பொற்கயல்- வில்லரசன்மாறவர்மன் குலசேகர பாண்டியனின் காலகட்ட கதைக்களம். மின்னவன் எனும் படைத்தலைவன் மூலம் கதை தொடங்கி நேர் பாதையில் பயணித்தாலும் அடுத்தடுத்து வளவன், வில்லவன் எனும் இரு பாதைகளில் பிரிந்து செல்கிறது. பாண்டியர், சோழர், சேரர், சோடர், ஹொய்சாளர், காகதீயர், சிங்களர் என ஒட்டுமொத்த தென்திசை அரசுகளையும் அரசியலையும் பேசுகிறது இந்த சரித்திர நாவல்.சடையவர்மன் சுந்தர பாண்டியன் எனும் மாபெரும் அரசன் தனது காலத்தில் ஒட்டுமொத்த தென்னகத்தையும் தனது ஆளுகைக்கு உட்படுத்துகிறான். அவன் மறைவிற்குப் பிறகு, அவன் மூத்த மகனான மாறவர்மன் குலசேகர பாண்டியன் அரியணையில் அமர நேர்கிறது. அத்தோடு இல்லாமல் தென்னகத்தில் ஆங்காங்கே முடிசூடி அரசப் பிரதிநிதிகளாக குலசேகரனின் சகோதரர்கள் ஆண்டுவருகிறார்கள். அவர்களுக்குள் எழும் போட்டி பூசல்களும் அதைத் தடுக்க குலசேகரன் எடுக்கும் நடவடிக்கைகளும் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளது. சரித்திர நாவல் உலகில் வில்லரசனுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது!வெளியீடு: அன்னை புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை&17. போன்: 9444126523. பக்கம்: 824. விலை: ரூ. 750..கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது- மால்கம்மதி என்கிற இளைஞன் ‘லைஃப்ல சில காலங்கள், நம்ம மூளையிலேயே இருக்காத மாதிரி நீக்கிடணும். அதுக்கு ட்ரீட்மென்ட் இருக்கா டாக்டர்? குறிப்பிட்ட வருஷத்துல நடந்ததெல்லாம் மூளையிலிருந்து அழிக்கிற மாதிரி ஆபரேஷன் ஏதாவது இருக்கா?’ என்கிற கேள்வியுடன் மருத்துவர் எழிலனைப் பார்க்க வருகிறான்.சிவா எனும் பெண்ணோடு பழகியது, உரையாடியது உள்ளிட்ட அவள் தொடர்பான நினைவைத் தூர எறிய விரும்பியே, தன்னை மதி சந்திக்க வந்திருப்பது எழிலனுக்குப் புரிந்துவிடுகிறது. மதியின் கோரிக்கைக்கு செவிமடுத்து, ஓர் அறுவை சிகிச்சையை அவனுக்குச் செய்கிறார் எழிலன். சிவாவினுடான நினைவு அவனது மூளையிலிருந்து அகற்றப்படுகிறது.ஆனால், அந்நினைவுகள் பகலில் வருவதை மட்டும்தான் எழிலனால் அகற்ற முடிந்தது.இரவில் கனவில் வரும் சிவாவின் நினைவுகள் மதியின் மதியைக் கெடுக்கிறது. இதுபோல எல்லாக் கதைகளும் சுவாரஸ்யத்தைத் தனக்குள் வைத்திருக்கின்றன. வெளியீடு: பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை&18. போன்: 044&24330024. பக்கம்: 104. விலை: ரூ.100..கதை சொல்லும் குறள்- சாந்தகுமாரி சிவகடாட்சம்‘திருக்குறள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமுதாயம் உலகிற்குத் தந்த கருத்தியல் களஞ்சியமாகும். அதைக் கதை வடிவில் காட்சிப்படுத்திச் சொல்வது சிறிது கடினமே. எனினும் குறள் மேல் வைத்த அளப்பரிய காதலால் இந்நூலாசிரியர் அறம், பொருள், காமத்துப்பாலின் அதிகாரங்களுக்குக் கதைகள் எழுதித் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றியுள்ளார்’ என பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது வாழ்த்துரையில் சொல்லியிருப்பதற்கு முற்றிலும் தகுதிக்குரிய புத்தகம் இது.முன்பெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் இருந்தன. இவ்வகுப்புகளில் ஆசிரியர்கள் ‘வாழ்க்கைக்கல்வி’ எனும் பெயரில் ஒரு மனிதனுக்குத் தேவையான குணநலன்களை, நேர்மறை எண்ணங்களை, உயர்ந்த சிந்தனைகளை எல்லாம் கற்பிப்பார்கள். அந்த நிலை இப்போது இங்கு இல்லையே என்று ஏங்குகிற பெற்றோர்கள் அவசியம் இந்த ‘கதை சொல்லும் குறள்’ நூலை தங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தரவேண்டும்!வெளியீடு: சாந்திசிவா பப்ளிகேஷன்ஸ், 1, லட்சுமிபுரம், 2-வது தெரு, ராயப்பேட்டை,சென்னை&14. போன்: 8807041841. பக்கம்: 803 (3 தொகுப்புகள்). விலை: ரூ.1,250..பூசெண்டுக் காலங்கள்இ.ஜே.சுந்தர், ந.ஆ.ஜெயவேலன்53 அண்டுகளுக்கு முன்பு, பல கல்லூரி மாணவர்களின் முயற்சியால் வெளிவந்தது ‘பூச்செண்டு’ இதழ். அன்றைய நாட்களில் வளர்ந்துவரும் படைப்பாளிகளின் வேடந்தாங்கலாக ‘பூச்செண்டு’ இருந்தது.‘மாணவர்களுக்காக மாணவர்களால் நடத்தப்பட்ட இதழ்’ என்கிற பெருமை கொண்ட பூச்செண்டு இதழைப் பற்றி பல ஆளுமைகளின் கட்டுரைகள், அக்காலத்தில் அந்த இதழ்களில் இடம்பெற்ற மிக முக்கியமான கட்டுரைகளின் பதிவுகள், புகைப்படங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றிருக்கிறது.இத்தொகுப்பில் ‘இளமை என்னும் பூந்தோட்டம்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் மாலன் எழுதிய கட்டுரையின் வழியாக, ‘பூச்செண்டு’ மாணவர் இதழின் முக்கியத்துவமும் சிறப்பும் இன்னும் விரிவாக நமக்கு விளங்குகிறது.பிற்காலங்களில் தமிழிலக்கியச் சூழலிலும், பொதுவெளியிலும் பிரபலமாக விளங்கிய பலரும் தமது கல்லூரி மாணவர் பருவத்தில் இந்தப் பூச்செண்டு இதழில் தனது பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள் என்கிற செய்தியும் புதிய தகவலாகும்!வெளியீடு: ரிதம் வெளியீடு, 58, முதல் தளம், ஆலந்தூர் சாலை, சைதாப்பேட்டை, சென்னை&15. போன்: 044&23811808. பக்கம்: 160. விலை: ரூ.350.