இயக்குநர் வஸந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வாலி மோகன்தாஸ். தற்போது ‘ரங்கோலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அப்பா - பையனுக்கு இடையிலான உறவை அழகியலுடன் பேசியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், வாலி மோகன்தாஸிடம் பேசினோம்....இந்தப் படத்துக்கு ரங்கோலின்னு தலைப்பு வச்சது ஏன்?“ரொம்ப அழகான, வண்ணமயமான வாழ்க்கையை இந்தப் படத்துல காண்பிச்சிருக்கேன். அதனாலதான் படத்துக்கு ‘ரங்கோலி’னு தலைப்பு வெச்சோம். நல்லா படிக்கிற பையன், எங்க படிச்சாலும் நல்லா படிப்பான் அப்படிங்கிறதுதான் இந்தப் படத்தோட ஒன்லைன். அதைத்தாண்டி, நிறைய எமோஷன்ஸ் இந்தப் படத்துல இருக்கும். எந்த எமோஷனையுமே வேணும்னு திணிக்காம, ரொம்ப இயல்பா, சொல்லியிருக்கேன்..கதையில் முக்கியமான பிரச்சனையாக எதை சொல்லியிருக்கிறீர்கள்? “ஒரு பையன், அரசுப் பள்ளியில படிக்கிறான். அந்த ஸ்கூல் தான் இந்த உலகத்துலயே அவனுக்கு ரொம்பப் பிடிச்ச இடம். அவனுடைய உலகமே அந்த ஸ்கூல் தான். அவனுக்குப் பிடிச்ச டீச்சர்ஸ், ஃப்ரெண்ட்ஸ்னு அழகா வாழ்ந்துகிட்டு இருக்குற இடம். ஒரு சின்ன பிரச்னைல, இங்க படிச்சா அவன் உருப்பட மாட்டான்னு, அவனோட பெற்றோர் தப்பா புரிஞ்சிக்கிறாங்க. அதனால, வேறொரு பெரிய தனியார் பள்ளியில படிச்சா, தன் பையன் பெரிய ஆளா வருவான்னு நினைக்கிறாங்க. அங்க படிச்சாலும் அவன் நல்லா வரத்தான் போறான். ஆனா, அவனுக்குப் புடிச்ச இடம் அது கிடையாதே... எங்க படிச்சா நல்லா வருவான் என்பதைத் தாண்டி, அவனுக்குப் புடிச்ச இடத்துல படிச்சா நல்லா வருவான்கிறது இருக்குல்ல...ஆனாலும், தன்னோட அப்பா, அம்மா மனசு கஷ்டப்படக் கூடாதுனு, அவங்க சேர்த்துவிட்ட ஸ்கூல்லயே படிக்கிறான். ஒரு கட்டத்துக்கு மேல அவனுக்கு அங்க படிக்கிறது பிடிக்கல. ஆனாலும், அப்பாவுக்காக எல்லாத்தையும் தாங்கிக்கிட்டு படிக்கிறான். இருந்தாலும், தன்னை அந்த பெரிய ஸ்கூல்ல படிக்கவைக்க அப்பா, அம்மா கஷ்டப்படுறதைப் பார்த்தபிறகு, அந்த ஸ்கூல்ல படிக்க அவனுக்குப் பிடிக்கல. அதன்பிறகு அவன் என்னவா மாறுகிறான் என்பதுதான் படத்தோட மீதிக்கதை.”.அப்படின்னா அரசுப் பள்ளி பெஸ்ட்டா? தனியார் பள்ளி பெஸ்ட்டா?னு படத்துல காண்பிக்கலையா? “இந்தப் படத்துல அதைப் பற்றி நான் சொல்லலை. ஆனா, என்னைக் கேட்டா அரசுப் பள்ளிதான் பெஸ்ட்னு சொல்வேன். ஏன்னா, நானும் அரசுப் பள்ளியில படிச்சவன் தான். இன்னைக்கு நான் இயக்குநரா ஆகிருக்கேன். என்னை உருவாக்குனதே அரசுப் பள்ளிதான். ஒரு ஸ்கூல்ல இருந்து இன்னொரு ஸ்கூலுக்கு படிக்கப் போறவன் சந்திக்கிற பிரச்னைகளை, என்னால முடிஞ்ச அளவுக்கு காண்பிச்சிருக்கேன். மத்தபடி இது பெஸ்ட்டா, அது பெஸ்ட்டானு நாம சொல்ல வேண்டாம். படம் பார்த்து ஆடியன்ஸ் தெரிஞ்சிக்கட்டும்.”.இதுதான் படத்தோட முழுக்கதையுமா அல்லது வேற எதுவும் படத்துல இருக்கா? “அந்தப் பையனோட அப்பா கதை... தன்னோட பையன் படிக்கிறதுக்காக அப்பா எப்படியெல்லாம் கஷ்டப்படுறாரு, எங்கெல்லாம் கடன் வாங்குறாருனு அவரோட கதை போகும். அப்பாவா ‘ஆடுகளம்’ முருகதாஸ் நடிச்சிருக்கார். இந்தப் படத்துல நிறைய கதாபாத்திரங்கள் இருக்காங்க. இந்தப் படத்துல வர்ற எல்லா கதாபாத்திரங்களுமே ஹீரோ மாதிரி இருப்பாங்க. தமிழ் வாத்தியார் கேரக்டர் ஒண்ணு படத்துல இருக்கு. பொதுவா, தமிழ் வாத்தியாரா நடிக்கிறவர் இப்படித்தான் இருப்பார்னு அவருக்கு சில குணநலன்கள் வெச்சிருப்பாங்க. ஆனா, டிப்டாப்பா ஐடி கம்பெனில வேலை பார்க்குற மாதிரி ஒருத்தர் தமிழ் வாத்தியாரா நடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சு, அப்படியே நடிக்க வெச்சிருக்கேன். அமித் பார்கவ், அந்த கேரக்டர்ல நடிச்சிருக்கார். இதுக்காக அவர் பாரதியார் கவிதைகள்லாம் மனப்பாடம் பண்ணி, தமிழ் ஆர்வலராகவே மாறிட்டார்.”.சினிமா குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோவை அறிமுகம் பண்ணக் காரணம் என்ன? “இந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருக்குற ஹமரேஷ், இயக்குநர் ஏ.எல்.விஜய்யோட தங்கச்சி பையன். ஹமரேஷோட அப்பா சதீஷ் தான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர். ஹமரேஷை ஹீரோவா அறிமுகப்படுத்தலாம்னு அவங்க நினச்சப்போ, ‘என்கிட்ட ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு’னு சொன்னேன். ஸ்கிரிப்ட்டை படிச்சதுமே, படம் பண்ண ஒப்புக்கிட்டாங்க. ஹமரேஷும் சின்ன வயசுல இருந்தே நடிச்சிக்கிட்டு இருக்கார். என்னால முடிஞ்ச அளவுக்கு இதுல மெச்சூர்ட் ஆக்கியிருக்கேன்.” படம் பார்த்தவங்க, பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்களோட தாக்கம் இருக்குறதா சொல்றாங்களே..? “இதை கேட்கும் போது ஒரு பக்கம் பெருமையாத் தான் இருக்குது. ஆனா, நான் அதுக்குள்ள போகலை. அந்த நோக்கத்துல படம் எடுக்கணும்னு நினைச்சிருந்தா, அப்படியே எடுத்துருப்பேன். ஆனா, அப்படி எடுக்கலை. நான் ஃபேமிலி டிராமாவாத் தான் இந்தப் படத்தை எடுத்துருக்கேன். அப்பா - பையனுக்கு இடையிலான ரிலேசன்ஷிப்பை சொன்ன நான், அதுக்குள்ள பேச வேண்டிய அரசியலை, எனக்குத் தெரிஞ்ச மாதிரி சொல்லியிருக்கேன். அவங்களை மாதிரி படம் பண்ணணும்னு எனக்கும் ஆசை இருக்குது. ஆனா, இந்தப் படத்தை அவங்க படங்களோட ஒப்பிட முடியாது.” - சி.காவேரி மாணிக்கம்