‘‘என்ன பாஸ் யோசனை? ஜோக்கடிச்சாக் கூட சிரிக்க மாட்டேங்கிறீங்க?’’ சிவாவின் நண்பர்கள் கலாட்டா செய்தார்கள்.‘‘அவன் கவலை அவனுக்கு. கல்யாணமாகி ஒரு மாசம்கூட ஆகலை, ஆடி மாசத்துக்கு பொண்ணை ஊருக்கு அழைச்சிட்டுப்போக மாமனார் வர்றாராம். சிவாவோட ஒய்ஃப் நைட்டு ஊருக்குக் கிளம்பறாங்க... அதான் பாஸ் டல்லாயிட்டார்’’ சக நண்பனொருவன் டீட்டெய்ல் பகர்ந்தான்.ராதுவுக்கும் கணவனைப் பிரிய வருத்தம்தான்!‘இந்த ஒரு மாதத்தில் எது எதுக்கோ சும்மாவே முறைத்த மாமியார், ஆடி மாசத்தை சாக்கு வெச்சு தன்னைப் பிறந்த வீட்டுக்குத் துரத்தாமல் விடமாட்டாள்!’ என்று மனசுக்குள் கவலைப்பட்டாள், ராது.வாசலில் இருந்த செருப்பு... அப்பா உள்ளிருப்பதை உணர்த்தியது. ஏக்கத்துடன் கணவரைப் பார்த்தாள். சிவா சோகமாக இருந்தான். மாமியார் பேசிக் கொண்டிருந்தாள்.“நீங்க சொல்றது வாஸ்தவம்தான் சம்பந்தி! ஆனா, இப்பதான் என் பையனும் உங்கப் பொண்ணும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிஇருப்பாங்க. அவங்களைப் பிரிக்க எனக்கு விருப்பமில்லை. உலகம் எவ்வளவோ முன்னேறிடுச்சு. அந்தக் கால சம்பிரதாயங்களை விட்டு நாமும் மாறணும். அவங்க இங்கேயே இருக்கட்டும்!’’ என்றாள், மாமியார்.வியப்பும் மகிழ்வுமாக ராது சிரித்தாள்.-ஸ்ரீமல்லிகா குரு