1. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் பற்றி எழுந்த பல்வேறு விமர்சனங்களுக்கு தக்க விளக்கமாக அமைந்திருந்தது இளங்கோ குமரவேலின் விளக்கம்!- ந.சண்முகம், திருவண்ணாமலை. 2. ‘இடிப்பாரை இல்லாத ஏமறா மன்னன்’ ஆக ஸ்டாலினை விடாமல், அவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விஷயத்தில் நடந்துகொண்ட விதத்தை இடித்துரைத்த குமுதத்துக்கு ஒரு ராயல் சல்யூட்!- ஜே. லூர்து, மதுரை 3. ‘தமிழகத்தில் போதை தலைவிரித்து ஆடுகிறது… மது குடிக்காத வர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறதே?’ என்கிற ஒரு வாசகரின் கேள்விக்கு ‘ரெண்டு ரெண்டாத் தெரிவாங்க, பரவாயில்லையா பாஸ்!’ என்கிற அரசுவின் குசும்புத்தனமான பதில் அசத்தல்!- வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்.4. ‘தொடர்ந்து ஹீரோயினா நடிக்கணும்னா, இன்னும் சில விஷயங்களை நான் கத்துக்கணும். அதைத்தான் இப்போ நான்பண்ணிக்கிட்டு இருக்கேன்’ என்று, மனம் திறந்து பேசியுள்ள ‘யாத்திசை’ படத்தின் நாயகி ராஜலட்சுமியின் நேர்காணல் நச்!-ஆ.மாணிக்கம், பொள்ளாச்சி 5. இந்த வாரம் வி.உஷா எழுதியுள்ள 'மேகமாய் வந்துபோகிறேன்' சிறுகதையின் கிளைமாக்ஸ் இதயத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அருணா, கதிர் இருவரும்… எங்கள் நினைவில் நீண்ட காலம் வாழ்வார்கள்!- மு.மதிவாணன், அரூர்.6. மருத்துவர் கு.கணேசன் எழுதிய ‘மருத்துவ அதிசயம்… மைட்டோ காண்ட்ரியா' படித்தேன். மருத்துவத் துறை எங்கேயோ உயரத்திற்கு போய்க்கொண்டிருப்பதை அறிந்து வியந்து போனேன். இதுமாதிரியான அரிய செய்திகளை உடனுக்குடன் வாசகர்களுக்கு தர குமுதத்தால் மட்டும்தான் முடியும்!-தேன்ராஜா, நெய்வேலி. . 7. ‘பிழைக்கும் விதம்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்து, சாக்லேட் தயாரித்து தம்பிடி காசுக்கு விற்று, அதில் தொள்ளாயிரம் சவரன் சேர்த்த ஆனந்த் தியேட்டர் அதிபர்… வெறும் உமாபதி அல்ல உழைப்புக்கே அதிபதி!− சி.ஜெயராமன், மதுரை. 8. இந்த வாரம் ஏகப்பட்ட ஜோக்ஸ் வெளியிட்டு எங்களின் கோடை வெம்மையை ... சிரிப்பில் சமாளிக்க வைத்தீர் அய்யா…. சிறப்பு! - நிலவழகி, மேல்பட்டி.9. ரஜினியின் ‘லால் சலாம்’ பற்றிய தகவல்கள் எல்லாமும் அப்டேட் ஆகவும், ருசிகர தகவல்களாகவும் இருந்தன!- ப.குணசேகரன், சென்னை-91.