- சி.காவேரி மாணிக்கம்1999ம் ஆண்டு ‘மிஸ் சென்னை’ பட்டம் வென்றவர் த்ரிஷா. இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் ‘நம்பர் 1’ நடிகை அவர்தான். அழகிப் போட்டியில் பட்டம்வென்ற பலரும் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், நான்கு வருஷங்களுக்கு முன்னால் ‘மிஸ் சென்னை’ பட்டம்வென்ற ஆயிஷாவும் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். அழகிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு தரும் கோடம்பாக்கம், ஆயிஷாவையும் விட்டுவைக்குமா என்ன? இதோ... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹீரோயினாகக் களமிறங்கும் ஆயிஷாவிடம் இனிக்க இனிக்கப் பேசினோம்....உங்களைப் பற்றி சுய அறிமுகம் செய்துக்கோங்க...‘’நான்பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை போயஸ் கார்டன். இப்போ, பி.காம். எல்.எல்.பி. படிச்சிக்கிட்டுருக்கேன். அப்பாஜெ.எம்.பஷீர், நடிகர். ‘தேசியதலைவர்’ படத்துல முத்துராமலிங்கத் தேவரா நடிச்சவர். அம்மா, ஹவுஸ்ஒய்ஃப். என்அக்காபேர், ஃபாத்திமா. அவளைப்பார்த்துதான்எனக்குமாடலிங்லஆசைவந்துச்சு. நிறையபோட்டிகள்லகலந்துகிட்டேஇருப்பா. கடைசியா ‘மிஸ்இந்தியா 2022’ பட்டம்ஜெயிச்சிருக்கா. அடுத்தவருஷம் ‘மிஸ்வேர்ல்டு’ போறா. அவ மட்டும் மாடலிங் பண்ணாம, என்னையும் மாடலிங் பண்ணச் சொல்லிக்கிட்டே இருப்பா அக்கா. அவ சொல்லித் தான் மாடலிங்பண்ண ஆரம்பிச்சேன். ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலயே ‘மிஸ்இந்தியா 2019’ போட்டிவந்துச்சு. அதுல கலந்துக்கச் சொன்னா. ஆனா, எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனாலும், அக்கா தான் தைரியம் சொல்லி, கலந்துக்க வெச்சா. நான் தகுதியா இருந்ததுனால, எனக்கு அந்த டைட்டில் கிடைச்சுது..நடிப்புல ஆர்வம் வந்தது எப்படி?ஆரம்பத்துல மாடலிங்ல மட்டும்தான் என் கவனம் இருந்துச்சு. ஆனா, போகப்போக நடிப்புலயும் இன்ட்ரஸ்ட் வந்துடுச்சு. என் அப்பா நடிகரா இருக்குறதும் அதுக்கு மிக முக்கியமான காரணம்னு சொல்லலாம். ‘மிஸ் இந்தியா 2019’ ஜெயிச்சதும் வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். ஆனா, எனக்கான சரியான கேரக்டர் அமையலை. தனக்கான மீன் மாட்டுற வரைக்கும் எப்படி கொக்கு தவம் இருக்குமோ, அது மாதிரி எனக்கான வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். இப்பதான் அப்படியொரு வாய்ப்பு அமைஞ்சது. ‘கப்’பனு பிடிச்சிக்கிட்டேன்!’’அப்படி தவமிருந்து கிடைச்ச வாய்ப்பு என்னன்னுதான் சொல்லுங்களேன்...‘’வீரமங்கைவேலு நாச்சியாரா நடிக்கிறேன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறாங்க. ஏ.ஆர்.ரஹ்மான்சார் இசையமைக்கிறார். ‘ஊமைவிழிகள்’, ‘தேசியதலைவர்’ படங்களை இயக்குன அரவிந்த்ராஜ், இந்தப்படத்தோடஇயக்குநர். ‘மருதுஸ்கொயர்’ அப்படினு தான் இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப் போறாங்க. சின்ன மருதுவா என்னோட அப்பாவே நடிக்கிறார். மற்ற தகவல்கள் முறைப்படி விரைவில் அறிவிக்கப்படும்.’’.வேலு நாச்சியாரா நடிக்கணும்னா குதிரையேற்றம், வாள் சண்டைலாம் தெரிஞ்சிருக்கணுமே... ‘’நிச்சயமா... ஸ்டீபன் மாஸ்டர்கிட்ட என் கேரக்டருக்குத் தேவையான சண்டைப் பயிற்சி எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். முக்கியமா, நீங்க சொன்னது மாதிரி குதிரையேற்றம், வாள் சண்டையும் கத்துக்கிட்டேன். ‘கூத்துப்பட்டறை’ல நடிப்புப் பயிற்சியும் கத்துக்கிட்டேன். சின்ன வயசுல இருந்தே டான்ஸ் நல்லா தெரியும். சூப்பரா வெஸ்டர்ன் டான்ஸ் ஆடுவேன். 2018ல ‘டான்ஸ் குயின் ஆஃப் தமிழ்நாடு’ பட்டம் ஜெயிச்சிருக்கேன்.’’.என்ன மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்க ஆசை?’’என்னைப் பொறுத்தவரைக்கும் படத்தோட கதை தான், அதுல நான் நடிக்கணுமா, வேண்டாமா அப்படிங்கிறதை முடிவுசெய்யும். கதையும், என்னோட கேரக்டரும் நல்லா இருக்குற படங்கள்ல நடிக்க ஆசை. ஆனாலும், பெண்களை மையப்படுத்திய கதைகள்ல நடிக்கிறதுக்கு முன்னுரிமை கொடுப்பேன்.’’.அப்படீன்னா, ஹீரோக்களுடன் ரொமான்ஸ் பண்ண ஆசை இல்லையா?’’இப்படிக் கேட்டா நான் என்ன பதில் சொல்றது..? இப்போதைக்கு இல்லைனு வெச்சிக்கோங்க. ரொமான்ஸ்லாம் அப்புறம் வாய்ப்பு கிடைச்சா பார்த்துக்கலாம்.’’உங்களுக்கு மிகவும் பிடிச்ச நடிகை யார்?’’நயன்தாரா மேடம். அவங்களோட சினிமா வளர்ச்சியே பார்க்குறதுக்கு அவ்வளவு நல்லா இருக்கும். அதுமட்டுமில்லாம, அவங்க பர்சனல் லைஃபும் ரொம்ப நல்லாருக்கு. எனக்கு சினிமாவுலயே பிடிச்ச ஒரே ஆள், அவங்க மட்டும்தான்!’’.உங்களுடைய பொழுதுபோக்கு? ‘’டான்ஸ் ஆடுறதுதான் என்னோட பெரிய பொழுதுபோக்கு. நேரம் காலம் தெரியாம ஆடிக்கிட்டே இருப்பேன். அப்புறம், புல்லட் மாதிரியான பெரிய பைக் ஓட்டுறது ரொம்பப் பிடிக்கும். படங்கள் நிறைய பார்ப்பேன்.’’