- சீராளன் ஜெயந்தன்அந்த வூட்ல பெருக்குறது, துணி தொவைக்கிறது, பாத்திரம் கழுவுறது என்னோட வேலை. மாசம் அஞ்சாயிரம் குடுப்பாங்க. என்ன பண்றது வீட்டு ஆம்பிள சரியில்லன்னா, பொம்பள இப்புடித்தான் வூடு வூடா லோல்படணும். அந்த வூட்டுபால்கனியில நின்னு பெருக்கிட்டு இருக்கசொல எதுத்த வூட்டு வாசல்ல ஜோதி வாசல் தெளிச்சு பெருக்கிட்டு இருந்தா. ஐயே, மணி எட்டாவப் போகுது, இவ வாசத் தெளிக்கிற நேரத்தப் பாரேன்..“இன்னா ஜோதி, லேட்டு?”னு கேட்டேன். அவ வாய மூடி, இன்னும் அந்த வூட்டுல யாரும் ஏந்திரிக்கலன்ற மாதிரி ஜாடை காட்டுனா.கீழ தெருவுல சத்தம் கேட்டுச்சு, ’‘ஒட்றை கொம்பு,.. ஒட்றை கொம்பு…”எட்டிப் பாத்தேன், ஒரு பொம்பளை தலையில ஒரு பத்து பாஞ்சு ஒட்ற கொம்ப சொமந்துகின்னு வாறா. அவ தோள்ல ஒரு அழுக்கு வேட்டிய தூளி கட்டி அதுல ஒரு கொழந்தை தூங்கிகிட்டு இருக்கு. பாக்க பாவமா இருந்துச்சு. நம்ம கையில காசு இருந்தா ஒண்ணு வாங்கலாம். ஒண்ணு என்னா, பத்து வாங்குனாலும் அவ கஷ்டம் தீராது. என்னா பண்றது?.“சாந்து… சாந்து…” உள்ளேருந்து மொதலாளியக்க கத்தறது கேட்டுது. இப்டிதான் எம்பேரு சாந்திய சாந்துன்னு அக்கா கூப்பிடும்.“தோ, வர்றேன்க்கா” – உள்ளே ஓடினேன்.“சொம்ப கழுவிட்டு, எங்கடீ வெச்சே?”“தோ, கீழே ரேக்குல இருக்கு பாருக்கா…” சொம்ப எடுத்து அக்கா கையில குடுத்தேன்.“பால்கனியில என்னடி பராக்கு பாத்துட்டு இருக்கே.‘’“ஒட்ற கொம்பு விக்குது ஒரு பொம்பளை. பாக்க பாவம்மா இருக்குக்கா. தோள்ல தொட்டி கட்டி கொயந்தை வேற தூங்குது. தலையில ஒரு கட்டு நெறய ஒட்ற கொம்ப சொமந்துகினு வாறாக்கா”“இப்பல்லாம் யாரு ஒட்டடைக் கொம்பு வாங்குறாடி, எல்லாம் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குப் போயி, பிளாஸ்டிக் ஒட்டடை கொம்பு வாங்குறதுதானே ஃபேஷனா இருக்கு…“”ஆமா அங்க போயி துட்ட வீசிட்டு வந்தாதான் அவங்களுக்கு கெத்து”எங்க மொதலாளியக்கா நல்லவங்கதான், ஆனா, காசு விஷயத்துல ரொம்ப கெட்டி. சின்ன சின்ன செலவுக்கெல்லாம் அவங்க வீட்ல சண்டை நடக்கும். அந்த சார் ஏதாவது பிள்ளைகளுக்கு துண்ண வாங்கிக்கிட்டு வந்துட்டாகூட, ’இத்த ஏன் வாங்குன? அத்த ஏன்வாங்குன’ன்னு ஒரே தகராறுதான். பிச்சைக்காரங்களுக்கு ஒரு ரூபா போட்டாகூட, இவ்வளவு ஏன் போட்டீங்க, அவ்வளவு ஏன் போட்டீங்கன்னு அவர் கூட அக்கா மல்லுக்கு நிப்பாங்க.அந்த சார் ஒரு நாள் சொன்னாரு, “ஐயோ அதை ஏன்ம்மா கேக்குற, கஞ்சப் பிசிநாரி, கல்யாணம் ஆன புதுசுல சினிமாக்குக் கூட்டிட்டுப் போனா, டிக்கெட் விலை அதிகமா இருக்குன்னுட்டு உள்ள வரமாட்டேன்னுட்டா..!”“ஆமா, கூட்டமா இருக்குன்னா திரும்பி வரவேண்டியதுதானே, இவரு போயி ஒண்ணுக்கு மூணு கொடுத்து பிளாக்ல டிக்கெட் வாங்குனாரு.. அக்காவின் பதில்.“அட போம்மா, நான் பிளாக்ல டிக்கெட் வாங்கிட்டேன், இவ உள்ள வர முடியவே முடியாதுங்குறா, அங்க நின்னு சண்டையாப் போட முடியும்? பிளாக்ல வாங்குன டிக்கட்டை விக்க முடியாம நான் பட்டபாடுஇருக்கே... சொல்லி மாளாது. கடைசியில் ஒரிஜினல் விலைக்கே வித்ததுதான் மிச்சம். நூறு ரூவா அன்னக்கி எனக்கு நஷ்டம்.““அப்புறம் என்ன பண்ணீங்க..?”“என்ன பண்றது? வீட்டுக்கு திரும்ப வேண்டியதாச்சு.. அன்னக்கி வந்த கோபத்துக்கு இவள டைவர்ஸ் பண்ணியிருப்பேன், சரி போடி, முட்டாள்னு விட்டுட்டேன்.”“அப்புறம் என்ன சாந்து? ஐம்பது ரூபா டிக்கெட்ட நூறு ரூபாய்க்கு வாங்குனா,வயித்தெறிச்சல்தானே?”“ஒரு நாளைக்கு, புதுபொண்டாட்டி கூட ஜாலியா சினிமா பாக்கலாம்னு போனா, மூட்அவுட் பண்ணிட்டா..”அந்த சாரோட எப்பயும் ஒரே காமெடிதான்.அக்காவ ஒட்ற கொம்பு வாங்கச் சொல்லலாமா? கஷ்டம்தான். கீரை விக்கிறவன்ட்ட எல்லாம் அஞ்சுக்கும் பத்துக்கும் பேரம் பேசுவாங்க. ஆனா நம்ப வாய்தான் நிக்காதே… கேட்டுட்டேன்.“அக்கா, அந்த பொம்பளைய பாத்தா பாவமா இருக்குக்கா, ஒரு கொம்பு வாங்கலாம்க்கா.”அக்கா நிமிந்து பாத்தாங்க, “அந்த குச்சி சரியா இருக்காது சாந்து, ஒடைஞ்சு போயிடும். பிளாஸ்டிக்ல வாங்குனா, ஒடையாம இருக்கும்”“இல்லக்கா, இது மூங்கிக் கொம்பு, ஒடையாது, நல்ல நீளமாவும் இருக்கு, நின்னுகிட்டே ஒட்ற அடிக்கலாம்..”“மூங்கிலா, சரி வா பாக்கலாம்..”ரெண்டு பேரும் பால்கனிக்குப் போனோம். அந்தப் பொம்பள முட்டுச் சந்து கடேசி வரைக்கும் போயிட்டுத் திரும்பி வந்தா. “இந்தா நில்லு...”னு குரல் கொடுத்தேன்.“எவ்வளவும்மா, ஒரு கொம்பு”னு அக்கா கேட்டாங்க.“ஒண்ணு எரநூறு ரூவா”ன்னு அவ சொன்னா..எனக்குக் கொஞ்சம் பக்குன்னுச்சு. அம்பது ரூவா அறுபது ரூவா இருக்கும்னு நெனச்சேன். ஏதோ ஒரு கொம்பு வாங்கினா அவளுக்கு ஒதவியா இருக்குமேன்னு பாத்தா…. அவ ஒரேமுட்டா யான வெல குதிர வெல சொல்றா. எனக்கு வாயடைச்சுப் போச்சு. அய்யோ அக்காவேற என்னைய கிழிச்சு தொங்கவிடப் போறாங்கன்னு பயந்தேன்.“நூறு ரூபாய்க்கு தர்றியா,”-ன்னு அக்கா கேட்டாங்க.“ஒரு அம்பது ரூபா போட்டு கொடும்மா”ன்னா அவ.“சரி, கீழ போயி வாங்கிட்டு வா”ன்னு அக்கா உள்ள போயி துட்ட எடுத்துட்டு வந்து என்ட்ட கொடுத்தாங்க. அக்கா நூத்தம்பது ரூவாய்க்கு ஒத்துகிட்டது எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு.. கீழே போனேன்.அக்கா பால்கனியிலிருந்து அந்த பொம்பளைகிட்ட பேசிட்டு இருந்தாங்க. அந்தக் குழந்தை சிணுங்க ஆரம்பிச்சுடுச்சு.“கொழந்தைய வீட்டுல விட்டுட்டு வரவேண்டியதுதானே”ன்னு அக்கா கேட்குறாங்க.“பாத்துக்க யாரும்மா இருக்காங்க”ன்னு இவ சொல்றா..அவளுக்கு வீடுன்னு ஒண்ணு இருக்குமான்றதே எனக்கு டவுட்டு.“நல்ல ஸ்ட்ராங்கான கொம்பா பாத்துக் குடு..”அவளே நல்லதா ஒரு கொம்ப எடுத்துக் குடுத்தா. காசை வாங்கி அந்த கொம்புங்கள சுத்தி காமிச்சுட்டு, கண்ல ஒத்தி கும்பிட்டுட்டு, இடுப்புல இருந்த சுருக்குப் பையில் சொருகிக்கிட்டா. இவங்களுக்கெல்லாம் எந்த சாமி, எந்த கோயில் இருக்கும்னுநெனச்சுகிட்டேன்.“என்னா மொதோ போணியா,” ன்னு கேட்டேன்.“ஆமா, காலையில இருந்து சுத்தி சுத்தி வர்றேன் ஒரு காக்கா குஞ்சக் கூட தெருவுல காணோம்”“ஆமா, இந்த ஏரியால ஒனக்கு யாரு எட்டு மணிக்கு எந்துருச்சு வெளியில வாரா?அதுவும் சன்டே. எல்லாம் காருல போயி பெரியப் பெரிய கடையில வாங்குனாதான் அதுங்களுக்குப் பெரும”“அங்கப் போயி ஒண்ணுக்கு மூணா கொடுப்பாங்க..”“உனக்கு வூடு எங்க?”“தாம்பரம் பஸ்டாண்டு தாண்டி ஒரு இடத்துல நாங்க எல்லாம் பிளாட் பாரத்துல தூங்குவோம். காலையில இப்படி ஏதாவது தூக்கிக்கிட்டு கிளம்புனா, திரும்ப ராத்திரிக்கு அதே இடத்துல கூடுவோம். பகல்ல யாரும் அங்க இருக்க மாட்டாங்க.“பேசிட்டு இருக்கும்போதே, கொழந்தை ரொம்ப சிணுங்குச்சு. அவ இறக்கிவிட்டா. கீழ இறங்கி அதுவா போயி ஒரு ஓரத்துல சூச்சா போச்சு. அம்மாவும் பிள்ளையும் எப்ப குளிச்சதுங்களோ தெரியல. ஒரே அழுக்கு. சுருட்ட சுருட்டயா முடி. வாயெல்லாம்ஜொள்ளு ஒழுவி அப்பிடியே காஞ்சு போய் கெடக்கு. கொழந்தை அழகாத்தான் இருந்துச்சு.“அம்மா, பழசு ஏதுன்னா இருந்தா கொடேன்”ன்னு மேல அக்காவ பாத்துகையேந்துனா அவள்.“இரு வர்ரேன்”ன்னு அக்கா சொல்றாங்க..“தா, அப்பிடி உக்காந்துகட்டுமா?” ன்னு அவ கார் பார்க்கிங்கில் இருந்த திண்ணைய காட்டுனா. சரின்னேன்.அந்தக் குட்டி ஆவ் ஆவ்னு பறந்தான். அவனத் தூக்கி மடியில போட்டுக்கிட்டா. யாரும் இல்லாததால அவ சேலைய வெலக்கி, ரவுக்க பட்டன கழட்றதுக்குள்ள, அவ மாரு பிச்சுகிட்டு வெளிய வந்து விழுந்துச்சு. பால் அப்பிடியே பீச்சிகிட்டு அடிக்குது. நல்ல குண்டுபொம்பள, பெருசா இருக்குது மாரு. அப்பிடியே பாத்துகிட்டு இருக்கேன். அந்தக் குட்டி பாஞ்சுப் போயி வாய வைச்சான்.என்னைய பாத்து, “பால் குடுத்து ரொம்ப நேரமாச்சும்மா…’‘னு சங்கடமா சொல்றா.என்னன்னு தெர்ல, எனக்கு கண் கலங்கிடுச்சு.அவ சேலை நைஞ்சு போயி அங்கங்க கிழிஞ்சு போயிருந்துச்சு. முந்தானையில மடிச்சு மடிச்சு மறைச்சு கட்டியிருந்தாள்.“கொழந்தைய இப்பிடி எவ்வளவு நாளைக்கி தூக்கிட்டு திரிவ?”“நடக்குற வரைக்கும்தான்மா. அப்புறம் அது கையில ஒண்ண கொடுத்து வேலைக்கு அனுப்ப வேண்டியதுதான்”“இதோட அப்பா என்ன வேல பண்றாரு?”“யாருக்குத் தெரியும்” – அலுப்பா சொன்னாள்.“தெரியாதா?“ – எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. இதுக்குமேல நான் எதுவும் அவள்ட்ட கேக்கல.அக்கா ஒரு கிண்ணத்துல பழைய சாதத்தை எடுத்துட்டு கீழே வந்து கொடுத்தாங்க. அவள் வைச்சிருந்த பழைய அலுமனிய சட்டியில அத்த வாங்கிக்கிட்டா.“ஏம்மா, ஏதுன்னா பழைய புடவையிருந்தா ஒண்ணு கொடேன்” திருப்பியும் அக்காவாண்ட கேட்டா அவ.“இதுதானே உங்ககிட்ட பிரச்சினை, ஒண்ணு கொடுத்தா,இன்னொன்னு கேப்பிங்களே...“ன்னு சொல்லிட்டு காலி ஏனத்தை எடுத்துட்டு, அக்கா மேலே போயிட்டாங்க.அவதுண்ணதும்கொழாயிலதண்ணிப்பிடிச்சுகொடுத்தேன். அவஅலுமினிய சட்டிய கழுவி, பிள்ளைக்குவாய்கழுவிவிட்டு, கார்பார்க்கிங்லேருந்துவெளியேபோறவரைக்கும்.காத்துட்டு இருந்து, வாசல் கேட்டை சாத்திட்டு வாங்குன ஒட்ற கொம்ப எடுத்துக்கிட்டு மேல வந்தேன்.அக்கா பால்கனியில நின்னுக்குனு எதையோ பால் பையில போட்டு கீழ இறக்கிட்டுருந்தாங்க.“என்னக்கா…?” எனக்கு ஆச்சரியம்.“ஒண்ணுமில்ல.. சும்மா… பொடவை கேட்டாள்ல““சரி கீழே தூக்கிப் போட வேண்டியதுதானே…., அவ எடுத்துக்கறா…”“கீழ, வாச தெளிச்சது ஈரமா இருக்குல்ல, கீழே விழுந்துட்டா மண்ஒட்டிக்கும்..இடுப்புல குழந்தையோட அவ எப்பிடி குனிஞ்சு எடுப்பா?”அந்தப் பொம்பளை பால் பை கீழ போனதும் பையை பிரிச்சு பொடவையை எடுத்துக்கிட்டா.“நீங்க நல்லா இருப்பிங்க…”ன்னு அவ கீழேருந்து சொன்னா.“என்னக்கா, கவரோட இருக்கு, புதூப் பொடவையா?”“போட்டும், போ…”நான் ஆச்சரியமா அக்காவையே பார்த்துட்டுருந்தேன்.“என்ன சாந்து, புதுசா பாக்குற மாதிரி பாக்குற..?”அவங்க எப்பயும் அழகுதான். இப்போ ரொம்ப அழகா தெரிஞ்சாங்க.“யம்மா, இது புதுசா இருக்குமா, எனக்கு வேண்டாம். பழசு இருந்தா குடுங்க” அவ கீழேருந்து குரல் கொடுக்குறா. “பரவாயில்ல… வைச்சுக்கோ” – அக்கா“புதுசெல்லாம் கட்டுனதில்லம்மா, என்னவோ மாதிரி இருக்கும்” அவ பால் பையில அந்த புடவையைத் திரும்ப வைச்சுட்டா.“இந்தா…. தீபாவளி, பொங்கலுக்கு கட்டிக்கோ” அக்கா அவள அதட்டினாள்.“எங்களுக்கேதும்மா, தீவாளி பொங்கலு?” அவ மேல பாக்காமலேயே பேசுனா.“திமிரப் பாத்தியா, கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்கறா?”அவ நின்னுட்டு இருந்தா. அக்கா போயி இன்னொரு பழைய புடவைய எடுத்துட்டு வந்து பால் பையில போட்டு கீழ அனுப்பிச்சாங்க. அவ பழசை மட்டும் எடுத்துட்டு, புதுச பையிலயே விட்டுட்டாள்.“ஏய், புதுசையும் எடுத்துக்கோ” – அக்கா கத்துனாங்க.“வேணாம்மா”ன்னு அவ கௌம்பிட்டாள்.எனக்கு வாயடைச்சுப் போச்சு. அக்கா என்னைய ஒரு பார்வை பாத்தாங்க, எனக்கு ஒண்ணியுமே புரியலை. அவங்க முகத்துல ஒரு அதிர்ச்சி தெரிஞ்சுது.“ஒட்ற கொம்பு, ஒட்ற கொம்பு…” – அவ திரும்பிப் பாக்காம போயிட்டே இருந்தா.அடடே…. அவ பேரு என்னானு கேக்காம விட்டுட்டனே..