நல்ல கதைகளுக்கு தமிழில் கடும் பஞ்சம். அதனாலாயே பிறமொழி படங்களை தமிழில் ரீமேக் செய்வதுடன், வெளி நாட்டு திரைப்படங்களை காப்பிரைட் வாங்காமலேயே காப்பியடிக்கும் கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு சில நல்ல முற்போக்கான இயக்குநர்கள் மட்டும் தமிழிலும், பிறமொழிகளிம் உள்ள சிறந்த நாவல்களை அதன் தரம் கெடாமல் நல்ல சினிமாவாக எடுக்கும் முயற்சியில் இறங்குகின்றனர், அதில் வெற்றியும் அடைகின்றனர். மலையாள திரையுலகில் இந்த போக்கு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தாலும், தமிழ் இயக்குநர்களின் கவனம் நாவல்களின் பக்கம் இப்பொழுதுதான் அதிகம் திரும்பியுள்ளது. அவர்களில் சிலரது கடந்தகால, நிகழ்கால முற்சிகளை கொஞ்சம் புரட்டுவோம்... .‘அஜ்னபி’ வெற்றிமாறன் நாவல்களைப் படமாக்கி பெரிய கவனத்தை ஏற்படுத்த முடியும் எனத் தமிழில் நிரூபித்தவர் இயக்குநர் வெற்றிமாறன். மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ நாவலை ‘விசாரணை’ படமாகவும், பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை ‘அசுரன்’ படமாகவும் படைத்த வெற்றிமாறன், மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ நாவலை படமாக்க ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். தொழில் வாய்ப்புக்காக அரபு நாடுகளுக்குச் செல்லும் நம்மூர் ஏழை மக்கள் குறித்த இந்த நாவல் வெற்றிமாறனை கலங்கடித்ததாம். .நாவலுக்கான ரைட்ஸ் வாங்கிய கையோடு அரபு நாடுகளுக்குப் போய் லோகேஷன் பார்க்கத் தொடங்கிவிட்டார் வெற்றி. சூரியை கதாநாயகனாக அவர் பிக்ஸ் பண்ணியது ‘அஜ்னபி’ கதைக்காகத்தான். கொரோனா நெருக்கடிகளால் தள்ளிப்போனது அந்த முயற்சி. ‘விடுதலை 2’வுக்கு பிறகு சி.சு.செல்லப்பாவின் எழுதிய ‘வாடிவாசல்’ சிறுகதையை சூர்யா வைத்து படமாக்க இருக்கும் வெற்றி மாறன், அதன் பிறகு ‘அஜ்னபி’ கதையைக் கையில் எடுக்கிற முடிவில் இருக்கிறாராம். கதாநாயகன் அதே சூரிதான்! .‘வேள்பாரி’ ஷங்கர் நாடாளுமன்ற உறுப்பினரும் நாவலாசிரியருமான சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் ரைட்ஸ் இயக்குநர் ஷங்கர் கைக்குப் போயிருக்கிறது. கிட்டத்தட்ட திரைக்கதை வடிவில் காட்சி வடிவங்களுடன் எழுதப்பட்ட இந்த நாவல் ஷங்கருக்கு ரொம்பவே பிடித்து போய்விட, பாரி பாத்திரத்தில் ராம் சரணை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரும் டபுள் ஓகே சொல்லிய நிலையில், திடீரென சூர்யாவுக்கு பாரி பாத்திரம் செய்ய ஆசை வந்திருக்கிறது. அதனால், சூர்யாவை வைத்து ‘வேள்பாரி’ படத்தைத் தொடங்கும் திட்டத்தில் இருக்கிறார் ஷங்கர். .‘குற்றப் பரம்பரை’ சசிகுமார் எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை ஹாட் ஸ்டாரில் சொல்லி ஓகே வாங்கி இருக்கிறார் சசிகுமார். ‘வேயன்னா’ பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க, ராணா, அனுராக் காஸ்யப் உள்ளிட்டோர் உடன் நடிக்கிறார்கள். இந்த வெப் சீரிஸ்க்கான படப்பிடிப்பு அடுத்த மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது. நாவலின் ஜீவன் கெடாமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த காலகட்டத்தை அப்படியே கண் முன் நிறுத்துகிற விதமாக எபிசோடுகள் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த வெப் சீரிஸை முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்..‘மிளிர் கல்’ வினோத் எழுத்தாளரும் வழக்கறிஞருமான இரா.முருகவேள் எழுதிய ‘மிளிர் கல்’ நாவலைப் படமாக்க அவரிடம் அனுமதி பெற்றிருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கியிருக்க வேண்டிய படம் இது. எதிர்பாராத விதமாக அஜீத்திடம் இருந்து அழைப்பு வர, வரிசையாக அவரை வைத்து மூன்று படங்களை இயக்கினார் வினோத். இப்போது கமலை இயக்க தயாராகிவரும் வினோத்,‘மிளிர் கல்’ நாவலை படமாக்கியே தீருவது என்கிற முடிவில் இருக்கிறார். நாவலில் குறிப்பிட்டு உள்ளபடி கண்ணகி நடந்த பாதையில் பயணித்து கேரளா வரை போய் லொகேஷன் வேலைகளை முடித்திருக்கிறார் வினோத். கதாநாயகனாக கார்த்தியை தேர்வு செய்து வைத்திருக்கிறார்..‘அஞ்சலை’ கௌதமன் எழுத்தாளர் நீல.பத்மனாபனின் ‘தலைமுறைகள்’ நாவலை ‘மகிழ்ச்சி’ என்கிற தலைப்பில் படமாக்கியவர் இயக்குநர் வ.கௌதமன். எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ நாவல் கௌதமனுக்கு ரொம்பவே விருப்பமானது. தற்போது ‘மாவீரா படையாண்டவன்’ என்கிற படத்தை இயக்கி நடித்து வரும் வ.கௌதமன் அடுத்து ‘அஞ்சலை’ நாவலைத்தான் படமாக்க இருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்வியல் வலிகளைச் சொல்லும் இந்தப் படத்தில், ஜோதிகாவை நடிக்க வைக்கிற முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் கௌதமன். - ப.நன்னிலன்