Kumudam
‘Oppenheimer ‘ நீ பற்ற வாய்த்த நெருப்பொன்று ...
இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகமெங்கிலும் தீவிரமான ரசிகர்கள் உண்டு. வித்தியாசமான திரைக்கதைகளை உருவாக்கி பார்வையாளர்களின் மூளையைச் சீண்டும் வகையில் படமாக்கும் அவரது பாணியை கொண்டாடுபவர்கள் பலர். நோலனின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஓப்பென்ஹைமர். ‘அணுகுண்டின் தந்தை’ என்று புகழப்பட்ட ஒரு விஞ்ஞானியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்.