சராசரிக்கும் குறைவான உயரம், அடித்தொண்டையில் இருந்து எழும் குரல், அதை இழுத்துப் பேசும் வித்தியாசமான ஸ்டைல், பார்த்தாலே படக்கென சிரிப்பை வரவழைக்கும் தோற்றம் என தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் காமெடியன் ரெடின் கிங்ஸ்லி. ப்ளாக் காமெடி, அண்டர் காமெடி, டைமிங் காமெடி, ரைமிங் காமெடி.. என எல்லாக் களங்களிலும் புகுந்து புறப்பட்டு வருபவர். அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் செம பிஸியாக இருந்தவரிடம் ஒரு மாலை வேளையில் பேசினோம்....டான்சரா இருந்து காமெடியனா ஆனவராமே நீங்க..? “சென்னையிலயே பிறந்து வளர்ந்தவன் நான். 46 வயசு ஆகுது எனக்கு. அடிப்படையில் நான் ஒரு டான்சர் தான். 4 வருஷம் ஒரு டான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தேன். அங்க நான்தான் க்ளவுன் மேன். டான்ஸோடு மக்களை மகிழ்விக்கிற வேலை. அப்பவே, காமெடிக்குள்ள வந்தாச்சு. அப்புறமா, அம்யூஸ்மென்ட் பார்க்ல 9 வருஷம் என்டர்டெய்ன்மென்ட் இன்சார்ஜா இருந்தேன். அங்கேயும் தினமும் டான்ஸ் ஆடுறது, மக்களை மகிழ்விக்கிறதுன்னு இருந்தேன். இப்போ, அதை சினிமாவில் செய்யுறேன். கிட்டத்தட்ட 30 வருஷங்களா இதே வேலைதான்..நெல்சன் உங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறாரே..? “சினிமாவுக்கும் எனக்கும் சம்மந்தமே கிடையாது சார். எங்க டைரக்டர் நெல்சன் தான் என்னை சினிமாவுக்குக் கூட்டி வந்தார். சரியான வித்தைக்காரர் அவர். காலேஜில் அவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர். அப்போ நான் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்திட்டு இருந்தேன். சென்னை தீவுத்திடல் உட்பட, பல பொருட்காட்சிகளை நடத்தி இருக்கிறேன். 10 லட்சம் பேருக்கு மேல வந்து போற இடம் அது. அங்க, 500 பேருக்கு மேல வேலை வாங்கணும். நான் சீரியஸாக கத்தி அவர்களிடம் வேலை வாங்கிக்கிட்டிருப்பேன். அது நெல்சனுக்குக் காமெடியகத் தெரிந்திருக்கிறது.‘தவ்ளுண்டு இருந்துட்டு இந்தக் கத்துக் கத்துது! யார்ரரா இந்த பைத்தியம்?’ன்னு என்னை நோட் பண்ணியிருக்கார். சமயம் பார்த்து எனக்குள் இருந்த அந்த காமெடியனை நடிக்க வைத்துவிட்டார். ‘வேட்டை மன்னனில்’ அறிமுகப்படுத்தினார். படம் ட்ராப் ஆனதால், கோலமாவு கோகிலா முதல் படமாக வெளியானது. சினிமாவில் எனக்கும், அவருக்கும் அதுவே முதல் படம். வாழ்க்கையில் 'காட்பாதர்' போல எனக்கு 'சினிமா ஃபாதர்' நெல்சன்தான்.”.'ஜெயிலர்' படத்தில் உங்களோட கேரக்டர்..?"உஷ்ஷ்ஷ்.. ஜெயிலர் படம் பற்றிய எந்தக் கேள்விக்கும் என் பதில் இதுதான் சார். அதைப் பத்தி எதையுமே என்கிட்ட கேட்காதீங்க. படம் நல்லா வரும். ரிலீஸாகட்டும் அப்புறம் பாருங்கள். அந்தப் படம் குறித்த விஷயங்கள் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டுமே!" ரஜினி உங்க நடிப்பைப் பாராட்டினாராமே.?"அண்ணாத்த படம் சமயத்துல நடந்த சம்பவம் அது. காமெடியன்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் தருவதில் ரஜினிக்கு நிகர் அவரே. அவரது ஆரம்ப காலப் படங்களில் இருந்தே காமெடிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார். ‘அண்ணாத்த’ படத்தில் நான் அவரோடு நடித்த சமயத்தில் முதலில் எனக்கு வசனம் இல்லை. சின்ன சீன் தான் பிளான் பண்ணியிருந்தார் டைரக்டர்.அந்தக் காட்சியில் நான் 'ஏய்..' என என் ஸ்டைல் மாடுலேஷனில் கத்திப் பேசிட்டேன். அந்த ஷாட்டை அப்படியே கண்டினியூ பண்ணி நடித்த ரஜினி சார், ஷாட் முடிந்தவுடன் ரொம்ப ஹேப்பி ஆகிட்டார். சிவா சாரிடம், ‘இது நல்லா இருக்குல்ல..’ என ஆச்சரியமாகச் சொன்னதோடு, என்னிடம் ‘செமயாப் பண்ண.. செமயாப் பண்ண..’ எனச் சொல்லிப் பாராட்டினார். நிச்சயமாக வேறொரு ஹீரோவாக இருந்தால் அது போன்ற ஒரு வாய்ப்பை நமக்கு தர வாய்ப்பில்லை. அதுதான் ரஜினி சார்.”.நடிகர் சந்தானத்திற்கு உங்களுக்குமான நட்பு..?"எல்லா காமெடியன்களும் வளர வேண்டும் என நினைப்பவர் சந்தானம் சார். அவர்களுக்கான இடத்தை அப்படியே கொடுப்பார். எந்த டயலாக்கை யார் சொன்னால் எடுபடும் என்ற வித்தை அவருக்கு நன்றாகவே தெரியும். காமெடியை டெவலப் செய்து கொண்டே இருப்பார். ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூன்றாம் பாகம், 'டிடி ரிட்டன்ஸ்' வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் காமெடியில் அதகளம் செய்திருக்கிறோம். ‘ஏ1’ படத்தை விட டபுள் மடங்கு காமெடி, வேற லெவலில் இருக்கும். நிச்சயம் ரசிகர்களுக்கு காமெடி ட்ரீட் காத்துக்கிட்டு இருக்கு." இப்போது காமெடிப்படங்கள் அதிகம் வருவதில்லையே..? “உண்மைதான்.. முதலில் காமெடிக்கென அதிகப் படங்கள் வந்தன. ராமநாராயணன், வி.சேகர் போன்றோர் குடும்பக் கதைகளுடன், காமெடியையும் சேர்த்து எடுத்தனர். அதுபோன்ற படங்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும். ஆக்சன், யதார்த்தப் படங்கள் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தாலும், காமெடிப் படங்களையும் எடுக்க வேண்டும். ஃபேமிலியாக எல்லோரும் விரும்புவது காமெடிப் படங்கள்தான்.”.உங்களுக்குப் பிடித்த காமெடியன் யார்? “எனக்கு எல்லா நடிகர்களையும் பிடிக்கும். இவரைப் பிடிக்கும், அவரைப் பிடிக்காது என்றெல்லாம் சொல்வதற்கில்லை. எல்லாக் காமெடியன்களுமே திறமையானவர்கள் தான். தாங்கள் செய்வதில் பெஸ்ட் ஆகச் செய்ய வேண்டுமெனத் தான் மெனக்கெடுவார்கள். ஆனால், சமயங்களில் சிலது எடுபடாது. சில காமெடிகள் பெரிய வரவேற்பைப் பெற்று விடும். அது, நம் கைகளில் இல்லை. அதனால், நம் வேலையைச் சரியாகச் செய்வோம்.” அடுத்து நடிக்கும் படங்கள்..? “சூர்யாவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா, மார்க் ஆண்டனி, ஈரம் படத்தின் ரெண்டாம் பாகமான சப்தம், சதீஷ் உடன் கான்ஜுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறேன். தாணு சார் தயாரிப்பில், சுதீப் உடன் ஒரு கன்னடப் படத்திலும், மாருதிராவ் இயக்கத்தில் பிரபாஸ் உடன் ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்கிறேன். முன்பெல்லாம் மற்ற மொழிப் படங்களின் ஹீரோக்களைத் தான் தெரியும். இப்போது ரீமேக், டப்பிங் படங்கள் அதிகம் வருவதால் எங்களைப் போன்ற காமெடியன்களுக்கும் எல்லா மொழிகளிலும் ரீச் கிடைக்கிறது. இது ஒரு நல்ல மாற்றம் தான்.” - சி.எம்.ஆதவன்