- பாப்பாங்குளம் பாரதிஅடர்ந்த வனப்பகுதியில் அந்த சினிமா படக்குழு முகாமிட்டிருந்தது.கேமரா கோணம் பார்த்துக்கொண்டிருந்தார், ஒளிப்பதிவாளர்.அடுத்து ஷூட் செய்ய ஸ்டன்ட் நடிகர்களை வட்டமாக நிற்கவைத்து... ஒழுங்குப்படுத்திக்கொண்டிருந்தார் ஸ்டன்ட் மாஸ்டர்.கதாநாயகனிடம் காட்சியை விவரித்தார் இயக்குநர்.‘‘சார்.... லஞ்சத்துக்கு எதிராக போராடும் நீங்கள், ஊழல் பேர்வழிகளை வேட்டையாடுகிறீர்கள். இதனால் உங்களை போலீஸ் தேடுகிறது. வனத்தில் மறைந்து வாழ்கிறீர்கள். இந்தத் தகவல், போலீஸுக்குத்தெரிய வருகிறது. தேடி வருகிறார்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை காட்சியைத்தான் இப்போது இங்கே வனத்தில் படமாக்கப்போகிறோம்’’ என சொல்லிவிட்டு,உதவியாளர்களை அழைத்து படப்பிடிப்புக்கான சில ஆலோசனைகளைக் கொடுத்தார்.காலையில் ஆரம்பித்த துப்பாக்கி சண்டை காட்சி பிரேக் இல்லாமல் மதியம் தாண்டியும் தொடர்ந்தது.இரவு.நீண்ட நேரம் செல்போனில் பேசிவிட்டுஅதனை அணைத்தார், இயக்குநர்.புரொடக்ஷன் நிர்வாகியை அழைத்தார்.பவ்வியமாக வந்து நின்ற தயாரிப்பு நிர்வாகியிடம் ‘‘இன்னைக்கு நடந்த ஷூட்டிங்கில் நம்ம யூனிட் ஆட்கள் ஏகப்பட்ட மரங்களை வெட்டிநாசப்படுத்திட்டாங்களாம். சண்டை காட்சியின்போதும் வன சொத்துகளுக்கு சேதம் அதிகமாம். அதிகாரி ஒருத்தர் வருவார். சரக்கு பாட்டில்களோடு, 3 லட்சம் ரூபாயும்கொடுத்திடுங்க’’ என்றார் இயக்குநர்.