அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரச்சாரம் செய்வதோடு, உள்கட்டமைப்பை வலுப்படுத்தி ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்ற தலையங்கம் அருமை.! ·என்.வி.சீனிவாசன், சென்னை 63. சச்சின் டெண்டுல்கர் இன்றைய இளம் தலைமுறை கிரிக்கட் துறையினருக்கு மட்டுமின்றி பிறருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார் என்பதை, அவரது 50ம் ஆண்டு பிறந்த தினத்தில் கவர் ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தது மகா சிறப்பு! .சி.கார்த்திகேயன், சாத்தூர். அஜித் பிறந்த நாள் ஸ்பெஷலில் நடிகர் அஜித் பற்றிய கட்டுரைகள், தகவல்கள், பெட்டிச் செய்திகள் அனைத்தும் அவரது ரசிகர்களை கோடை வெய்யிலில் ஜில்லுனு ஆக்கிடுச்சி! ·மு.திருநாவுக்கரசு, சத்துவாச்சாரி. கடந்த வார குமுதம் இதழில் ஆதி முதல் அந்தம் வரை ஒரே அஜித் புராணம். அழகிய குடும்ப வார இதழை சினிமா இதழாக்கிவிடாதீர் சாரே!·மனோகரன் முத்துசாமி, முகவை. என்ன சார்… இந்த வாரம் குறுக்கெழுத்துப் போட்டி வரலையே. அஜித் ஸ்பெஷல் போடுறேன்னு அதை காலி பண்ணிட்டீங்களே, நியாயமா? ·ஆ.மாணிக்கம். பொள்ளாச்சி ‘அரசு பதில்கள் பகுதியில் பிரசுரமாகும் அனைத்து கேள்விகளுக்கும் பரிசு வழங்கலாமே’ என்று கேள்வி கேட்ட வாசகருக்கே பரிசு கொடுத்து, நன்கு சமாளித்த ‘அரசு’வின் சாமர்த்தியமான பதிலுக்கு பாராட்டுகள்! * கே. ஆர். எஸ். சம்பத், திருச்சி.. ‘ வேங்கை வயல்: யாரை கேள்வி கேட்பது ?’ எனும் சமஸ் கட்டுரை.. புதிய கோணத்தில் அந்தப் பிரச்னையை சிந்திக்க வைத்தது. இப்பிரச்னைக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிகள் பிடிபடுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!·ந.சண்முகம், திருவண்ணாமலை. அஜித்தின் 52வது பிறந்த நாளில் அவர் பற்றிய 52 புதிய தகவல்களைக் கொடுத்து, அஜித் சிறப்பிதழை அமர்க்களப்படுத்துவிட்டீர்கள்.· குஞ்சன்விளை ரவி, கன்னியாகுமரி. இயக்குநர் மணிரத்னம் சினிமா மீது தான் கொண்ட காதலை 'சினிமாதான் முதல் சாப்பாடு' என்று சொல்லி தனது சினிமா ஈடுபாட்டை அழகாகப் புரிய வைத்துவிட்டார்!· கீதா, திருச்சி.21. செம மாஸா வர்றார் ‘ஜெயிலர்’ ரஜினி! அப்டேட் சொல்லும் ‘ஸ்டன்’ சிவா - சி.எம்.ஆதவன்ரஜினி, கமல், விஜய், அஜித் - யாராக இருந்தாலும் சரி... ஒரு படத்தில் ஹீரோவுக்கு வெயிட்டை ஏற்றுவதே அந்தப் படத்தில் வருகிற ஃபைட் தான். இப்போதெல்லாம் ஒரு படத்தில் ஃபைட் பக்காவாக இல்லையென்றால் படம் மொக்கை என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள். ஹீரோ அடிக்கும் அடியில் அடி வாங்கியவனின் தலை, லாரியின் இரும்பு ரிம்முக்குள் போய் சொருக வேண்டும்...ஹீரோவுக்கு வலிக்காமல் ஆடியன்ஸுக்கு வலிப்பது மாதிரி ஸ்டன்ட் காட்சிகளை எடுப்பது சாதாரண விஷயமில்லை. மரணக் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடுவது மாதிரி தான். இந்தக் கலையில் கைதேர்ந்தவர் ஸ்டன் சிவா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் தெறிக்க விட்டுக் கொண்டிருப்பவர். லேட்டஸ்டாக ச ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு, ரிலாக்ஸாக இருந்த ஸ்டன் சிவாவை சந்தித்தோம். ஸ்டன்ட் மாஸ்டர் என்றாலே ‘அடைமொழி’ அவசியம்தானா?“அப்படி இல்லைங்க சார். கே.எஸ். ரவிகுமார் சார், ‘பிஸ்தா படத்துல ஸ்டன்ட் மாஸ்டரா வாய்ப்புக் கொடுத்தார். அப்போ சிவகுமார்ங்கிற என்னோட பேரை லைட்டா சேஞ்ச் பண்ணலாம்ன்னு சொன்னார். சீனியர் டைரக்டர் அவர் சொல்லி, நான் மறுக்க முடியாது. அவர்தான் ‘ஸ்டன் சிவான்னு பேர் வெச்சார். அப்படியே, அது ஒட்டிக்கிச்சு”. விஜய் கூட ‘லியோ படத்துல நடிக்கிறீர்களாமே..?“தற்செயலா லோகேஷ் கனகராஜ் சாரை சந்திச்சப்போ, என்னோட ஸ்டன்ட்ஸ் பற்றி வியந்து பேசினார். அன்பறிவு உட்பட சிலர் என் ஒர்க் பற்றி சொன்னதாச் சொன்னார். அவரை சந்திச்சப்ப வளர்ந்த தாடி, மீசையோட ஒரு வில்லன் லுக்ல இருந்தேன். ‘இந்த லுக்லதானே தொடர்ந்து இருப்பீங்க, கூப்பிடுறேன் சார்..!’னு சொல்லிட்டுப் போயிட்டார். அது ’லியோ’ படத்துல நடிக்கறதுக்கான்னு எனக்கு தெரியாது. அதை அவர்தான் சொல்லணும்.”.முழு வில்லன் கேரக்டரில் எப்போது நடிக்கப் போறீங்க?“நடிக்கிற ஆசையோட சினிமாவுக்கு வந்தவன் நான். ஒரு படத்துல ஸ்டண்ட் மாஸ்டரா கமிட் ஆகிட்டா, அந்த வேலை மட்டும் தான் பார்க்க முடியும். நடிக்க போயிட்டா, ஸ்டண்ட்ல கவனம் செலுத்த முடியாது. அதுமட்டுமில்ல தமிழ், தெலுங்குன்னு நிறைய படங்கள்ல ஒர்க் பண்றதால என்னால நேரம் ஒதுக்கி நடிக்க முடியல.‘வேட்டையாடு விளையாடு படத்துல, ‘கண்ணு வேணும்னு கேட்டியாம்ல.!’ங்கிறது ரொம்ப பவர்ஃபுல் ஸீன். இப்பவும் சோஷியல் மீடியாவுல ட்ரெண்டிங்ல இருக்கு. அந்த ஸீன்ல நான் நடிச்சா, வேலை சீக்கிரம் முடியும்னு கமல் சாரும் ஒத்துக்கிட்டார். அப்படித்தான் அந்த ஸீன்ல நடிச்சேன். ‘ருத்ரன்’ படத்துலகூட என்னை நடிக்கத் தான் கூப்பிட்டார் கதிரேசன் சார். லாரன்ஸ் மாஸ்டர் அந்தப் படத்துல ஃபைட் மாஸ்டராவும் ஒர்க் பண்ண வெச்சிட்டார். தெலுங்குல ரவிதேஜா சார் ‘க்ராக்’படத்துல என்னை வில்லன் ரோல் பண்ணணும்னு கேட்டுக்கிட்டு, எனக்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் பண்ணார். என்னோட பசங்க கெவின் குமார், ஸ்டீபன் குமார் ரெண்டு பேரும் இப்போ ஃபைட் ஸீன்ஸ் எடுக்கிறாங்க. அதனால், நான் கொஞ்சம் ஃப்ரீ பண்ணிக்கிட்டு நடிக்க முடியுது.”தெலுங்குப் படங்களில் யதார்த்தத்தை மீறிய சண்டைக் காட்சிகள் இடம்பெறுதே.?“அதுதான் அவங்க ஸ்டைல். பாட்டும், ஃபைட்டும் நல்லா இருக்கணும். ஒரு ஃபைட் ஸீன் 15 நிமிஷமாவது இருக்கிற படங்களைத்தான் அங்கே ரசிக்கிறாங்க. அதனாலதான் அப்படி எடுக்கிறாங்க. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் சார்ன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கு. அதுக்கேத்த மாதிரி காம்ப்ரமைஸ் பண்ணாம ஃபைட்ஸ் எடுக்கணும்.’’விஜய், சூர்யாவை இயக்கிய அனுவங்கள்..?“ஆரம்பத்துல விஜய் சார் லவ்வர் பாய் கேரக்டரா பண்ணிட்டிருந்தார். அதுல சாஃப்ட்டான ஃபைட் ஸீன்ஸ் இருக்கும். ‘தேவா’, ‘லவ்டுடே’, ‘காதலுக்கு மரியாதை’, ‘ ஒன்ஸ்மோர்’, ‘காவலன்’னு நிறைய படங்கள் அவரோட ஒர்க் பண்ணிட்டேன். எந்த உயரம் போனாலும் ஒரே மாதிரி இருக்குற மனுஷன் அவர். ‘நந்தா’ படம் ஆரம்பிச்சப்போ, சூர்யாவை ஆக்ஷன் ஹீரோவா மாத்தணும்னு சொன்னார் பாலா. சிவக்குமார் சார் மேல எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கு. அவருக்காகவே, சூர்யாவுக்கு நல்ல ஆக்ஷன் சீக்வன்ஸ் காட்சிகளை வைக்கணும்னு நினைச்சேன். நானும், பாலா சாரும் சேர்ந்து புதுமையான ஃபைட் ஸீன்ஸ் வெச்சோம். அது க்ளிக் ஆகிருச்சு.”.‘பிதாமகன்’ படத்தில் அந்த சண்டைக்காட்சியை எப்படி எடுத்தீர்கள்..?“படத்தைப் பார்த்துட்டு மணிரத்னம் சாரும் இதையேதான் கேட்டார். ஒரு மணி நேரமா அதைப் பற்றி மட்டுமே பேசினவர், அப்படியொரு சண்டையை அதுவரை அவர் எடுக்கலைன்னும் சொன்னார். ஷூட் பண்றப்பவே, ‘அதுபோல ஒரு சண்டைக்காட்சியை யாராலும் எடுக்க முடியாததா இருக்கணும்..!’னு நானும் பாலாவும் முடிவு பண்ணிட்டோம். அதனால, அதை லைவ்வா ஷூட் பண்ணோம். அந்தக் காட்சிக்கான ரெஃபரன்ஸ் டிஸ்கவரி சேனல் பார்த்தப்போ கிடைச்சது. மானை வேட்டையாடும் சிறுத்தை போல அந்தக் காட்சியை அமைச்சேன். அதனால தான், இன்னமும் அந்தக் காட்சி பேசப்படுது”. உங்க அசிஸ்டென்ட் ‘மொட்டை’ராஜேந்திரன் இப்போது பிஸியான நடிகர்..?“4 வருஷம் என்னோட அசிஸ்டென்ட்டா ஒர்க் பண்ணவர். ‘நான் கடவுள்’ படத்துல வில்லனா நடிக்க வச்சார் பாலா. வில்லன் ரோல் மட்டுமில்ல இப்போ காமெடிலயும் கலக்கறார்”. வாழ்க்கையில் ரொம்பவும் அடிபட்டிருப்பீர்களே..?“எங்களோட ஃபீல்டு அப்படி. ஸ்டன்ட் மேன்கள் எல்லோரும் உயிரைப் பணயம் வெச்சுத் தான் நடிக்கிறோம். பிரபாஸோட தெலுங்கு ‘பில்லா’ படத்துக்காக பறக்குற ஹெலிகாப்டரை, ட்ராஃபிக்கான ரோட்டுல சேஸ் பண்ணி ஷூட் பண்ணோம். ஜஸ்ட் மிஸ்ல விபத்துல சிக்காமத் தப்பிச்சோம். இதனாலதான் பல ஹீரோக்கள் டூப் போட வேணாம்னு சொன்னாலும் நாங்க தவிர்த்திடுவோம். ‘மிஸ்டர் ரோமியோ; ஷூட்டிங் அப்போ, பைக்ல 25 அடி உயரத்துல தாவுற ஸீன்ல அடிபட்டு 6 மாசம் பெட்லதான் இருந்தேன். இப்படி எங்க வாழ்க்கைல பல அடிகள் பட்டுத்தான் ஜெயிக்கிறோம்”. உங்க குடும்பத்தில் எல்லோருமே சண்டைப் பயிற்சியாளர்களாமே..?“என்னோட மனைவி வியட்நாமைச் சேர்ந்த மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரோட பொண்ணு. கராத்தே, மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டவங்க. அவங்களை லவ் பண்ணி, முறையா பெண் கேட்டு திருமணம் செஞ்சிக்கிட்டேன். என்னோட பசங்க கெவின்குமார், ஸ்டீபன்குமார் ரெண்டு பேரும் சண்டைப் பயிற்சியாளரா இருக்காங்க. அவங்களும் இப்போ படங்கள்ல ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க”. ரஜினிகாந்த் கூட ‘ஜெயிலர்’படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது எப்படி..?“ஆமா… ரஜினி சாரை என்னோட 12 வயசுல ‘கர்ஜனை’ பட ஷூட்டிங்ல பாத்தேன். அப்போவே சார் செம மாஸ். ‘மன்னன்’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘முத்து’ படங்கள்ல வேலை பார்த்திருக்கேன்.‘கோலமாவு கோகிலா’ பார்த்திட்டு நெல்சன் சார்கிட்ட பேசினேன். அப்போ, அவர் ‘பீஸ்ட்’ ஆரம்பிச்சிருந்தார். அவரோட இருந்த நட்புல, ‘ஜெயிலர்’ல ஸ்டன்ட் மாஸ்டரா வாய்ப்புக் கொடுத்தார்.” ‘ஜெயிலர்’ படம் எப்படி வந்துள்ளது?“செம மாஸா, ஜாலியா, ரொம்பக் கிளாஸா, சூப்பரா வந்திருக்கு. நெல்சன் பிரமாதமா எடுத்திருக்கார். கிளைமேக்ஸ் வேற லெவல்ல இருக்கும். ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கு. இந்த இடத்துல ரஜினி சார் பற்றிச் சொல்லியாகணும். ரொம்பப் பணிவான மனுஷன். புது ஹீரோ போல ஆக்டிவா இருக்கார். தன்னோட பெர்ஃபாமன்ஸை டெவலப் பண்ணிட்டே இருக்கார். இந்த அளவுக்கு அவர் வளர்ந்து நிக்கிறார்னா, இதெல்லாம் தான் காரணம்!”.