Kumudam
ஓட்டுக்கு நோட்டு: ஈரோடு ஃபார்முலாவை மிஞ்சிய தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!
1500 உறுப்பினர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இம்முறை வாக்களித்தவர்கள் 1111பேர். இந்த வாக்காளர்களுக்கு இதற்கு முந்தைய தேர்தல்களில் ரூ 2 முதல் 5 ஆயிரம் வரை, வெள்ளிக் குத்துவிளக்கு, பட்டு வேஷ்டி, பட்டுப்பொடவை, போன்றவை மட்டுமே சம்திங் ஆகக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை இரு தரப்பினருமாக சேர்ந்து தலைக்கு சுமார் ஒரு லட்சம் வரை கவனித்ததாக பல சோர்ஸ்கள் கன்ஃபர்ம் செய்கின்றன.