-ஹரிஹரசுதன் தங்கவேலு, சைபர் பாதுகாப்பு வல்லுநர்செயற்கை நுண்ணறிவின் மிக முக்கியமான துணைக்குழு (subset) இயந்திரக் கற்றல். ஓர் இயந்திரத்தால் கணினியக் கணக்கீடுகளை செய்ய முடியுமா என்ற புரொகிராமிங் தேடலை ஆலன் டூரிங் நிகழ்த்திக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், ஓர் இயந்திரத்திற்கு தகவல்களை வைத்து கற்பிக்க முடியுமா என சிந்தித்ததுதான் மெஷின் லேர்னிங் எனப்படும் 'இயந்திரக் கற்றல்'. இப்படியான ஓர் ஆகச்சிறந்த தொழில்நுட்பப் புரட்சிக்கான முதல் விதை தூவப்பட்டது,இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் தான். .உலகின் அதி ஆற்றல் வாய்ந்த வஸ்து எது தெரியுமா ? அணு ஆயுதமாக இருக்குமோ என நீங்கள் நினைக்கலாம், இல்லை நிச்சயம் அமெரிக்காவின் FRONTIER சூப்பர் கணினிதான் என உங்கள் மூத்த மகன் சொல்ல, இல்லை நொடிகளில் 60 கிலோ நியூட்டன்கிலோ விசையை உருவாக்க வல்ல நீலத்திமிங்கலம் தான் என்பான் வீட்டின் கடைக்குட்டி. இதெல்லாம் தவறு, மனித மூளைதான் ஆற்றல்வாய்ந்த வஸ்து என்பார் உங்கள் இல்லத்தரசி. எது சரி ? .கணக்கீடுகளின் வேகத்தை FLOP/s (floating point operations per second) அளவில் குறிப்பார்கள். PetaFLOP என்பது ஆயிரம் கோடிகோடிகோடி கணக்கீடுகளை நொடியில் நிகழ்த்த வல்ல வேகம். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை IBM Summit தான் உலகின் அதி வேக சூப்பர் கணினி. அதன் இயங்கு வேகம் 122.3 PFLOP. ஆனால் இன்றைய தேதியின் அதிவேக சூப்பர் கணினியான FRONTIER அதை சுக்குபில்லியனாய் உடைத்து விட்டது, அதன் இயங்கு வேகம் 1.102 exaFLOPS. ( ஒரு exaFLOP என்பது பில்லியன் பில்லியன் பில்லியன் கணக்கீடுகளை நொடியில் நிகழ்த்த வல்ல வேகம்). கார் சாவியை எங்கு வைத்தோம் எனத் தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனித மூளை தோராயமாக ஒரு exaFLOP அதிவேகத்தில் தான் இயங்குகிறது. அப்போ நமது மூளையை விட வேகமாக இயங்கும் FRONTIER தானே சரியான விடை என உங்கள் மகன் குதித்தால், இல்லை இதை விட பல சூப்பர் கணினிகளை, அதிவேக அற்புதங்களை உருவாக்க இருக்கும் மனித மூளை தான் ஆற்றல் வாய்ந்தது என்பார் மனைவி. எது சரியான விடை ! நீங்களே சொல்லுங்கள். . மனிதமூளையின்அளப்பரியவரமும்சாபமும்சிந்தனைதான். இந்தசிந்தனையைத்சாத்தியப்படுத்துவதுமூளையில் நிறைந்துள்ள 86 பில்லியன்நியூரான்கள். சிக்கலானஅமைப்பில்ஒன்றுடன்ஒன்றுதொடர்புடையதகவல் தூதுவர்கள்எனநியூரான்களைகுறிப்பிடலாம்.மூளைமற்றும் உடலின்நரம்புமண்டலம்முழுவதும்தகவல்களைகொண்டு சேர்ப்பதுஇதன்தலையாய பணிகளில்ஒன்று. உங்கள்முன்னாள்காதலியின்பிறந்தநாள்ஜிலீரென நியாபகத்தில்இருப்பதற்கும், மனைவியின்பிறந்தநாள்அடிக்கடிமறந்துபோவதற்கும்காரணம்மெமரிநியூரான்கள்.ஒன்றிடமிருந்துமற்றொன்றுதகவல்களை சரியாககடத்துவதில்லை.ஆகவேஅதுஎன்பிரச்சினையில்லைஎன நீங்கள்தப்பித்துக்கொள்ளலாம்.ஆகசிந்தனைமற்றும்உணர்தல் எனபலமுக்கியமனிதசெயல்பாடுகளுக்குகாரணம் நியூரான்களும், அவைதங்களுக்குள்கடத்தும்தகவல்களும்..இந்தமூளைவடிவமைப்பைமாதிரியாகக்கொண்டு, செயற்கைநியூரான்களைஉருவாக்கிஅவற்றில்தகவல்களைநிரப்பிஒருகணினிஇயந்திரத்திற்குப் பொருத்தினால்அதுசிந்திக்கும்வாய்ப்பிருக்கிறது என 1943ம் ஆண்டுநரம்பியல்நிபுணரும், கணினியசிந்தனைகொண்டவருமானவாரன்மற்றும்வால்டர் ( Warren McCulloch & Walter Pitts) இருவரும்இணைந்துஒருஆய்வுஅறிக்கைவெளியிட்டார்கள். ஆலன்டூரிங்கின்புகழ்பெற்ற " On Computable Numbers" ஆய்வுக்கட்டுரையைஅடிப்படையாகக்கொண்டுஇவர்கள்வெளியிட்ட “A Logical Calculus of the ideas Imminent in Nervous Activity" ஆய்வுக்கட்டுரைதான்இயந்திரக்கற்றலின்முக்கியப்பிரிவான Artificial neural network (ANN)ன்துவக்கம். வாரன்தனதுஆய்வுப்படி, டூரிங்இயந்திரத்தில் (Turing Machine )தகவல்நிரப்பப்பட்டசெயற்கை நியூரான்களைபொருத்தினால்செயற்கைநுண்ணறிவாகஅதுஉருவெடுக்கும்என்றார். பின்னாளில்டூரிங்இயந்திரம்தான்கணினியாகஉருவெடுத்தது, அதில்இயந்திரக்கற்றல்மற்றும்அதன்முக்கியப் ANN (Artificial Neural network) எனஅனைத்தும்இணைந்தேசெயற்கைநுண்ணறிவுத்தொழில்நுட்பம்மேம்பட்டது. .போருக்குப் பின் ஆலன் டூரிங் லண்டன் மாநகரின் ஹம்ப்டன் பகுதியில் குடியேறினார். மனிதர்களின் உதவியின்றி ப்ரோக்ராமிங் நிரல்களுக்கேற்ப தானாகவே இயங்கும் தானியங்கி கணினி இயந்திரம் (Automatic Computing Engine) உருவாக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். இதன் பொருட்டு அவர் NPL எனப்படும் தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (National Physical Laboratory) யில் பணியாற்றி வந்தார். Stored- Program எனப்படும் நிரல்களை சேமித்து செயல்படுத்தும் கணினிக்கான முதல் வடிவமைப்பை ஆய்வுக் கட்டுரையாக 19 பிப்ரவரி 1946 ல் வெளியிட்டார் ஆலன். அது உலகெங்குமுள்ள அறிவியலாளர்கள் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆனால் கணினி உருவாக்கத்தில் ஆலனின் முனைப்பை நன்கு அறிந்தும் பிரிட்டிஷ் அரசு பெரிதாக உதவவில்லை..மேலும் அறிவியலாளர்கள் சந்திப்பில் ஆலன் மற்றும் இதர நிபுணர்களின் போர்பங்களிப்பு குறித்து தகவல்கள் கசிய போர் குறித்த அனைத்துத் தகவல்களும் ரகசியமாக்கப் பட வேண்டும் என பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை (Official SecretsAct)இயற்றியது. இது 1911 ல் இருந்தே நடைமுறையில் இருந்த சட்டம் தான் ! போர்க்காலங்களில் சிறு மாற்றங்களுடன் தடாலடியாக மீண்டும் அமல்படுத்துவார்கள். இதன்படி போரில் பிரிட்டிஷ் சார்பில் களம் கண்டோர், தங்களது பங்களிப்பை பொதுவில் அறிவிக்க முடியாது., அக்கால கட்டக் கண்டுபிடிப்பின் எந்த வித மூலத் தகவல்களையும் வெளியிடக் கூடாது. மிகக் குறிப்பாக கண்டுபிடிப்புகளின் எந்த மாதிரியும் பொதுப் பயன்பாட்டிற்கு வரவே கூடாது. ஆகவே ஆலனின் தானியங்கி கணித இயந்திரத்தின் ஆதிமூலம், பாம் மற்றும் கொலோசஸ் இயந்திரங்கள் தான் என முடிவு செய்த அரசு, ஆலனின் தானியங்கி கணித இயந்திரம் உருவாகுவதற்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியது..இதனால் ஆய்வகத்தில் தானியங்கி கணினி இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட, வெறுத்துப் போன ஆலன், தேசிய ஆய்வகத்திலிருந்து வெளியேறி காம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியத் துவங்கினார். ஆலன் ஆய்வகத்திலிருந்து வெளியேறிய பிறகு, செயல்பாட்டு நிரல்களை நினைவகத்தில் சேமித்துக் கொள்ளும் ( Stored-Program) பொதுப் பயன்பாட்டிற்கான (Generalpurpose) முதல் கணினி தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் (NPL) உருவாக்கப்பட்டது. PILOT ACE (Automatic Computing Engine) என அழைக்கப்பட்ட இக்கணினி முழுவதுமாய் ஆலன் டூரிங் ஆய்வு வடிவமைப்பை வைத்தே உருவாக்கப்பட்டது. 10 மே 1950 அன்று PILOT ACE கணினி சேமிக்கப்பட்ட தனது ப்ரோக்ராமிங் நிரலை வெற்றிகரமாக செயல்படுத்தியது. ஆனால் இதற்கான அங்கீகாரம் ஆலனுக்கு அப்போது கிடைக்கவில்லை. .ஆலன்வருந்தவில்லை! அவரது கணினி அறிவியல் முனைப்பை இது போன்ற நிராகரிப்புகளால் தடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் பல முக்கியப் பல்கலைக்கழகங்களில் ஆலன் கலந்தாலோசகராக பணியாற்றினார். செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்றளவிலும் புனித நூலாக பார்க்கப்படும் முக்கிய ஆய்வுக் கட்டுரையை அதே 1950 ம் ஆண்டு வெளியிட்டார். கணினி இயந்திரங்கள் மற்றும் நுண்ணறிவு ( Computing Machinery and Intelligence) என்ற தலைப்பில் வெளியான அந்த ஆய்வு செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தின் பல முக்கிய கதவுகளைத் திறந்தது. .குறிப்பாக ஒரு கணினி மனிதனுக்கு நிகரான அறிவுத் திறன் கொண்டிருக்கிறது என்பதைத் தீர்மானிக்க ஒரு சோதனை முறையை அறிமுகம் செய்தார். இது செயற்கை நுண்ணறிவுத் துறையில் டூரிங் சோதனை ( Turing Test) என இன்றளவிலும் நடைமுறையில் இருக்கிறது. இச்சோதனை ஒரு கேள்விபதில் விளையாட்டு போல செயல்படுத்தப்படும். இதில் இரு மனிதர்கள் மற்றும் ஒரு கணினி பங்கேற்கும். ஒரு மனிதன் கேள்வி கேட்க அதற்கான பதிலை கணினியும், இன்னொரு மனிதனும் பதில் தருவார்கள். கேள்வி கேட்பவருக்கு எது கணினி, எது மனிதர் என்ற விபரங்கள் தரப்படாது. ஆனால் கிடைத்த பதில்களை வைத்து அவர் இதைக் கண்டறிய வேண்டும். இந்த பதில் கணினியுடையது, இது மனிதனுடையது என வித்தியாசம் கண்டறிய முடியாமல் எப்போது ஒரு மனிதன் திணறுகிறானோ, அப்போது பதிலளித்த இயந்திரம் மனிதனுக்கு நிகராக சிந்திக்கும் செயற்கை நுண்ணறிவுகொண்டது எனத் தீர்மானிக்கலாம் என்பதுவே டூரிங் சோதனை..1990 ம் ஆண்டு Hugh Loebner என்ற செல்வந்தர் எந்த செயற்கை நுண்ணறிவாவது இந்த டூரிங் சோதனையில் தேர்ச்சி பெற்றால் அதை உருவாக்கியவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை தருவதாக அறிவித்தார். வருடாவருடம் பிளட்ச்லே பார்க் பள்ளியில் இந்த போட்டிநடைபெறும். 2008 வரை எந்த போட்டியாளரும் பரிசு பெறவில்லை ! அதன் பிறகு போட்டியின் விதிகள் மாற்றப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றளவிலும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நடைமுறையில் இருக்கும் சோதனையை, போற்றிப் புகழப்படும் ஆய்வுக் கட்டுரைகளை 1950 களில் உருவாக்கிய கணினி அறிவியலின் தந்தை ஆலன் டூரிங் என்ன ஆனார் ? ஆலன் இயல்பில் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். ஒரே பாலினத்தவர் இணைந்து வாழ்வது அக்கால பிரிட்டிஷ் சட்டப்படி கிரிமினல் குற்றம்.1952ல் முரே என்ற ஆண் நண்பருடன் உறவில் இருந்தது தெரியவந்து ஆலன் கைது செய்யப்பட்டார். சிறைத் தண்டனையைத் தவிர்க்க, ரசாயன ஊசிகள் மூலம் இனப்பெருக்க ஆற்றலை அழிக்கும் ‘Chemical Castration’ சிகிச்சைக்கு ஆலன் நிர்பந்திக்கப்பட்டார். ஹார்மோன் தூண்டுதலை குறைக்கும் ரசாயன ஊசிகள் அவரது உடல்நலத்தைப் பெரிதும் பாதித்தது. கிரிமினல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பிரிட்டிஷ் அரசு ஆலனுக்கு அழித்த பாதுகாப்பு அனுமதிகளை வேறு திரும்பப் பெற்றுக் கொண்டது. க்ரிப்டோகிராபி தொடர்பான அரசு ஆய்வுகளில் அவர் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. டூரிங் அமெரிக்கா செல்ல முயன்றார், ஆனால் அமெரிக்காவும் டூரிங் வருகைக்கு தடை விதித்தது. மனம் உடைந்து போனாலும் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். கணினியுடனான செஸ் விளையாட்டிற்கான முதல் அல்காரிதத்தை ஆலன் எழுதும் பொழுது அதை செயல்படுத்திப் பார்ப்பதற்கான திறன் பெற்ற கணினிகள் உருவாக்கப்படவே இல்லை.அவ்வளவுநவீனசிந்தனையாளர்ஆலன்டூரிங்..ஆனால்யாரும்எதிர்பாராவண்ணம், ஜூன் 8, 1954 ல் அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் ஆலன். அவரது படுக்கைக்கு அருகில் சயனைடு விஷம் செலுத்தப்பட்ட ஒரு ஆப்பிள், பாதி கடிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. விசாரணையில் ஆலன் டூரிங் தற்கொலை செய்து கொண்டார் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை அவர் குடும்பத்தார் ஏற்கவில்லை. கணினி அறிவியலின் தந்தையும், போர் பேரழிவிலிருந்து நாட்டு மக்களைக் காத்த காப்பானும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை கணித்த ஒரு மேதையின் இறுதிச்சடங்கில் வெறும் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆலன் இறக்கும் போது அறிவார்ந்த இயந்திரங்களை (Intelligent Machinery) உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அதை நிறைவு செய்யும் முன்பே, இந்த உலகினுடனான தன் வாழ்வை 41 வயதில் முடித்துக் கொண்டார். - உலகம் விரியும்...