ஐரேனிபுரம் பால்ராசய்யாதாமோதரன் தாத்தாவுக்கு கை சும்மா இருப்பதில்லை. பேப்பரும் பேனாவும் கிடைத்தால் போதும்; எதையாவது கிறுக்குவார்.ரைட்டிங் பேடில் பேப்பர்கள் இருப்பதைக் கண்டதும் ஆர்வம் அதிகமாகி நிழல் குறித்து பல கவிதைகள் எழுதிக் குவித்தார்." அப்பா... இங்க பாருங்கப்பா... ஸ்கூல்ல குடுத்த எக்ஸாம் பேப்பர்ல தாத்தா எதையோ எழுதி வெச்சிருக்கார்; எக்ஸாமுக்கு மிஸ் கிட்ட எக்ஸ்ட்ரா பேப்பர் கேட்டா திட்டுவாங்க..." சிணுங்கினாள், ஆதிஷா." எதையும் கேட்டு செய்ய மாட்டீங்களா...? பேப்பர் கிடைச்சுதுன்னா உடனே எதையாவது எழுதிடுறது ...பெரிய கவிஞர்னு நினைப்பு, தண்டத்துக்கு வீட்டுல இருந்தாலும் தினமும் ஏதாவது பிரச்னையை இழுத்துடுங்க..." வாய்க்கு வந்தபடி மகன் மகேஸ்வரன் பேசிய வார்த்தைகள் ஈட்டிபோல் பாய்ந்தன.அவர் மனதில் பழைய நினைவுகள் மேலெழும்பின. சிறு வயதில் மகேஸ்வரன் பீரோ திறந்து, உள்ளே இருந்த வீட்டு பத்திரத்தை எடுத்து அதன் மீது பேனாவாலும் பென்சிலாலும் கண்டபடி கிறுக்கியதும், அதைப் பார்த்துக் கொஞ்சம் அதிர்ந்தாலும், மகனை அடிக்கவோ திட்டவோ செய்யாமல், அவனுக்கு வரைவதற்கென்றே நிறைய பேப்பர், கலர்பென்சில் என வாங்கிக் கொடுத்துவிட்டு, அலைந்து அலைந்து பத்திரத்தின் நகலை வாங்கியதும் ஞாபகம் வந்தது." நீ குழந்தையா இருந்தப்போ..." என்று உதடு வரை வந்த வார்த்தைகளை விழுங்கித் தடுத்துவிட்டு, மௌனமாக இருந்தார், பேத்தியின் முன்னால் மகனின் குறையைச் சொல்ல விரும்பாத தாமோதரன் தாத்தா.-ஐரேனிபுரம் பால்ராசய்யா