முன்பு, ‘ஒரு படத்தை கதைக்காக ஒத்துக்கொள்வதா? இல்லை ஹீரோவுக்காக ஒத்துக்கொள்வதா? எப்படி முடிவு செய்வது?’ என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தாராம் பூஜா ஹெக்டே. ஆனால், இப்போது தெளிவாகி விட்டாராம்... “ ‘மொகஞ்சதாரோ’ படத்தை நான் ஹிருத்திக் ரோஷனுக்காக ஒத்துக்கொள்ளவில்லை, கதைக்காகத்தான் அதில் நடித்தேன். ஆனால் படம் பிளாப். ‘ராதே ஷ்யாம்’ படத்தை பிரபாஸுக்காக ஒத்துக் கொண்டேன், அதுவும் பிளாப். அதற்கு பின்பு நான் என் படங்களின் வெற்றி தோல்வி பற்றி கவலையேபடுவதில்லை. ஏனென்றால் அது என் கையில் இல்லை. இப்பொழுதெல்லாம் முழுக்க முழுக்க என் ரசிகர்களை எப்படியெல்லாம் திருப்திபடுத்துவது என்று மட்டும் தான் யோசிக்கிறேன். அதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறேன், நிம்மதியாக தூங்குகிறேன்!” என்று இதயத்தில் கை வைத்து சொல்கிறார் பூஜா.