சாலையில் வாகன நெருக்கடி அவ்வளவாக இல்லை. வயதான இரண்டு ஆண்கள் பேசிக்கொண்டு நடந்தனர். கேரியரில் பெரிய துணி மூட்டையை வைத்துக்கொண்டு சைக்கிளைத் தள்ளிக்கொண்டு சென்றார் ஓர் இளைஞர். ஒரு கொம்பில்லாத மாடு ஓரத்தில் கிடந்த பாலித்தீன் பையை வாயால் பிய்த்துக்கொண்டிருந்தது. இது தவிர, கல்லூரி செல்லும் தோற்றத்தில் ஒரு பெண் நடந்துகொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.அந்தப் பெண்ணை சீண்டும்விதமாக& அவளது பின்னாலேயே இரு இளைஞர்கள் நடந்து வந்தனர். அதில் ஒருவனின் கையில் ஆறாவது விரலாக சிகரெட் புகைந்தது. அவர்களின் எள்ளல் பேச்சில் இருந்து விடுபட அந்தப் பெண் நடையில் வேகம் கூட்டினாள். அவர்களும் ஏதோ உரக்கப் பேசியபடி அவளை விரட்டும் தொணியில் அவர்களின் நடையைத் துரிதப்படுத்தினர். அதுவரையில் சொற்களால் சீண்டியவர்கள், அப்பெண்ணில் அருகில் சென்று உரச முற்பட்டனர். உடனே, என் பேன்ட் சைடு பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து& அந்த இளைஞர் களுக்குத் தெரியாமல் அக்காட்சியைப் படமெடுக்கத் தொடங்கினேன்.அதேவேளை எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பெரியவர் ஒருவர் வேகமாகச் சென்று, அந்தப் பெண்ணை தூரப் போகச் செய்துவிட்டு, அந்த இளைஞர்களில் ஒருவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் அதிர்ந்துபோய் அங்கிருந்து ஓடத் தொடங்கினர்.இதையடுத்து என்னிடம் திரும்பிய அந்தப் பெரியவர், ‘‘ஏம்பா... ஒருபொண்ணுட்ட காலிப்பசங்க தப்பா நடந்துட்டுருக்காங்க. அதை ஓடிப்போய் தடுக்காம செல்லுல படம் புடிக்கிறியே...’’ என்று கோபப்பட்டார்.‘‘அய்யா... நீங்க சொல்றது வாஸ்தவம்தான். இதுக்கு மேல அவர்கள் ஏதாவது செஞ்சிருந்தா நானும் உங்கள மாதிரி தட்டிக் கேட்டிருப்பேன். இப்படிலாம் நடக்குறப்ப வீடியோ எடுத்து அதை சோஷியல் மீடியாவுல போட்டாத்தான் அந்தக் காலிப்பசங்க மேல உடனடியா நடவடிக்கை எடுப்பாங்க. இதுதான் இப்போதைய டிரெண்ட்!” என்ற என்னை வித்தியாசமாகப் பார்த்தார், அந்தப்பெரியவர்.-அஜித்