-டாக்டர் கு. கணேசன்ஹைதராபாத்தில் ஒரு சிறுவன். பெயர் வேண்டாம். வயது 18. ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அங்கு அவன் போராடுவது புற்றுநோயை எதிர்த்து மட்டுமல்ல; அனுபவமிக்க மருத்துவர்களுக்கே சவால் விடும் ஒரு கிருமிக்கு எதிராகவும்தான்..அது என்ன கிருமி? ‘சீடோமோனாஸ் ஆருஜினோஸா’ (Pseudomonus aeruginosa). நிமோனியா, சிறுநீரக நோய், மூளைக்காய்ச்சல் போன்ற பலதரப்பட்ட நோய்களுக்குத் தலைமை வகிப்பது இந்தக் கிருமிதான்..ஹைதராபாத் சிறுவனுக்கு இந்தக் கிருமி ஏற்படுத்தி இருப்பது, ‘பைலோநெப்ரைட்டிஸ்’ (Pyelonephritis) எனும் சிறுநீரகத் தொற்றுநோய். அவனுக்கு அடிக்கடி குளிர்காய்ச்சல் வந்தது. வழக்கமாகக் கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு காய்ச்சல் கட்டுப்படவில்லை. அதனால், அடுத்தகட்ட மருந்துகளைக் கொடுக்கத் தொடங்கினர். இரண்டு வாரங்கள் கடந்தும் அவன் உடலில் முன்னேற்றம் இல்லை.இனி இருப்பது ஒரே ஒரு மருந்துதான். ‘கார்பாபினெம்’ (Carbapenem) எனும் வீரியமிக்க ஆன்டிபயாடிக் அது. கடுமையான சிறுநீரகத்தொற்றைக் குணப்படுத்தும் இந்த மருந்தையும் அவனுக்குக் கொடுத்துப் பார்த்தனர். இதற்கும் அவனுடைய நோய் கட்டுப்படவில்லை. வாய் வெந்துபோனது. சாப்பிட முடியவில்லை. ஒரு கட்டத்தில் மயக்கநிலைக்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் அவன் இறப்பின் எல்லையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தான்.அங்கு அவனுக்கு மேற்கொள்ளப்பட்ட மேம்பட்ட பரிசோதனை முடிவுகள் சொன்னதும், உயர் சிறப்பு மருத்துவர்கள் அவனைப் பரிசோதித்துவிட்டுச் சொன்னதும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தன. அதாவது, இந்தியாவில் கிடைக்கும் எந்தவொரு ஆன்டிபயாடிக்கும் அவனுக்குப் பலன் தரப்போவதில்லை. காரணம், ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்’ (Antibiotic resistance)..அது என்ன ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்?நவீன மருத்துவத்தின் அபார வளர்ச்சிக்கு அடிப்படையே ஆன்டிபயாடிக் மருந்துகளின் கண்டுபிடிப்புதான். இவற்றின் வரவால் அதுவரை மனித உயிர்களைக் கொத்துக்கொத்தாகக் காவு வாங்கிக்கொண்டிருந்த பிளேக், காலரா போன்ற தொற்றுநோய்கள் ஒழிந்துபோனது உண்மைதான். அதேநேரத்தில், இந்த மருந்துகள் இரட்டைமுனைக் கத்தி போன்றவை; பலனும் உண்டு, பக்கவிளைவும் உண்டு.ஒரு நோய்க்குக் குறிப்பிட்ட காலத்துக்குச் சாப்பிடக் கொடுக்கும் ஆன்டிபயாடிக்கைப் பாதியில் நிறுத்தினால், விட்டுவிட்டுச் சாப்பிட்டால், தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ளாமல் குறைத்தோ அதிகமாகவோ சாப்பிட்டால், மருந்தின் தரம் குறைவாக இருந்தால், தேவையில்லாத மருந்தாக இருந்தால் உடலில் அந்த நோயை உண்டாக்கிய கிருமிகள் முழுவதும் அழியாமல்போகலாம். அப்போது அந்த மருந்தின் பிடியிலிருந்து தப்பிக்க மீதமுள்ள கிருமிகள், அந்த மருந்துகளையே எதிர்க்கும் கிருமிகளாக உருமாறிக்கொள்ளும். இதுதான் ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்’..இந்தப் பிரத்தியேக கிருமிகள் ‘மிகை உயிரிகள்’ (Superbugs) என அழைக்கப்படுகின்றன. இவற்றை அழிக்க இன்னும் வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகள் தேவைப்படும். அதேசமயம், அந்தப் புதிய மருந்தும் ஒருநாள் பயன்படாத மருந்துப் பட்டியலுக்குச் சென்றுவிடக்கூடும். அப்போது அடுத்ததொரு புதிய மருந்து தேவைப்படும். இது ஒரு சுழற்சியாக நிகழும். இது மனித ஆரோக்கியத்துக்கு ஏற்புடையதல்ல..சவால் விடும் சூப்பர் பக்ஸ்!காசநோய், நிமோனியா, சிறுநீரக நோய், மூளைக்காய்ச்சல், நச்சுக்குருதி நோய் (Septicaemia) உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழங்கப்படும் மகத்தான ஆன்டிபயாட்டிக்குகளைக் கடுமையாக எதிர்த்துப் போராடும் மிகை உயிரிகள், மனித உடலில் வளர்ந்து சவால்விடுவது இப்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலைமை உலகம் முழுவதுமே இருக்கிறது என்றாலும், இந்தியாவில் இது மிகவும் மோசம். அமெரிக்காவில் மிகை உயிரிகள் காரணமாக ஒரு லட்சம் பேரில் 200 பேர் இறக்கிறார்கள் என்றால், இந்தியாவில் 461 பேர் இறக்கிறார்கள்.பிரச்னை என்னவென்றால், வைரஸ் நோய்களுக்கு ஆன்டிபயாடிக்குகளைக் கொடுப்பது வீண் எனத் தெரிந்தும் சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், ஜலதோஷம், சுவாசக் கோளாறுகள், வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்குக்கூட வீரியம் மிகுந்த ஆன்டிபயாடிக்குகளை மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்.அடுத்து, மருத்துவர்கள் பரிந்துரைக்காவிட்டால்கூட பொதுமக்கள் சுயமாகவே ஆன்டிபயாடிக்குகளை வாங்கிப் பயன்படுத்துவதும் நிகழ்கிறது. இதைப் பயன்படுத்தி, மருந்து நிறுவனங்களும் லாபநோக்கில் சாதாரண நோய்களுக்கும் வீரியமுள்ள ஆன்டிபயாட்டிக்குகளை முனைந்து பரிந்துரைக்கின்றன. இதனால் பலியாவது பொதுமக்களும், பிஞ்சுக் குழந்தைகளின் ஆரோக்கியமும்தான்.முக்கியமாக, பயனாளியின் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்துவிடுகிறது. பீடித்த நோய் நீடிக்கிறது; சாதாரண நோய்களுக்குக்கூட எக்கச்சக்கப் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களிடமிருந்து அடுத்தவர்களுக்கு இந்தக் கிருமிகள் பரவும்போது, அவர்களுக்கும் வீரியம் மிகுந்த மருந்துகளே தேவைப்படுகின்றன. ஹைதராபாத் சிறுவனுக்கு நேர்ந்ததும் அதுதான். அதிலும் அவனுக்கு ஏற்பட்டிருப்பது ‘பன்முனை மருந்து எதிர்ப்பாற்றல்’ (Extensively drug resistance – XDR)! இது மிகவும் மோசமானது..ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்டிபயாடிக்!ஹைதராபாத் சிறுவனைக் கடைசியாகப் பரிசோதிக்க வந்த ஒரு மருத்துவர், அவனுடைய நோய்க்கு ஜப்பான் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் ‘செஃபிடிரோகால்’ (Cefiderocol) எனும் மருந்து பலன் தரும் என்று பரிந்துரைக்கிறார். அதன் விலை மிக மிக அதிகம்தான் என்றாலும் இந்தியாவில் அது உடனடியாகக் கிடைக்கவில்லை. அந்த மருந்தை ஜப்பானிலிருந்து வரவழைக்கும்வரை சிறுவனின் உடல்நிலை தாங்காது என்கிற நிலைமை. அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் வேளையில் ஆபத்பாந்தவனாக வருகிறது, இன்னொரு புதிய ஆன்டிபயாடிக். ‘செபிஃபிம்’ (Cefepime), ‘ஜிடிபாக்டம்’ (Zidebactam) எனும் இரண்டு வகை ஆன்டிபயாடிக்குகளின் கலவை இது. இதன் தற்காலிகப் பெயர் WCK 5222.இது ஓர் இந்தியத் தயாரிப்பு. இது இன்னும் சந்தைக்கு வரவில்லை. மனிதப் பயன்பாட்டுக்கான இறுதிக் கட்ட ஆய்வில் இருக்கிறது. குறிப்பாக, ‘பன்முனை மருந்து எதிர்ப்பாற்றல்’ உள்ள கிருமிகளை அழிப்பதில் இப்போதைக்கு முன்னணியில் இருக்கும் மருந்து இதுதான். இந்த ஆண்டின் இறுதிக்குள் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய மருத்துவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மருந்தாகக் கருதப்படும் இந்தப் புதிய மருந்துக்கு மத்தியச் சுகாதாரத்துறையின் ‘அவசரகாலப் பயன்பாட்டுக்கான அனுமதி’ (Emergency Use Authorisation) பெற்று, ஹைதராபாத் சிறுவனுக்கு வழங்கினார்கள். என்ன ஆச்சரியம்!இந்த மருந்தைக் கொடுத்த மூன்றாம் நாளில் அச்சிறுவனுக்குக் காய்ச்சல் குறையத்தொடங்கியது. ஒரு வாரத்தில் வாய்ப்புண் குணமானது. சாப்பிட ஆரம்பித்தான். இரண்டாம் வாரத்தில் மயக்க நிலையிலிருந்து முழுவதுமாக விடுபட்டான். மூன்றாம் வாரத்தில் காய்ச்சல் குணமாகி வீட்டுக்குத் திரும்பிவிட்டான். இறப்பின் எல்லைக்குச் சென்ற சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்தது.இந்தியாவில் ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்’ காரணமாக, மருந்து இல்லாமல் உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்குப் புத்துயிர் தரக் காத்திருக்கும் மருந்து இதுதான் என்று அச்சிறுவன் உறுதி செய்திருக்கிறான். அதேநேரத்தில், இந்த மருந்தும் ஒருநாள் பயன்படாத மருந்துப் பட்டியலுக்குச் சென்றுவிடக்கூடாது. இந்த அற்புத மருந்தை எதிர்ப்பாற்றல் கொண்ட கிருமிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கடமை மருத்துவர்களுக்கு இருக்கிறது, ஏன், மக்களுக்கும் இருக்கிறது. இதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்..பெட்டிச் செய்தி:என்ன செய்ய வேண்டும்?மருத்துவர்கள் ஆன்டிபயாடிக்குகளை அறம் சார்ந்து பரிந்துரைப்பதும், அவற்றைப் பயன்படுத்தும் முறை குறித்து பயனாளிகளுக்குச் சரியாக வழிகாட்ட வேண்டியதும் முக்கியம். பயனாளிகள் தங்களுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்கப்படும்போது மருத்துவரிடம் அது தேவைதானா என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும் உரிமை உண்டு. சாதாரண வைரஸ் நோயாக இருந்தால், பயனாளிகள் ஆன்டிபயாடிக்கை எடுக்காமல் பொறுமை காக்கலாம். அப்படிப் பொறுமை காப்பவர்களுக்கு மருத்துவர்களும் ஆன்டிபயாடிக்கைக் கொடுப்பதற்கு அவசரப்பட மாட்டார்கள்; அவசரம் காட்டவும் கூடாது. புதியதொரு நோய்க்கு ஏற்கெனவே எடுத்த மருந்துகளையோ, மிச்சமிருக்கும் மருந்துகளையோ தாங்களாகவே பயன்படுத்தக் கூடாது. நோயைச் சரியாகக் கணித்துத் தரப்படும் மருந்துகளை மருத்துவர் கூறும் அளவின்படி சரியான காலத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.மேல்நாடுகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்தவொரு ஆன்டிபயாடிக்கையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் அது முடியும். மக்கள் சுயமருத்துவம் செய்துகொள்வதற்கு இது வழிசெய்கிறது. மருந்து விற்பனையாளர்களும் சுயமாகவே மக்களுக்கு மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கும் போக்கும் இருக்கிறது. இதன் விளைவால், இந்தியாவில் 53% பேர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக்குகளைப் பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். எனவே, மத்திய - மாநில அரசுகள் தகுந்த கொள்கை முடிவுச் செயல்திட்டங்களால் இதற்கு உடனடியாகக் கடிவாளம் போட வேண்டும். அப்போதுதான் ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்’ எனும் சுனாமி முடிவுக்கு வரும்.