-சவிதாஅசந்தர்ப்பமான நேரமெனில் அது பன்னிரண்டில் இருந்து நான்குதான். எப்படி நான்கு மணிக்கு ப்ரம்ம முஹூர்த்தம் எந்த நல்லதை வேண்டுமானாலும் செய்யலாம் என சொல்கிறார்களோ, இந்த நேரத்தை அமானுஷ்யத்துக்கு ஒதுக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது.. மஞ்சுவிற்கு சரியாய் இப்போது முழிப்பு வந்துவிட்டது. முதலில் எப்போதும் போல் விழித்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டாள். அப்புறம் கிராதிக் கதவுகளின் லேசான சத்தம்.. சத்தம் எழுந்துவிடக் கூடாதென மிக மிக கவனமான முன்னெச்சரிக்கையான சத்தம். ஜீவாவின் கள்ளத்தனம் அங்கேயே தெரிந்துவிட்டது. கள்ளம். சந்தேகம். பயம். இறுக்கிப் பிடித்தல். வாய் சிறிதான கோப்பையில் முன்பே அடைத்து வைக்கப்பட்ட பந்து போல ஜீவாவிடம் இனி போராட வேண்டும்.தானாகப் போய் கதவைத் திறக்க முடியாது. ஒருமுறை திறந்ததற்கு இன்னும் தூங்காமல் என்ன என்று ஆரம்பித்த இரண்டு மணிநேர வெற்றுச்சண்டைக்கு பிறகு அதை விட்டுவிட்டாள். வண்டியை மேலேற்றவில்லை போல. ஏன் இன்னும் கதவு தட்டவில்லை? காலிங்பெல் அடிக்கவில்லை? சத்தம் கேட்டது பிரம்மையா?முன்னெல்லாம் அவன் பெங்களூருவிலிருந்து கிளம்பும்போதே சொல்லி விடுவான். ‘’ரெடியா இருடி…’’ என அடக்கிய குரலில் அவன் சொல்லிய விநாடி இவளுக்கு உடல் மலர்த்திக்கொள்ளும். நொடி நொடியாகக் காத்திருந்து இன்னும் பூத்து விரியும். அவன் வந்து மொத்த இதழ்களையும் ஆக்கிரமிக்கும் வரை ஆக்கிரமித்தப் பின்னும்கூட அவள் விரிந்துகொண்டே இருப்பாள். காலிங்பெல் அடித்தது. வருவித்த தூக்கக் கலக்கத்துடன் கண்ணைத் தேய்த்தபடி கதவை திறக்க போன நொடியில், குறுக்கிட்ட கண்ணாடியில் நின்று பார்த்துக் கொண்டாள். இப்போதும் உடல் விரிந்துதான் கிடக்கிறது. மலர்ந்த ஈரம்தான் உலர்ந்துவிட்டது. கதவைத் திறந்தவள் ‘’சொல்லவேல்ல?’’ என்றாள்.‘’ஏன் சொல்லணுமா?” கதவை மூடிவிட்டு, தாழ்ப்பாளின் அருகிலேயே அவளைத் திருப்பி மிக மூர்க்கமாக முத்தமிட்டான். கையை நீட்டி அறையை காட்டினாள். ‘’ம்… தெரியும்.” விடுவித்துவிட்டு வேகமாக கதவை சாத்திவிட்டு மறுபடி அணுகினான்..பூத்தாள். காய்த்து போனதெல்லாம் கனிந்தது. வெம்மையுற்றதெல்லாம் தணிந்தது. மேலும் மேலுமாயிறுகிக் கொண்டார்கள். கொல்வதில் தேர்ச்சியுற்றார்கள். கூடிக் கலைந்து, ‘இதிலெல்லாம் ஒன்றும் குறைவே இருப்பதில்லை…’ என உள்ளூக்குள் முனங்கிக் கொண்டாள். அவளுக்கு அவன் அத்தனை தேவையாக இருந்தான். எல்லாமே அவனால்தான் எனத் தெரியும். தன்னை அணுஅணுவாகக் கொன்றுகொண்டிருப்பவன் அவன்தான் என உணர்ந்தாயிற்று. பேரன்பு சாலைகள் அலுப்பதாகவே இல்லை. உள்ளுக்குள் பொங்கும் ஆத்திரம் நன்கு தெரிந்தது.அவள் மீதான எரிச்சலை அவன் அவளுக்குள்ளாகவே செலுத்திக் கொண்டிருந் தான். அவளின் மீதான ஆதிக்கத்தை அவளுக்கு உணரச் செய்வதான ஆணின் அத்தனை வன்மங்களும் அவனிடமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தன. அவள் அதை பொருட்படுத்தாமல் தாங்குவதைக் கண்டு இன்னமும் சீறினான். இரு உடல்களும் வெளியேற்றிய வெப்பத்தில் சென்னையின் புழுக்கம் இன்னும் அதிகமாக அடர்ந்து வியர்த்து நனைத்தது.தண்ணீர் பாட்டிலை நீட்டினான்.“சாப்டீங்களா?”“இல்ல”“ஏன்?’’’’மணி என்னாகுது… ஆமா என்ன திடீர்னு?” “நினைச்சுக்கிட்டேன். வந்தேன். ஏன் நான் வந்தா உனக்கு பிடிக்கலையா?’’மறுபடி அவள் குறுக ஆரம்பித்தாள். ஏன் இது முடிந்தது முடித்த பின் எதற்கு பேச ஆரம்பித்தோம் என எரிச்சலாக இருந்தது. அவன் முகம் வாடியிருந்தது. வலித் தது.“ஆம்லெட் போட்டுத் தரவா?”“ முட்டை இருக்கா?“இப்படித்தான் அவனிடமிருந்து நேரடியான பதிலே வராது. எழுந்து உடை அணிந்து சமையலறை சென்றாள். இரண்டு முட்டைகள் இருந்தன. நான்கு வெங்காயங்கள். இப்படித்தான் அவனுக்கு எல்லாமே அதீதம். நறுக்கி அவனுக்கு பிடித்தாற்போல செய்ய செய்ய மனம் கலைந்துவிட்டது.அவன் போனை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.அவ்வளவுதான். முடிந்தது. இனியதாய் இனி எதுவும் நடக்க வழியில்லை. எதற்கு வந்தான் எனவும் நொடியில் புரிந்துவிட்டது. அவளுக்கு அவனை நோக்கி நடக்கவே அச்சமாயிருந்தது.இதெல்லாம் எங்குதான் ஆரம்பித்தது? இந்த சந்தேக சாத்தான் அவனிடம் எப்போதுதான் புகுந்துகொண்டது. தட்டை எடுத்துக்கொண்டு அவனிடம் அமர்ந்தாள்..இப்போது அவன் உள்ளே வந்த ஜீவா இல்லை. எல்லாம் மாறிவிட்டது. எல்லாவற்றையும் போனில் ஓபன் செய்து பார்த்துக் கொண்டிருந்தான். ஆம்லெட்டை ஒரு பாதுகாப்பு செய்கை போல உண்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு அதில் ஒன்றும் இருப்பதாக உணர்ந்தது போல் தெரியவில்லை. பச்சை மிளகாயாவது போட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டாள்.அவனைத் தாண்டி அந்தப் பக்கம் போய் படுத்துக்கொண்டாள். தட்டை தள்ளி வைத்துவிட்டு ஆரம்பித்தான்.“இப்போ எதுக்கு உன் போட்டோவை போட்ருக்க?”“ஏன் போடக் கூடாது?”’மஞ்சு”“ம்”அந்த ஒற்றை எழுத்தில் அவள் பிடிவாதம் தெறித்தது. அதற்குப் பிறகு, அந்த அறையில் இன்னும் அடர்த்தியாக அவர்களின் போதாமைகளும் அகங்காரங் களும் எழத் தொடங்கின. மூச்சு முட்டியபோதும் யாரும் நிறுத்துவதாயில்லை. என்றென்றோ மறைத்துவைத்த இயலாமை பொங்கிப் பிரவாகித்தது. மஞ்சுவின் ஆவேசத்தை இவனால் தாங்கமுடியவில்லை. அவனுள் இதை நிறுத்த வேண்டியாக வேண்டிய உந்துதலை கையாள முடியாமல் அவன் ஆதி ஆயுதத்தை பிரயோகிக்க ஆரம்பித்தான்.அவளின் அழகுக்கும் அவள் மீதான ப்ரியங்களுக்கும் இடப்பட்ட இதயங்களின் மொத்த எண்ணிக்கையை அவனால் சகிக்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் ஒற்றைக் காரணமும் ஒற்றைப் பெயரும் இட்டு கேவலமாக அடையாளமிட்டதில் மஞ்சு திகைத்தாள். ஒரு செயலியின் அற்ப சந்தோஷத்தை அடைந்த தன் எளிய செயலுக்காக அவனின் காலில் மிதிபடும் தன் அந்தரங்கங்களை, அவன் மீதான காதலை கொச்சைப்படுத்திய வேசித்தனத்தை சகிக்க முடியாமல் பாய்ந்தாள். அடக்கிவைத்த அவனுக்காக ஏங்கிய, இழந்த உருவங்களெல்லாம் கண்முன் வந்துபோயின. அடிவயிற்றில் போன மாதம் இழந்த சிசுவின் தடம் மனக் கண்முன் உந்தித் தள்ளியதுஇரு கைகளாலும் அவனைக் கீறினாள். தொடர்ந்து அடித்தாள். அடி வயிற்றிலிருந்து ’’யாரைப் பார்த்து என்ன சொன்ன?” என்று இரைந்தாள். சொன்ன வேகம் தாங்காமல் வீழ்ந்தாள். அவன் அத்தனையையும் பொறுத்தான். சொல்லி முடித்த சொல்லின் வீர்யம் அதை நிகழ்த்தும் என அறிந்தேதான் அதை சொல்லியிருந்தான். அதைத் தவிர அவனிடம் வேறெந்த ஆயுதமும் அவளுக்கு எதிராக இல்லை என்பதை உணர்ந்திருந்தான். மயங்கியிருந்த அவளை படுக்கையிலிட்டு மார்புச்சூட்டில் புதைத்துக்கொண்டான். வேறெதுவும் அவளுக்குத் தேவையில்லை என்பது தெரியும். ஆனால், அவனுக்கு வேறு வழியுமில்லை. விழித்தவள் விசும்பி விசும்பி இன்னும் மார்பில் புதைந்து தூங்கிப் போனாள்..விலகியதை அறிந்தும் எழ மனமேயில்லை. ஷாலுவின் குரல் கேட்டது. மென் மையாக இவன் உரையாடுவதும். எட்டிப் பார்த்தபோது இருவரும் மெய்மறந்து விளையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. விளையாட்டு சாமான்களை கடைப் பரப்பியபடி அவள் வயதுக்கு இறங்கி, இவன் குழந்தையாய் மாறி பேசிக் கொண்டிருப்பதை கண்டபோது வேறெதுவும் தேவையில்லை எனத் தோன்றி யது. இவளைப் பார்த்ததும் “குட் மார்னிங்” என சிரித்தான். சிரிப்பில் பயம் இருந்தது. மெலிதாய் சிரித்துவிட்டு மறுபடி படுத்துக்கொண்டாள். எழுந்து காபி கப்புடன் வந்தான்.”இந்தா... குடி”“வேணாம். பல் விளக்கல””பரவால்ல… இன்னிக்கு ஒரு நாள் குடி” அணிந்திருந்த டிஷர்ட் தாண்டி கழுத்தில் அவளின் நகக் கீறல் தெரிந்தது. விரல்களைப் பார்த்தாள். நகத்தில் சதைத் துணுக்குகள் ஒட்டியிருந்தது. திகைத்துப் போய் அவனின் கீறலைத் தடவினாள்.’’ஸாரி”“ம்ப்ச்’’ ‘’பரவால்ல... நான் அப்படி சொல்லிருக்கக் கூடாது. ஸாரி…’’ காபி குடித்துக் கொண்டே, அந்த செயலியை மூன்றாவது முறையாக அழித்தாள். அவனிடம் போனை தூக்கிப்போட்டு “ஹேப்பி?” என்றாள். அவன் அவள் உச்சியில் முத்தமிட்டான்.எல்லாம் சரியாகிவிட்டது. நல்லவன்தான். என்னமோ நமக்கும் பைத்தியம். இனி இதுபோல நடந்துகொள்ளக் கூடாது என நினைத்துக்கொண்டவள், எழுந்து கிச்சனுக்குன் சென்று, வடைக்கு உளுந்தை ஊறப்போட்டாள். அவனுக்கு பிடிக்கும். அதற்குள் ரூம் கதவு சாத்தப் பட்டிருந்தது. திறந்தபோது போன் பேசிக் கொண்டே ‘உஷ்’ என்றான். புரிந்தது. ஓசைப்படாமல் படுக்கையில் அமர்ந்தாள்.“சரி... செல்வி. நாளைக்கு வந்துருவேன். இன்னிக்கு அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிரு. நாளைக்கு நான் வந்து அவன் ஃபீஸ் கட்டிடறேன். பொலம்பாத... வந்து சொல்றேன். இங்க பிசினஸ் விஷயமா வந்திருக்கேன். என்ன, ஏதுன்னு சொல்லிட்டு கிளம்ப முடியாது ஒவ்வொரு முறையும். புரிஞ்சுக்க. வந்து பேசிக்கலாம்… வை. “மஞ்சு ஒரு அலைக்கழிப்புடன் அமர்ந்திருந்தாள்.வழக்கம்போல முத்தமிட்டுவிட்டு சொன்னான். “கொலுசை நான் வந்தா கழட்டிரு, செல்வி உன்னிப்பா கவனிச்சு கேக்குது. சரியா..?