தர்மத்தின் வாழ்வை தனை சூது கவ்வும்தான்... ஆனால், எத்தனை முறைதான் அது கவ்விக்கொண்டே இருக்கும்? இம்முறை சூது ஓ.பன்னீர்செல்வத்தைக் கடித்து விழுங்கி, துப்பி, மிச்சத்தை ஏப்பமே விட்டிருக்கிறது. ஆனாலும், வேட்டியில் மண் ஒட்டாதவராக, பணத்தை வாரியிறைத்து திருச்சியில் பிரமாண்டக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். கூட்டம் கூடியது சரி... கட்சியில் பன்னீரின் பலம் கூடியதா?அதை அறிந்துக்கொள்ள திருச்சி புரட்சி மாநாட்டை ஒரு புரட்டு புரட்டிப் பார்ப்போம்... மாநாடு என்றால் ஓரிரு நாட்களோ அல்லது காலை முதல் மாலை வரையிலோ பல்வேறு அமர்வுகளுடன் நடப்பது வழக்கம். ஒரு கட்சியின் மாநாடு என்றாலோ அக்கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணி அல்லது தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்று ஊ... லலலா... பாடுவதும் வழக்கம். கூடவே மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசியல் திருப்புமுனைக்கு அச்சாரமாக அமைவது உண்டு. ஆனால், பன்னீர் நடத்திய இந்த மாநாட்டில் இவை எல்லாமே மிஸ்ஸிங்.முன்னதாக அவர், எம்ஜிஆர் பிறந்த நாள், ஜெயலலிதா பிறந்தநாள், அ.தி.மு.க-வின் 51வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக திருச்சி மாநாடு அமையும் என்று அறிவித்திருந்தார். ஆனால், எம்ஜிஆரைப் பற்றியோ ஜெயலலிதாவைப் பற்றியோ பெரிதாக எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க-வின் விழா என்றாலும், அது சட்டப்பூர்வமாகவும் தேர்தல் ஆணையத் தீர்ப்பிலும் யார் வசம் இருக்கிறது என்பதை ஊரறியும்.அதாவது பரவாயில்லை... கைவிட்டுப்போன கட்சி. பன்னீருக்கு கை கொடுப்பார்கள் என்று கருதப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், வி.கே. சசிகலா ஆகியோரும் மாநாட்டில் அழைக்கப்படுவார்கள்; வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை..முன்னதாக பன்னீரே, “சசிகலா உள்ளிட்டோர் மாநாட்டுக்கு அழைக்கப்படுவர். யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதனால், இந்த மாநாட்டில் சசிகலா, தினகரன், பன்னீர் மூவரும் கைகோப்பார்கள்; ஒருவேளை புதுக் கட்சிக்கூட அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசிவரையில் சசிகலாவும் பன்னீரும் தினகரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும்தான் இருந்தார்களே தவிர உருப்படியாக எதையும் உருட்டவில்லை. மொத்ததில் திருச்சி மாநாடு திருப்புமுனை மாநாடாக அமையும் என்று எதிர்பார்த்தால், அது ஒரு தோசையைக்கூடத் திருப்பிப் போடவில்லை.மாட்டு வண்டியில் மாட்டைத்தான் வண்டிக்கு முன்பாகப் பூட்டுவார்கள். பன்னீருக்கு யார் கொடுத்த ஆலோசனையோ தெரியவில்லை. மாட்டுக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முயன்றிருக்கிறார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர் தொண்டர்களைத் திரட்டிவிட்டார்தான். ஆனால், பலத்தை நிருபித்துவிட்டார் என்று சொல்ல முடியாது; ஏனென்றால், இப்போதே மதுரை மாநாட்டுக்காக இதே மேன் பவர் ஏஜென்சிகளைப் பிடித்து இதே தொண்டர்களை லாரியில் ஏற்றிவரத் திட்டமிட்டிருக்கிறது எடப்பாடி முகாம். கேட்டால், கூரை மீது சோற்றை வாரி இறத்தால் ஆயிரம் காக்காய்கள் என்கிறார்கள். மொத்தத்தில் தொண்டர்களை காக்காய் ஆக்கிய நரிகள் கூட்டமாகிவிட்டது அ.தி.மு.க முகாம்!இன்னொரு விஷயம்... அ.தி.மு.க தொடங்கப்பட்ட நாளிலிருந்து சிறிதும் பிசகாத ஒரே கொள்கை, தி.மு.க-வை முழுமூச்சாக எதிர்ப்பது ஒன்றுதான். மற்றவை அவ்வப்போது மாறுவதுண்டு. ஆனால், திருச்சி புரட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றுகூட தி.மு.க. ஆட்சியை விமர்சிக்கவில்லை. இத்தனைக்கும் மாநாட்டு நாளில் நெருப்பாற்றில் நீந்திக்கொண்டிருந்தது தி.மு.க. அரசு. அமைச்சர்கள் சொத்துப் பட்டியல் வெளியீடு, பி.டி.ஆர். ஆடியோ லீக்ஸ், 12 மணி நேர வேலை, திருமண மண்டபத்தில் மது அருந்துவதற்கான அனுமதி, நீர் நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது என மக்கள் விரோத மசோதாக்களால் கூட்டணிக் கட்சிகளே கூரை மீது ஏறி நின்று கூவிக்கொண்டிருந்தன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவராக ஆசைப்படும் பன்னீரோ எடப்பாடி பழனிசாமியை திட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அவர் சாப்பிட்ட மிக்சரைப் போலவே எடப்பாடியை திட்டிய அவரது வார்த்தைகளும் நமுத்துப்போனதுதான் மிச்சம்..இவையெல்லாவற்றையும்விட கொடுமை... கட்சிக் கொடியிலேயே கை வைத்ததுதான். மொத்தக் கட்சியும் ஒத்தையாளாக தனக்கு வேண்டும் என்று தர்ம யுத்தங்களை நடத்துபவர், ஒரிஜினல் கட்சிக் கொடியை பறக்க விடுவதற்குகூட பம்மிவிட்டதுதான் ஆச்சர்யம். அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ கொடியில் கறுப்பு சிவப்புக்கு மையமாக அண்ணா படம் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால், பன்னீரின் புரட்சி மாநாட்டிலோ அண்ணாவுடன் இரட்டை இலை வட்ட வடிவில் இடம்பெற்றிருந்தது. சரி, தேர்தல் ஆணையத்திற்குப் பிறகு கட்சி முழுமையாக சட்டப்படி எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்றுவிட்டதால் பன்னீரின் புதுக் கட்சிக்கான கொடியாக இருக்குமோ என்று தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் சப்பாத்தி ரோலில் சுருட்டி அதே தொண்டர்களிடம் சாப்பிடக் கொடுத்துவிட்டார் பன்னீர்.அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம்தான் இருக்கிறார்கள் என்று பன்னீர் பத்து மாதங்களுக்கு மேலாகக் கூறிக்கொண்டே வந்தாரே ஒழிய, அதற்கான எந்த செயலிலும் இறங்கவில்லை. மாறாக, நீதிமன்றங்களின் கதவுகளையும் தேர்தல் ஆணையத்தின் கதவையும்தான் தட்டிக்கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக, அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க தலைமை அலுவகத்தின் கதவை உடைத்தனர் என்பதைத் தொலைக்காட்சிகளே காட்டின. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கே வெற்றி கிடைத்தது..மொத்தத்தில் கூட்டம் கூடினாலும், வந்தக் கூட்டத்தைகூட தனக்கு சாதகமாகவோ அல்லது உருப்படியாகவோ பயன்படுத்திக்கொள்ளவில்லை பன்னீர். சப்பென்று முடித்துவிட்டார். வந்த வாய்ப்புகளை வீணடிப்பது பன்னீருக்கு ஒன்றும் புதிதல்ல... ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது முதல்வராக இருந்தவருக்கு தெரிந்தோ தெரியாமலோ மக்கள் செல்வாக்கு திடீரென்று எகிறியது. ஆனால், அடுத்த நாளே போலீஸை விட்டு அப்பாவிகளை வெளுத்து வாங்கி தனது இமேஜை சரித்துக்கொண்டார். அடுத்து, ஜெயலலிதா மரணத்தின்போது மக்களும் அ.தி.மு.க தொண்டர்களும் குறிப்பாக, பெண்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்தவர் நினைத்திருந்தால், துணிச்சலுடன் செயல்பட்டு, அன்றே மரணத்தின் சந்தேக கறைப் படிந்த சிலரைத் தூக்கி சிறையில் போட்டு மிதித்திருக்கலாம். மாறாக, மன்னார்குடி கும்பலின் வீட்டுக்குச் சென்று மிதி வாங்கி வந்தார். பதவியையும் பறிகொடுத்துவிட்டு, ஸ்கூல் பையன்போல முறையிட்டார். அதன் பிறகு எடப்பாடியிடம் மல்லுக்கட்டி துணை முதல்வராக இருந்தபோதும் சரி... பிற்பாடு கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதும் சரி... தன்னை நம்பி வந்த அத்தனைப் பேரையும் நட்டாற்றில் தவிக்கவிட்டார். இப்போது அவரது வினை அவரைச் சுட்டிருக்கிறது.யானை தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டால்கூட மீண்டுவிடும். ஆனால் அதே யானை, பூனையான பின்பும் மண்ணை வாரிபோட்டுக்கொண்டால் புதையாமல் என்ன செய்யும்?! -பாகி