துளி அன்பு சிறுநேசம் கொஞ்சம் காதல்- செ.வீரமணிஇத்தொகுப்பைப் பற்றி ‘ மிகப் பாந்தமான குணங்களின் வெளிப்பாடுகளாக இக்கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன. வீரமணி விரும்பி ஏற்றுள்ள கலையும் கவிதையும் அவரை மேலும் நுட்பமான இடத்திற்கு அழைத்துச் செல்லும். அதற்கு, இத்தொகுப்பு ஓர் ஒற்றையடிப் பாதையாக இருந்து பெரும்பாதைக்கும் வழிகாட்டும் என நம்புகிறேன்…’ என கவிஞர் கணராதித்தன் சொல்லியிருப்பதற்கு நியாயம் சேர்க்கிறது இந்நூல்..’கடவுளை நேசிக்கும் / உன் பிரார்த்தனைகளில் / கவிதையாக நான் இருக்கிறேன்.மனிதனை நேசிக்கும் / என் கவிதைகளில் / கடவுளாக நீ இருக்கிறாய் .கடவுள் வாசிக்கும்/ கவிதையாக / நம் காதல் இருக்கிறது ‘ என்றெழுதும் வீரமணிக்குள் மிட்டாய் மொழி மிதந்தால்தான் இப்படி எழுத இயலும்!‘பிறந்த ஊரிலிருந்து / மண்ணெடுத்து வந்து / தொட்டிச் செடி வளர்த்தேன் / மலர்ந்த பூக்களில் / எல்லாம் / தாய்ப்பாலின் வாசம்’ என்கிற வரிகளை வாசிக்கிற எவருடைய மனமும் சட்டென்று சொந்த ஊருக்கு ரயிலேறும்.வெளியீடு: எமரால்டு பதிப்பகம், 15 ஏ. காஜா மேஜர் சாலை, எழும்பூர், சென்னை – 600 008. போன்: 9840696574, பக்கம்:110. விலை: ரூ.150..மேடைப் பேச்சின் பொன்விதிகள் (த்)தகம்- செல்வேந்திரன்இன்றைய தலைமுறையினர் பலருக்கு பயனுள்ள நூல் இது. தன் மனதில் உருவாக்கி வைத்துள்ள எண்ணங்களை, கருத்துகளை, சிந்தனைகளை தன் குழுவினர் மத்தியில் தெரிவிப்பதற்கு சிற்றுரைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பலர் இருக்கின்றனர். உண்மையில் இது ‘பகிர்தலின் காலம்’ . தேவையின் அடிப்படையில் பேச வேண்டிய சந்தர்ப்பங்களில் எப்படி பேச வேண்டும்? உங்கள் மையக் கருத்து எப்படி இருக்க வேண்டும்? எத்தகைய மொழியை நீங்கள் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என சிநெகித மொழியில் கை பிடித்து சொல்லித் தருகிறார் செல்வேந்திரன். இந்நூலில் ‘மேடையில் அதிகம் பேசுகிறவர் நுட்பத்தை இழப்பானென்று சுந்தரராமசாமி கருதினார் இல்லையா?’ என்று ஒரு கேள்வி. அக்கேள்விக்கு ‘நல்ல எழுத்தாளர் நல்ல பேச்சாளராக இருக்க முடியாது அல்லது இருக்கக்கூடாது என்பது மிகப்பெரிய மூட நம்பிக்கை. மிக அதிக பக்கம் எழுதிய இந்திய எழுத்தாளர் மகாத்மா காந்தி அவர் பேசியது இந்தியாவெங்கும் எதிரொலித்தது’ என்கிற நூலாசிரியரின் பதிலில் உண்மையின் ஹை டெசிபல்.வெளியீடு: எழுத்து பிரசுரம், 55 (7). ஆர் பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 600 040. போன்: 8925061999, பக்கம்:136. விலை: ரூ.170..சாலையும் குறுக்குச் சந்துகளும்- வே. எழிலரசு ’அன்றலர்ந்த பூக்களும் அன்றாட எந்திரங்களும், மண்ணில் விழாத மழைத்துளிகள், வலது கை மின்னல்… உள்ளிட்ட பல நூல்களின் வழியாக தமிழ் வாசகப் பரப்பைச் சென்றடைந்த படைப்பாளி வே.எழிலரசு. கனிவும் கருணையும் மிக்க பார்வையைக் கொண்ட எழிலரசுவின் படைப்புகளில் சமூக அக்கறை தூக்கலாகவே இருக்கும். இந்தச் சிறுகதைத் தொகுப்பிலும் அதற்குரிய தர்ம நியாயங்களைச் சேர்த்துள்ளார்.’கதைத் திறன், அதன் நறுவிசு, திணிப்பற்ற அங்கதம், சூழ்னிலைகளைக் கையாள்வதில் வெளிப்படும் தரிசனக் கீற்று, பின்புலங்களில் சித்திரமென கவியும் எதார்த்தவியம் என வே.எழிலரசு கதையில் சொற்கள் அத்தனை காத்திரம்’ என முன்னுரையில் கவிஞர் நிமோஷினி சொல்லியிருப்பதை வரவேற்க வைக்கிறது இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்.இந்நூலில் ‘நடனமாடும் அண்ணாவின் சொற்கள்’ எனும் சிறுகதையில் வலம் வரும் கதையின் நாயகி பூங்குழலி, அவளின் செயல்பாடுகளும் வாசிப்பவரை விழிப்புணர்வு கொள்ள வைக்கும். திராவிட இயக்கங்களின் தொடக்க காலத்தில் அதனை மிகவும் கடுமையாக எதிர்த்தவர்கள்தான் பின்னாட்களில் நிறைய அனுகூலங்களை அனுபவித்தனர் என்பதை உட்பொருள் வைத்து கதையை நெய்திருக்கிறார் எழிலரசு. இத்தொகுப்பில் எல்லா கதைகளும் நுட்பம் நிறைந்தவைகளாக கண் சிமிட்டுகின்றன. வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், 41. கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. போன்: 9444640986. பக்கம்: 112. விலை: ரூ.100. பற்றி எரியும் பூமி. பற்றி எரியும் பூமி- ம. ஜியோடாமின் கால நிலை மாற்றத்தால் இந்த பூவுலகு எத்தகைய நிலைகளை சந்திக்கின்றன. எந்த மாதிரியான சவாலாக இந்த மாற்றங்கள் உருபெறுகின்றன என்பதை இச்சிறிய புத்தகம் தெளிவாக புரிய வைக்கிறது.‘காலனிலை மாற்றமானது மனித இருத்தலுக்கான ‘சிவப்பு எச்சரிக்கை’ (code red alrt for humanity) என்று ஐநாவின் செயலாளர் ஆண்டனியோ, ஐபிசிசி அறிக்கையைக் குறிப்பிட்டு எச்சரிக்கிறார். காலநிலை மாற்றமானது, புவியின் சூழல் மணடலத்தில் எண்ணற்ற சங்கிலித் தொடர் போன்ற மாற்றங்களை மிகக் குறுகிய காலத்தில் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது’‘தமிழ்நாட்டில் காலனிலை மாற்றத்தின் தீவிர விலைவுஅள் ஏற்கெனவே தொடங்கிவ்ட்டன. உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பான ஐபிச்சியும் இந்தியா பற்ரியும் தமிழகம் பற்றியும் பல எச்சரிக்கைகளை வழங்கியிருக்கிறது’‘உலகம் வெப்பமாதலில் முக்கிய நேரடி விளைவுகளில் ஒன்று கடல் நீர் ஆவியாதல் அதிகரிப்பது. நாம் வாழும் நிலப்பகுதியை மையமாகக் கொண்டே நாம் உலகைப் பார்ப்பதால் கடலின் பிரமாண்டத்தை நாம் பொதுவாக உணருவதில்லை…’ போன்ற ஏராளமான கருத்துகள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன.வெளியீடு: பூவுலகின் நண்பர்கள், 6/2. 12வது தெரு, வைகை காலனி, அசோக் பில்லர், சென்னை – 600 083. போன்:9094990900. பக்கம்: 46. விலை: ரூ.50.