சினிமா பார்த்துவிட்டு டூவீலரில் திரும்பிக்கொண்டிருந்தேன். காந்தி வீதியில் ஒதுக்குப்புற வீட்டு வாசல் கேட்டுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து ‘‘தம்பி... தம்பி...’’ என, யாரோ அழைப்பது தெரிந்தது. வயதான பாட்டி ஒருவர் அந்த வீட்டின் பூட்டியிருந்த கிரில் கேட்டின் அந்தப் பக்கம் நின்றுகொண்டிருந்தார். பார்வையில் பரிதாபம்.‘‘நான் உள்ளே இருக்கிறது தெரியாம, வீட்டுக்குள்ள வெச்சு பூட்டிட்டு வெளியே போயிட்டாங்க. கேட்டை கொஞ்சம் திறந்துவிடு தம்பி...’’ கெஞ்சினார்.‘‘போன் நம்பர் சொல்லுங்க பாட்டி, வீட்ல உள்ளவங்களை வரச் சொல்றேன்...’’ என்றேன்.‘‘அதெல்லாம் தெரியாது, நீ திறந்து விடுப்பா...’’ என்றார். பூட்டைப் பார்த்தேன். வலுவில்லாத நம்பர் பூட்டு. அதைத் திறக்கும் வித்தை எனக்குத் தெரியும். யூடியூப்பில் பார்த்துக் கற்றுக் கொண்டிருந்தேன். அதை நினைவில் வைத்து பத்து நிமிடம் போராடினதில் பூட்டு வாய் பிளந்தது.வெளியே வந்த பாட்டி, “பஸ் ஸ்டாண்ட்தானே போறே, என்னை இறக்கிவிட்டுடேன். புண்ணியமாப் போகும்’’ என்றார்வண்டியில் ஏறி திம்மென்று அமர்ந்துகொண்டார். “போப்பா கிளம்பலாம்...’’ பாட்டி என் முதுகு தட்ட, நான் வண்டியைக் கிளப்பினேன். அப்போது அவரது காலைப் பார்த்தேன்.‘‘என்ன பாட்டி இது கால்ல காயம்..?’’‘‘அதுவா, கால்ல சங்கிலி கட்டியிருந்தாங்களா... அதை அறுத்து எறிஞ்சேன். அதான் ரத்தம். நீ பயப்படாதே. ஒரு விக்ஸ் மாத்திரை முழுங்குனா... சரியாப் போயிடும்!’’அட்டகாசமாக சிரிக்க ஆரம்பித்தார், பாட்டி! -நித்யா