- ஹரிஹரசுதன் தங்கவேலு, சைபர் பாதுகாப்பு வல்லுநர்‘க்ரிப்டோகிராஃபி' தொழில்நுட்பம் இன்று நுழையாத இடமில்லை. கணினி, ஸ்மார்ட் போன், இணையம், இணையம் சார்ந்த பயன்பாடுகள், வங்கிகள், சேமிப்புகள், வாட்ஸ்அப் என தகவல் வடிவில் எது இருந்தாலும் அதைக் காக்க க்ரிப்டோகிராஃபி பயன்படுகிறது. நீங்கள் கணினியில் பாஸ்வேர்டைடைப் செய்யும் போது அது என உடனடியாகமறைக்கப்படுவதற்கு காரணம் இவ்வகை பாதுகாப்புநிரல்கள் தான். .இன்று பயன்பாட்டில் இருக்கும் க்ரிப்டோகிராஃபி மறைநிரல்கள் AES (Advanced Encryption Standard), DES (Data Encryption Standard), MD4, MD5, SHA2, SHA 3 (Secure Hash Algorithm) என அனைத்துக்கும் தலைமை எனிக்மாவும், டன்னியும் தான்..இந்த மகா ஜெர்மன் ரகசியத்தை உடைக்கும் முயற்சியில்தான் கணினித் தொழில்நுட்பம், க்ரிப்டோகிராபி, மெஷின் லேர்னிங் எனும் இயந்திரக் கற்றல், செயற்கை நுண்ணறிவுக்கான தேடல் என பல தொழில்நுட்பங்கள் உயிர்த்தெழுந்தன. அதுவும் 50 வருடங்கள் பிடித்து, மிக மெதுவாக வந்திருக்க வேண்டிய இத்தொழில்நுட்பங்களை ஐந்தே வருடங்களில் அடித்துப் பிடித்து வர வைத்தது நிச்சயம் இரண்டாம் உலகப் போர்தான். 'டன்னி' என்பது பிரிட்டிஷ் வைத்த செல்லப்பெயர். செய்திகளை ரகசியமாக்கும் க்ரிப்டோகிராபியில் எனிக்மாவின் அண்ணனாக வந்த டன்னியின் தொழிற்பெயர் The Lorenz SZ40. பெர்லினில் உள்ள C. LorenzAG பொறியியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. .டைப் செய்யப்பட்ட எழுத்து இன்னொரு எழுத்தாக மறைக்கப்படும் தொழில்நுட்பத்தை, 0,1 என பைனரி நிரலாக மாற்றியமைத்தது 'டன்னி' தான். எனிக்மாவில் மூன்று அல்லது நான்கு பற்சக்கரங்கள் என்றால், டன்னியில் 12 பற்சக்கரங்கள் மற்றும் 501 பின் இணைப்புகள். அதுவும் ஒவ்வொரு பற்சக்கரங்களுக்கும் 41 அல்லது 51 அல்லது 47 என பின் இணைப்புகளின் எண்ணிக்கை வேறுபடும். எனிக்மாவைப் போல ஒவ்வொரு பற்சக்கரங்களுக்கும் 26 எழுத்துக்கள் என கணித்து விடக்கூடாது என உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அம்சம் இது..ஒவ்வொரு டன்னியும், டைப் செய்யும் வசதி கொண்ட டெலி பிரிண்டர்களுடன் இணைக்கப்பட்டிருக்கும். டெலி பிரிண்டரில் டைப் செய்யப்படும் ஒவ்வொரு எழுத்தும் 5-bit பைனரி நிரலாக மாறும். உதாரணமாக HI என டெலி பிரிண்டர் கீ போர்டில் டைப் செய்தால் H என்பது 01001 , I என்பது 10110 என ஐந்திலக்க பைனரி நிரலாக மாறும். இப்படி மாறிய இந்த நிரல் டன்னி இயந்திரத்தினுள் சென்றுதும், அதில் ரேண்டமாக பல்வேறு எழுத்துக்களை ஊடே கலந்து விடுவது தான் டன்னியின் வேலை. இப்படி கலந்து விடப்படும் எழுத்துகள் கீ (Key) என அழைக்கப்படும். இப்படி மறைக்கப்பட்ட செய்தி இன்னொரு டெலி பிரிண்டர் வாயிலாக ரேடியோ அலைகளாக அனுப்பப்படும். அதைப் பெறும் டெலிப்ரிண்டர் அங்குள்ள டன்னிக்குள் இந்த செய்திகளை அனுப்பி, 'கீ' எழுத்துக்களை விலக்கி, பைனரி நிரலை மீண்டும் எழுத்தாக மாற்றி HI என பிரிண்ட் செய்யும். இதுதான் டன்னி இயங்கும் முறை..எனிக்மாவைப் போலவே டன்னியின் உயிர் அதன் பற்சக்கரங்கள். 12 பற்சக்கரங்களில் வேறுபட்ட 501 பின் இணைப்புகளின் மூலம் ஓர் எழுத்து பைனரியாக மாறும் சாத்தியம் மட்டுமே 16 பில்லியன் பில்லியன் முறை. இந்த 12 பற்சக்கரங்களின் செட்டிங் அமைப்பை ஒவ்வொரு செய்திக்கும் மாற்ற வேண்டும். அதுவே டன்னியைப் பயன்படுத்துவதில் உள்ள முதன்மைக் கட்டளை. இதற்காகவே நூற்றுக்கணக்கான செட்டிங் அமைப்பைக் கொண்ட QEP என்ற கோட் புத்தகம் அச்சிடப்பட்டது..ஆக எளிமையாகச் சொன்னால், முதலில் டெலிப்ரின்டரில் கீபோர்டில் ஒரு செய்தி அடிக்கப்பட்டதும் அதன் ஒவ்வோர் எழுத்தும் பைனரி எழுத்தாக மாறும். அது டன்னி வசம் வந்ததும் 16 பில்லியன் பில்லியன் சாத்தியங்களில் உருவாகும் எழுத்துகளை அதுனுடன் பைனரி நிரலாக கலந்து அனுப்பும், செய்தியைப் பெறுபவர் இதே டன்னி செட்டிங் அமைப்பை வைத்தால் மட்டுமே கலக்கப்பட்ட இந்த 'கீ' எழுத்துக்கள் விலக்கப்பட்டு டெலிபிரிண்டர் மூலம் பைனரி நிரல் எழுத்தாக மாற்றப்பட்டு உண்மைச் செய்தி ஒளிரும். வாசிப்பதற்கே கடினமாக இருக்கும் இப்படி ஒரு ரகசியத்தை உடைக்க உலகில் வழியே இல்லை என நம்பிய ஜெர்மன் ராணுவம், ஹிட்லர் உட்பட பல உயர்தலைமைகளின் கட்டளைகளை டன்னி வழியாகத்தான் அனுப்பியது..இப்படி பைனரி நிரல்களாக அனுப்பப்பட்ட செய்திகளை ‘Fish’ என அழைத்தது பிரிட்டிஷ் தரப்பு. டன்னியை உடைக்க எடுக்கும் முயற்சிகள்கூட அதற்கு பெரும் சவாலாக இருந்தது. காரணம், எனிக்மா செய்திகளை உடைக்க இவர்களிடமும் ஒரு எனிக்மா கைவசம் இருந்தது. ஆகவே அது இயங்கும் விதம் புலப்பட்டது. ஆனால் டன்னியை ப்ளட்ச்லே பார்க் பள்ளி நிபுணர்கள் எவரும் பார்த்ததுகூட இல்லை. இடைமறிக்கப்பட்டு கிடைக்கும் பைனரி நிரல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? ஆனால், கிடைத்த வெறும் தகவலை வைத்து ஒரு டன்னி மாதிரியை உருவாக்கியது ஆலன் குழு..ஜெர்மன் தரப்பில் ஒரு முறை தவறு நிகழ்ந்தது. ஒவ்வொரு செய்திக்கும் டன்னி பற்சக்கர அமைப்பை மாற்ற வேண்டும் என்பது கட்டளை. ஆனால், அவசரத்தில் இரண்டு செய்திகளை ஒரே விதமான பற்சக்கர செட்டிங்கில் வைத்து அனுப்பினார்கள். அதை வைத்து அதன் 'கீ' என்ன என்பதை கண்டு கொண்ட ஆலன் ஒரு தீர்வு கண்டுபிடித்தார். எந்தவித இயந்திரங்களின் உதவியும் இல்லாமல் கைகளால் நிகழ்த்தப்பட்ட இத்தீர்வு 'Turingery' என அறியப்பட்டது. ஆனால், போரில் செய்திகள் பகிரப்படும் வேகத்திற்கு இணையாக இத்தீர்வால் ஈடு கொடுக்க முடியவில்லை. அப்போது ஆலனின் குழுவில் இருந்த W. T. Tutte இத்தீர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துக் சென்றார். பல மாத உழைப்பின் பலனாய் 'துத்தே' வினால் டன்னி பற்சக்கர அமைப்பை கணிக்க முடிந்தது. அதை வைத்தே டன்னி மாதிரியை உருவாக்கினார்கள்..இப்போது டன்னியை உடைக்கும் வழிமுறை (Algorithm) கைவசம் இருக்கிறது. அதை செயல்படுத்தும் ஒரு மின்னணு இயந்திரத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கினார் ஆலன். டாம் என நண்பர்களால் அழைக்கப்படும் TommyFlowers ஒரு மின்னணுவியல் பொறியாளர். தந்தி சேவைகளை வழி நடத்தும் GPO (General Post Office ) ஆய்வகத்தில் பணியாற்றி வந்தார். இப்போது இந்த நிறுவனம் தான் பிரிட்டிஷ் டெலிகாம் ( BT) என மாற்றமடைந்துள்ளது. டாம், துத்தே மற்றும் கணிதவியலாளர் மேக்ஸ் நியுமேனுடன் ஆலன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். சந்திப்பின் நோக்கம் டன்னியை உடைக்கும் ஒரு மேம்பட்ட நவீன இயந்திரத்தை உருவாக்க வேண்டும். அதற்கான துத்தேவின் (Algorithm) வழிமுறைகளை ஆராய்ந்த டாம், நிச்சயமாக உருவாக்கலாம் என்றார்..உற்சாகமாக வேலையில் இறங்கியது குழு. சில மாதங்கள் உழைப்பில் முதல் இயந்திரம் தயார். அதன் பெயர் ஹீத் ராபின்சன் (HeathRobinson). டன்னியின் ரகசிய செய்திகளை உடைக்க முடிந்தாலும் ஒரே வேகத்தில் இயங்கி கடுப்படித்தது ராபின்சன். குழு யோசித்தது. நமக்கு வேண்டிய கட்டளையை ப்ரோக்ராம் செய்யக் கூடிய ஒரு சக்தி வாய்ந்த கணித இயந்திரத்தை உருவாக்குவோம் என நம்பிக்கையாகக் களமிறங்கினார்கள். அப்போதைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த உலகின் சிக்கலான இயந்திரமே (Most Complex Machine ) 150 வால்வுகளுடன்தான் இயங்கி வந்தது. ஆனால், 1500 சர்க்யூட் வால்வு களுடன் கூடிய ஒரு சிக்கலான இயந்திரத்தை உருவாக்க முனைந்தது நிபுணர் குழு.இதற்கு பிற நிபுணர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. காசைக் கரியாக்குகிறார்கள். இவர்களது யோசனைகளை வைத்துப் பார்த்தால் உலகின் முதல் மின்னணுக் கணினியை கண்டுபிடித்து விடுவார்கள் போலிருக்கிறது என்றெல்லாம் கேலி செய்தார்கள். கிண்டல், கேலிகளைப் பொருட்படுத்தாது 11 மாதங்கள் உழைத்தது டாமின் குழு. நவம்பர் 1943 ல் 1500 வால்வுகளுடன், குறிப்பிட்ட கட்டளைகளை ப்ரோக்ராம் செய்யும் அம்சத்துடன் வெளிவந்தது ஒரு மின்னணு இயந்திரம். அதன் பெயர் கொலோசஸ் (Colossus). உலகின் முதல் ப்ரோக்ராமிங் வசதி கொண்ட மின்னணுக் கணினி கொலோசஸ் தான்..நிற்க! உலகின் முதல் மின்னணுக் கணினி அமெரிக்காவின் ENIAC தானே என அதிர்ச்சி வேண்டாம், போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் 1974 வரை கொலோசஸ் என்ற கணினி இருந்ததையே ரகசியமாக வைத்திருந்தது பிரிட்டன். அதன் பிறகே தகவல்கள் வெளிவந்து வரலாறு மாறத் துவங்கியது.அட! இப்படியொரு உலக சாதனையிலும் ரகசியம் காக்க வேண்டுமா என உங்கள் மனதில் எழும் கேள்வி சரிதான். இந்த ரகசியங்களுக்கு நிகராக கணினி அறிவியலின் தந்தை ஆலன் டூரிங்கிடமும் ஒரு தனிப்பட்ட ரகசியம் இருந்தது. அதற்கு விலையாக அவரின் உயிரையே அவர் தர வேண்டியிருந்தது! உலகம் விரியும்