- யுவகிருஷ்ணா ‘ எட்டு சில்வர் ஜூப்ளி கொடுத்தவரா இவர் ?’ என சந்தேகித்தார் தயாரிப்பாளர் ஏகலைவன்... காரணம் இயக்குநர் சித்திரன் சொன்ன கதை அப்படி... அரத பழசு!“ லேட்டஸ்ட் ட்ரெண்டுக்கு ஏத்த சப்ஜெக்ட்டை உங்ககிட்ட எதிர்பார்த்தேன் சித்திரன் சார்!”“ இருக்கே… லேட்டஸ்ட் டாப்பிகல் சப்ஜெக்ட் ஒண்ணு..!”“ அதைச் சொல்லுங்க முதல்ல...” ஆவல் மேலிட கேட்டார் ஏகலைவன்.“ சமீப காலமா அடிக்கடி மாயமா போற விமானங்கள் பத்தி ஒரு த்ரில்லர் பண்ணலாம்...”“ சூப்பர் சார்… சூப்பர்! இதை இதைத்தான் கேட்டேன். மேலச் சொல்லுங்க...”ஒன் லைனில் தொடங்கி, நடுவானில் விமானம் மாயமாவது, கடல் மேல் காணாமல் போவது, பெர்முடாஸ் ட்ரையாங்கள் போன்ற மர்மமான பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கி சுமார் மூன்று மணி நேரம் ஜனரஞ்சகமான ஸ்க்ரிப்ட்டை கூறி முடித்தார் இயக்குனர் சித்திரன்முழு திருப்தியடைந்த ஏகலைவன் உடனே 10 லட்ச ரூபாய்க்கான காசோலைய அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டு,“சித்திரன் சார்! நிறைய டைம் எடுத்து பிரமாண்டமான லொகேஷன்ஸ் பிடிங்க... கற்பனைக்கு எட்டாத இடத்துக்கெல்லாம் ஆடியன்ஸைக் கூட்டிட்டு போய் கிறாங்கடிச்சிரணும்...” என்றார்.மூன்று மாதம் கடந்த நிலையில், தயாரிப்பாளர் ஏகலைவனை தினமும் மீடியாக்களில் வறுத்தெடுக்கும் செய்தி இதுதான்: ‘ஐஸ் பேரடைஸான அண்டார்டிக்காவுக்கு ஹெலிகாப்டரில் லொக்கேஷன் பார்க்கச்போன சினிமா படக்குழுவினர் மாயம். அவர்களின் உடல்களோ, ஹெலிகாப்டரின் பாகங்களோ இன்றளவும் தென்படவில்லை...தேடுதல் முயற்சி தொடர்கிறது!’