-ஹரிஹரசுதன் தங்கவேலு சைபர் பாதுகாப்பு வல்லுநர்மிக நீண்ட நாட்கள் நடந்த உலகின் நவீன கடற்போர் நிச்சயமாக அட்லாண்டிக் போர்தான். இரண்டாம் உலகப்போரின் முதல் நாள்1939, செப்டம்பர் 3 அன்று தொடங்கி, ஜெர்மனி வீழ்ந்த 1945 மே 7 போர் இறுதி நாள் வரை போர் தொடர்ந்தது. .இந்த 2,074 நாட்களும் ஜெர்மனியின் ஆயிரத்துக்கும் அதிகமான நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது அட்லாண்டிக். இந்த காலகட்டத்தில் அவர்கள் தாக்கி மூழ்கடித்தது, 175 பிரமாண்டப் போர்க்கப்பல்கள், 3500 வணிக கப்பல்கள், 741 ரோந்து பாதுகாப்பு விமானங்கள். இத்தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்துக்கும் அதிகம்..எதிரி நாடுகளின் கடல் போக்குவரத்தைத் தடுத்து, உணவுப் பஞ்சத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட இரண்டாம் உலகப்போரை வெல்லும் நிலையில் இருந்தது ஜெர்மனி. உலகம் மட்டும் ஹிட்லரின் கையில் சிக்கி இருந்தால் என்ன ஆகியிருக்கும் என நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அதைத் தடுத்து, சரியான சமயத்தில் அனைவரையும் காப்பாற்றியது ஆலன் உருவாக்கிய பாம் (Bombe) இயந்திரம். ஆனால், அது அவ்வளவு சுலபமாக நிகழ்ந்துவிடவில்லை.அல்ட்ரா ப்ளட்ச்லே பார்க் பள்ளியில் விக்டரி இயந்திரம் ரகசிய செய்தியைத் தேடத் தொடங்கி பத்து நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் அது தேடி முடித்த பாடில்லை. அதற்குள் அச்செய்தியில் பணிக்கப்பட்டிருந்த தாக்குதல் நிகழ்ந்து பலர் இறந்தும் போனார்கள். .ஆலனால்அங்கிருந்த ஊழியர்களின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. குறிப்பாக, கமாண்டர் டெனிஸ்டனின் விஷப்பேச்சு அவரை வதைத்தது. அவ்வப்போது வந்து பார்த்து, விக்டரி இயங்கும் வேகத்தை கிண்டல் செய்து கொண்டிருந்தார். அவரது பேச்சைத் தாங்க முடியாமல் விக்டரியின் இயக்கத்தை நிறுத்திவிட்டார்.ஆலனுக்கு ஒன்று புரியவில்லை. தான் உடைக்க நினைப்பது எனிக்மா மூன்று பற்சக்கரங்களின் அன்றைய தின மூன்று ரகசிய எழுத்துக்கள். இதுதான் அனுப்பப்பட்ட ரகசிய செய்திக்கான சாவி. இதற்கு 26*26*26=17,576 சாத்தியங்கள் உள்ளன. விக்டரி இயந்திரத்தின் முதல் அடுக்கில் இருக்கும் 36 பற்சக்கரங்கள் இதைத்தான் தேடிக்கொண்டிருக்கின்றன. இந்த மூன்று எழுத்துக்கள் தெரிந்துவிட்டால், அதை வைத்து ரகசிய செய்தி உடைபடும். இதற்காக இப்பற்சக்கரங்கள் 50.4 ஆர்பிஎம் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன. பின் ஏன் இன்னும் தாமதம்? வடிவம் சரியாக இருக்கிறது, இயக்கமும் தங்கு தடையில்லாமல் இருக்கிறது. பிறகு ஏன் தாமதம்? ஆலனுக்கு தலை வெடித்து விடும்போல வலித்தது..அவரது டேபிளில் இதற்கு முன்பு எனிக்மா மூலம் அனுப்பப்பட்ட பல முக்கிய ரகசிய செய்திகள் இருந்தன. அதில் குறிப்பிட்ட வார்த்தைகள் தொடர்ந்து இடம் பெற்றிருந்தன. வெவ்வேறு எழுத்துக்களில் இருந்தாலும், அதன் எண்ணிக்கை மட்டும் மாறவில்லை. குறிப்பாக, ஃஸ்காபாப்ளோ U47 தாக்குதலுக்கு பிறகு, ப்ரெயின் அனுப்பிய செய்தியின் இறுதியில் இருந்த இரு வார்த்தைகள். அதன் பிறகு கப்பல்களை வீழ்த்திய ஒவ்வொரு முறையும் ஓநாய் கூட்டம் அனுப்பும் வெற்றிச் செய்திகளில் இது தவறாமல் இடம் பிடிக்கிறது. இது என்ன இரு வார்த்தைகள்? ஆலனிடம் விரக்தி வந்துபோனது.உடனே எழுந்து உடை மாற்றிக்கொண்டு ஓடத் துவங்கினார். எப்பொழுதெல்லாம் விரக்தி தலையெடுக்கிறதோ அப்போது ஓட்டத்தைத்தான் தேர்ந்தெடுப்பார் ஆலன். அவர் கணிதவியலாளர் மட்டுமல்ல, மாரத்தான் வீரரும்கூட. ஞானத்தில் புத்தருக்கு போதி மரம் என்றால் ஆலனுக்கு அனைத்தும் ஓட்டம் தான். ஆகவே இந்த ஓட்டம் அவருக்குத் தேவையாக இருந்தது..ஓட்டத்தின்போது மனம் முழுவதும் அந்த இரு வார்த்தைகள் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது. அது தெரிந்துவிட்டால் அதையே உள்ளீடாக (INPUT) விக்டர் இயந்திரத்திடம் தந்தால் மிக எளிமையாக அன்றைய தினத்தின் 3 ரகசிய எனிக்மா எழுத்துகள் தெரிந்துவிடும். அதை வைத்து மொத்த செய்தியையும் நொடியில் உடைத்துவிடலாம்.உதாரணமாக, ஜெர்மனி வீரர் எனிக்மாவின் மூன்று 'ரோடர்' பற்சக்கரங்களை IJK என்பதில் நிறுத்தி HOW ARE YOU என டைப்பினால் CFG GHK UYT என மறைநுட்ப ரகசிய செய்தியாக எது வேண்டுமானாலும் வெளிவரலாம். அப்படி வரும் ரகசியத்தை தான் ரேடியோ அலையில் செய்தியாக அனுப்புவார்கள். எதிரி வசம் இருக்கும் எனிக்மாவிலும் 'ரோடர்' பற்சக்கரங்களை IJK என்பதில் நிறுத்தி, இந்த ரகசிய செய்தியை டைப் செய்தால் மட்டுமே அதன் உண்மையான செய்தி HOW ARE YOU என்பது தெரிய வரும். ஆக ரேடார்களை இந்த IJK வில் நிறுத்தாமல் அவர் எத்தனை முறை அடித்தாலும் உண்மை செய்தியை கண்டுபிடிக்கவே முடியாது..ஆனால், ரகசிய செய்தியில் வந்த எழுத்துக்களின் எண்ணிக்கையை வைத்து இது HOW ARE YOU வாக இருக்கலாம் என நீங்கள் தோராயமாக உத்தேசித்து விட்டால், அதை வைத்து ரோடர்கள் செட்டிங் IJK தான் என்பதை கண்டுபிடித்து விடலாம். இது தான் பின்னோக்கிய தேடல் (REVERSE SEARCH) என இன்றைய கணினி அறிவியலில் அறியப்படுகிறது. இதைக் கண்டுபிடிக்கத்தான் அன்று ஆலனின் மூளை அசுர வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தது.தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திய பின் ப்ரெயின் அனுப்பிய செய்தியின் இறுதியில் இருந்த அந்த இரு வார்த்தைகள், சரியாகச் சொல்வதானால் முதல் வார்த்தை நான்கு எழுத்துகள், இரண்டாம் வார்த்தை ஆறு எழுத்துகள். இதுதான் அதன் பிறகு அனுப்பும் அனைத்து வெற்றிச் செய்திகளிலும் இடம் பிடிக்கின்றன.என்ன வார்த்தை அது? என்ன? என்ன? என யோசித்தபடியே ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தினார்.அட்லாண்டிக் கடலில் சரக்குகளை சுமந்தபடி வணிகக் கப்பல்கள் குழுவாக வந்துகொண்டிருந்தன. அதை கனடாவின் தன்னார்வல மீனவர்கள் இயக்கிக் கொண்டிருந்தார்கள். பிரிட்டனின் உணவுப் பஞ்சத்தை போக்க, ஓநாய்க் கூட்டத்தை எதிர்த்து துணிவாக பயணத்தை தொடங்கியிருந்தார்கள்..கருங்குழிக்குள் அவர்களது கப்பல்கள் நுழைந்ததும் ஓநாய்க் கூட்டத்திடம் இருந்து ரேடியோ அழைப்பு வந்தது. அதை எடுத்த கப்பலின் கேப்டன், எங்களில் எத்தனை பேரை நீங்கள் வீழ்த்தி அழித்தாலும் ஒரு உணவுக் கப்பலாவது பிரிட்டன் துறை முகத்தினுள் நுழைந்தே தீரும் எனத் துணிவாக பேசினார். அடுத்த வினாடியே அக்கப்பலை தாக்கி அழித்தது ஓநாய்ப்படை. அடுத்த நாள் ஒரு சரக்குக் கப்பலைக்கூட விடக் கூடாது, எங்கு, எப்படி தாக்க வேண்டும் என திட்டம் தீட்டினார்கள் ஜெர்மன் கமாண்டர்கள்.ஓடிக் கொண்டிருந்த, ஆலன் தொடர்ந்து ஓட முடியாமல் ஒரு இடத்தில் நின்றார். அந்த இரு வார்த்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் தோற்றுவிட்டேனா, கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பம் போலியா, அது எதற்குமே பயன்படாதா? என பல்வேறு எதிர்மறை சிந்தனைகள் மனதைக் குழப்பின. அப்படியே அருகில் இருந்த ஒரு மரநிழலில் அமர்ந்து விட்டார். இனி ப்ளட்ச்லே பார்க் பள்ளிக்கு திரும்பப் போவதில்லை. போய் என்ன செய்வது, எதைத் தீர்ப்பது? எனப் பலவாறாக எண்ணியிருந்தவரின் முகத்தில் ஒரு காகிதம் வந்து விழுந்தது..யாரோ ஒரு பிரிட்டிஷ் போர் வீரன் அவனது குடும்பத்திற்கு எழுதிய கடிதம். அதை வேண்டா வெறுப்பாக வாசித்தவர், அவன் கடைசியில் எழுதியிருந்த வார்த்தைகளை கவனித்தார். எல்லாம் எழுதிவிட்டு கடைசியில் Praise the Lord என்று எழுதியிருக்கிறான். ஆலன் அந்த மூன்று வார்த்தைகளை மட்டும் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தார். எதோ அவருக்கு பிடிபடத் தொடங்கியது. அவரது மூளை ஒரு குவாண்டம் கணினியை விட அளப்பரிய வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. திடீரென ஒரு பதட்டம்! முகமெங்கும் மகிழ்ச்சி. கண்டுபிடித்துவிட்டேன் என கத்திக் கொண்டே ப்ளட்ச்லே பார்க் பள்ளியை நோக்கி வேகமாக ஓடினார்.அட்லாண்டிக் கடலில் தாக்குதலுக்கு ஆளான கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது. வீரமாகப் பேசிய கனடியக் கேப்டனை ரேடியோவில் தொடர்புகொண்டு வழக்கம் போல எக்காளமாக ஊளையிட்டது ஓநாய் படை. சாவின் விளிம்பில் இருந்த அக் கேப்டன் அஞ்சவில்லை. மாறாக, "உங்கள் திட்டங்கள் உடைபடும்! நீங்கள் மிக விரைவில் அழிக்கப்படுவீர்கள், அதை நிச்சயம் ஒருவன் நிறைவேற்றுவான்" என சொல்லிவிட்டு வீரமரணம் அடைந்தார்..ப்ளட்ச்லே பார்க் பள்ளி கதவுகள் கிட்டதட்ட உடையும் வேகத்தில் திறந்து ஓடி வந்தார் ஆலன். அவரது நிபுணர் குழுவுக்கு ஒன்றும் புரியவில்லை ! என்னாவாயிற்று என கேட்டார்கள், ஆலன் அவர்களைத் தவிர்த்து, சற்று முன் வந்த ஜெர்மன் ரகசிய செய்தியை எடுத்தார். அதிலும் செய்திக்கு பிறகு இறுதியில் 10 எழுத்துகள் கொண்ட இரு ரகசிய வார்த்தைகள் WCHY JHGUDS என மறைக்கப்பட்டு இருந்தது. ஆலன் விக்டரியை உயிர்ப்பித்தார். அதன் பற்சக்கரங்களில் W வை Hல் நிறுத்தினார்.அடுத்து C யை A வில் நிறுத்தினார். ஆலன் என்ன செய்கிறாய், என்ன வார்த்தை இது? என நிபுணர் குழு அவரை பிடித்து உலுக்க, சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருந்தார் ஆலன். 'HAIL HITLER' 'HAIL HITLER' 'HAIL HITLER…'ஒவ்வொரு முறை ஒரு தாக்குதலை நிகழ்த்திய பின்னும் எனிக்மாவில் தலைமைக்கு அனுப்பும் போது வெற்றிச் செய்திக்கு கீழே 'HAILHITLER' என அனுப்புகிறார்கள். இப்போது வந்த ரகசிய செய்தியின் இறுதி இரு வார்த்தைகள் WCHY JHGUDS யை HAIL HITLER என பற்சக்கரங்களில் உள்ளீடாக கொடுத்து தேடினால் அதை இப்படி மறைத்த எனிக்மாவின் மூன்று ரோடர் செட்டிங்ஸ் தெரிந்துவிடும். அதை நமது எனிக்மாவில் வைத்து முழு செய்தியையும் அடித்தால் செய்தி உடைபடும்.ஆலன் சொல்லி முடிக்கும் முன்பே அவரை அப்படியே தோளில் தூக்கி வைத்து சுற்றியது நிபுணர் குழு. கணினி வரலாற்றின் முதல் ReverseSearchInput விக்டரி இயந்திரத்தில் கொடுக்கப்பட்டது.HAILHITLER என்ற சிறு வார்த்தையை உள்ளீடாக வாங்கிக் கொண்டு, உலகின் எந்த வல்லமையாலும் கண்டுபிடிக்க முடியாது என்ற எனிக்மாவின் அன்றைய தின மூன்று எழுத்துக்களை விக்டரி தேடத் துவங்கிய இத்தருணம் தான் மெஷின் லேர்னிங் எனும் இயந்திரக் கற்றலின் ஆதிப்புள்ளி.எதிர்பாராத விதமாக திடீரென உள்ளே வந்தார் கமாண்டர் டெனிஸ்டன். என்ன இது ! அங்கே போரில் இறந்து கொண்டிருக்கிறார்கள்! நீங்கள் இங்கே கும்மாளமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என உறுமினார். பதில் எதுவும் பேசாமல் அனைவரும் அமைதியான நின்றனர். விக்டரி இயந்திரம் பெரும் சத்தத்துடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த டெனிஸ்டனுக்கு கோபம் தலைக்கேறியது. ஒரு லட்சம் பவுண்டுகளை நாசம் செய்த இந்த இரும்பை முதலில் உடைத்து வீசப் போகிறேன் என வேகமாக அதன் அருகில் சென்றார். அதன் இணைப்பை துண்டிக்கப் போகும் ஒரு நொடிக்கு முன் இயந்திரம் நின்றுவிட்டது." நான் எதுவும் செய்யவில்லை, அதுவே நின்று விட்டது", டெனிஸ்டன் பதறினார்."தெரியும், கொஞ்சம் நகருங்கள்" என அருகில் வந்த ஆலன், விக்டரியின் தேடல் பற்சக்கரங்கள் காட்டிய மூன்று எழுத்துக்களை குறித்துக்கொண்டார். தங்கள் வசமிருந்த எனிக்மா இயந்திரத்தை எடுத்தார். அதன் மூன்று பற்சக்கரங்களை இந்த எழுத்துக்களில் நிறுத்தி தங்களுக்கு கிடைத்த ஜெர்மன் ரகசிய செய்தியை டைப் செய்தார்.W வை அழுத்தியதும் A ஒளிர்ந்தது.Y அழுத்தியதும் TD அழுத்தியதும் TB அழுத்தியதும் A......இப்படியாக செய்தியில் இருந்த எனிக்மா என்கிரிப்டட் எழுத்துக்களை அழுத்த அதன் உண்மை எழுத்து டிகிரிப்ட் (Decrypt) ஆகியபடியே வந்தது. ஒளிர்ந்த எழுத்துக்களை ஒரு காகிதத்தில் குறித்த நிபுணர் குழு இறுதியாக அதை வாசித்தது.ATTACK AT DAWN எனத் துவங்கிய அச்செய்தியில் கனடிய வணிகக் கப்பலைகளை எந்த இடத்தில் எந்த நேரத்தில் தாக்குவது என ஓநாய் கூட்டம் அனுப்பியிருந்த முழு தாக்குதல் திட்டமும் இருந்தது.தான் காண்பது கனவா நிஜமா என்ற குழப்பத்தில் இருந்த கமாண்டர் டெனிஸ்டனைப் பார்த்து, நவீனக் கணினி அறிவியலின் தந்தையான ஆலன் டூரிங் சொன்னார்,"வாழ்த்துக்கள் சார்! எனிக்மாவை நாம் உடைத்து விட்டோம்."