-வாசுகி லட்சுமணன்நவரசங்களையும் முகத்தில் அசால்ட்டாக காட்டும் திறன், உச்சரிப்பில் தெளிவு, உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் குரல் என திறமையான நடிகைக்கு தேவையான அனைத்தும் கொண்டவர் ஆதிரா பாண்டிலக்ஷ்மி. அண்மையில் வெளியான ‘பம்பர்’ படத்தில் வெற்றியின் தாயாக உருக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தவரை, வளசரவாக்கத்தில் உள்ள அவரின் நவீன கூத்துப்பட்டறையில் சந்தித்துப் பேசினோம்... .உங்களைப் பத்தி சொல்லுங்க, கலைத்துறைக்குள்ள எப்படி வந்தீங்க? “பழனி எனக்கு சொந்த ஊர். வீட்டுல கடைக்குட்டிங்கிறதால ரொம்பச் செல்லமா வளர்ந்த பொண்ணு. ப்ளஸ் டூ முடிச்சவுடனேயே கல்யாணம் பண்ணி துபாய்க்குப் போயாச்சு. குழந்தைங்கல்லாம் பொறந்து, ஹை ஃபையான வெல் செட்டுல்டு லைஃப். துபாய்ல நிறைய கடைகள்லாம் வச்சிருந்தேன். அந்த சமயத்துல ‘நமக்குப் புடிச்ச ஒரு வாழ்க்கையை வாழ்ந்தா என்ன?’ன்னு தோணுச்சு. உடனே சின்ன வயசுல நான் கத்துக்கணும்னு ஆசைப்பட்ட எல்லா கலைகலையும் கத்துக்கணும்னு. இங்க வந்துட்டேன். நிறைய ஒர்க்ஷாப்ஸ்க்குப் போனேன். தெருக்கூத்து ரெண்டு வருஷம் கத்துககிட்டேன். பறை கத்துக்கிட்டேன், களரி கத்துக்கிட்டேன்.”.உங்களோட நவீன கூத்துப்பட்டறையை எப்போ தொடங்கினீங்க? அதோட செயல்பாடுகளைப் பத்தி சொல்லுங்க..? “கூத்துப்பட்டறை மாதிரி நாமளும் ஒரு பயிற்சிப் பள்ளியை ஆரம்பிச்சா என்னன்னு நினைச்சு 2014-லில் தான் நவீன கூத்துப்பட்டறையை ஆரம்பிச்சேன். இங்கே நடிப்பை மட்டும் சொல்லித் தரலை, ஒரு முறையான வாழ்க்கையை எப்படி வாழணும்னு கத்துக்குடுக்கிறோம்…உட்கார, நிற்க, நடக்க, பார்க்க, குளிக்க, சாப்பிட, தூங்க எல்லாத்துக்கும் ஒரு வழிமுறை இருக்கு. அது எல்லாத்தையும் சொல்லித் தர்றதுலேர்ந்து ஆரம்பிக்கறோம். அப்புறம் பாடி லேங்குவேஜ், மாடுலேஷன், ஆக்டிங்இப்படி எல்லாத்தையும் படிப்படியா கத்துத் தர்றோம். எல்லாமே இயற்கை வாழ்வியலோட சேர்ந்ததுதான். இதுதான் நவீன கூத்துப்பட்டறையின் ஃபார்முலா.”.பம்பர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்துல அசத்தலா நடிச்சிருந்தீங்க, அந்த அனுபவங்களை சொல்லுங்க..? “பம்பர் ரொம்ப நல்ல படம். அந்தப் படத்துல நான்தான் பண்ணணும்னு செல்வகுமார் சார் ரொம்ப உறுதியா இருந்தார். அப்போ எனக்கு வேற சில வேலைகள் இருந்ததால என்னால பண்ண முடியலன்னு சொல்லிட்டேன். ஆனாலும் விடாமப் பேசி என்னை பண்ண வச்சார். இந்தப் படத்துக்கு டப்பிங் பேசும்போது டைரக்டர் கூடவே இருந்து தூத்துக்குடி ஸ்லாங்கைஅவ்ளோ அழகா சொல்லிக்கொடுத்தார். ஒரு வித்யாசமான கதாபாத்திரம் பண்ணியிருக்கோம்னு எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைச்சது. என் மகனைக் கூட்டிகிட்டு போய் தான் அந்தப் படத்தைப் பார்த்தேன். ‘என்னம்மா, இவ்ளோ சூப்பரா இருக்கு’ன்னு சொன்னான். சின்னப் புள்ளைங்களுக்கும் இந்தப் படம் புடிச்சிருக்கறதுதான் முக்கியமான விஷயம்.”உங்க நடிப்பில் வரவிருக்கும் படங்களையும் அதுல உங்க கதாப்பாத்திரங்கள் பத்தியும் சொல்லுங்க..? “ ‘காடு வெட்டி’ படம் முடிச்சிருக்கறேன். படத்தோட பேரைக் கேட்டுட்டு சாதியப் படமோன்னு வேற மாதிரி நினைக்க வேண்டாம். ஒரு நல்ல மெசேஜ் சொல்ற கதை. அதுல எனக்கு டபுள் ரோல் மாதிரி இருக்கும். ஒரு ஹியூமரான கேரக்டர்ங்கிறதால ரொம்ப ஜாலியா பண்ணியிருக்கேன். அப்புறம் ‘ரகுதாத்தா’ அப்படீன்னு ஒரு படம். ‘கே.ஜி.எஃப்.’ படத்தை தயாரிச்ச நிறுவனம் தமிழ்ல தயாரிக்கிற முதல் படம் அது. அதுலயும் ஹியூமரான ஒரு கேரக்டர்தான், கீர்த்தி சுரேஷோட அம்மாவா நடிச்சிருக்கேன். அதுக்கப்புறம் ‘ரெபல்’னு ஒரு படத்துல ஜி.வி. பிரகாஷ் சாரோட அம்மாவா நடிச்சிகிட்டிருக்கேன். ஜி.வி. சாரோட இன்னொரு படம் ‘பிளாக்மெயில்’. அந்தப் படத்துல அம்மா ரோல் கிடையாது, இன்னொரு ஆப்போசிட் கேரக்டர்ல பண்ணியிருக்கேன். ‘உறியடி 3’, ‘தி வில்லேஜ்’ங்கிற வெப் சீரிஸ், இன்னும் இரண்டு படங்களுக்குப் பேர் வைக்கலை. அப்புறம் இன்னும் மூணு படங்களுக்கு பேசிகிட்டிருக்கறாங்க. பெண்களை மையப்படுத்தின ஒரு ஆந்தாலஜி வெப் சீரிஸ்ல ரியாவோட அம்மாவா நடிச்சிருக்கேன். அந்த சீரிஸுக்கும் இன்னும் பேர் வைக்கலை. எல்லாமே ஒரே மாதிரி இல்லாம வித்யாசமானதாதான் எடுத்துப் பண்ணிகிட்டிருக்கேன்.”.நடிப்பில் உங்க ரோல் மாடல் யார்? “என்னோட ரோல் மாடல்ன்னா கமல் சார்தான். கமல் சார்லாம் பொக்கிஷம். நிறைய ஹோம் ஒர்க் பண்றாரு, ஒவ்வொரு படத்துக்கும் நிறைய டிஃப்ரன்ஸ் காமிக்கறார். அவர் வேற லெவல். ஸோ, ஆக்டர் எப்பவுமே கஷ்டப்பட தயாரா இருக்கணும். அவர்கிட்டேயிருந்து நிறைய விஷயங்களை கத்துக்கணும். அதுக்கப்புறமா ரஜினி சார் ரொம்பப் புடிக்கும். அவ்ளோ சூப்பரானஆக்டர் அவர். எமோஷ்னல் ஃபீலிங்ஸ் எல்லாம் அந்தக் கண்ணுல அப்படியே துள்ளும்.”நடிப்பதில் நாடகத்துக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசத்தை உணர்றீங்க? “தியேட்டர் ஆர்டிஸ்ட் எல்லாமே சினிமாவை ரொம்ப ஈஸியா பண்ணுவாங்க. லைவா போகுதுங்கிறதால தியேட்டர் பெர்ஃபாமன்ஸுக்கு கடுமையா வேலை பார்க்கணும். அதனால தூங்கற நேரம் போக மத்த நேரமெல்லாம் அதுவே தான் மைண்டுல ஓடிகிட்டு இருக்கும். ஆனா சினிமாவுல கட் சொல்லிட்டு ரீ டேக் போகலாம். நாங்க தியேட்டருக்குப் பழக்கப்பட்டவங்கங்கிறதால சினிமாவுலயும் ஒன் ஆர் டூ டேக்லயே பெர்ஃபாம் பண்ணிட முடியும். ஸோ, எனக்கு சினிமா ஈஸியா இருக்கு, தியேட்டர் ரொமப கஷ்டமா இருக்கு.”.எந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்கணும்னு ஆசைப்படுறீங்க? “எனக்கு செம்மையான ஒரு சைக்கோ கேரக்டர் பண்ணணும்னு அவ்ளோ ஆசை. எல்லா மனிதருக்குள்ளயும் ப்ளாக் பேஜ் ஒண்ணு இருக்கு. அதை ஒத்துகிட்டுதான் ஆகணும். நாம நிறைய விஷயங்களை ஹைட் பண்ணி வச்சிருக்கோம். நவரசாவுல உள்ள ஒன்பது ஃபீலிங்ஸையும் நாம காட்டிகிட்டு இருக்கறோமா, இல்ல... அதையெல்லாம் வெளிப்படுத்தணும்னா அது சினிமாவுலதான் முடியும்.”உங்க குடும்பத்தைப் பத்தி தெரிஞ்சுக்கலாமா? “நாங்க துபாய்லேர்ந்து வந்து சென்னையிலயே செட்டில் ஆகிட்டோம். எனக்கு சமீரான்னு ஒரு பொண்ணு, ஆதில், ஆத்திப்னு ரெண்டு பசங்க. சமீரா நவீன கூத்துப்பட்டறைக்கு வர்ற ஸ்டூடண்ட்ஸுக்கு ட்ரெய்னிங் கொடுக்கறாங்க. தியேட்டர் பிளே டைரக்ஷனும் பண்றாங்க. கூடவே ஃபிலிம் டெக்கும் பண்ணியிருக்கார். அதனால டெக்னிகலா ஒரு படத்துக்கான எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரியும். ஆத்திப் சினிமாட்டோகிராஃபி படிச்சிருக்கறார். ஸோ, நாங்க எல்லாரும் சேர்ந்து வேலை பார்க்கிறோம்.”