கொடைக்கானல் அருகே வினோத மலைக் கிராமம் என்ற தாண்டிக்குடி பற்றி படித்ததும் பலமுறை கொடைக்கானல் சென்று இருந்தும் இந்த கிராமத்தை பார்க்காமல் வந்துவிட்டோமே என்ற ஏக்கம் ஏற்பட்டதுடன் அடுத்த முறை பார்க்க வேண்டும் என்று ஆர்வமும் ஏற்பட்டது! - உஷாமுத்துராமன், திருநகர் ’அரசே காலை கோழி கூவும்போது எழுந்தது உண்டா?’ என்ற வாசகரின் கேள்விக்கு, ’காலையில் கோழியை எழுப்புவதே அரசதான்’ என்று அரசு சொன்னதன் சூட்சுமம் கல்யாணமானவர்களுக்குத்தான் புரியும்! -பரிமளா, சென்னை. தேவிபாலாவின் ‘அவள் அப்படித்தான்’ சிறுகதை உள்ளத்தைக் கவர்ந்தது.கதையின் நாயகி மேகா கண் முன்னே நிற்கிறாள்! -மு.மதிவாணன் அரூர் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பற்றிய கட்டுரை படித்தேன். ’வெளிநாட்டு வீரர்களுடன் போட்டியிட்டு வென்று இந்தியாவிற்குப் பெருமைத் தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் தொந்தரவு செய்யும் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கை யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது இந்திய நாடே வருத்தப்பட வேண்டிய விஷயம்!- எம் இராஜேந்திரன், லால்குடி.அபூர்வ சந்திப்பில் இராம.அரங்கண்ணல், நா.பார்த்தசாரதி போன்ற – அந்தக் கால ஜாம்பவான்களைப் பற்றிஇக்கால வாசகர்கள் அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. - ஆதவன் ஏழுமலை பள்ளிக்கரணை.திருநங்கைகளுக்கும், பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்து அவர்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க விரும்பும் நடிகை தீபா சங்கரின் உயர்ந்த குறிக்கோள் பாராட்டத்தக்கது! -ந.சண்முகம், திருவண்ணாமலை பெரிய வெற்றியைப் பெற்ற ’யாத்திசை’ படத்தில் கொதியாக நடித்த சேயோன் தன்னுடைய கதாபாத்திரக்காக ஏற்றுக்கொண்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. -வைஷ்ணவி. அடையாறு.கரிகாலனின் ’அறம், அரசியல்,அஞ்சலை’ கவிதை குறுந்தொடர் அட்டகாசம். மல்யுத்த வீராங்கனைகளின் அழுகுரல் காதில் ஒலிப்பதுபோல் வேதனையாக இருந்தது. − சி.ஜெயராமன், மதுரைஆரம்பம் முதலே ஜெட் வேகத்தில் பறக்கிறது… ’A I எனும் ஏழாம் அறிவு’ விஞ்ஞானத் தொடர். குமுதம் வாங்கியதும் நான் படிப்பது இந்த புதுமை தொடரை த்தான்! - கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.