1.தனது சினிமா மற்றும் தனி வாழ்வின் உண்மை சம்பவங்களை ரசித்து எழுதுவதற்கு ஒரு தனித் திறமை வேண்டும்! கச்சிதமாக தன்னுடைய வாழ்வியல் அனுபங்களை வாராவாரம் எங்களோடு பகிர்ந்துகொண்ட இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!- அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி-21. 2. ’துள்ளுவதோ இளமை’ தொடரில் சினிமா அனுபவங்களையும், அதில் ஏற்பட்ட தடங்கல்களையும், தன் குடும்ப சூழல்களையும்… இயக்குநர் கஸ்தூரி ராஜா 81 வாரங்கள் குமுதத்தில் பதிவு செய்திருந்த விதம் மிகவும் சுவாரஸ்யம்!- த.சிவாஜி மூக்கையா, சென்னை. 3. ‘பெண் வாசனையே இல்லாமல் குமுதம் தயாரிக்க முடியுமா?’ என்கிற வாசகரின் கேள்விக்கு, ‘அதை உம்மால்தான் வாசிக்க முடியுமா?!’ என பொளேர் பதில் சொன்ன அரசுக்கு ஒரு பறக்கும் முத்தம்!- கோகுல், தசரதபுரம்.4. ’பொன்னியின் செல்வன் -2’ பட விமர்சனத்தின் இறுதியில் ‘படம் பார்த்த நிறைவைவிட, கதை கேட்ட உணர்வையே தருகிறது’ என்ற குமுதத்தின் பார்வை துல்லியமானது!- சி சுந்தர் மணிகண்டன், சென்னை- 93.5.‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யாவுக்கும் இப்ப உள்ள ஐஸ்வர்யாவுக்கும் என்ன வித்தியாசம்’ என்கிற கேள்விக்கு, ‘அப்ப கொஞ்சம் மக்கா இருந்தேன். இப்ப கொஞ்சம் தெளிவா இருக்கேன்னு நினைக்கிறேன்…’னு பளீர் பதில் சொன்ன அவரது பேட்டி மிகச் சிறப்பு!- எம்.ராஜேந்திரன், லால்குடி.6. ‘சக மனிதர்களை வெறுப்பதைத் தவிர்த்து, நேசிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்கிற 10.5.2023 குமுதம் தலையங்கம்… இன்றைய இந்தியர் அனைவருக்கும் தேவையான பொது கருத்து!- சங்கீத சரவணன், மயிலாடுதுறை. 7. நடிகை லட்சுமி – மெஜிஷியன் பாக்யநாத் இருவரும் அபூர்வ சந்திப்பில் உரையாடிய நிகழ்வுகளும் தகவல்களும் சுவாரஸ்யமாகவும், ரசிப்புக்குரியதாகவும் இருந்தன!- ஆ.மலர்தாசன், விருத்தாசலம்.8. ’தோசையைக் கூட திருப்பிப் போடாத திருப்பு முனை மாநாடு’ கட்டுரை ‘ மாநாடு’ என்ற வார்த்தையையே சாதாரண ’மேடைக் கூட்டம் ’ என்று மாற்றியதுதான் பன்னீரின் சாதனை ...’ என்கிற விதத்தில் எழுதப்பட்டிருந்தது நல்லதொரு அங்கதம்!- ராஜேஸ்வரி கண்ணன், .நெய்வேலி.9. காதலின் வலி தந்த வேதனையை... கவிதை மொழியில் பத்து வாரங்களாக பதிவு செய்த மதுரை சத்யாவின் ‘மனவேனிற் காலம்’ குறுந்தொடர் மனசுக்குள் அமர்ந்துகொண்டுவிட்டது!- லிடியா இம்மானுவேல், மயிலாடுதுறை.