ஒருத்தரோட சொதப்பல் படம் ஓடிச்சின்னா அவர் சூப்பர் ஸ்டார்! அந்த இடத்துல ரஜினிதான் இப்போ இருக்கிறார்... சினிமாவில் திரைக்கு பின்னால உழைப்பவர்களுக்கு ஒரு மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்க காரணமாக இருந்தவர்களுள் முக்கியமானவர் ‘ஃபெப்ஸி’ விஜயன். சினிமாவில் சண்டை பயிற்சியாளராக எண்ட்ரி ஆகி, இப்பொழுது வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் என கலக்கிக் கொண்டிருக்கிறார். தோற்றம் கொஞ்சம் முரட்டுத்தனமாக இருந்தாலும் குழந்தை மனசுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார்.... . நீங்க எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க? “ எங்களோட சொந்த ஊரு தஞ்சாவூர். பிறகு நாங்க சென்னை வந்துட்டோம். என்னோட 16 வயசு வரை எனக்கு சினிமா ஆசை இல்லை. எங்க அப்பா சுவாமிநாதன், 'குடியிருந்த கோவில்','புதிய பூமி','இதய வீணை' என நிறைய புரட்சித்தலைவர் படங்களுக்கு சண்டை பயிற்சியாளரா ஒர்க் பண்ணிருக்காரு. குறிப்பாக 'அடிமைப்பெண்' படத்துல வாய் தைக்கத சிங்கத்தை பயன்படுத்தி, அதுகூட எம்.ஜி.ஆரை மோதவிட்டு பரபரப்பான அந்த சண்டைக் காட்சியை எந்த பிரச்னையும் இல்லாமல் அழகா அமைத்திருப்பாரு. அப்பா சர்க்கஸ்ல வேலை பாத்ததுனால கொஞ்சம் கொஞ்சமாக அந்த சிங்கத்தை பழக்கப்படுத்தி அந்த காட்சியை நிஜமா உருவாக்குனவரு. ஒருகட்டத்துல குடும்பத்துல கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை வந்தப்போ வேற வழி இல்லாமல் நானும் சினிமாவுக்குள்ள வந்துவிட்டேன். கன்னடத்துல தான் என்னோட முதல் படம். இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் தான் எனக்கு முதல்ல வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தி வச்சாரு. ” .எம்.ஜி.ஆர், கலைஞர் ரெண்டு பேருக்கும் நீங்க நெருக்கமாமே? “என்னோட 5 வயசுல இருந்து எம்.ஜி.ஆர். தான் என்னை படிக்க வச்சு வளர்த்தது. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு, எம்.ஜி.ஆர். வந்தாதான் நான் ஸ்கூலுக்குப் போவேன்னு அழுது கலாட்டா பண்ணி, கடைசில அவர் தான் என்னை கொண்டு வந்து ஸ்கூல்ல சேத்துவிட்டாரு. இப்போ வரை நான் எம்.ஜி.ஆரின் மிகப்பெரிய வெறியன். நான் வளர்ந்து வர்ற நேரத்துல அப்பா என்னை கலைஞர்கிட்டவும் அறிமுகப்படுத்துறாரு. எம்.ஜி.ஆர்.கு தெரியாம கலைஞரை பார்க்கப் போவேன். ஆனா எம்.ஜி.ஆர்க்கு அது தெரிச்சுரும். "என்னடா உன்னை கோபாலபுரத்துல பாத்தேன்"னு கலாய்ப்பாரு. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பிச்ச பிறகு எல்லாரும் எம்.ஜி.ஆர். பெயரை பச்சை குத்துறாங்க... நானும் அந்த லைன்ல நிக்குறேன், அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., “என்ன?”ன்னு கேட்டாரு... "இல்லை, நீங்க என்னோட இதயத்துலயே இருக்கீங்க. அதான் பச்சை குத்தலாமான்னு யோசிக்குறேன்”னு சொன்னேன்." அதுக்கு அவர், "இந்த வசனம் எல்லாம் நாங்க தான் சினிமாவுல பேசணும், நீ பேசாத"ன்னு கலாய்ச்சுட்டாரு. ”.சண்டை பயிற்சியாளர் டூ வில்லன் கதாபாத்திரம் எப்படி சாத்தியம் ஆனது? “ 'தில்' படத்துல சண்டை பயிற்சியாளரா ஒர்க் பண்ணிட்டு இருக்கும் போது, அதுல நடிக்க ஒரு கேரக்டர் தேவைப்படுது... அப்போதான் இயக்குநர் தரணி, ‘ நீங்களே அதை பண்ணுனா நல்லாருக்கும்’னு சொன்னாரு. பழம் நழுவி பாலில் விழுந்த கதையா நானும் ஓகே சொல்லிட்டேன். அதுல நான் பேசுன வசனம்தான் "டேடேடேடேடேய்..." பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்துல 'வில்லன்' படத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அதுவும் ஹிட் ஆக, அதுக்குப் பிறகு தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது.” .சந்தானத்துக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்படி நடந்துச்சு? “நான் என்னோட மகனை வச்சு 'மார்க்கண்டேயன்' னு ஒரு படம் டைரக்ட் பண்ணேன். அந்தப் படத்துல சந்தானம் நடிச்சாரு. அப்படி தான் அவர் எனக்கு அறிமுகம். அப்புறம் அவரோட 'இனிமே இப்படித்தான்' படத்துல என்னை நடிக்க வச்சாரு. அதுல தான் லுங்கி டான்ஸ் காமெடி ரொம்ப ஹிட் ஆச்சு. பிறகு ‘டி.டி. ரிட்டர்ன்ஸ்…’ அதுல என்னோட அன்பரசன் கதாபாத்திரம் வில்லந்தான், ஆனா செம காமெடி. படத்துல நான் சிரிக்க மாட்டேன், ஆனா எல்லாரும் சிரிப்பாங்க. நான் 'தில்' படத்துல பேசுன "டேடேடேடேடேய்..." வசனத்தை இங்க கொண்டு வந்துட்டாங்க. குழந்தைங்க எல்லாரும் இப்போ அந்த "டேடேடேடேடேய்" வசனத்தை சொல்லிகிட்டே இருக்காங்க.”.உங்களுக்கும் விஜய்க்கும் உள்ள பழக்கம் பற்றி சொல்லுங்க..? “ 'சச்சின்' படம் தான் நானும் விஜய் சாரும் முதன் முதலா இணையற படம். தயாரிப்பாளர் தாணு சார் தான் ஹியூமர் கலந்த ஃபைட் சீன் வேணும்னு சொன்னாரு. அதுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. பிறகு 'போக்கிரி','அழகிய தமிழ் மகன்' படங்களிலும் ஒர்க் பண்ணேன். அவரோட நான் ஒர்க் பண்றதுக்கு முன்னாடியே அவர் பெரிய ஆக்ஷன் ஹீரோவா மாறிட்டாரு.”.யார் ‘சூப்பர் ஸ்டார்’ னு விஜய், ரஜினி ரசிகர்கள் சண்டை போடுறதை பத்தி என்ன நினைக்குறிங்க? “யார் சூப்பர் ஸ்டார் அப்டிங்குற கேள்வியே தப்பு. சூப்பர் ஸ்டார் அப்டினாலே அது ரஜினி தான். விஜய்க்கு மெகா ஸ்டார் பட்டம் வேணூம்னா கொடுக்கலாம். விஜய மெகா ஸ்டாருனு கூப்பிடுறதுல நான் சந்தோசபடுறேன். ஒரு நடிகரோட ஒண்ணுத்துக்கும் உதவாத படம் எப்போ ஹிட் ஆகுதோ அப்போ தான் அவர் சூப்பர் ஸ்டார். ரஜினி ஏற்கெனவே அந்த இடத்துல உக்காந்துருக்காரு. அவரை ஏன் இழுக்கிறீங்க. நான் விஜயை குறை சொல்லல, ரஜினி சூப்பர் ஸ்டார் விஜய் மெகா ஸ்டார், அதான் சரி!” - பா.ரஞ்சித் கண்ணன்படங்கள் - ரா.பிரவீன்