-ஹரிஹரசுதன் தங்கவேலுபுகார்க் கடிதத்தை வாசித்த பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் பெரும் கோபம் கொண்டார்.2-ம் உலகப்போரின் மிகப்பெரும் ஆயுதம் ‘எனிக்மா’ என்பதும், அதை வீழ்த்தாமல் இங்கு வல்லமை பொருந்திய நாடுகள் எவருக்கும் வெற்றி இல்லை என்பதும் அவர் அறிந்ததே ! அதனால் தான் MI6 உளவு அமைப்பிற்கு முக்கியப் பணிகளை தந்து விட்டு, எனிக்மாவை உடைக்கும் ஒரே பணிக்காக ஒரு சிறப்பு உளவு அமைப்பு ‘அல்ட்ரா’ வை உருவாக்கியிருந்தார். அதில் எனிக்மாவை உடைத்துக் காட்டுகிறேன் என ஒருவன் களமிறங்கியிருக்கிறான், அவனுக்கான உதவிகள் செய்யாமல் என்ன முட்டாள்தனம் இது என அதிகாரிகளை கடிந்து கொண்டார். அல்ட்ராவிற்கு அக்கணமே பதில் கடிதம் எழுதினார்..அவர் எழுதிய வரிகள் இதுதான் : (ACTION THIS DAY. Make sure they receive whatever they want on extreme priority and report to me that this has been done.) ‘இன்றே செய்திடவும் ! அவர்களுக்கு என்ன வேண்டுமோ அதை மிக முக்கியமாகக் கருத்தில் கொண்டு உடனே செய்து தாருங்கள். இதை செய்து முடித்துவிட்டு, என்னிடம் தெரிவியுங்கள்.!’ சர்ச்சிலின் பதில் கடிதத்தை கமாண்டர் டெனிஸ்டன் உட்பட அல்ட்ராவின் அதிகாரிகள் எவராலும் நம்ப முடியவில்லை. பிரதமரின் உத்தரவுப்படி ‘எனிக்மா’ நிபுணர் குழுவுக்கு வேண்டியதை உடனடியாக செய்து தந்தார்கள். ஆலன் ஒரு விநாடி கூட தாமதிக்கவில்லை. BTM என அழைக்கப்பட்ட British TabulatingMachine நிறுவனத்தை அழைத்தார். இது ஒரு இயந்திரத் தயாரிப்பு நிறுவனம், பணியாளர்கள் வேலைக்கு வருவதை உறுதி செய்யும் ‘பன்ச் கார்ட்’ உரிமையை TMC என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து பெற்று, பிரிட்டனில் தயாரித்து வந்தது. இதற்கு உரிமம் தந்த TMC தான் பின்னாளில் IBM ஆக மாறியது..BTM நிறுவனத்தின் தலைமைப் பொறியாளர் ஹெரால்ட், பிளட்ச்லே பார்க் பள்ளியில் ஆலன் உட்பட இதர நிபுணர்களை சந்தித்தார். ‘எனிக்மா’வை உடைக்கும் இயந்திரம் செயல்பட வேண்டிய விதங்களை விரிவாக விளக்கினார் ஆலன். அதைக் கவனமாக உள்வாங்கிக் கொண்ட ஹெரால்ட் சில மணி நேரங்களில் இயந்திரத்தின் மாதிரி வடிவத்தை வரைந்தார். BTM தொழிற்சாலையில் ஒரு இயந்திரத்தை உருவாக்க ஆறு வார காலங்கள் தேவைப்படும் என்றார். இந்த ரகசிய திட்டத்திற்கு ‘ஆபரேஷன் கேன்டேப்’ (CANTAB) எனப் பெயர் வைக்கப்பட்டது.‘‘திட்டத்திற்கான பெயர் சரி ! ‘எனிக்மா’வை உடைக்கும் ஒரு வரலாற்று இயந்திரத்தை என்னவென அழைக்கப் போகிறீர்கள், ஆலன் ?’’ ஆர்வமாகக் கேட்டார் ஹெரால்ட்..‘‘The Bombe !’’ என்றார் ஆலன். அவர் சொன்னது பிடிபடாமல் ஹெரால்ட் ஆலன் முகத்தையே பார்த்திருந்தார். ‘எனிக்மா’ ரகசியத்தை உடைக்கபோகும் இயந்திரம் ‘பாம்’ என அழைக்கப்படும் எனத் தெளிவாக சொன்னார், ஆலன். அட்லாண்டிக் கடல் பிராந்தியம் முழுவதும் ஓநாய் நீர்மூழ்கிகளின் கட்டுப்பாட்டில் வந்திருந்தது. தாக்குதல் களமான கருங்குழியை கடந்து செல்ல, நேச நாடுகளின் போர்க் கப்பல்கள் கூட நடுங்கின! ஒவ்வொரு இரவும் 5 முதல் 10 கப்பல்களை தாக்கி மூழ்கடித்தது ஓநாய் நீர்மூழ்கிப் படை. உணவு, ஆயுதம், மருந்து, அத்தியாவசியப் பொருட்கள், பயணிகள் என எந்தக் கப்பலையும் விட்டுவைக்கவில்லை. பிரிட்டனை நோக்கி கடல் பயணத்தை தொடங்கினாலே சாவு தான் என்ற மரண பயணத்தை மாலுமிகளிடம் உருவாக்கியது ஜெர்மனி. விளைவு, பிரிட்டனை நோக்கி வர வியாபாரக் கப்பல்கள் மறுத்தன ! உணவுப் பஞ்சம் மற்றும் நோய் பிரிட்டனைப் பீடித்தது..பிரிட்டனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரேசில், நார்வே நாடுகள் கடலில் குதித்தன. வியாபாரக் கப்பல்களுக்கு பாதுகாப்பாக இந்நாடுகளின் போர்க்கப்பல்கள் முன்னும் பின்னும் அணிவகுத்து வந்தன. நீரில் பாதி மறைத்தபடி மிதந்திருக்கும் நீர்மூழ்கிகளை விமானப்படை விமானங்கள் கண்காணித்து போர்க் கப்பல்களுக்கு தகவல் அனுப்பும். அதன் பிறகு, பதில் தாக்குதல் தொடங்கும். இதுமட்டுமன்றி, முதலாம் உலகப்போரின் போர்த் தொழில்நுட்பங்களை மேம்படுத்தியது பிரிட்டன். நீர்மூழ்கிகளை கண்டுபிடித்து அழிப்பதற்காக பிரிட்டன் உருவாக்கிய தொழில்நுட்பம் தான் ‘ASDIC’ ( Anti-Submarine Detection Investigation Committee). இது தான் பின்னாளில் சோனாராக பெயர் மாற்றம் பெற்றது. கடலின் ஆழத்தில் பதுங்கி காத்திருக்கும் நீர்மூழ்கிகள் எழுப்பும் சிறிய ஒலியை கூட இத்தொழில்நுட்பத்தின் மூலம் கேட்டு அறிய முடியும். அதே போல, மின்காந்த அலைகளை கொண்டு செயல்படும் ரேடார் தொழில்நுட்பமும் இப்போரில் தான் வலுப்பெற்றது. இதை வைத்து சில பதில் தாக்குதல்களை நிகழ்த்தியது பிரிட்டன். ஆனால், எவ்வளவு தொழில்நுட்பம், எத்தனை பாதுகாப்புக் கப்பல்கள் வந்தாலும், ஓநாய் நீர்மூழ்கிகளை ஒன்றும் செய்ய முடியவில்லை..புதிய போர்தந்திரங்களுடன் மிகத் திறமையாக அனைத்தையும் கையாண்டது ஜெர்மன் ராணுவம். காலியான குண்டுகளை கடலில் விட்டெறிந்து சோனாரைக் குழப்பினார்கள். எஞ்சின் இயக்கத்தை கூட நிறுத்தி ரேடாரில் தப்பித்தார்கள். குழுவாக இல்லாமல், தனியாகக் காத்திருந்தார்கள். கான்வாய் கப்பல்கள் தென்பட்டால் குழுவுக்கு தகவல் தெரிவித்துவிட்டு பின் தொடர்ந்து மட்டும் செல்ல வேண்டும். குழு ஓநாய்கள் வந்து சேர்ந்ததும் இரவு வேட்டை தொடர்ந்தது. .இப்படியாக போர் தொடங்கிய முதல் இரு வருடத்தில் மட்டும், 2 ஆயிரம் வணிகக் கப்பல்களை மூழ்கடித்தன ஜெர்மன் நீர்மூழ்கிகள். இத்தாக்குதல் செய்திகள் மக்களிடம் அச்சத்தை விளைவிப்பதை தவிர்க்க, பத்திரிக்கை செய்திகளைக் கூட தணிக்கை செய்தது நேச நாடுகள். ஆயினும், ஓநாய் நீர்மூழ்கிகளின் வீர பிரதாபங்கள் வாய்வழிச் செய்தியாக மக்களை சென்றடைந்து கடல் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தன. அனைத்து நாடுகளின் மக்கள், அரசு , ராணுவம் என எல்லோரும் எதிர்பாத்துக் காத்திருந்தது ஒன்றுதான்! இந்த நீர்மூழ்கிகளின் உயிரான ‘எனிக்மா’ எப்போது உடைபடும் என்பதுவே அது. லண்டன் மத்தியில் இருந்து 33 மைல் தொலைவில் உள்ள சிறிய நகரமான லெட்வொர்த்தில் ஒரு தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்தது . தலைமைப் பொறியாளர் ஹெரால்ட் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் இயந்திரத் தயாரிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். தாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த இயந்திரம் ஒரு புதிய தொழில்நுட்பத்தின் ஆதி பாய்ச்சல் என்றோ, இந்த வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டதற்காக பிரிட்டன் அரசு, தங்களுக்கு டிப்ளமோ பட்டம் தந்து கவுரவிக்கும் என்றெல்லாம் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. வறுமைக்காகவும், ஒரு வேளை உணவுக்காகவும் உழைத்திருந்தார்கள்..ஆறு வார உழைப்பின் முடிவில், ‘எனிக்மா’வை உடைக்கப் போகும் முதலாவது ‘பாம்’ இயந்திரம் தயார். இந்த ரகசிய ஆபரேஷன்‘கேன்டேப்’ ஜெர்மன் உளவு அமைப்பின் கவனத்தில் வரக்கூடாது என்பதற்காகவே BTM தொழிற்சாலைக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு கூட வழங்கவில்லை பிரிட்டன் அரசு. தொழிற்சாலையில் இருந்து முதல் ‘பாம்' இயந்திரம் ப்ளட்ச்லே பள்ளிக்கு லாரியில் அனுப்பப்பட்ட போது கூட, ஒரு காவலர் மட்டுமே பாதுகாப்பிற்கு உடன் வந்தார். இயந்திரம் பத்திரமாக ப்ளட்ச்லே பார்க் வந்து சேரும் வரை பதைபதைப்புடன் காத்திருந்தது நிபுணர் குழு. மார்ச் 14, 1940 அன்று, முதலாவது ‘பாம்’ இயந்திரம் பிளட்ச்லே பார்க் பள்ளிக்கு வந்து சேர்ந்தது. 6.5 அடி உயரமும், 6.5 அடி நீளமும், 3.2 அடி அகலமும் கொண்ட ‘பாம்’ இயந்திரத்தில் 26 எழுத்துகள் பொறிக்கப்பட்ட 12 பற்சக்கரங்கள் மூன்று அடுக்குகளாக சுழலும். இந்த 108 பற்சக்கரங்களை இணைக்கும் மின்கம்பிகளை சேர்த்தால் 16 கி.மி. தூரம் வரும். இப்படியான ஒரு புதிய வரவை அல்ட்ரா ஊழியர்கள், அதிகாரிகள் நிபுணர்க் குழு என அனைவரும் வியப்பாக பார்த்தார்கள். ஆலன் ‘பாமை’ உயிர்ப்பித்தார். சற்றுமுன் கிடைத்த ‘எனிக்மா’ ரகசிய செய்தியின் எழுத்துகளில் பற்சக்கரங்களை நிறுத்தி தேடலைத் தொடங்கினார்..ஒவ்வொரு பற்சக்கரங்களும் சீரான இடைவெளியில் சுழலத் ததொடங்கியது. இதை பார்த்த நிபுணர் குழு ‘Bombe’ என்பது இதன் வகைப் பெயராக இருக்கலாம்! ஆனால், அதன் வரிசையில் முதலில் வந்த இதற்கு ஒரு பெயர் வைப்போம் என்றார்கள். ஆலன் அதை ஏற்றுக் கொண்டார். அப்போது உள்ளே வந்த கமாண்டர் டெனிஸ்டன், சுழலும் பற்சக்கரங்களை பார்த்து சிரித்தபடி கேட்டார். ‘‘ஆலன் இது என்ன செய்கிறது ?’’‘‘எனிக்மா மூலம் மறைக்கப்பட்ட செய்தியைத் தேடுகிறது!’ பொறுப்பாகப் பதில் சொன்னார் ஆலன்.‘‘சரி! அந்த செய்தியை இது எப்போது கண்டுபிடிக்கும்?’’‘‘தெரியாது! எப்போது அனைத்து பற்சக்கரங்களும் சுழல்வதை நிறுத்துகிறதோ, அப்போது கண்டுபிடித்து விட்டது எனலாம்.’’ ஆலனைக் கூர்மையாகப் பார்த்தார் டெனிஸ்டன். ‘‘உனது இயந்திரம் சீக்கிரம் நிற்கவேண்டும் என வேண்டிக்கொள் ஆலன் . இல்லை அதை நானே விரைவில் நிறுத்தி விடுவேன்!’’ என தனது நீலக்கண்ணை சிமிட்டி சிரித்தார். ஒவ்வொரு எழுத்தாக நின்றுநிதானமாக இயங்கிக் கொண்டிருக்கும் தனது இயந்திரத்தை பார்த்தபடி அமைதியாக நின்றிந்தார் ஆலன். அறையில் இருந்து வெளியேறும் முன்பு, எதார்த்தமாக கேட்டார் டெனிஸ்டன்..‘‘சரி ! இந்த மெஷினின் பெயரென்ன ?’’ ‘‘விக்டரி" ஆலன் கம்பீரமாகச் சொன்னார். - உலகம் விரியும்.