-ஹரிஹரசுதன் தங்கவேலு, சைபர் பாதுகாப்பு வல்லுநர்ஒரு உள்ளீடைப் பெற்றுக்கொண்டு, தனது தேடலைத் தொடங்கி, மனித அறிவால் நிகழ்த்த முடியாத கணக்கீடுகளை தன்னுள் செயல்படுத்தி, சரியான விடையை வெளிப்படுத்தும் மின்னணுக் கணினி இயந்திரங்களின் முன்னோடியாக ஆலனின் பாம் ('Bombe') இயந்திரம் அறியப்படுகிறது. ஆனால் சரியான எழுத்தைத் தேடும் ஒரே ஒரு பணியை மட்டுமே மேற்கொள்ளும் 'பாம்' வகையை மின்னணுக் கணினியாக (Electronic Computer) ஏற்க முடியாது. அதன் பிறகு வந்த கொலோசஸ் (Collosus) தான் மின்னணு வகையில் முதற் கணினி என பலதரப்பட்ட கருத்துகள் நிலவினாலும், எனிக்மா ரகசியத்தை விக்டரி உடைத்த 1940 களில் ஆலனின் பாமைத் தவிர மின்னணுக் கணினி வகைமையில் எந்த ஒரு இயந்திரமும் இருந்திருக்கவில்லை. இப்படியான ஒரு பெரும் கண்டுபிடிப்புதான், இரண்டாம் உலகப் போரில் பலம் வாய்ந்த ஜெர்மனியை வீழ்த்தி உலக வரலாற்றையே மாற்றி அமைத்தது.. எனிக்மா உடைக்கப்பட்ட விஷயம் அல்ட்ரா உளவு அமைப்பில்கூட பலருக்குத் தெரியாது. பிரிட்டிஷ் தலைமை மற்றும் ஆலனின் குழுவைத் தவிர எவருக்கும் இது தெரிந்துவிடக் கூடாது என ரகசியம் காக்கப்பட்டது. ஆனால், தெரியக் கூடாதவை தெரிய வந்து ரகசியங்கள் உடைபடும்போதுதான் தொழில்நுட்பம் மேம்பட்டு அடுத்தடுத்த வளர்ச்சி நிலையை அடைந்தது என்பது வரலாற்றின் சுவாரஸ்ய முரண். ஆகவே வில்லாதி வில்லன் ஹிட்லருக்கு எனிக்மா உடைபட்ட விஷயம் தெரியாமல் போய்விடுமா என்ன?.எனிக்மாவின் ரகசியத் தகவல் உடைபட்டாலும், ஜெர்மன் தாக்குதல்களில் பலவற்றை தடுக்க வேண்டாம் என பிரிட்டிஷ் தரப்பு முடிவு செய்தது. காரணம், இவ்வளவு நாள் வெற்றிகரமாக நிகழ்ந்து வந்த தாக்குதல்கள் திடீரென தடுக்கப்பட்டால் ஹிட்லருக்கு சந்தேகம் வந்துவிடும். பிறகு எனிக்மா உபயோகிப்பதை நிறுத்திவிட்டு வேறொரு இயந்திரம் கொண்டுவந்துவிட்டால், முடிந்தது கதை. ஆகவே ஆரம்ப கட்டத்தில் பதுங்கிப் பாய வேண்டும் என முடிவு செய்தது பிரிட்டிஷ். இது ஆலனுக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. நாளை நடக்கவிருக்கும் தாக்குதல் விபரங்கள் தெரிந்தே மக்களை பலி கொடுக்கும் இந்த போர் யுத்திகள் அவரது அறிவியல் மூளைக்கு பிடிபடவில்லை. இருந்தும் தனக்களிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்தார்..விக்டரி உடைக்கும் ரகசிய செய்தியில் இருந்து HAIL HITLER போல தொடர்ந்து ஜெர்மன் ராணுவம் பயன்படுத்தும் பல வார்த்தைகளை ஆலன் தொகுக்க ஆரம்பித்தார். இது கிரிப் (Crib) என அறியப்பட்டது. செய்தியின் தொடக்கத்தில் வரும் TO, மற்றும் WEATHER, ATTACK, DAWN, DUSK போன்றவை எந்த ரகசிய செய்தியாக வந்தாலும் எழுத்துக்களின் எண்ணிக்கையை வைத்து இதுதான் அவை எனக் கணிக்கப்பட்டது. இந்த க்ரிப்கள் தொகுக்கப்பட்டு பாம் இயந்திரத்தின் உள்ளீட்டு மெனு (Menu) வாக தரப்பட்டது. இந்த க்ரிப்புகள் அதிகமாகத் தரப்படும்போது, இதை வைத்து பிற வார்த்தைகளை கண்டறிவது பாம் (Bombe) இயந்திரத்திற்கு எளிதான பணி. முன்பைவிட வேகமாக இயங்கியது விக்டரி. ஆலனின் நிபுணர் குழு விக்டரியில் சில மேம்பாடுகளை (update) செய்தது. குறிப்பாக எனிக்மாவின் ப்ளக் போர்டு ரகசியத்தை உடைக்கும் வண்ணம், விக்டரியில் செவ்வக வடிவிலான ஒரு பிளக் போர்டு அப்டேட் இடம் பிடித்தது. இதை செய்தவர் கோர்டன் வெல்ச்மேன். பாம் இயந்திர வகையில் வெளியான இந்த இரண்டாவது இயந்திரத்தின் பெயர் 'ஏக்னஸ்'. விக்டரியை விட சக்தி வாய்ந்த இயந்திரமாக ஏக்னஸ் அறியப்பட்டது. ஆலன் உடனடியாக விக்டரியிலும் இந்த மேம்பாட்டை நிறுவினார். இந்த இரு இயந்திரங்களும் செயல்படத் தொடங்கிய சில மாதங்களில் ஜெர்மன் ராணுவம் அனுப்பிய 178 ரகசிய செய்திகளை உடைத்தன..ஜெர்மனியின் விமானப்படை வேறு அவ்வப்போது லண்டன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. தாக்குதலில் இந்த பாம் இயந்திரங்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் அவற்றைப் பாதுகாக்கும் பணிகள் தொடங்கியது. இங்கிலாந்தின் எல்லைப் பகுதிகளில் இதற்கென நான்கு ‘பாம்’ நிலையங்கள் உருவாக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வெளிப்பார்வைக்கு ரேடியோ நிலையங்கள் போலத் தெரிந்தாலும் 24 மணிநேரமும் பாம் இயந்திரங்கள் இடைவிடாமல் இயங்கி கொண்டிருந்தன. BTM தொழிற்சாலையில் இப்போது வாரத்திற்கு ஒரு புதிய பாம் இயந்திரம் தயார் செய்யப்பட்டு இந்த நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஒரு சில வருடங்களில் ஒவ்வொரு நிலையங்களிலும் குறைந்த பட்சம் 30 க்கும் குறைவில்லாமல் பாம் இயந்திரங்கள் எனிக்மா செய்தியை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தன. ஒரு கட்டத்தில் அமெரிக்கா உட்பட நேச நாடுகளுக்கும் இதன் தயாரிப்பு விபரங்களை வழங்கியது பிரிட்டிஷ். .ஜெர்மன் தரப்பில் சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது. முன்பெல்லாம் 10 தாக்குதல்கள் திட்டமிட்டால் அனைத்துமே வெற்றி பெறும், ஆனால் கணிசமான அளவில் இப்போது தாக்குதல்கள் தவிர்க்கப்படுவது எப்படி என யோசித்தார் ஹிட்லர். தாக்குதல்களில் ஏற்படும் தோல்விகள், ஜெர்மன் போர் கப்பல்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கண்ட ஹிட்லர், தடாலடியாக நான்கு பற்சக்கரங்கள் கொண்ட புதிய எனிக்மாவை ஓநாய் நீர் மூழ்கிக் கூட்டத்திற்குக் கொண்டு வந்தார். இந்த முறை பற்சக்கரங்களின் தினசரி நான்கு எழுத்துக்களை அதன் கமாண்டர்கள் தேர்வு செய்ய முடியாது. பற்சக்கர எழுத்துக்கள், ப்ளக் போர்டு அமைப்பு, நேரம், என ஒவ்வொரு தினத்திற்குமான எனிக்மா செட்டிங்ஸ் ஒரு புத்தகத்தில் அச்சடிக்கப்பட்டது. புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே கமாண்டர்கள் எனிக்மாவில் பொருத்த வேண்டும். அவர்கள் தன்னிசையாக செயல்பட முடியாது. சுருங்க சொன்னால் அந்த புத்தகம் தான் ஹிட்லர். அதை ஜெர்மன் வீரர்கள் உயிராய்க் காக்க வேண்டும்..இளஞ்சிவப்பு வண்ணக் காகிதத்தில் (Pink Sheets ) தண்ணீரில் கரையும் மையால் இந்த புத்தகம் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரு வேளை தாக்குதலில் சிக்கிக்கொண்டால் முதலில் இந்த புத்தகத்தை நீரில் கரைத்து விட வேண்டும் என்பது தான் ஜெர்மன் கமாண்டர்களுக்கு இடப்பட்ட தலையாய கட்டளை. நீரில் கரையும் இந்த ரகசிய புத்தகம் 'கோட் புக்' (Kurzsignale) என அறியப்பட்டது..ஆலன் இந்த மாற்றங்களை எதிர்பார்த்திருந்தார். உடனடியாகத் தனது குழுவுடன் புதிய நான்கு பற்சக்கர எனிக்மாவை உடைக்கும் பணியைத் தொடங்கினார். செய்திகளை அனுப்புவதிலும் ஜெர்மன் தரப்பு மாற்றம் கொண்டு வந்தது. பழைய செய்திகளில் இருந்த வார்த்தைகளுக்கு இடையில் புதிய எழுத்துக்களை இணைத்து செய்திகளை அனுப்பத் துவங்கியது. ஆக ஏற்கெனவே உடைக்கப்பட்ட வார்த்தைகளின் தொகுப்பான ‘கிரிப் மெனு’ விற்கு இதில் வேலையில்லை. இந்த புதிய எனிக்மா விரைந்து உடைக்கப்பட வேண்டுமெனில் கோட் புக் கிடைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது பிரிட்டிஷ் தரப்பு. காலம் அதற்கும் வழி செய்தது..அட்லாண்டிக் கடலில் ‘OB 318 கான்வாய்’என்ற பெயரில் பல்வேறு வணிகக் கப்பல்கள் ஒன்றிணைந்து குழுவாக பயணித்துக்கொண்டிருந்தன. ஜெர்மன் ஓநாய் கூட்டத்தின் முக்கியமான நீர்மூழ்கி U110 வணிக கப்பல்களின் மீதான தனது வழக்கமான தாக்குதலைத் தொடங்கியது . Esmond மற்றும் Bengore Head என்ற இரு வணிகக் கப்பல்கள் தாக்குதலில் சிக்கி மூழ்கின. தாக்குதலை வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டு மீண்டும் கூட்டத்துடன் இணைய முற்பட்ட U 110 க்கு அதிர்ச்சி காத்திருந்தது. கான்வாய்க்கு பாதுகாப்பாக வந்த பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள் U 110 நீர்மூழ்கியை சுற்றி வளைத்து தாக்க, வேறு வழியில்லாமல் கடலின் மேல் மட்டத்திற்கு வந்தது நீர்மூழ்கி..போர்க் கப்பல்களின் தொடர்ந்த தாக்குதலில், U110 எஞ்சின் அறையில் பேட்டரி கசிவு ஏற்பட்டதால் கப்பலை அப்படியே விட்டு விட்டு ஜெர்மன் வீரர்கள் பிரிட்டிஷ் ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். U110 கப்பலுக்குள் நுழைந்து சோதனையிட்ட பிரிட்டிஷ் வீரர்களால் தங்கள் கண்களை நம்ப முடியவில்லை. U110 கமாண்டர் அறையில் நான்கு பற்சக்கர எனிக்மா இயந்திரம் மற்றும் அந்த மாதத்திற்கான கோட் புத்தகம் எந்த வித சேதமுமின்றி இருந்தது. அதைக் கைப்பற்றி ப்ளட்ச்லே பார்க் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். U110 ஓநாய் நீர்மூழ்கி பிரிட்டன் வசம் சரணடைந்தது, கோட் புத்தகம் எந்தவித பாதிப்புமில்லாமல் கைப்பற்றியது என எந்த தகவலும் வெளிவராமல் பல மாதங்கள் ரகசியம் காத்தது பிரிட்டன். இந்த நிகழ்வுக்கு பெயர் ஆபரேஷன் ப்ரிம்ரோஸ் (Operation Primrose ). இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழ்ந்ததற்கு இந்நிகழ்வும் ஒரு முக்கிய காரணம். இந்த கோட் புத்தகத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தி நான்கு பற்சக்கர எனிக்மாவும் உடைக்கப்பட்டது..இது தெரிய வந்ததும் ஹிட்லர் ஆத்திரமடைந்தார். ஒரு எழுத்து இன்னொரு எழுத்தாக மாறும் எனிக்மா வேலைக்காகாது. எழுத்து என்பதே இருக்கக்கூடாது. இனி 0,1 என பைனரி நிரலில்தான் தகவல் செல்ல வேண்டும். எனிக்மா போல செய்தியை டைப் செய்ய ஒருவன், குறித்துக் கொள்ள ஒருவன், அதை ரேடியோவில் மார்ஸ் கோடாக அனுப்ப ஒருவன் என மூன்று பேர் எல்லாம் இருக்க கூடாது. ஒரு முறை டைப் செய்தால் இதர வேலைகள் அனைத்தையும் இயந்திரமே செய்ய வேண்டும் என கட்டளை பிறப்பித்தார். கணினித் தொழில்நுட்பம் தனது இரண்டாவது படியில் கால் வைத்தது. டன்னி (Tunny ) என்ற புதிய ரகசியத் தகவல் இயந்திரம் உருவானது. அதில் A என்றால் 001101, B என்றால் 11010 என ஒரு எழுத்து பைனரி நிரலாக மாற்றம் அடைந்தது.இன்றைய அளவிலும் நவீனக் கணினிகளின் தகவல் மொழி இந்த பைனரி நிரல் தான்!உலகம் விரியும்