- இந்திரா சௌந்தர்ராஜன்35ரோசி சொன்னதைக் கேட்ட ஆனந்தமூர்த்திக்கு, அப்போதே உடம்பு நடுங்கத் தொடங்கிவிட்டது.“ரோசி... நீ என்ன சொல்றே? என்னால எதையுமே நம்பமுடியல. இங்க, இப்ப நம்மள போலீஸ் வாட்ச் பண்ணிக்கிட்டிருக்கா?’’“பண்ணிக்கிட்டிருக்கலாம்... அதான் மைல்டு வாய்ஸ்ல பேசறேன். நீங்களும் உங்க அதிர்ச்சி, பதற்றம்னு எதையும் வெளிக்காட்டாதீங்க. இங்க வந்ததுக்கு ஒரு பன்னீர் டிக்காவை ஆர்டர்பண்ணி ஒரு காபியும் குடிச்சிட்டு நாம கிளம்புவோம்.போற வழில நான் மற்ற விஷயங்கள பேசறேன்...’’ என்றபடியே அங்கு கண்ணில்பட்ட யூனிஃபார்ம் அணிந்திருந்த பேரரை அழைத்து ஆர்டர் செய்தாள் ரோசி..ஆனந்தமூர்த்திக்கோ அவள் போலீஸ் என்று சொல்லிவிட்டதில் பல்ஸ் எகிறத் தொடங்கியிருந்தது. எவ்வளவு முயன்றும் அவர் முகத்தில் மிரட்சி பரவுவதை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.“அங்க்கிள்... பீ கூல்... சாதாரணமா இருங்க...’’ என்று தன் டேபிளுக்குக் கீழே ரெக்கார்டர் இன்ஸ்ட்ருமென்ட் எதாவது இருக்கிறதா என்று பார்ப்பது தெரியாதபடி பார்த்து எதுவுமில்லை என்று தெரிந்துகொண்டாள் ரோசி.“நம்ம விஷயம் போலீஸுக்கு எப்படித் தெரியும்? இதுக்குள்ள போலீஸ் இப்ப எப்படி வரமுடியும்? நாம் இன்னும் ஒரு ஸ்டெப்கூட அந்தத் தங்கப்புதையலை நோக்கி எடுத்துவைக்கலியே ரோசி...’’ என்று அடக்கமாட்டாமல் கேட்டார், ஆனந்தமூர்த்தி.“ஆமா, நீங்க பேப்பரோ, டி.வில நியூஸோ பாக்கறதே இல்லையா?’’“இப்ப எதுக்கு இந்தக் கேள்வி?’’“ராமச்சந்திரன்னு ஒருத்தன் தூக்குல தொங்கிட்டான். அது கொலையா தற்கொலையாங்கற கேள்வியோட ஒரு நியூஸ் ஓடிக்கிட்டிருக்கு... கேள்விப் படலியா?’’“இல்ல... ஆமா, யார் அந்த ராமச்சந்திரன்? அந்த நியூஸை இப்ப நீ எதுக்கு எனக்குத் தெரியுமான்னு கேக்கறே?’’“அந்த ராமச்சந்திரன் நம்ம பாஸ் விஸ்வநாத் சாரோட ஏஜென்டுகள்ல ஒருத்தன். வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுற பல புராதனச் சிலைகளை இவன்தான் நம்மகிட்ட இருந்து வாங்கி கடத்துவான்...’’“இவன் ஏன் தூக்குல தொங்கணும்?’’.“அவன் எங்க தொங்கினான்? நான்ல தொங்கவிட்டேன்...’’ - ரோசி அப்படிச் சொன்ன மறுவிநாடியே ஆனந்தமூர்த்திக்கு நெஞ்சை அடைத்தது. கண்ணிரண்டும் நூல் கட்டி இழுத்ததுபோல் விரிந்தது.“அதிர்ச்சியா இருக்குல்ல..?’’“அ... ஆமா... எப்படி இப்படி ஒரு விஷயத்தை ஏதோ பாப்கார்ன் சாப்பிடற மாதிரி பேசறே?’’“பேசணும்... நான் மட்டுமில்ல... நீங்களும்! இப்படி எல்லாம் நடந்து கிட்டாதான் நம்ம தொழில்ல நாம தொடர முடியும்.’’“ரோசி... நீ சொல்ற, செய்யற எல்லாமே எனக்குப் புதுசு! உன் வயசுக்கும் உன் செயலுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரிதான் உன் தோற்றமும் இருக்கு. எனக்கு நீ சொல்ற ஒவ்வொரு விஷயமும் புதிரா, அதிர்ச்சியா இருக்கு...’’“இதெல்லாம் கம்மி அங்க்கிள்... நீங்க பயந்தா இதுல தொடர முடியாது. அது மட்டுமில்ல...’’ரோசி சற்று இடைவெளிவிட்டு கூர்மையாக ஆனந்தமூர்த்தியைப் பார்க் கவும், பேரர் பன்னீர் டிக்காவை ஒரு ட்ரேயில் சுமந்துவந்து முன்னால் வைத்தான்.சதுரசதுரமாக பன்னீர் துண்டுகள் மசாலா குளியலோடு சற்றே தீய்ந்தும், சற்றே சிவந்தும் நாக்கில் எச்சிலைக் கொப்பளிக்கச் செய்தது. அதில் ஒரு துண்டை ஸ்போர்க்கில் குத்தி எடுத்து, அப்படியே வாயில் போட்டு மென்றபடியே, “நீங்க இனி எங்க கூட்டணில இருந்து விலகவும் முடியாது...’’ என்றாள்.“ரோசி... ஏன் இப்படி பயமுறுத்தறே- நம்மள சுத்தி இப்ப அப்படி என்ன தான் நடக்குது?’’ - ஒரு மண்புழு பருமனில் நெளிந்து உருண்ட வியர்வையைத் துடைத்துக்கொண்டே கேட்டார், ஆனந்தமூர்த்தி.“முதல்ல ஒரு பீஸை எடுத்து வாய்ல போடுங்க. காபி வரவும் குடியுங்க. திரும்பவும் சொல்றேன், சகஜமா இருங்க. டென்ஷன் ஆகாதீங்க...’’“முடியலியே...’’“லட்சாதிபதியா வாழணுமா, வேண்டாமா?’’“அதுக்கு ஆசைப்பட்டுத்தானே துணிஞ்சி வந்துருக்கேன்...’’“துணிஞ்சிவந்தா எதுக்கு இப்படி வேர்க்குது?’’“சரி... விவரமா சொல்... அந்த ராமச்சந்திரனை ஏன் தூக்குல தொங்க விட்டே?’’“துரோகம் பண்ணா அதான் தண்டனை... ஒரு நடராஜர் சிலையை கும்ப கோணத்துல ஒரு ஸ்தபதிகிட்ட ஆர்டர் கொடுத்து செய்து வாங்கி, அதை ரசாயனக் குழில ஒரு மூணுமாசம் போட்டு மூடிவெச்சு எடுத்து இது ஏழாம் நூற்றாண்டோட சிலை- மாணிக்கவாசகர் பூஜை செய்ததுனு புளுகினா, அது துரோகமில்லையா?’’“அது என்ன ரசாயனக் குழி?’’“பலவிதமான கெமிக்கல்ஸ், பவுடர்களை மண்ணுல கலந்து சிலைகளை அந்த மண்ணால மூடும்போது அந்த ரசாயனம் சிலைகளை மெல்ல அரிக்கும். அது ஒரு மூணுமாசம் இருந்தா ஏழாம் நூற்றாண்டு சிலை மாதிரி ஒரு கேரக்டர் அதுக்கு வந்துடும். கார்பன் டெஸ்ட்டையே ஏமாத் திடும். இந்தச் சிலைகளுக்குப் பின்னால இந்த மாதிரி எவ்வளவோ விஷ யம் இருக்கு. இந்த ராமச்சந்திரன் இந்த மாதிரி தில்லாலங்கடில கில்லாடி!.நம்ப பாஸ் ஒரு நிஜமான புராதனச் சிலையை இவன் மூலமா வெர்ஜீனியாவுல இருக்கற ஒரு ஆர்ட் கேலரிக்கு வித்தார். அப்ப இவன் நாம தந்த நிஜத்தை எடுத்து வெச்சுக்கிட்டு டூப்ளிகேட்டை அங்க அனுப்பிவெச்சு நம்ப மானத்தை வாங்கிட்டான்.பாஸ் உடனேயே கூப்ட்டு வார்ன் பண்ணி இந்த பிசினஸை அவன் எங்கே யும் பண்ணமுடியாதபடி பண்ணிட்டாரு. அதனால பயங்கர காண்டா யிட்டான்.இவனுக்கு நாம மங்கம்மாவோட தங்கப்புதையல குறிவெச்சு தேடத் தொடங்கிவிட்டது தெரியும். அதைக் கெடுக்க நினைச்சவன், இந்த விஷயத்துல நாம யாரை நம்பியிருக்கோமோ அந்த பூர்வஜன்ம பொண்ணு மீனாட்சிக்கும், அவளோட பேர் அந்த சுந்தர்ங்கற ரியல் எஸ்டேட்காரனுக்கும் போன் பண்ணி ஊரைவிட்டே ஓடிடுங்க... இல்ல நீங்க காலின்னு மிரட்டிட்டான். அதனால அவங்க குழம்பிப்போய் போலீஸுக் குப் போய் கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இந்த விஷயத்தைவிட்டே ஒதுங்கிட்டாங்க.இப்ப இருக்கற நம்ம போலீஸ்காரங்க பயங்கரமான இன்டெலிஜென்ட்ஸ். அதுலயும் சைபர் க்ரைம்காரங்க உலகமகா இன்டெலிஜென்ட்டுங்க.மிரட்டுன ராமச்சந்திரனை சி.சி.டி.வி. கேமரா உதவியோட, அவன் கார் நம்பரை வெச்சு ஆர்.டி.ஓ.க்குப் போய், அட்ரஸை கலெக்ட் பண்ணி அவனை அரெஸ்ட் பண்ணக் கிளம்பிட்டாங்க.இந்த சைபர் க்ரைம்ல நமக்குன்னு ஒரு கறுப்பு ஆட்டை விலைக்கு வாங்கி வளர்த்துக்கிட்டு வர்றாரு நம்ம பாஸ். அந்த ஆடு நமக்கும் தகவல் தந்திச்சு. உடனே பாஸ் எனக்கு சிக்னல் கொடுத்தாரு. நான் நேரா அவன் வீட்டுக்குப் போனேன். இதோ இந்த ஸ்ப்ரேயரை அவன் முகத்துக்கு நேரா அடிச்சேன்.’’ – என்ற படியே தன் ஹேண்ட்பேக்கைத் திறந்து உள்ளே கிடந்த ஸ்ப்ரே டின்னை மின்னல் வேகத்தில் காட்டியவள் அதிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து ஆனந்தமூர்த்தி எதிரில் நீட்டினாள்.“இது என்ன பேச்ச பாதில நிறுத்திட்டு விசிட்டிங் கார்டை நீட்றே?’’ - வாங்கியபடியே கேட்டார் அவரும்.“புடிங்க அங்க்கிள்... நான் ஸ்ப்ரேயரைக் காட்டத்தான் பேக்கை திறந்தேன். போலீஸ் இருந்து பாத்துக்கிட்டிருந்தா அது எதுக்குன்னு யோசிக்கலாம் இல்லையா? அது விசிட்டிங் கார்டை எடுக்கன்னு அவங்க நினைக்கணும், அதான்..!’’“ரோசி... நீ என்ன எல்லா கோணத்துலயும் யோசிக்கறே... பிரமிப்பா இருக்கு எனக்கு... அப்புறம் என்னாச்சு?’’.“என்னாகும்? மயக்கம் போட்டு விழுந்தான். என்கூட இரண்டுபேரைக் கூட்டிக்கிட்டுப் போயிருந்தேன். அவங்க நம்ம ஆளுங்க. வெட்டிட்டு வான்னா, கட்டிக்கிட்டே வந்துடுவாங்க. அவங்கள வெச்சு மேல இருந்த ஊஞ்சல் கொக்கில கயிற்றை மாட்டி மயங்கினவனைத் தொங்கவிட்டுட்டு, வாசல் கதவையும் உள்பக்கம் தாள்போட்டுட்டு, மாடில ஏறி ஜன்னல் ஸ்லாப் மேல குதிச்சு கீழ இறங்கிவிட்டோம்… ஜூட்!எல்லாத்தையும் அதிகபட்சம் 15 நிமிஷத்துல பண்ணிட்டோம். அதுக்கு அப்புறம் அஞ்சு நிமிஷம் கழிச்சுதான் போலீஸ் வந்துச்சு!’’“என்ன ரோசி சொல்றே? நீங்க போனதை மாடியில இருந்து குதிச்சதை எல்லாம் அக்கம்பக்கம் யாரும் பார்க்கலியா? அந்த ராமச்சந்திரன் வீட்ல சி.சி.டி.வி கேமராவும் இல்லியா?’’“பரவால்லியே... இப்படி எல்லாம் யோசிச்சு கேட்கத் தொடங்கிட்டீ ங்களே..? குட்!“இன்னிக்கு கேமரா இல்லாத பங்களா ஏது? ஆனா, அதோட வியூவுல படாம போக எங்களுக்குத் தெரியும் அங்க்கிள். மேபி எங்கள அக்கம்பக்கம் யாராவது பார்த்திருக்கலாம். ஆனா, இதுவரை யாரும் பார்த்ததா போலீஸ் கிட்ட சொல்லல. போலீஸும் தன் விசாரணையை இன்னும் தீவிரப் படுத்தல. அதெல்லாம் இனி நடக்கலாம்...’’அவள் கேஷுவலாயக சொன்னபோது காபி வந்தது.“கமான், குடிச்சு முடியுங்க. கிளம்புவோம். ஒரு விஷயத்த நல்லா தெரிஞ் சிக்குங்க. போலீஸுக்கு என்னத் தெரியாது. ஆனா, உங்கள நல்லா தெரியும். ஏன்னா நீங்கதான் அந்த மீனாட்சி, சுந்தர்னு இரண்டு பேரையும் இங்க என்ன சந்திக்கறதுக்காக கூப்ட்டிருக்கீங்க. அதனால உங்க மேலதான் அவங்க கவனம் இப்ப இருக்கும். உங்கள நிச்சயமா விசாரிப் பாங்க... அப்படி விசாரிச்சா என்ன செய்வீங்க?’’“மைகாட்... போலீஸ் என்ன விசாரிக்குமா? என்னம்மா சொல்றே?’’“பதற்றப் படாதீங்கன்னா கேட்க மாட்டீங்களா? அதான் நான் நூல்பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் சொல்லிக்கிட்டே வரேன்ல?’’“அம்மாடி சத்யமா சொல்றேன்... இப்படி எல்லாம் ஒரு கொலை, அப்புறம் போலீஸ் விசாரணைன்னுல்லாம் வரும்னு தெரிஞ்சிருந்தா நான் இதுல இறங்கியிருக்கவேமாட்டேன்.’’.“இதே டயலாக்கை நான்கூட பேசியிருக்கேன் அங்க்கிள். ஆனா, புலம்பறதால ஒரு பிரயோஜனமும் கிடையாது. கோடி கோடியா சம்பாதி க்கணும்னா எல்லாத்துக்கும் தயாராயிடணும்.’’“சரி... நான் என்ன பண்ணணும்... நீயே சொல்.’’“அப்படிக் கேளுங்க. முதல்ல போலீஸ் என்கொயரி பண்ணும்போது பதற்றப் படாதீங்க. ஒரு ரிடயர்ட் ஆர்க்கியாலஜிஸ்ட். ரிசர்ச் பண்றதுதான் என் தொழில்னு தைரியமா சொல்லுங்க. அந்த அடிப்படைல மங்கம்மா கால தங்கக் கவச நகைகளையும் தேடிக்கிட்டிருக்கேன். அதுக்கு மீனாட்சியும், சுந்தரும் பயன்படுவாங்கன்னு நினைச்சேன்னு போட்டு உடைங்க...’’“அதானே உண்மையும்கூட...’’“அந்த உண்மையை சும்மா தில்லா சொல்லுங்க. அதுமட்டுமில்ல, அப்படி கண்டுபிடிச்சா அது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமான்னு ஒரு பெருமிதத்தோட பேசுங்க... அப்படியே என்னை எதுக்கு என்கொயரி பண்றீங்க, புரியலியேன்னு கொஞ்சம் அப்பாவியாவும் நடிங்க...’’“அப்புறம்?’’“அந்த ராமச்சந்திரன் மேட்டரை அவங்க உங்ககிட்ட பேசலாம்... பேசாம லும் போகலாம். இங்க என்ன சந்திச்சதைப் பத்தியும்கூட கேட்கலாம்...’’“ஓ... கேப்பாங்களோ?’’“கட்டாயம் கேப்பாங்க. கேட்டா ஒரு டி.வி. ரிப்போர்ட்டர் அவங்க... ஃப்ரீலான்ஸ் யூடியூபர். பரபரப்பான விஷயங்கள படம்பிடிக்கறது, பேட்டி எடுக்கறதுதான் அவங்க வேலை - இதுவும் ஒரு பூர்வஜன்ம விஷயம் கறதால அவங்க பேட்டி எடுக்க விரும்பினாங்கன்னு சொல்லுங்க...’’“இதுமட்டும் கொஞ்சம் பொய். இருந்தாலும் இப்படித்தான் சொல்லியாக ணும். சொல்லிட்றேன்...’’“பயப்படாதீங்க... போகப்போக செத்துப்போன ராமச்சந்திரன் ஒரு கடத் தல் ஏஜென்டுங்கற விஷயம் தெரிஞ்சு, போலீஸ் என்கொயரி அந்தப் பக்கம் திரும்பிடும். நம்மள ஃபாலோ பண்ண சான்ஸ் இல்லை.’’.“எல்லாம் சரி... இனி இந்தப் புதையல்வேட்டைல நாம என்ன பண்ணப் போறோம்?’’“இந்தக் கேள்விக்குத்தான் காத்திருந்தேன். அந்த மீனாட்சியும் சுந்தரும் இப்போதைக்கு பயந்து ஒதுங்கிட்டாலும் முழுசா ஒதுங்க முடியாதுன்னு தான் நான் நினைக்கறேன். அவங்கமேல ஒரு பார்வை நமக்கு எப்பவும் இருக்கணும்.அதேசமயம் உங்க டிபார்ட்மென்ட் ரெக்கார்ட்ஸ்ல நிச்சயமா இதுசம்பந்த மான க்ளூஸ் இருக்கலாம். நீங்க அதைத் தேடிக் கண்டுபிடிக்கணும்...’’“அதை எல்லாம் பலர் பலதடவை தேடிப் பாத்துட்டாங்க. புதையல் இந்த மதுரைல ஓரிடத்திலே இருக்கறது மட்டும் நிஜம். ஆனா, இடத்தைதான் தெரிஞ்சிக்கவே முடியல. இந்தப் பூர்வஜன்ம விஷயம் என் கவனத்துக்கு வரவும்தான் நானே உங்கள நோக்கி வந்தேன். ஆனா, இவங்கள இந்த ராமச்சந்திரன்கறவன் இப்படி மிரட்டுவான்னோ, இவங்களும் பயந்து ஒதுங்கிடுவாங்கன்னோ கொஞ்சம்கூட எதிர்பார்க்கலையே...? அவனை கொலை வேற பண்ணித் தொலைச்சு ஒரு நல்ல தேடலை ஒரு க்ரைமா நீ மாத்திட்டே... அத நினைச்சாதான் பக்கு பக்குங்குது...’’“அவன கொல்லாம விட்ருந்தா நம்ப மூவ்மென்ட்டை எல்லாம் கவனிச்சு போலீஸுக்குப் போட்டுவிடத் தொடங்கிடுவான். அவனைப் போட்டுத் தள்ளினதுதான் சரி. இனி அவன் பேச்சும் நமக்குத் தேவையில்லை.நான் சொன்னமாதிரி நீங்க உங்க டிபார்ட்மென்ட் ரிக்கார்ட்ஸ்ல க்ளூவை தேடுங்க. நான் அந்த மீனாட்சிய பாத்துக்கறேன்...’’“நீ பாத்துக்கிறியா... எப்படி?’’“போகப்போக பாருங்க. இப்ப புறப்படுங்க! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். பதற்றப்படாம பேசினாலே போதும் - எதுவும் நடக்காது.’’ரோசி புறப்படுவதற்கு ஆயத்தமாக எழுந்து நின்றாள். பேரர் பில்லோடு வரவும் ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை ‘மிச்சத்தை நீயே வெச்சுக்கோ’ என்கிற சைகையோடு கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினாள்.ஆனந்தமூர்த்திக்குள் அடுத்து என்ன நடக்குமோ என்கிற ஒரு குழப்பம்... அவர்கள் இருவரையும் பார்ப்பது தெரியாமல் பார்த்தபடி இருந்த ஒரு விஜிலென்ஸ் போலீஸ்காரர் ஏ.எஸ்.பி. மணிவண்ணனைத் தொடர்பு கொள்வதற்குத் தயாரானார்.-ரகசியம் தொடரும்