று வரைந்ததுதான் அவை.ஆலய நுழைவாயிலின் முன்பு, வீதியில் போய் நின்றார். ஆலய ஒலி பெருக்கி ‘குறையொன்றும் இல்லை..’ என்று முழங்கிக் கொண்டிருந்தது.வெளியே நின்று பார்த்தால், பெருமாள் கால்வாசிதான் தெரிந்தார். பெரிய திருவடியான கருடாழ்வாரும் கொடி மரமும் பெருமாளுக்கும் ஜெகந்நாதனுக்கும் இடையில் குறுக்கே நின்று தடுத்ததால், பெருமாளை மனதில் முழுதாக உருவகப் படுத்தி, கண் மூடி ‘‘லோகத்துல எல்லோருக்கும் நல்லதையே கொடுங்கோ பெருமாளே!’’ என்று முணு முணுத்தார். வெகு நேரம் வீதியிலேயே நின்று வழிபட்டவர், குனிந்து பூமியைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். ‘‘புரொஃபசர் காலையும் மாலையும் பெருமாளைத் தரிசனம் பண்ண வர்றது தவர்றதே இல்லை தெரியுமோ?’’ என்று ஒருவர் சிலாகிக்க, ‘‘ஆனா, ரெண்டு வருஷமா அவர் கோயிலுக்கு உள்ளே போய்ப் பெருமாளைச் சேவிக்கிறதேயில்லை... அதுதான் ரொம்பக் கொடுமை. அந்தக் காலத்துல அவர் காலேஜுக்கும் போய்கிட்டு, சாயங்காலம் கோயிலுக்கும் வந்து சேவை பண்ணி வைப்பார். பெருமாளை அவர் அலங்காரம் பண்ணுவதைப் பார்க்கக் கண் கோடி வேணும். அவர் கணீர்னு மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்றது எத்தனை அழகா இருக்கும் தெரியுமா?’’ என்று மற்றவர் கூறிப் பெருமூச்சுவிட்டார்..மாதவ பட்டர் முன்பு ஈ.ஓ. சபாநாயகம் பரபரப்புடன் வந்து நின்றார். தலைமை பட்டாச்சார்யரின் உதவியாளர் மணவாள பட்டர் ஈ.ஓ.வின் பரபரப்பைப் பார்த்துவிட்டு, கட்டிக் கொண்டிருந்த துளசி மாலையைத் தாம்பாளத்தில் அப்படியே வைத்துவிட்டு எழுந்து நின்றார்.‘‘என்னண்ணா, ஏதும் விசேஷமா? ஏன் இப்படி வேகமா வர்றேள்?’’ மாதவ பட்டர், ஈ.ஓ.வைத் திகைப்புடன் கேட்டார்.‘‘வர்ற மண்டே நம்ப கோயிலுக்கு மினிஸ்டர் விஸிட் பண்றாராம்... அற நிலையத் துறை மினிஸ்டர் ஒவ்வொரு கோயிலாக விஸிட் போய்ட்டு இருக்காருன்னு பேப்பர்ல படிக்கிறோமே, அவருதாம்யா இப்ப நம்ம கோயிலுக்கு வர்றார். இப்பதான் மாவட்ட கலெக்டர் போன்ல விஷயம் சொன்னார். கோயில் குப்பையும் கூளமுமா இருக்கா, சுத்தமா இருக்கான்னு கேட்கறாரு. உண்டியல் வசூல் கணக்கு வழக்கெல்லாம் மினிஸ்டர் கூட வர்ற அதிகாரிங்க செக் பண்ணுவாங்களாம்யா. ஆபீஸ்ல இருக்கிற ஸ்டாஃப் எல்லாரையும் கூப்பிடும்யா. அவங்களுக்கு விஷயத்தைச் சொல்லணும். கோயில் ப்ரிமைசஸ் பளிச்சுனு இருக்கணும். ஆளுங்களைப் போட்டு சப்ஜாடா சுத்தம் பணணணும்யா பட்டரே. பெருமாள் நகை நட்டுகளை ஸ்டாக் ரிஜிஸ்டரை வெச்சிக்கிட்டு சரியா இருக்கான்னு பாத்துடணும். நம்ப கெட்ட நேரம் ஒரு திருகாணி கொறைஞ்சிருந்தா கூட என் தலை போயிடும்!’’ என்று ஈ.ஓ. சபாநாயகம் பிரலாபித்தார். ஆலய டிரஸ்டிகளுக்கு போன் போட்டு அவர்களை ஆலயத்துக்கு உடனே வருமாறு சொன்னார்.அமைச்சரின் வருகை குறித்த செய்தி அவர்கள் அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது..அந்தக் கல்லூரியில் ஹீரோ என்று சொன்னால் அது ஜே.என். என்று குறிப்பிடப்படும் ஆங்கிலப் பேராசிரியர் ஜெகந்நாதனையே குறிக்கும்.தினமும் காலையில் கஞ்சித் தொட்டி முனையில் பஸ் ஏறும் மாணவர்கள் சற்று நடுக்கத்தோடுதான் அவரைப் பார்ப்பார்கள். குடுமி, நெற்றியில் சிவப்பாக ஸ்ரீசூர்ண நீளக்கோடு. பஸ்ஸின் மேல் கம்பியைப் பிடித்தபடி நின்று கொண்டிருப்பார். அவர் வாய் ஏதோ ஸ்லோகங்களை முணு முணுத்தபடி இருக்கும். ‘குடுமி’ என்று எந்த மாணவனும் அவர் முதுகுக்குப் பின்னால் கூட அவரைக் கேலி செய்துவிட முடியாது. புரொஃபசர் ஜே.என். என்றாலே மாணவர்களுக்குக் குலை நடுக்கம். மிக எளிமையான ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’வை அவர் நடத்தினால், அத்தனை பேருக்கும் அற்புதமாகப் புரியும்.தினமும் பகலில் கல்லூரியில் வேலை. மாலையில் பெருமாள் கோயிலில் அர்ச்சகராகத் தீபாராதனை காட்டி, பக்தர்களின் தலையில் சடாரி சார்த்தி, தீர்த்தம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்புவதைத் தெய்வத் தொண்டாகச் செய்வது அவருடைய இன்னொரு முகம்.காலேஜில் ஒருநாள், ரௌடிக் கூட்டம் ஒன்று புகுந்தது. பி.ஏ. ஆங்கில இலக்கியம் இறுதி ஆண்டு மாணவன் சிவாவைத் தேடினார்கள். அவர்கள் முகங்களில் கோபமும் கொடூரமும் கொப்பளித்துக் கொண்டிருந்தன. கைகளில் அரிவாள், தடி. மாணவர்கள் நடு நடுங்கினார்கள். பேராசிரியர்கள் பதுங்கினார்கள். ஹீரோ ஜே.என். தான் அவர்களைத் தைரியமாக எதிர்கொண்டார்.‘‘யாருய்யா நீங்கள்லாம்? எதுக்காக எங்க காலேஜ் ஸ்டூடன்ட் சிவாவைத் தேடறேள்?’’‘‘எதுக்காகவா? கத்தியாலக் கூறு போடத்தான்!’’‘‘கத்தியாலக் கூறு போடற அளவுக்கு சிவா என்ன செய்தார்?’’சுற்றிலும் கூட்டமாக நின்ற மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் ஜே.என். ஸாரின் துணிச்சல் ஆச்சரியத்தை அளித்தது.‘‘இன்னா செஞ்சான்னா கேக்கறே? யோவ்! அந்தப் பேமானி எங்க வூட்டுப் பொண்ணு மல்லிகாவை லவ் பண்றேன் பேர்வழின்னு இழுத்துக்கிட்டு ஓடிட்டான்யா! அவன் மட்டும் எங்க கைல கெடைச்சான்னு வெய்யி, வகுந்துப்புடுவோம் வகுந்து!’’‘‘பேஷாச் செய்யுங்கோ! ஆனா அதையெல்லாம் வெளியில வெச்சுக்கோங்கோ. காலேஜ் கேம்பஸுக்குள்ள வேணாம் மொதல்ல இங்கிருந்து கௌம்புங்கோ. ப்ளீஸ்! ஒங்களையெல்லாம் பாத்து ஸ்டூடன்ட்ஸ் பயந்துண்டு நிக்கறா பாருங்கோ!’’ஒரு மாதம் ஓடியது. சிவாவும் மல்லிகாவும் மீண்டும் கல்லூரிக்கு வர ஆரம்பித்ததும் கல்லூரியே பரபரப்பில் ஆழ்ந்து வியப்பில் அதிர்ந்துபோனது. வியப்புக்குக் காரணம், திருப்பதியில் இருவரும் திருமணம் செய்துகொண்டது மட்டும் அல்ல; அவர்களுக்குத் தன் வீட்டில் மறைவாகத் தங்கியிருக்க அடைக்கலம் கொடுத்தவரே ஹீரோவான புரொஃபசர் ஜே.என். என்பதும்தான்.வெவ்வேறு வகுப்பைச் சேர்ந்த சிவா மல்லிகா இருவருக்கும் தன் வீட்டில் புகலிடம் கொடுத்தது மட்டுமல்ல; பெண் வீட்டைச் சேர்ந்த பெரியவர்களிடம் ஜே. என். நேரில் போய், ‘‘ஜாதி என்னங்க ஜாதி? மனதுக்குப் பிடித்தவனோடு வாழ்வதுதான் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி. அதை ஜாதிங்கிற பெயரில் கெடுக்காதீங்க!’’ என்கிறரீதியில் மணிக்கணக்காகப் பேசி, சிவாவின் நல்ல குணத்தையும் புத்திசாலித்தனத்தையும் எடுத்துச் சொல்லி மனதை மாற்றி, அவர்களின் திருமணத்தை ஏற்க வைத்தார் என்கிற செய்தி தெரிந்து, பேராசிரியர்களும் மாணவர்களும் ஹீரோவைத் தூக்கித் தலையில் வைத்துக்கொள்ளாத குறை.இருவரையும் சேர்த்து வைத்ததன் பலனாக ஹீரோவுக்கு அவர் தினமும் போய் இறைச் சேவையாகச் செய்துவந்த பெருமாள் கோயில் பணிக்குத் தடையுத்தரவு கிடைத்தது. பரம்பரை அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் ஜே.என். என்கிற ஜெகந்நாதன். அவருடைய பெரியப்பா மகன் மாதவ பட்டரும் பரம்பரை அர்ச்சகராகப் பெருமாள் கோயிலில் சேவை செய்து வந்தார்.வெவ்வேறு ஜாதி இளைஞனுக்கும் இளம் பெண்ணுக்கும் தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்தது பெரிய குற்றமாகப் பார்க்கப்பட்டது. கோயிலுக்குள்ளே அவர் வரக்கூடாது. பூஜை மற்றும் பெருமாள் கைங்கரியங்களில் அவர் ஈடுபடக்கூடாது என்று அர்ச்சகர்கள் மாத்திரமல்ல, தேர்ந்தெடுக்கப்பட்ட டிரஸ்டிகளும் கூறி விட்டார்கள்.ஜே.என். மனம் கலங்கவில்லை. மாலை வேளைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று நுழைவாயிலுக்கு நேரே வீதியில் நின்று மனமுருகிச் சேவித்துவிட்டு வருவார்..மதிய வேளை. சாய்வு நாற்காலியில் சாய்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் புரொஃபசர் ஜே.என்.‘சர்..சர்’ரென்று நாலைந்து கார்கள் வந்து அவர் வீட்டு முன் நின்றன. தொடர்ந்து பலர் தப தபவென்று வீட்டுப் படி ஏறி வந்தனர்.புரொபசரின் மகள் அனு ஹாலுக்கு வந்தாள். டவாலி சேவகன், அரசு அதிகாரிகள், பெருமாள் கோயில் அறங்காவலர்கள், மாதவபட்டர், மற்றும் ஏனைய பட்டாச்சார்யர்கள்...‘‘நான் இந்த ஊர் தாசில்தாரும்மா. மாவட்ட கலெக்டர் ஐயா வந்திருக்காங்க. புரொஃபசர் ஐயாவைப் பாக்க வந்திருக்கோம்..’’வலது பக்க அறையிலிருந்து புரொஃபசர் வேட்டி, மேலே அங்கவஸ்திரம் அணிந்த தோற்றத்தில் வெளியே வந்தார். அனைவருக்கும் கை கூப்பினார்.. ‘‘வாங்கோ வாங்கோ! வராதவாள்லாம் வந்திருக்கேள். உக்காருங்கோ... என்ன விசேஷம்?’’கலெக்டர் புரொஃபசருக்கு வணக்கம் கூறிவிட்டு, ‘‘என் பேர் பாண்டியன். டிஸ்ட்ரிக்ட் கலெக்டரா இருக்கேன். இன்னிக்குக் காலைல அறநிலையத்துறை அமைச்சர், பெருமாள் கோயிலைப் பார்வையிட வந்திருந்தாங்க. வந்தவுடனே, ஒங்க பேரைச் சொல்லி, விசாரிச்சாங்க. இந்த ஊர் காலேஜில்தான் அமைச்சர் படிச்சாங்களாம். உங்க பழைய ஸ்டூடன்டாம். இந்த ஊரை நினைச்சாலே பெருமாள் கோயிலும், உங்க உருவமும்தான் ஞாபகத்துக்கு வருமாம். உங்களைக் கேட்டார். அப்பதான் எனக்கே தெரிஞ்சுது ரெண்டு வருசத்துக்கு முன்னாலே நீங்க வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்த மாணவருக்கும் மாணவிக்கும் உங்க வீட்டில் அடைக்கலம் கொடுத்து அவங்க பெற்றவங்ககிட்டே பேசி, அவங்க மனசை மாத்தி ரெண்டு பேருக்கும் வாழ்வு கொடுத்தீங்க என்கிற விஷயம். கோயில் அர்ச்சகர்கள், டிரஸ்டிகள் உங்களைக் கோயிலுக்கு உள்ளே வரக்கூடாதுன்னு சொல்லித் தடை செய்த விஷயத்தைக் கேட்டு அமைச்சர் கொதிச்சுப் போயிட்டாங்க. ‘‘என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது.. புரொஃபசர் ஜே.என்.கிட்டே எல்லோரும் போய் மன்னிப்பு கேட்டு, அவரை மறுபடியும் கோயிலுக்குள் வரவெச்சு பழையபடி பூஜை, புனஸ்காரங்கள் செய்ய அனுமதிக்கணும். யாராவது இதுக்குக் குறுக்கே நின்னா, நான் அறங்காவலர் குழுவைக் கலைச்சுட்டு புதுசாப் போடுவேன். அர்ச்சகர்களை சஸ்பெண்ட் பண்ணிடுவேன்..’’ ன்னு கோபமாச் சொல்லிட்டுப் போயிருக்காங்க...’’ என்றார் கலெக்டர்.மாதவ பட்டரும் மற்றவர்களும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்காரம் பண்ணி, ‘‘ஏதோ அஞ்ஞானத்துல தப்பு பண்ணிட்டோம். நீங்க முன்னைப் போல கோயிலுக்குள்ளே வரணும். பூஜையெல்லாம் பண்ணணும். எங்களை மன்னிச்சுடுங்கோ!’’ என்றார்கள்.புரொஃபசர் ஜே.என். புன்னகை பூத்தார். ‘‘எதுக்குப் பெரியவா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிண்டு?’’‘‘இல்லே ஜே.என்., நீங்க நாளை முதல் பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ண ஆரம்பிச்சுடணும். காலையில் மேளதாளத்தோடு உங்களை வரவேற்க நாங்க எல்லாம் காத்துண்டிருப்போம்!’’ என்றார் தலைமை அர்ச்சகர் மாதவ பட்டாச்சார்யர்.‘‘என் பெருமாளைத் தரிசனம் பண்ண நான் வர மாட்டேன்னு சொல்லுவேனா? எதுக்கு அநாவஸ்யமா மேளதாளமெல்லாம்?’’என்று மகிழ்ச்சியோடு சொல்லி அவர்களுக்கு விடை கொடுத்தார் புரொஃபசர்..மறுநாள்.தவில் நாதஸ்வரம் கோயில் நுழைவாயிலில் அமர்க்களப் பட, பட்டர்கள், அறங்காவலர்கள், ஆர்.டி.ஓ., தாசில்தார் எல்லோரும் கூட்டமாக நின்று புரொபஃசர் ஜே.என். வந்தபோது இரு கரங்களையும் கூப்பி வணக்கம் சொன்னார்கள்.சிரித்த முகத்தோடு அனைவருக்கும் கை கூப்பிய புரொஃபசர் ஜே.என்., ஆலய நுழைவாயிலுக்கு நேர் எதிரில் நடு வீதியில் நின்று பெரிய திருவடியான கருடாழ்வார் மற்றும் கொடி மரம் மறைத்த பெருமாளை நோக்கி மனமுருகத் தொழுதார். பின் குனிந்து பூமித் தாயைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.பிறகு, வந்த வழியில் நிதானமாக நடக்கத் தொடங்கினார். ஆலயத்தினுள் காலடி எடுத்து வைக்காமல், திரும்பிப் போகும் அவரை அனைவரும் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர்.