- இந்திரா சௌந்தர்ராஜன்ஏ.எஸ்.பி. மணிவண்ணனின் போனில் சிணுங்கல்! காதுக்குள் விஜிலென்ஸ் போலீஸின் குரல். ‘‘குட் ஈவினிங் சார்... நான் விஜிலென்ஸ் 543 பேசறேன்...’’‘‘தெரியுதுய்யா சொல்லு...’’‘‘அந்த ஆர்க்யாலஜிஸ்ட்டும், டி.வி. ரிப்போர்ட்டரும் வந்து காத்திருந்திட்டு, அந்தப் பொண்ணும் பையனும் வராததால ஏமாற்றத்தோட திரும்பிப் போய்ட்டாங்க சார்...’’‘‘டவுட்டா எதாவது தெரிஞ்சிச்சா..?’’‘‘இல்ல சார்... எதுக்கும் இருக்கட்டும்னு டூ மீட்டர் டிஸ்டன்ஸ்லேர்ந்து செல்லுல வீடியோ எடுத்துக்கிட்டேன் சார்...’’‘‘சரி... வீடியோவை கான்ஸ்டபிள் ரஹ்மானுக்கு ஃபார்வர்ட் பண்ணிடு. நீ… உன்னோட அடுத்த அசைன்மென்ட்டுக்குப் போயிடு.’’‘‘யெஸ் சார்...’’ என்கிற விஜிலென்ஸ் போலீஸ் குரலின் முடிவைத் தொடர்ந்து, மணிவண்ணன் ரஹ்மானை பத்து எண் அழுத்தத்தில் பிடித்துப் பேசலானார்.‘‘ரஹ்மான்... இந்த மங்கம்மா பங்களா கேஸ்ல ஒரு வீடியோ வரும். அதை பிரிசர்வ் பண்ணிடுங்க. அப்புறம் அந்த தூக்குல தொங்குனவனப் பத்தின ரிப்போர்ட் ரெடியாயிடிச்சா?’’‘‘எண்பது பர்சன்ட் ரெடி சார்... அந்த ஆள் ஆன்ட்டிக்ஸ் பிசினஸ் பண்ற ஆளாம். அவன் பங்களாவுல பதினெட்டாம் நூற்றாண்டு கடிகாரத்துலேர்ந்து மான் தோல், காண்டாமிருகம் கொம்பு, பாதரசத்துல செய்த ரசமணின்னு நிறைய பொருட்களை டிபார்ட்மென்ட்ல ட்ரேஸ் பண்ணியிருக்காங்க... அப்புறம் சிலை கடத்தல் கோஷ்டிகளோடயும் தொடர்பு கொண்டவனாம்...’’‘‘பொண்டாட்டி பிள்ளைகள்னு யாரும்..?’’.‘‘சிங்கிள் மேன்தான் சார். செல்போன், டைரி, பேங்க் பாஸ்புக், பாஸ்போர்ட், ஆதார் கார்டுன்னு எந்த ஐட்டமும் கிடைக்கல சார். கொலை செய்தவங்க எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டுப் போயிருக்காங்க சார்...’’‘‘சி.சி.டி.வி. இருந்திருக்கணுமே..?’’‘‘அதுல எந்த எவிடென்ஸும் ரெக்கார்ட் ஆகல சார். கொலைகாரங்க மாடிக்குப் போய் ஜன்னல் ஸ்லாப்ல குதிச்சு, கீழ இறங்கி வெளியேறியிருக்காங்க... அதுக்கான தடயங்கள் இருக்கு. அதேசமயம் அக்கம்பக்கம் யாரும் நோட்டீஸே பண்ணல. சி.சி. கேமரா, அக்கம்பக்கம்னு எதுலயும் சிக்காம, எந்த எவிடென்ஸும் விடாம கொலை நடந்திருக்கு சார். நிச்சயமா கொலை செய்தது ஒரு சிங்கிள் பர்சனில்ல... ஒரு குரூப்! புரொஃபஷனல் கில்லர்ஸா இருக்க வாய்ப்பிருக்கு. அவங்கதான் நம்ப டிபார்ட்மென்ட் ஸ்டெப்ஸ் தெரிஞ்சி, அதுக்குத் தகுந்த மாதிரி எல்லாம் பண்ணுவாங்க.’’‘‘நியூஸைப் பார்த்துட்டு பாடிய பாக்கவோ, இல்ல கேட்டோ ரிலேடிவ்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு யாரும் வரலியா?’’‘‘வரல சார். நைன்ட்டி பர்சென்ட் அன்க்ளைம்டு பாடிதான் சார்!’’‘‘என்ன ரஹ்மான்... இது, நம்மள ரொம்ப சுத்தல்ல விடுற கேஸா இருக்கும்போலயே...’’‘‘ஆமாம் சார்...’’‘‘அந்த ஆர்க்யாலஜிஸ்ட என்கொயரி பண்ணா… ஏதாவது தெரியவருமா?’’‘‘வேஸ்ட் சார்... நாம விசாரிச்சாலும் ஒரு கேரியர் இன்ட்ரஸ்ட்டுன்னுதான் சார் சொல்வாரு. புதையல் மேட்டர்ங்கறதால டி.வி.காரங்களுக்கும் ஒரு இன்ட்ரஸ்ட் வந்திருக்கும். அதுக்குதான் அந்தப் பொண்ணும் வந்துருக்கும்...’’‘‘எதுக்கும் அந்த ஆர்க்கி மேல ஒரு கண் இருக்கட்டும்...’’‘‘ஓ.கே. சார்... அப்புறம் அந்த மங்கம்மா பேலஸை, மிஸ்டர் சுந்தர் வாங்கப் போறாரா, இல்லையா..?’’‘‘இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லைங்கற மாதிரிதான் தெரியுது. ஒருபக்கம் அந்த பேலஸ்ல மர்மக்குரல்... மறுபக்கம் போன் பண்ணி ஊரைவிட்டே போயிடுங்கற மிரட்டல்... இப்படி எல்லாமே, மர்மமா இருந்தா யாருக்குமே பயம் வரத்தானே செய்யும்?’’‘‘வாஸ்தவம்தான். அப்ப இந்த கேஸ்ல நம்ப அடுத்த மூவ் என்ன சார்?’’‘‘அந்த தூக்குல தொங்கினவன் உடம்பை ரூல்ஸ்படி பிரிசர்வ் பண்ணி வையுங்க. யாராவது பாடிய கேட்டு வராங்களான்னு பார்ப்போம். இப்போதைக்கு ஒரு டெட் எண்ட்ல நாம நிக்கற மாதிரிதான் இருக்கு.’’‘‘இது நமக்கு ரொம்ப வித்தியாசமான கேஸ் சார். யார்கிட்ட இருந்தும் எந்த கம்ப்ளைன்டும் இல்ல. இதனால, எஃப்.ஐ.ஆரும் போடமுடியாது. நமக்கு வேற எங்கேருந்தும் பிரஷ்ஷரும் இல்ல. நீங்க சொன்ன மாதிரி இது ஒரு டெட் எண்ட் மாதிரிதான் சார் இருக்கு...’’‘‘ஆனா இந்த மாதிரி கேஸ்கள்தான் ரஹ்மான் ரொம்ப ஆபத்தானது. நம்ப டிபார்ட்மென்ட்ட முட்டாள்களாக்குற கிரிமினல்கள மட்டும் விட்டுடவே கூடாது...’’‘‘அப்போ என்ன சார் பண்ணலாம்?’’‘‘வெய்ட் பண்ணுவோம். அந்த கிரிமினல்ஸ் நிச்சயம் சும்மா இருக்க மாட்டாங்க. எதுலயாவது மாட்டாமலா போய்டுவாங்க..?’’ - என்று சொல்லி முடித்த மணி வண்ணன், அடுத்து அழைத்தது அழகிய பாண்டியனைத்தான்.‘‘என்ன அழகு... நிஜமாலுமே அந்த மங்கம்மா பங்களா விஷயத்துல ஒதுங்கிட்டீங் களா?’’ என்று பேச்சை ஆரம்பித்தார்.‘‘என்ன மணி இப்படி கேட்குறே... ஒதுங்காம அதுல இறங்கச் சொல்றியா?’’‘‘நோ... நோ. நான் அந்த அர்த்தத்துல கேட்கல. கன்ஃபர்ம் பண்ணிக்கத்தான் கேட்டேன். உங்களுக்கு போன் பண்ணி, மிரட்டின நபரைக் கொலைசெய்து தூக்குல தொங்கவிட்டுட்டுப் போயிருக்கு ஒரு குரூப். அந்த குரூப்புக்குப் பயந்துதான் அந்த ராமச்சந்திரன்கறவன் உங்கள வார்ன் பண்ணியிருக்கான். வார்ன் பண்ணினவனையே கொன்னுருக்காங்கன்னா… உங்கள பொருத்தவரைல அவங்க உங்கள கவனிச்சிக்கிட்டேதான் இருக்கணும்...’’‘‘நீ என்ன சொல்லவரே மணி..?’’‘‘பிரச்னை முடியல அழகு. இனிமேதான் நீங்களும் ரொம்பக் கவனமா ஜாக்ரதையா இருக்கணும்னு எனக்குப் படுது.’’‘‘இறங்கினாலும் பிரச்னை... ஒதுங்கினாலும் பிரச்னைன்னா அது எப்படி மணி?’’‘‘அப்படித்தான்... இதுவொரு பெக்குலீயரான கேஸ்... இந்த செகண்ட் எந்த கம்ப்ளைன்ட்டும் இல்ல. அதுக்காக இதை விட்டுடவும் முடியாது. ரொம்ப ரொம்ப ஆபத்தான ஒரு கூட்டம் நிச்சயம் இந்த கேஸ்ல சம்பந்தப்பட்டிருக்கு.’’‘‘சரி, முடிவா… நீ என்ன சொல்றே?’’‘‘உங்கள ஒதுங்க விடமாட்டாங்கன்னு நான் யூகிக்கறேன்.’’‘‘அப்படீன்னா நாங்க என்ன செய்யணும்?’’‘‘முதல்ல தைரியமா இருங்க. பயந்துடாதீங்க... ஏன்னா, உங்கப் பின்னால நாங்க, ஜ மீன் போலீஸ் டிபார்ட்மென்ட்டே இருக்கு.’’‘‘அப்புறம்?’’‘‘யார் உங்களைத் தூண்டிவிடப் போறாங்கன்னும் தெரியணும். அவங்கதான் இந்த ராமச்சந்திரனை போட்டுத் தள்ளியிருக்கணும்.’’‘‘ராமச்சந்திரன் சாவு தற்கொலைதானே? அதை எப்படி கொலைன்னு கண்டு பிடிச்சே நீ?’’‘‘அது தற்கொலை மாதிரி தோற்றமளிக்கற ஒரு கொலை! ஒரு குரூப் ரொம்ப சாதுர்யமா வந்துட்டுப் போயிருக்கு. ஆனா, எந்தத் தடயத்தையும் விடலை. சொல்லப்போனா அந்த ராமச்சந்திரனோட எவிடென்ஸ் அவ்வளவையும்கூட வழிச்சு எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.தற்கொலை பண்ணிக்கற ஒருத்தன், தன்னோட ரெக்கார்ட்ஸை எல்லாம் அழிச்சிட்டா தற்கொலை பண்ணிக்குவான்?’’‘‘நீ அப்படி வர்றியா... சரி மணி எங்கள பொருத்தவரைல எது நடந்தாலும் நான் உனக்குச் சொல்லிடறேன்...’’‘‘அதுமட்டும் போதாது...’’‘‘வேற என்ன செய்யணும்?’’‘‘இந்த விஷயத்துல ஒதுங்காம இறங்குங்க. நீங்க ஒதுங்கக் கூடாது… இறங்கணும்கறதுதான் அந்த குரூப்போட விருப்பமும்.’’‘‘அதாவது அந்தப் புதையலை நாங்க தேடணும்னு அந்த குரூப் விரும்புதா?’’‘‘ஆமாம்... உங்களால மட்டும்தான் அந்தப் புதையலை எடுக்க முடியும்னும் அவங்க நினைக்கறாங்க...’’‘‘ஓ... அப்படி எடுத்துட்டா?’’‘‘உங்கள போட்டுத் தள்ளிட்டு அவங்க அதை அபகரிக்கலாம்…’’‘‘இது உனக்கே கொஞ்சம் அபத்தமா படலை?’’‘‘அபத்தமா... என்ன சொல்ல வர்றே அழகு?’’.‘‘இல்ல... எங்களாலதான் எடுக்க முடியும்னு அவங்களுக்கு யார் சொன்னது? எப்படி அது தெரியும்? எங்களுக்கே இங்கயெல்லாம் கனவுபோல இருக்குறப்ப, அதை உண்மைன்னு நினைக்கறது அபத்தம்தானே?’’‘‘உனக்கும் எனக்கும் அபத்தமாதான் படும். அப்படித்தான்னும் வெச்சுக்கயேன். ஆனா, இதுக்காக உங்கள வார்ன் பண்ணின நபரைக் கொலையே செய்திருக் காங்கன்னா, அவங்க உங்களாலதான் முடியும்னு நம்பறாங்கன்னுல்ல ஆகுது...’’‘‘உன்னோட அந்தக் கோணம் சரிதான். ஆனா, நாங்க… ஐ மீன் சுந்தரும் அந்த மீனாட்சியும் தங்களோட எந்தப் பாதிப்பையும் டாக்டர் துவாரகநாத் தவிர யார்கிட்டயும் சொல்லாதப்ப, அந்த குரூப்புக்கு மட்டும் எப்படி தெரிஞ்சிருக்கும்?’’‘‘இதுல அந்த ஆர்க்கிடெக்ட் ஒருத்தர் சம்பந்தப்பட்டிருக்காரே?’’‘‘அப்ப அவர் மூலமா தெரிஞ்சிருக்கலாம்னு நினைக்கிறியா?’’‘‘ஏன் இருக்கக் கூடாது?’’‘‘அப்போ அவரைப் பிடிச்சு கேட்க வேண்டியதுதானே?’’‘‘அந்த நபரை நான் கண்காணிக்கச் சொல்லியிருக்கேன். அது ஒருபக்கம் போய்க்கிட்டேதான் இருக்கு அழகு.’’‘‘மொத்தத்துல பிரச்னை முடியலேங்கறே?’’‘‘ஆமாம்... செத்தவன், சிலை திருட்டுலயும் தொடர்புடையவன். பழைய பொருட்களை வாங்கி விற்கிறவன். அதனால, நிச்சயமா ஒரு இன்டர்நேஷ்னல் தொடர்பு இதுல இருக்கவும் வாய்ப்பு அதிகம்.’’‘‘நீ சொல்றத எல்லாம் கேட்க கேட்க ரொம்ப பயமா இருக்கு மணி. ஏன், இப்படி எல்லாம் நடக்குது?’’‘‘ஆயிரம் கோடி ரூபா தங்கப்புதையல்னா, சும்மாவா?’’‘‘அதுசரி... நீ இந்த பூர்வஜென்மக் கதையை எல்லாம் நம்பறியா? நான் பர்சனலாதான் இதைக் கேக்குறேன்...’’‘‘லாஜிக்கலா பாத்தா சான்ஸே இல்ல... ஆனா, லைஃப்ல மேஜிக்னு ஒண்ணு இருக்கே?’’‘‘மீனாட்சி, சுந்தர் விஷயம் மேஜிக் இல்ல மணி... மிஸ்ட்ரி.’’‘‘மிஸ்ட்ரி, மேஜிக் எல்லாம் ஒண்ணுதான் அழகு... நான் இப்ப உன்னைக் கேக்குறேன், சுந்தர் காதுல கேட்ட குரல், மீனாட்சி மனசுல வர்ற காட்சிகள் இதெல்லாம் என்ன?’’‘‘ஏன் இதெல்லாம் இல்லூஷனா இருக்கக் கூடாது..?’’‘‘அதெப்படி ஒரே சமயத்துல ஒரே இல்லூஷன் ரெண்டு பேருக்கு ஏற்பட முடியும்?’’‘‘அப்ப நீ அதுவொரு பூர்வஜென்ம விஷயம்தான்னு சொல்றியா?’’‘‘நடக்கறதெல்லாம் வெச்சிப் பார்த்தா… அப்படியும் நினைக்கத் தோணுது. மூடநம்பிக்கைன்னு அதை ஒதுக்கித்தள்ள என்னால முடியல.’’‘‘சரி மணி... போகப் போக என்ன நடக்குதுங்கறதப் பாத்துட்டு, நாம இறுதி முடிவெடுப்போம். இப்ப நாம பேசிக்கிட்டதை எல்லாம் சுந்தர்கிட்ட சொல்லிடறேன்.’’‘‘குட்... வெய்ட் பண்ணுவோம். திரும்பச் சொல்றேன், இதுவரை நடந்தது எதுவும் பெருசே இல்ல. இனிதான் எல்லாமே இருக்கு...’’‘‘பயமுறுத்தாதே... போனை வை!’’போனை கட் பண்ணிய அழகியபாண்டியன், சுந்தரை நேரிலேயே பார்த்துப் பேசிவிட முடிவுசெய்து, புறப்பட்டார்! மீனாட்சியின் வீடு.அவள் வீட்டு வாசலில் தேங்கிநின்ற ஆட்டோவில் இருந்து உதிர்ந்தாள் ரோசி. சுடிதாரில், பின்னல் போட்ட தலையோடு நெற்றியில் குங்குமம் மின்ன மங்களகரமாக இறங்கியவள், காலிங்பெல்லை அழுத்தவும், சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள் மீனாட்சி.‘‘இங்க மீனாட்சின்னு...’’‘‘நான்தான்... நீங்க?’’‘‘என்பேர் சொர்ணலதா. நான் ஒரு மெடிக்கல் ஸ்டூடன்ட். எஸ்பெஷலி சைக்காலஜி என் ஃபேவர்.’’‘‘சரி, என்னை நீங்க எதுக்குப் பாக்கணும்?’’‘‘டாக்டர் துவாரகநாத் உங்க அட்ரஸ் கொடுத்து அனுப்பிவெச்சார்.’’ ரோசி சொல்லும்போதே, பின்னாலேயே ரமேஷும் வந்தான். ரோசியையும் ஒரு மாதிரி பார்த்தான். அவன் பார்க்கவும், “ஹலோ சார்...’’ என்றாள். அப்போது அவள் பின்னால் “தாயே மீனாட்சி...’’ என்கிற குரலோடு அந்தப் பொதிகைமலை பெண்சித்தர்!- ரகசியம் தொடரும்...