கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய பேட்டியில் கூறியபடி நாங்களும் ‘வேட்டையாடு விளையாடு’ பார்ட்-2க்காக காத்திருக்கிறோம். கமல் சார் சீக்கிரம் ஓகே. சொல்லுங்க!- என். இளங்கோவன், மயிலாடுதுறை.அடிக்கிற வெயிலை சமாளிக்கமுடியாமல் ‘அரசார்’ ஊட்டி, கொடைக்கானல்னு சுற்றுலா சென்றுவிட்டாரோ? மொத்தத்தில் ‘அரசு பதில்கள்’ பகுதி இல்லாத சென்றவார குமுதம் ‘வெறிச்’சென்றிருந்தது!- த. சிவாஜி மூக்கையா, சென்னை.இரண்டு ஆண்டு தி.மு.க. ஆட்சியின் நிறைகுறைகளைத் தெளிவாக எடுத்துரைத்து, நடுநிலையாக அலசிய விதம் அருமை.- கோ.சு. சுரேஷ், கோயம்புத்தூர்.தத்தெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; அதற்கும் தகுதி வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டீர்கள்! நினைத்தவுடன் தத்து என்பது முடியாத விஷயம் என்பதைத் தத்தெடுப்பவர்கள் ஜீரணித்துதான் ஆகவேண்டும்.- அ. சுஹைல் ரஹ்மான், திருச்சி.குமுதம் குறுக்கெழுத்துப்போட்டி உண்மையாகவே மூளையைக் கசக்கிப் பிழியவைக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு புதிய செய்தியை, சொல்லைத் தந்துவிடுகிறது.- வே. புனிதா வேளாங்கண்ணி, திருச்சி-7.கோடை விழாக்களால் சுற்றுச்சூழல் மாசுபடும் மலைவாசஸ்தலங்களைப் பேணிக் காக்கவேண்டிய அவசியத்தை தலையங்கம் உணர்த்தியது. மலைப்பகுதிகள் நம் இயற்கையின் நன்கொடைகள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.- அப்துல், திருச்சி.கரிகாலனின் ’அறம், அரசியல், அஞ்சலை’ திடீர் குறுந்தொடர்... தொடக்கமே ‘தெறி’யா இருக்கு. வித்தியாசமான விஷப்பரீட்சை எழுதுவதில் குமுதம் வித்தகனாச்சே... பலே! பலே!- அவ்வை கே. சஞ்சீவிபாரதி, கோபி.‘தி தமிழ்நாடு ஸ்டோரி’ இரண்டு ஆண்டு கால ஆட்சியின் திசையை விருப்பு வெறுப்பு இல்லாமல் தராசு போல் சொல்லி மக்களின் எண்ணத்தில் உயர்ந்துவிட்டீர். சபாஷ் குமுதம்!- எச்.சோமசுந்தரம், குழித்தலை’வயசுக்கு மரியாதை’ அசத்தும் ஜப்பான்... அடடே நல்ல விசயம்தான். ஆனால் மனிதர்களுக்கு அதிகரிக்கும் சராசரி வயசுன்னு போட்டு உலகையே உலுக்கி எடுத்துவிட்டீர்கள். மக்கள் தொகை பலமா? பலவீனமா? பாப்பையா தலைமையில் பட்டிமன்றமே நடத்தலாம்.- விமலா சடையப்பன், காளனம்பட்டி,மனுஷங்கதான் மனோபாலா சார் சேர்த்துவச்ச சொத்து’ என்று கூறிய இயக்குநர் அ. வினோத்தின் பேட்டியும் வண்ணப்படங்களும் திரையுலகம் ஒரு நல்ல மனுஷனை இழந்துவிட்டது என்று நெகிழ்ச்சியோடு உணர்த்திவிட்டன.!- த. சத்தியநாராயணன், அயன்புரம்.