- ஸ்ரீ மல்லிகா குருமன உளைச்சலில் வசந்திக்கு இரவு சரியாகத் தூக்கமே வரவில்லை. அதிகாலையிலேயே எழுந்துகொண்டுவிட்டவள், அவசர அவசரமாகக் குளித்துவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டாள். கண் மூடி பிரார்த்தனை செய்துவிட்டு, பிரகாரம் சுற்றிவந்து அம்மன் சந்நிதியிலேயே அமர்ந்து கொண்டாள். அவள் வாய் இடையறாது பிரார்த்திக்கொண்டே இருந்ததுஅதிகாலையிலேயே எழுந்துகொண்டுவிட்டவள், அவசர அவசரமாகக் குளித்துவிட்டு கோயிலுக்குப் புறப்பட்டாள். கண் மூடி பிரார்த்தனை செய்துவிட்டு, பிரகாரம் சுற்றிவந்து அம்மன் சந்நிதியிலேயே அமர்ந்து கொண்டாள். அவள் வாய் இடையறாது பிரார்த்திக்கொண்டே இருந்தது“இன்னிக்கு ரொம்ப சீக்கிரமா கோயிலுக்கு வந்துட்டீங்களே… ஏதாச்சும் விசேஷமான நாளா இருக்கும்னு வாழ்த்து சொல்ல வந்தேன்மா…. நீங்க என்னடான்னா விட்டா அழுதுடுவேன்கிற மாதிரி கண் கலங்கி உட்கார்ந்திருக்கீங்க. யாருக்காச்சும் உடம்பு சரியில்லையாம்மா?’’ என்றார் அர்ச்சகர், கவலையுடன்.“அதெல்லாம் இல்லீங்க…. இன்னும் கொஞ்ச நேரத்துல பிளஸ் டூ பரீட்சை ரிசல்ட் வெளியாயிடும். அதுக்காகத்தான் சாமிக்கிட்டே வேண்டிக்க வந்தேன்…”’‘ஏம்மா…உங்க வீட்டுல யாராச்சும் ப்ளஸ் டூ படிக்கிறாங்களாமா?’’இல்லீங்கய்யா… வருஷா வருஷம் ரிசல்ட் வர்ற நாள்ல சில குழந்தைகள் தற்கொலை செய்துக்குறாங்க. அவங்களுக்கு பாடம் சொல்லித் தர்ற டீச்சரா வருஷம் பூராவும் அவங்களோட பழகுற எங்களுக்கெல்லாம் மனசு ரொம்ப கஷ்டமாயிடும். அதனால ‘கடவுளே… மாணவர்கள் எல்லோரும் நல்ல மார்க் வாங்கி பாஸாகணும்; யாரும் விபரீத முடிவுக்கெல்லாம் போயிடக்கூடாது’’ன்னு பரீட்சை ரிசல்ட் வர்ற இன்னிக்கு அம்மன்கிட்ட வேண்டிக்கறதுக்காக வந்தேன்…’’ என்று சொன்ன வசந்தி டீச்சரை அமைதியாக பார்த்தார் அர்ச்சகர்