- ஜி.எஸ்.எஸ்.மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ரயில்பெட்டிஅண்மையில் தீவிபத்தில் சிக்கியது. இதில்,ஒன்பதுபேர் உடல் கருகி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். லக்னோவில் இருந்து தென்னிந்திய மாநில ஆன்மிக சுற்றுலா வந்த ஒரு குழுவுக்குதான் இந்த கதி. அவர்கள் ரயில்பெட்டி ஒன்றை முன்பதிவு செய்து பயணத்தைத் தொடங்கியிருந்தனர். மீனாட்சி அம்மன் கோயிலை தரிசனம் செய்வதற்காக மதுரைக்கு 26-ம் தேதி அதிகாலை வந்தபோதுதான் மேற்படி சோகம்..எதனால் இந்த தீவிபத்து?காஸ் சிலிண்டரைப் பயன்படுத்தி அந்த ரயில்பெட்டிக்குள் தேநீர் போடும்போது ஏற்பட்ட தீப்பொரிதீவிபத்துக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.ட்ராவல்ஸ் நிறுவனம் ஒன்றுதான் அந்த ரயிலில் வந்த 63 பேருக்கு ஒரு ரயில் பெட்டியை முன்பதிவு செய்துள்ளது. அந்தக் குழுவில்சமையற்காரர்,டீ போடுபவர், உதவியாளர் எனஏழுபேரும் ரயிலில் பயணித்துள்ளனர். இவர்கள் மூலம் சட்ட விரோதமாக இரண்டுசிலிண்டர்கள், விறகு, அரிசி மூட்டை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சம்பவநாளன்று அதிகாலையில் அந்த ரயில்பெட்டிக்குள் டீ போடப்பட்டுள்ளது. அப்போது, சிலிண்டர் குழாயில் கசிவு ஏற்பட்டு அதன் மூலம் தீப்பொரி வெளியேறியதில் ரயில் பெட்டி தீபிடித்ததாம்.சுற்றுலாப் பயணிகளுக்கு 'குழுவாகச் செல்கிறோம். டிராவல்ஸ் ஏஜென்சி நமக்காக சமையல்காரர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அவர்கள் நமக்காக சூடாக டீ கலந்து கொடுக்கிறார்கள்,அவ்வளவுதானே'என்ற மனோபாவம். அந்த 'அவ்வளவுதானே' மனப்போக்கும் உயிரிழப்புகளுக்கு காரணமாக அமைந்தது. காலை ஐந்து மணிக்குத் தொடங்கிய தீ, தீயணைப்புப் படையினரின் கடும் முயற்சிக்குப் பிறகு இரண்டு மணிநேரம் கழித்துதான் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது..தீவிபத்துகள் ஆபத்தானவை. அதுவும் ரயில் தீ விபத்துகள் மேலும் ஆபத்தானவை,காரணம் வேகமாக அது பிற பெட்டிகளுக்குப் பரவ பெரும் வாய்ப்பு உண்டு. அதுவும்ரயில்நகர்ந்துகொண்டிருப்பதால்காற்றின்அளவும் திசையும்பாதகமாக அமைந்தால் இந்தவேகம்வெகுவேகம்எடுக்கும். சின்னச் சின்ன அலட்சியங்கள்தான் பெரிய விபரீதங்களுக்கு வழி வகுக்கின்றன. நாமும் கூட ரயில் பயணம் செய்திருக்கும்போது கதவருகே நின்றுகொண்டு சிகரெட்டோ, பீடியோ பிடித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்திருப்போம். அதன் விளைவுகளைப் பற்றி யோசித்திருந்தால் உடனடியாக அவரைக் கண்டித்து அதை நிறுத்த வைத்திருப்போம். புகைப்பதன் கெடுதல்கள் ஒருபுறம் இருக்க, புகைத்துவிட்டுகீழே எறியும்தீக்குச்சிகள்மற்றும்சிகரெட்துண்டுகள்மேலும் ஆபத்தானவை..எரிவாயுசிலிண்டர்களில்கசிவுஇருந்தாலும்பேராபத்து. அதனால்தான்அதுபோன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதை ரயில்வே தடை செய்திருக்கிறது. ஆனாலும்அதிகாரபூர்வமாகதீயைப் பயன்படுத்தும்ரயில்பெட்டிஒன்றுபெரும்பாலானவிரைவு ரயில்களில்காணப்படும். பயணிகளுக்கானஉணவைசமைக்கும் பான்ட்ரி கார் அது. போதியஅக்கறைஇல்லாமல்அங்கு சாதனங்கள்கையாளப்படுவதும்விபத்தில்முடியலாம். எனவே,இதுதொடர்பாகவும்பலசட்டதிட்ட வரைமுறைகள்உள்ளன.அங்கு புகை பிடிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எண்ணெயில் நனைக்கப்பட்ட சணல் மற்றும் துணிகளை அலட்சியமாக கீழே போடப்படக் கூடாது. எரியும் தீக்குச்சிகளும்தான். அங்குள்ள மின் கம்பிகள் தொங்கிக்கொண்டும் தளர்வாகவும் இருக்க கூடாது .பொதுவாகவே அனைத்து ரயில்பெட்டிகளிலும் உள்ள தீயணைப்புக்கருவிகள்நன்றாகதெரியும்வகையிலும்எளிதில்கையாளக்கூடியஇடங்களிலும்வைக்கப்படவேண்டும். அவைஇயங்கும்நிலையில்உள்ளனவாஎன்பதைசரிபார்த்தல், அவசரத்தின்போது அவற்றை சரியாக இயக்கும் பயிற்சி ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டிருத்தல்,தீவிபத்துக்கான எச்சரிக்கை ஒலி எழுப்பும் சிஸ்டத்தை சரிபார்த்தல் போன்றவை அவசியம். ரயில்பெட்டியில்பற்றும் தீ சில நிமிடங்களிலேயே அந்த மொத்த பெட்டியையும் அழித்துவிடலாம். அதில் எழும் நச்சுவாயு இரண்டே நிமிடங்களில்பலரையும்நினைவிழக்கவைக்கலாம்.தீயினால் உடல்எரிந்துஇறப்பவர்களைவிடஇந்தநச்சுக்காற்றை சுவாசிப்பதால்இறந்துபோனவர்கள்அதிகம். புதிதாக உருவாக்கப்படும் ரயில் பெட்டிகளில் பாதுகாப்புஏற்பாடுகள் சிறப்பாகவே உள்ளனவாம். சமீபத்தில் போபாலில் இருந்து புது டெல்லிக்கு சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு ரயில்பெட்டியிலிருந்த பேட்டரி பாக்ஸில் தீப்பொரி கிளம்ப, அந்த பாக்ஸைவிட்டு வெளிவருவதற்கு முன் அந்த தீ தானாகவே அணைக்கப்பட்டுவிட்டது.மிகஅதிகமானவர்களைசுமந்துசெல்கின்றனரயில்கள். (மும்பைபுறநகர்ரயில்கள்ஒருநாளைக்கு 70,00,000 பயணிகளைசுமந்துசெல்கிறது). இதில்தீவிபத்துநேரிட்டால்அதன்விளைவுகள்மிகக்கொடூரமாகஅமைந்துவிடவாய்ப்புஉண்டு. வெப்பம்மற்றும்புகையைஅறிந்துஉணர்த்தும் (smoke detectors) கருவிகள் ரயில் பெட்டிகளில் பொருத்தப்பட வேண்டும். அப்படி நேரும் போது தானாகவே மின் சப்ளை துண்டிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதாவது மனித முறையும் முயற்சி தேவைப்படாமலேயே தீ விபத்துகள் பரவாமல் தவிர்க்கப்படுவது (Automatic Fire Suppression systems)மேலும் நல்லது. .ரயில்வேசட்டத்தின் 164 மற்றும்165 பிரிவுகளின்படி எளிதில் தீப்பற்றக்கூடிய ஸ்டவ், எரிவாயு,பெட்ரோல் போன்றவற்றை யாராவது ரெயிலில் எடுத்துச்சென்றால் அவர்களுக்குஆயிரம் ரூபாய் அபராதம்விதிக்கப்படும். மூன்று வருடம் சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்பு உண்டு. நிலைமையின் தவிரத்தை மனதில்கொண்டு ஒவ்வொரு ரயில் பயணியும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதுவும் தீபாவளி நெருங்கும் இந்த சமயத்தில் பட்டாசுகளை ரயிலில் எடுத்துச் செல்லவும் தடை உண்டு என்பதை நினைவில் கொள்வோம்.